வந்தனாவை வெளியேற்ற முடியாது - நீதிமன்றம்

ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வலுக்கட்டாயமாக வந்து தங்கியிருக்கும் வந்தனாவை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஸ்ரீகாந்தின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம.சுப்ரமணியன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் 17-வது பிரிவின்படி குடும்ப உறவுகள் உள்ள ஒவ்வொரு பெண்ணும் புகுந்த வீட்டில் வசிக்க உரிமை உள்ளது. அந்த உரிமையை அவர் கோரும்போது அந்த பெண் குடும்ப உறவுகளை நிரூபிக்க வேண்டும்.

இந்திய சமுதாயத்தில் பல பெண்கள் திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டிற்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. புதுமண ஜோடிகள் கூட தேனிலவில் உறவு முறிந்து தனது பிறந்த வீட்டுக்கே சில பெண்கள் சென்றுவிடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு பெண் சட்டபூர்வமாக திருமணம் செய்தும் கணவருடன் வாழ முடியாத நிலை உள்ளது. ஆடி மாதத்தில் பெண்ணை பிறந்த வீட்டுக்கு அனுப்பு நிலை நமது சமுதாயத்தில் உள்ளது. அப்படி சென்ற பல பெண்கள் பல்வேறு காரணங்களால் புகுந்த வீட்டுக்கு திரும்ப முடியாமல் உள்ளது. இந்த வழக்கை பொருத்தவரை வந்தனாவும், ஸ்ரீகாந்தும் அதே வீட்டில் வசித்தார்களா? இல்லையா? என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இருவரும் சட்டபூர்வதாக திருமணம் நடந்திருப்பதால் கணவர் வீட்டில் வசிக்க வந்தனாவுக்கு உரிமை உள்ளது. இருவருக்கும் விவாகரத்து கிடைக்கும் வரை வந்தனா ஸ்ரீகாந்த் வீட்டில் வசிக்க சட்டப்படி உரிமை உள்ளது. இதற்கும் சட்டமும் பாதுகாப்பு அளிக்கிறது. ஆகவே இந்த நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்காவிட்டால் வந்தனா வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு அதனால் அவருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். ஆகவே விவகாரத்து பெறும்வரை வந்தனாவை வெளியேற்ற உத்தரவிட முடியாது என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து விவாகரத்து பெறும்வரை வந்தனா ஸ்ரீகாந்த் வீட்டில்தான் இருப்பார் என்று தெரிகிறது. இந்நிலையில் ஸ்ரீகாந்தும் அவரது பெற்றோரும் தங்கள் வீட்டுக்கு செல்வார்களா? அல்லது தொடர்ந்து வெளியிலேயே தங்கி இருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில் ஸ்ரீகாந்த் நடிப்பதாக சொல்லப்பட்ட "ம்" படம் என்னாச்சு என்ற கேள்விதான் எழுந்தது பலருக்கும். அதற்கு விடை சொல்லும் விதமாக வாயை திறந்திருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் சசி.

இந்த விவகாரத்தால் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அவர். சென்னை, லண்டன், வாரணாசி ஆகிய ஊர்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த மாடல் அழகி சுஹாசி என்பவர் நடிக்கிறாராம்.

இந்த கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்கிறார் சசி. இவர் இயக்கி ஒரு படம் வெளிவந்தால் அடுத்த படத்தை எடுக்க குறைந்தது இரண்டு வருடமாவது எடுத்துக் கொள்வார் அவர். இந்த தாமதத்திற்கு தயாரிப்பாளரை பலரும் காரணம் சொன்னாலும் யோசிக்கிறேன் பேர்வழி என்று சசி மண்டையை பிசைந்து கொள்வதுதான் காரணமாக இருக்கும். அதே போல் இந்த படத்தையும் துவங்க சுமார் இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார்.

படப்பிடிப்பை எத்தனை நாட்கள் வைத்துக் கொள்வாரோ? எப்போது படம் வருமோ? என்ற கேள்வி சசியின் ஒன்றிரண்டு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.



-ஆர்.எஸ்

0 comments: