பொன்னியின் செல்வன்-கலைஞர் டி.வி கலக்கல்!

ஆணானப்பட்ட கமல்ஹாசனே ஆசைப்பட்ட விஷயம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய அந்த கதையை எப்படியாவது படமாக்கிவிட வேண்டும் என்பது அவரது கனவாகவே இருந்தது. இதற்கிடையில் இந்த கதையை டி.வி சீரியலாக்கிவிட வேண்டும் என்று பல்வேறு முன்னணி நிறுவனங்கள் முயன்றும் அது, முயற்சி அளவிலேயே கைவிடப்பட்டது.

தற்போது பொன்னியின் செல்வன் கதையை விரைவில் உதயமாக இருக்கும் கலைஞர் டி.வி க்காக தயாரித்துக் கொண்டிருக்கிறார் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. "மர்மதேசம்" என்ற தொடரின் மூலம் சின்னத்திரை ரசிர்களை தன் பக்கம் ஈர்த்த நாகா என்ற இளைஞர்தான் பொன்னியின் செல்வனை இயக்குகிறார்.

இம்மாத இறுதியில் இருந்து காரைக்குடி பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். கலைஞர் டி.வி யில் வரப்போகும் தொடர்கள் குறித்து கலைஞரிடம் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிற நிர்வாகிகள், பொன்னியின் செல்வன் விஷயத்தில் கலைஞர் காட்டுகிற அக்கறையை நினைத்து வியக்கிறார்கள்.

இன்னும் படப்பிடிப்பே துவங்கவில்லை. அதற்குள் செலவு ஒரு கோடியை எட்டிவிட்டதாம். கலைஞர் இருக்க கவலை எதற்கு? என்கிறார் சக்கரவர்த்தி.

-ஆர்.எஸ்.

9 comments:

July 11, 2007 at 6:50 AM வெட்டிப்பயல் said...

ஆஹா.. எந்தந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறாங்கனு தெரியலையே :-(

எல்லாம் புது முகமா இருந்தா தேவல...

July 11, 2007 at 7:59 AM முரளிகண்ணன் said...

பொன்னியின் செல்வன் படிக்கதாவர்கள்தான் அதை ரசிக்க முடியும். படித்தவர்களின் கற்பனைக்கு உயிர் கொடுப்பது மிகவும் கடினம்

July 11, 2007 at 8:50 AM அபி அப்பா said...

வெட்டி தம்பி! நான் வந்தியதேவன்!உக்காரவை யாருன்னு சொல்லுங்க என் சமீபபதிவ பார்த்துட்டு!!!!

July 11, 2007 at 10:38 AM மனதின் ஓசை said...

//பொன்னியின் செல்வன் படிக்கதாவர்கள்தான் அதை ரசிக்க முடியும். படித்தவர்களின் கற்பனைக்கு உயிர் கொடுப்பது மிகவும் கடினம்//

உண்மையே.. ஆனாலும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

July 11, 2007 at 10:45 AM PPattian said...

இது ஒரு நல்ல முயற்சி. ஆங்கிலத்தில் Titanic மொத்தமாக நான்கு முறை எடுக்கப்பட்டதாக கேள்வி. ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்து கடைசியில் வெற்றி பெற்றது. அதே போல இதுவும் பல முறை முயற்சிக்கப் பட வேண்டிய ஒன்று.

பின் குறிப்பு: நான் பொன்னியின் செல்வனையும் Titanic ஐயும் ஒப்பிடவில்லை இங்கே.

July 11, 2007 at 1:59 PM கூல் said...

கதையின் சுவை காணாமல் போகப் போகிறது
4 டான்ஸ் 5 பயிட் 14 பாட்டு ஒருபாட்டுக்கு நயந்தாரா
அப்பப்பா

July 11, 2007 at 4:32 PM உடன்பிறப்பு said...

கலைஞர் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்

July 11, 2007 at 4:59 PM ஜீவி said...

திரைப்படமாக்க, 'பொன்னியின் செல்வன்' கதையை கல்கியின் திருமகனார் கி. ராஜேந்திரன் அவர்கள்
எம்,ஜி,ஆருக்கு விற்றதாக முன்பு பிரஸ்தாபம். பின்பு
அது கமலின் கைக்குப் போனதாகக் கேள்வி.
இப்பொழுது யாருக்கு 'ராயல்டி' யாம்?...
அல்லது பாரதியார் பாடல்களை எடுத்தாள்வது போல்
பட்டை நாமமா?..

July 11, 2007 at 9:34 PM வெங்கட்ராமன் said...

****************************
"மர்மதேசம்" என்ற தொடரின் மூலம் சின்னத்திரை ரசிர்களை தன் பக்கம் ஈர்த்த நாகா என்ற இளைஞர்தான் பொன்னியின் செல்வனை இயக்குகிறார்.
****************************

கண்டிப்பாக ரசிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும் இவரது படைப்பு.
தினசரி மெகாவாக எடுக்காமல் வார இறுதியில் ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும்.