உலக வலைப்பதிவுகளில் முதல்முறையாக சனிபெயர்ச்சி பலன்கள்.....
சனிபகவான் சிம்மராசிக்கு ஆகஸ்ட் 5ல் பெயர்ச்சியாகிறார். இதையொட்டி கடும் மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். மழைக்கு அடிப்படை காரணமானவர் சூரியன். சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்திற்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். சனிக்கு சிம்மராசி பகைவீடு. இதனால் இனி வரும் இரண்டரை ஆண்டுகளுக்கு கடும் வெள்ளப்பெருக்கு அல்லது பிற இயற்கை சீற்றங்கள் மூலம் ஆபத்து ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இதற்கு பரிகாரமும் இருக்கிறது. கோயில்களில் கூட்டு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்படுவதன் மூலம் கெடுபலன்களின் தாக்கம் குறையும். சனிப்பெயர்ச்சி பலன்கள் குறித்து திருநள்ளாறு ராஜா சுவாமிநாத குருக்கள் கூறியதாவது. ரிஷப ராசியினர் அர்தாஷ்டம சனியை சந்திப்பதால், பதவி மாற்றம், அடமானம், மனச்சோர்வு, வியாபாரத்தில் மந்தம், குழப்பம், கருத்து வேறுபாடு, அதிக அலைச்சல் ஆகியவற்றைச் சந்திப்பர். கடகராசியினர் ஏழரையின் கடைசி கட்டத்தைச்சந்திப்பதால், பணிமாற்றம், இடமாற்றம், மனக்கஷ்டம், வம்பு, ஆரோக்கியக் குறைவு ஆகியவற்றைச் சந்தித்தாலும், பதவி உயர்வும், நண்பர்களின் உதவியும் கை துõக்கி விடும். சிம்மராசியினர் சற்று கூடுதல் சிரமங்களைச் சந்திப்பர். மனக்கஷ்டம், குடும்பத்தில் கருத்து வேறுபாடு, வழக்கு தாமதம் ஆகியவற்றைச் சந்திப்பர். இவர்கள் பணியிலும், குடும்ப விஷயங்களிலும் முன் யோசனையுடன் நடந்தால் சிரமங்களைக் குறைத்து விடலாம்.
கன்னிராசிக்கு ஏழரை துவங்குவதால், பணப்பற்றாக்குறை, வியாபார தேக்கம், உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்றாலும், வீண் பணச்செலவை சுப விரயமாக மாற்றிவிட்டால், கஷ்டத்திலும் சந்தோஷப்பட்டுக்
கொள்ளலாம். விருச்சிகராசியினருக்கு நன்மையும், சிரமமும் கலந்த மத்திம பலன்கள் நடக்கும். இவர்கள் உடல்நலத்தில் கவனம்செலுத்த வேண்டும். இவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை பிரமுகர்களின் உதவியோடு
சமாளிக்க வாய்ப்பு கிடைக்கும். கும்ப ராசியினர் கண்டகச்சனியை சந்திப்பதால், உடல் நலக்குறைவு, கடன் வாங்குதல், நண்பர்களுடன் கருத்து வேறுபாடு, நாணயம் தவற வேண்டிய நிர்ப்பந்தம் ஆகியவற்றை சந்திக்க நேரிடும்.
மற்ற ராசியினருக்கு சுபபலன்கள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
6 comments:
Can't Read
பிழை சரி செய்யப்பட்டது....
கன்னிக்கு ஏழரையா?..ஹ்ம்ம்..
//சனிபகவான் சிம்மராசிக்கு ஆகஸ்ட் 5ல் பெயர்ச்சியாகிறார்.//
வலைபதிவர் பட்டறை அன்றைக்கு பெயர்வதால், அப்படியே திருவிழாவுக்கும் வந்து கொஞ்சம் நுட்பம் கத்துகிட்டு போகச் சொல்லுங்க ;) {ஆகஸ்ட் ஐந்து பெயர்வதால், சனி பகவானுக்கு நன்மையே நடக்கும் என்றும் அவரிடம் சொல்லிடுங்க ;) )
பொன்ஸ்
//வலைபதிவர் பட்டறை அன்றைக்கு பெயர்வதால், அப்படியே திருவிழாவுக்கும் வந்து கொஞ்சம் நுட்பம் கத்துகிட்டு போகச் சொல்லுங்க ;) //
போற சனிக்கு அழைப்பு அனுப்பும் முதல் ஆள் நீங்கதான் .
பொங்கு சனியாக அமைய வாழ்த்துக்கள்.:)
எனக்கு ஏழரையோட உச்சக்கட்டமா? தலைவர் கலைஞரின் ராசியே என்னோட ராசியும் :-)
Post a Comment