பெண்களுக்காகப் போராடிய ஒரே ஆண்...

பெண்களுக்காகப் போராடிய ஒரே ஆண் தந்தை பெரியார்தான்! - கவிஞர் கனிமொழி பேச்சு



நான் அறிந்து இந்த சமுதாயத்தில் பெண்களுக்காகப் போராடிய ஒரே ஆண் தந்தை பெரியார்தான் என கவிஞர் கனிமொழி எம்.பி., பேசியுள்ளார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைப்பு சார்பில், "குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களைப் பாது காக்கும் சட்டம்-2005’’ என்கிற தலைப்பில், ஈரோடு நஞ்சனா புரம் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 29.6.2007 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசிய கவிஞர் கனிமொழி எம்.பி., தற்போது உள்ள திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களிலும், ஆண்களுக்குக் கோபம் வந்தால், பெண்களை அடிக்கலாம் என்கிற அடிமை மனப் பாங்கு புகுத்தப்பட்டு வருகிறது. பெண்களும் இதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு பழக்கப் படுத்தப்பட்டு விட்டார்கள்.அதுபோல, பெண்களுக்கு என்று சில நடைமுறைகளை ஆண்கள் வைத்திருக்கிறார்கள். சில ஆண்கள் பெண் என்பவள் நான்கு சுவற்றுக்குள் இருந்து விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நினைக்கிறார்கள்.நான் அறிந்து இந்த சமுதாயத்தில் பெண்களுக்காகப் போராடிய ஒரே ஆண் தந்தை பெரியார்தான்.

தற்போது பல சட்டங்கள் பெண்களைப் பாதுகாக்க இருந்தாலும்,குறிப்பாக, வரதட்சணை சட்டம் 1961-லேயே நடை முறையில் இருந்தாலும் வரதட்சணை வாங்குவதற்கு யாரும் வெட்கப்படுவது இல்லை. எனவே, இதுபற்றி ஆண்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் ஆணையம் அமைக்க வேண்டும் என்பதே என்னுடைய பரிந்துரையாக இருக்கும் என்று பேசினார்.இக்கருத்தரங்கத்திற்கு மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்கினார். மத்திய இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தமி ழக கைத்தறித் துறை அமைச் சர் என்.கே.கே.பி. ராஜா, தமிழ் நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் கு.ம. ராமாத்தாள் ஆகியோர் பேசினார்கள்.

5 comments:

June 30, 2007 at 9:42 PM Deepa said...

I wonder if kanimozi is speaking only for the ladies from tamil nadu...Coz if i remeber my history correctly.. RajaramMohon Roy had his "handful" fo like-minded-friends did lot more for women upliftment.. the bench mark being Abolishion of child marriage & widow-remarriage..,where in he encouraged his son to get married to a widow..

If i have the facts wrong.. kindly do correct me

July 1, 2007 at 12:53 AM selventhiran said...

ஆனால் கனிமொழிக்காக டெல்லிவரை சென்று போராடிய ஆண் நம்ம முத்தமிழை வித்தவர்தான்.

July 3, 2007 at 10:45 PM காட்டாறு said...

கனிமொழி எந்த சமுகத்தை சொல்கிறார் எனத்தெரிந்தால் வசதியாக இருக்கும்.

July 6, 2007 at 9:13 AM மாயன் said...

தீபா சரியா சொன்னீங்க..

எல்லாத்தையும் விட முக்கியமா சதி எனப்படும் 'உடன்கட்டை' ஏறும் பழக்கத்தை ஒழிக்க பாடுப்பட்டார்....

ஆனால் அவர் எதிர்த்தது இயலாமையை... பெரியார் எதிர்த்து போராடியது அறியாமையை..

July 8, 2007 at 7:25 AM PRINCENRSAMA said...

அய்யா/அம்மா! மிளகாய் அவர்களே! அதென்னய்யா cap technology கொஞ்சம் அதை பத்தி சொல்லுங்களேன். நிஜம்மாவே அது டெக்னாலஜியா? இல்லை எதுவும் கும்மி மேட்டரா?