சினிமாவால் போதைக்கு அடிமையாகின்றனர் .நடிகர்களின் கட்&அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்பவன் முட்டாள் - மத்திய அமைச்சர் அன்புமணி ஆவேசம்
சிதம்பரத்தில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி பேசியதாவது:
நானும், எங்கள் கட்சியைச் சேர்ந்த வேலுவும் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றபோது, டாக்டர் ராமதாஸ் என்னை அழைத்து பேசினார். "இந்தியாவில் ஜனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவ வசதி, சாதாரண ஏழைக்கும் கிடைக்க வேண்டும். அதற்காக நீ உழைக்க வேண்டும்" என்றார். அதற்கேற்ப செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஒருநாடு முன்னேற்றம் அடைய கல்வி வளர்ச்சி மிகவும் அவசியம். அந்த கல்வியை அளிக்கக்கூடிய ஆசிரியர்கள்தான் மக்கள் இதயங்களில் இடம் பிடிப்பார்கள். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பல்வேறு கல்வி முறைகள் உள்ளன. முன்னேறிய நாடுகளில் உள்ளதைப்போல பிரதமரின் மகனும், விவசாயியின் மகனும் ஒன்றாக அமர்ந்து படிக்கக்கூடிய கல்விமுறை இந்தியாவில் வரவேண்டும். இந்தக் கல்வி முறைக்காக பல்வேறு துணைவேந்தர்களை அழைத்து பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
கிலோ கணக்கில் புத்தகங்களை தூக்கிக்கொண்டு மாணவர்கள் சுமைதாங்கிகளாக உள்ளனர். தமிழ்நாட்டில் தமிழில் படிக்க அதிக மாணவர்கள் பயப்படுகின்றனர். ஏனெனில் வேறு மொழிகளில் படித்தால் அதிக மதிப்பெண் பெற முடிகிறது. அந்த நிலை மாறிட, தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
சினிமாவால் இளைஞர்கள் மது மற்றும் போதை பழக்கத்துக்கு ஆளாகின்றனர். நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகமும், பீர் அபிஷேகமும் செய்யும் இளைஞர்கள் முட்டாள்கள். முன்னேற்றம் அடைந்த பல நாடுகளை பார்க்கும்போது நம்நாடு அது போல் வளரவில்லையே என்ற ஏக்கம் தோன்றுகிறது.
இவ்வாறு அமைச்சர் அன்புமணி பேசினார். விழாவில் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
4 comments:
So far I thought, nobody is living in Tamilnadu point out this cinema posters feeding such as hutouts. What is wrong this people,total disgrace for the whole Tamil community in the World. Thank you very much Hon Minister.
THANK YOU
//நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகமும், பீர் அபிஷேகமும் செய்யும் இளைஞர்கள் முட்டாள்கள்.//
உண்மை
//What is wrong this people,total disgrace for the whole Tamil community in the World. Thank you very much Hon Minister//
இந்த முட்டள்தனம் என்று முடிவுக்கு வரும்,
இவர்களின் கருத்துக்களை முளுமையாக ஆதரிக்கிறேன்
அமைச்சருக்கு என் வாழ்த்துக்கள்.
ஆம், நடிகரின் கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்பவன் முட்டாள்தான். இதை இன்னும் விரிவாக்கிப் பார்க்கலாம். தலைவன் வெறுமனே கைதானதும் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கும் தொண்டனும் அடிமுட்டாளே. செத்தவனை உயர்த்திப் பேசி அவன் குடும்பத்துக்கு நிதியளிப்பதாக பாவனை செய்து போட்டோ எடுக்கவைத்து பத்திரிகையில் போடச் செய்யும் கட்சித் தலைவனோ படு அயோக்கியன்.
ஊராருக்கெல்லாம் தாய் மொழிக்கல்வி என ஜல்லியடித்து விட்டு தான் மட்டும் தன் பசங்களை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கும் தலைவரை என்னவென்று கூறுவது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டமிழ் வழி கல்வி ய பத்தி பேசுற இந்த அன்பு மணி புள்ளைங்க எந்த மீடியத்துல படிக்கிறாங்களாம் . . . .
கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வது தவறுதான்.
Post a Comment