WE(A)eKEND





சிம்பு - நயன்தாரா மீண்டும் காதல்


இரண்டு வருட பிரிவுக்கு பிறகு சிம்பு - நயன்தாரா ஜோடி, நடிகையின் த்ரிஷாவின் முயற்சியால் ஒன்று சேர்ந்தது. இருவரும் அரை மணிநேரம் தனிமையில் சந்தித்து மனம் விட்டு பேசினர்.

நடிகர் சிம்புவும், நயன்தாராவும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு காதல் ஜோடியாக வலம் வந்தனர். "வல்லவன்" படத்தில் சிம்புவுடன் நெருக்கமாக நடித்தார் நயன்தாரா. இதையடுத்து இவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் சுமத்தி பேட்டி அளித்தனர். இந்நிலையில் நயன்தாராவுடன் ஒரு அறையில் சிம்பு நெருக்கமாக இருப்பதுபோன்ற புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. "இதை சிம்புதான் வெளியிட்டிருப்பார்" என்று நயன்தாரா தரப்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதுடன், "இனிமேல் அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐதராபாத்தில் "துளசி" என்ற படப்பிடிப்பில் நயன்தாரா நடித்துக் கொண்டிருந்தார். அவரை சந்திக்க சிம்பு சென்றார். நீண்ட நேரம் காத்திருந்தும் சிம்புவை நயன்தாரா சந்திக்கவில்லை. சிம்பு ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார். மேலும் கடந்த ஒரு வருடமாக சென்னை பக்கமே தலை காட்டாமல் தெலுங்கு படங்களிலேயே நயன்தாரா கவனம் செலுத்தி வந்தார். சிம்புவின் போட்டியாளர் என்று திரையுலகினரால் கூறப்படும் தனுஷ் ஜோடியாக "யாரடி நீ மோகினி"யில் நயன்தாரா நடித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட்டனர் என்று திரையுலகினரும், அவர்களது நண்பர்களும் முடிவு செய்தனர்.

இந்நிலையில் சிம்பு விவகாரத்தில் தற்போது பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அஜீத் நடிக்கும் "ஏகன்" படத்தில் நவ்தீப்பும், "சத்யம்" படத்தில் விஷாலுடன் நயன்தாராவும் நடித்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்திப்பது வழக்கம். சமீபத்தில் இந்த நண்பர்கள் குழு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து சந்தித்தது. அதில் த்ரிஷாவும் கலந்துகொண்டார். பார்ட்டி ஆரம்பித்த அரை மணி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென்று சிம்பு அங்கு வந்தார். அவரை அங்கு வரவழைத்தது த்ரிஷாதான் என்று கூறப்படுகிறது.

சிம்புவைக் கண்டதும் விஷால், நவ்தீப், த்ரிஷா எல்லோரும் கைதட்டி, கரகோஷம் செய்து வரவேற்றனர். நண்பர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த நயன்தாராவை கண்டதும் சிம்பு இமைகொட்டாமல் பார்த்தார். நயன்தாராவும் அதை ஆமோதிக்கும் விதமாக இதமான புன்னகையுடன் பார்த்தார்.

அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த நயன்தாராவை திடீரென்று சிம்பு கையைப் பிடித்து இழுத்து "உன்னிடம் தனியாக பேச வேண்டும் வா" என்று அழைத்தார். மறுப்பு சொல்லாமல் நயன்தாரா எழுந்து சிம்புவுடன் சென்றார். அங்கிருந்து மாயமான இருவரும் அரை மணி நேரத்துக்கு பிறகு சிரித்து பேசியபடியே திரும்பி வந்தனர். இருவரையும் மீண்டும் நண்பர்கள் குழு கைதட்டி கரகோஷத்துடன் வரவேற்றது. பிறகு சிம்பு அவர்களிடம் விடைபெற்று புறப்பட்டார். நயன்தாரா மட்டும் மவுனமாக அங்கே இருந்தார். இந்த திடீர் சந்திப்பு பற்றி கருத்து கூறிய ஒரு நடிகர், "சிம்பு, நயன்தாரா இடையேயான மனக்கசப்பு நீங்கி விட்டது. இருவருமே சேர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பிருக்கிறது" என்றார்.
இந்த சந்திப்பு கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரவு - தமிழ்முரசு

சத்யராஜ் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை! - பாரதிராஜா பரபரப்பு பேட்டி

உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறார் பாரதிராஜா. கிராமங்களின் முகவரியை உலகமெல்லாம் கொண்டு சென்ற இந்த போஸ்ட்மேன், அறுபதை கடந்த பின்பும் ஃபாஸ்ட்மேனாக இருப்பது ஆச்சர்யம். ஒருவர், இருவரல்ல... தமிழ் திரையுலகில் இன்று கோலாச்சிக் கொண்டிருக்கும் அற்புதமான இயக்குனர்கள் பலரின் ஓப்பன் யுனிவர்சிடி இவர்! தான் இயக்கப் போகும் புதிய தொலைக்காட்சி தொடர் குறித்து பேச ஆரம்பிக்கிறார். பேச்சு மெல்ல திசை திரும்பி பயணிக்கிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடரை இயக்க சம்மதித்திருக்கிறார் பாரதிராஜா. வருகிற ஏப்ரல் 14-ந் தேதி இரவு 8.30 க்கு மண்வாசனையோடு ஒளிப்பரப்பாக இருக்கிறாள் தெக்கத்திப் பொண்ணு. நெப்போலியன், வாகை சந்திரசேகர், ரஞ்சிதா, சொர்ணமால்யா என்று மக்களால் அறியப்பட்ட நட்சத்திரங்களுடன், புதிய நடிகர்களையும் இணைத்துக் கொண்டு இந்த நெடுந்தொடரை தரவிருக்கிறார் பாரதிராஜா.

தனது அலுவலகத்தில் என்றும் மாறாத அவருக்கேயுரிய கம்பீரத்தோடு பேச ஆரம்பிக்கிறார். சின்னத்திரையாக இருந்தாலும், பெரிய திரையாக இருந்தாலும் உழைப்பு ஒன்றேதான். சினிமாவில் வாழ்க்கையை ரொம்ப வேகமாக சொல்ல வேண்டியிருந்தது. ஆனால் சின்னத்திரையில் அப்படியல்ல. இரண்டரை மணி நேரத்தில் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. கொஞ்சம் நிதானமாக சொல்லலாம். இந்த தொடரை என்னுடைய சினிமா பாணியிலேயே சொல்லியிருக்கிறேன். 16 வயதினிலே, கிழக்கு சீமையிலே படங்களையெல்லாம் பார்த்தால் என்ன ஃபீலிங் வருமோ, அதே உணர்வை இந்த சீரியலில் அனுபவிக்கலாம். பொதுவாக சீரியல் என்றாலே அழுகிற மாதிரி காட்சியமைப்புகள் இருக்கும். இதில் அப்படி கிடையாது. ஏன் அழுகிற மாதிரி காட்சிகளே இல்லை என்று கேட்கிற அளவுக்கு இருக்கும். கொஞ்சம் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறேன். இப்போதைக்கு சுமார் 300 எபிசோடுகள் கொண்டு போகலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். எங்கே சரக்கு குறைகிறதோ, அங்கே நிறுத்திக் கொள்வேன். ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்வேன். சின்னத்திரையிலும் மரபுகளை உடைப்பேன்.

ஏன் கலைஞர் டி.வி யை தேர்ந்தெடுத்தீர்கள்?

வேறு யாரும் என்னை அணுகி இப்படி ஒரு சீரியல் எடுத்து தரும்படி கேட்கவில்லை. என்னை நாடி வந்ததால் செய்து கொடுக்க ஒப்புக் கொண்டேன்.

நீங்களே விரும்பிதான் சின்னத்திரைக்கு வந்தீர்களா?

விரும்பிதான் வந்தேன். என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. தமிழ்சினிமாவில் இத்தனை ஆண்டுகாலம் இருக்கிறேன். நடிகர் திலகம் சிவாஜியையே இயக்கியிருக்கிறேன். நான் சொன்னதைதான் அவரே கேட்டார். என்னை இப்படி எடு என்றோ, இதைதான் தரவேண்டும் என்றோ யாரும் கட்டாயப்படுத்த முடியாது. சினிமா மாதிரி இதில் பயம் இல்லை. முக்கியமாக ரெவின்யூ என்ற விஷயம் இல்லை.

நீங்கள் சின்னத்திரைக்கு வந்துவிட்டதால் தொடர்ந்து படங்களை இயக்குவீர்களா?

நிச்சயமாக இயக்குவேன். பொம்மலாட்டம் படத்தின் வேலைகளை ஒருபக்கம் செய்து கொண்டேதான் தெற்கத்தி பொண்ணையும் இயக்கி வந்தேன். இதே மாதிரி தொடர்ந்து படங்களை இயக்குவேன்.

குற்றப்பரம்பரை படத்தை இயக்கப் போவதாகவும், அதில் நீங்களே நடிக்கவிருப்பதாகவும் கூறினீர்களே?

என் வாழ்க்கையில் உச்சக்கட்ட காட்சியாக அந்த படம் இருக்கலாம்.

தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே? முன்பு கன்னடர்களுக்கு எதிரான நெய்வேலி போராட்டத்திற்கு நீங்கள்தானே தலைமை ஏற்றீர்கள்?

உண்மைதான். உணர்வை காட்ட வேண்டும் என்பதற்காக எல்லாரும் ஒன்றுபட்டு நெய்வேலி போனோம். ஆனால் மறுநாள் ஒரு உண்ணாவிரதம் தனிப்பட்ட முறையில் நடந்ததே? அது ஏன் நடத்தப்பட்டது என்று பத்திரிகைகள் கூட கேட்கவில்லை. அப்படி தனியாக நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதற்கு இவர்கள் பதில் கூறட்டும். பிறகு இந்த உண்ணாவிரதத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று என்னை கேட்கட்டும்.

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்கிறார்களே?

எனக்கு இதுவரை வரவில்லை. அப்படி வந்தால், உங்களின் முந்தைய கேள்விக்கு என்ன பதிலோ? அதையே பதிலாக அனுப்புவேன்.

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசியதற்கு பாராட்டு தெரிவித்தீர்களாமே?

டி.வி யில் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்யராஜ் பேச்சை கேட்டதும் கைதட்டினேன். உடனே போன் செய்து சில கருத்துக்களுக்காக பாராட்டினேன். அதே நேரத்தில் அவர் கூறிய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன். விமர்சனம் என்பது முறையாக இருக்க வேண்டும். சக தோழன் மேல் எச்சிலை காறி துப்பிவிடக் கூடாது. சொன்ன கருத்து நியாயமாக இருந்தாலும், அதை நாகரீகமாக சொல்லியிருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ரஜினி அவருக்கு தோன்றியதை பேசியிருக்கிறார்.

காவிரி நீர் பிரச்சனையாக இருக்கட்டும். ஒகேனக்கல் பிரச்சனையாக இருக்கட்டும். அல்லது வேறு பிரச்சனையாக இருக்கட்டும், எந்த விஷயத்தை எடுத்தாலும் இங்கே ஒட்டு மொத்தமான உணர்வுகள் இல்லை. தமிழ்நாடு மட்டும்தான் கலப்படமாக இருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் தலை வணங்கி போகிறோம். இந்த மண்ணின் மைந்தன்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற உணர்வு இல்லை. இங்கே மக்கள் மழுங்கடிக்கப்பட்டு விட்டார்கள். அதற்கு சினிமாவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

பெர்லின் திரைப்பட விழாவில் பருத்தி வீரன் படத்திற்கு விருது வாங்கி வந்த டைரக்டர் அமீருக்கு எந்த அமைப்பும் பாராட்டு விழா நடத்தவில்லையே? குறிப்பாக இயக்குனர்கள் சங்கம் கூட...

இதை இயக்குனர்கள் சங்க தலைவர் என்று ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்க வேண்டும். நான் அமீரை நேரில் அழைத்து பாராட்டினேன். என் இத்தனை வருட சினிமாவில் இப்படி ஒரு படம் எடுக்கவில்லையே என்றேன். இதைவிட வேறென்ன பாராட்ட முடியும்?

பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து மூவரும் தனித்தனியாக பிரிந்து விட்டீர்கள்? மறுபடியும் சேரும் வாய்ப்புகள் இருக்கிறதா?

நாங்கள் தனித்தனியாக பிரிந்ததால்தான் இளையராஜா இந்தி படத்திற்கு இசையமைக்க முடிகிறது. பாரதிராஜா ஒரு நானா படேகரை வைத்து படம் எடுக்க முடிகிறது. வைரமுத்துவால் ஒரு கள்ளிக்காட்டு இதிகாசம் படைக்க முடிகிறது. மூவரும் சேர்ந்திருந்தால் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டு இருந்திருப்போம். மூவரும் சேரும் காலம் வருமா என்கிறீர்கள். வயது பக்குவத்தை கொடுத்திருக்கிறது. பார்ப்போம்... நீங்கள் கேட்டது நிறைவேறலாம்.

தரவு - தமிழ்சினிமா.காம்

நடிகர் ரகுவரன் மரணம்


பிரபல தமிழ் நடிகர் ரகுவரன் மருத்துவமனையில் காலாமானார். உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 49.இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுமென தெரிகிறது .

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறையிடம் பிரார்த்திப்போம்.

டெஸ்ட் அணியில் இருந்து இஷாந்த் சர்மா, கம்பீர் நீக்கம்...

தென் ஆப்ப்ரிக்காவிற்கு எதிராக எதிர்வரும் 26ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் மற்றும் உடல்தகுதி காரணமாக இஷாந்த் சர்மா, கவுதம் கம்பீர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

மார்ச் 21ம் தேதிக்குள் மஹேந்திரசிங் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் தங்களது உடல் தகுதியினை நிரூபிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

அணிவிவரம் வருமாறு....

Wasim Jaffer, Virender Sehwag Rahul Dravid Sachin Tendulkar Saurav Ganguly, Vangipurappu Laxman, Yuvraj Singh ,Mahendra Singh Dhoni (wicketkeeper), Irfan Pathan, Anil Kumble (captain), Harbhajan Singh, Murali Kartik, Shanthakumaran Sreesanth , Rudra Pratap Singh.

கர்நாடக முன்னாள் முதல்வர் இன்று ஒகேனக்கல் வருகையால் பதற்றம் அதிகரிப்பு..

கர்நாடக அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் அடிக்கடி அத்துமீறி ஒகேனக்கல்லில் நுழைந்து ஆய்வு செய்வதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா 500 பேருடன் இன்று ஒகேனக்கல் வந்து ஆய்வு செய்யப்போவதாக கூறப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லை சொந்தம் கொண்டாட கன்னட அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைக்க முதல்வர் கருணாநிதி, தர்மபுரி வந்தபோது, 50க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் ஒகேனக்கல் பகுதியில் அத்துமீறி நுழைந்தனர்.

இதேபோல் கடந்த வாரம் கர்நாடக அமைப்பை சேர்ந்த சிலர் பரிசல் மூலம் ஒகேனக்கல் இடைத்திட்டு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, வரைபடத்தை வைத்து ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட வன அதிகாரிகள் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் சோமசேகர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தமிழக போலீசுக்கோ, வனத்துறைக்கோ எந்தவித அறிவிப்பும் தராமல் ஒகேனக்கல் சினிபால்ஸ், தொங்குபாலம் ஆகிய இடங்களுக்கு சென்று வரைபடத்தை வைத்து ஆய்வு செய்து, கோஷம் போட்டனர். இந்த தொடர் சம்பவங்களால் ஒகேனக்கல்லில் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநில பா.ஜ. தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மாதேஸ்வரன் மலைக்கு வருகிறார். பின்னர், கர்நாடக மாநில பா.ஜ. நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான ஈஸ்வரப்பா, சாம்ராஜ் நகர் மாவட்ட பா.ஜ. தலைவர் சிவக்குமார், கொள்ளேகால் டி.எஸ்.பி. தரணிதேவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்ட வனப்பாதுகாவலர் கீதாஞ்சலி, வன அலுவலர் நாகராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் உட்பட சுமார் 500 பேருடன் பாலாறு வழியாக கோபிநத்தம் வருகிறார். பின்னர் மாறுகொட்டாய் வழியாக ஒகேனக்கல் வருகிறார். இருமாநில எல்லை பகுதிகளை ஆய்வு செய்கிறார். இத்தகவலை மாதேஸ்வரன்மலை போலீசார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவார்கள். இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் ஒகேனக்கல் வருவதாக கூறப்படுவதால், ஒகேனக்கல்லில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

WE(A)eKEND






















ஆவின் பால் விலை உயர்வு

பால் கொள்முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாயில் இருந்து நான்கு ரூபாயாக உயர்ந்தது. பால் உற்பத்தியாளர்களில் பால் கொள்முதலை அதிகரிக்க அதன் விலையை உயர்ந்த வேண்டும் என்று ‌அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சென்னையில் தமிழக அரசு விடுத்த அறிக்கையில் பால் கொள்முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் இருந்து 4 ரூபாயாக உயர்வு என அறிவித்தனர். மேலும், ஆவின் பால் லிட்டருக்கு குறைந்த பட்சம் இரண்டு ரூபாய் வரை உயரும் என்றும் அறிவிக்கப் பட்டது.

சிதம்பரத்தில் திருவாசகம் ஒலித்தது!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் இன்று காலை சென்ற குழுவினர் தேவாரம், திருவாசகம் பாடினர். இதையட்டி அங்கு டி.ஐ.ஜி. தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் திருசிற்றம்பல மேடையில் அரசு உத்தரவின்படி கடந்த 1-ம் தேதி தேவாரம் பாடுவதற்காக சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட பக்தர்கள் சென்றனர். அப்போது நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பாதுகாப்புக்கு வந்த போலீசாரை தீட்சிதர்கள் தாக்கினர். அன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்திலும் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 10 தீட்சிதர்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால், சிதம்பரத்தில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

இதையடுத்து நடராஜர் கோயிலில் பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி வழிபடலாம் என்றும், இதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் மனித உரிமை பாதுகாப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பினர் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை தலைமையில் தெற்கு கோபுர வாசல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புரட்சிகர மாணவர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும். நடராஜர் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். பாமக மாநில துணைத் தலைவர் சந்திரபாண்டியன், விடுதலை சிறுத்தை அமைப்பின் முன்னாள் மாவட்டச் செயலாளர் காவியசெல்வன் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் தேவாரம் பாடுவதற்காக நடராஜர் கோயிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடினர்.

30-க்கும் மேற்பட்டோர் தேவாரம் பாடியதால் கோயில் வளாகம் முழுவதும் அது எதிரொலித்தது.அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வன்னிய பெருமாள் தலைமையில் கடலூர் எஸ்.பி., பிரதீப்குமார், சிதம்பரம் ஏஎஸ்பி செந்தில்வேலன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோர்ட் புறக்கணிப்பு
சிதம்பரம் வக்கீல்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் நடனம் தலைமையில் நேற்று நடந்தது. தேவாரம் பாட ஆறுமுகசாமிக்கு ஆதரவாக சென்ற வக்கீல்கள் மீது போலீசார் நடத்திய தடியடியைக் கண்டித்து 8-ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோர்ட் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

WE(A)eKEND







எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தூக்குப் போட்டு தற்கொலை

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 67.

பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ். இவரது இயற்பெயர் ராம்மோகன். மனைவி ஹேமா (65). இவர்களுக்கு குழந்தையில்லை. கணவன், மனைவி மட்டும் கோடம்பாக்கம் டேங்க் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளத்தில் வசித்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக ஹேமா இறந்தார். மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் தனிமையில் தவித்தார் ஸ்டெல்லா புரூஸ்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது வீடு பூட்டியிருப்பதாக ஹேமாவின் தம்பி சேகருக்கு தகவல் கிடைத்தது.அவர், இன்று காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது உள்பக்கமாக பூட்டியிருந்தது. உடனே கோடம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் சேதுபாண்டியன் தலைமையிலான போலீசார் வந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, முன்பக்க அறையில் உள்ள மின் விசிறியில் ஸ்டெல்லா புரூஸ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். வேஷ்டியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உடலை இறக்கிய போலீசார், அதை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் ஸ்டெல்லா புரூஸ் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில் எழுதியிருப்பதாவது:

கடந்த 67 வருட எனது வாழ்க்கை பற்றி வருத்தங்கள் இல்லை. எளிய, உண்மையான, அடக்கமான மனிதனாக, ஆடம்பர சிந்தனை துளியும் இன்றி வாழ்ந்திருக்கிறேன். கண்ணை இமை காப்பதுபோல் என்னை பார்த்து, அலாதியான காதலுடன் நேசித்து பத்திரப்படுத்தி அபூர்வ, ஆனந்த மனைவியாக என் மனைவி ஹேமா வாழ்ந்தார்.

எத்தனை பிறவியானாலும் இதை மறக்க மாட்டேன். நானும் ஹேமாவும் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான, ஆன்மிகமான இலக்கிய தன்மையான காவியம். என் மரணம், முதுமையில் ஒடுங்கிப் போயிருக்கும். ஹேமாவின் துணை இல்லாத சூனியம், தாங்க முடியாததாக இருக்கிறது. தனிமை சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது.

எனவே, ஹேமாவிடம் செல்கிறேன். மரணத்தின் கதவுகளை திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும்போது, மரண விடுதலை பெறுகிறேன்
.


இவ்வாறு அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார். கடிதத்தை கைப்பற்றிய கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அவர் இறந்தது தெரியவந்தது. "அது ஒரு நிலாக்காலம்" உள்பட பல்வேறு புகழ்பெற்ற நாவல்கள், சிறுகதைகளை ஸ்டெல்லா புரூஸ் எழுதியுள்ளார்.

தரவு - தமிழ்முரசு

வீட்டில் சுற்றுலா பயணிகளை தங்க வைக்க விருப்பமா?

வீட்டில் சுற்றுலா பயணிகளை தங்க வைக்க விருப்பம் உள்ளவர்கள், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சுற்றுலா துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

சுற்றுலா ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2007ல் தமிழகத்துக்கு 5 கோடியே 6 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். இது இந்திய சுற்றுலா வளர்ச்சி விகிதத்தில் 29.2 சதவீதம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வீடுகளில் தங்க வைக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இதன்படி, தங்கள் வீட்டில் சுற்றுலா பயணியை தங்கவைக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் முழு முகவரியுடன் சுற்றுலா ஆணையர், தமிழ்நாடு சுற்றுலா வளாகம், வாலாஜா ரோடு, சென்னை-2 என்ற முகவரிக்கு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அறிக்கையில் சுற்றுலா ஆணையர் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் சுஜாதா உடல் தகனம்- முதல்வர் அஞ்சலி


எழுத்தாளர் சுஜாதாவின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் இன்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி, கட்சித் தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்பட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பிரபல எழுத்தாளர் சுஜாதா (73), உடல் நலம் பாதிக்கப்பட்டு சில நாட்களாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு சுஜாதா இறந்தார். அவரது உடல் மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பார்க் பின்புறம் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இன்று காலை முதல்வர் கருணாநிதி, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோர் சுஜாதாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செய்தனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ. தலைவர் இல.கணேசன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சிவகுமார், பார்த்திபன், கார்த்தி, இயக்குனர்கள் மணிரத்னம், எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், அமீர், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், நடிகைகள் சுகாசினி மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன், கார்ட்டூனிஸ்ட் மதன் ஆகியோரும் சுஜாதா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ரஜினிகாந்த் கூறும்போது, ‘ சுஜாதாவின் மறைவு, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இறுதிவரை தனக்கு பிடித்தமான தொழிலையே செய்து கொண்டிருந்தார். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" என்றார்.

பின்னர் சுஜாதாவின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

நாளை மறுநாள் (2-ம்தேதி) சென்னை நாரதகான சபாவில் இரங்கல் கூட்டம் நடை பெறுகிறது. சினிமா பிரபலங்கள், எழுத்தாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.


தரவு - தமிழ்முரசு

சுஜாதா காலமானார்....


பிரபல தமிழ் எழுத்தாளரும், திரைபட வசனகர்த்தாவுமான சுஜாத என்கிற ரங்கராஜன் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறையிடம் பிரார்த்திக்கிறோம்.

திரை விமர்சனம் - நெஞ்சத்தை கிள்ளாதே

தேடி தேடி அனுபவத்தை சம்பாதித்துக் கொள்கிற ஒருவன், தன்னை தேடி ஒரு காதல் அனுபவம் வரும்போது என்ன செய்கிறான்? இதுதான் நெஞ்சத்தை கிள்ளாதே. நினைத்தால், அந்த ஸ்டார் ஹோட்டலையே விலைக்கு வாங்கிவிடலாம். ஆனால், அங்கு வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் ஜெயிலுக்கு போகிறார் விக்ராந்த். பதினைந்தாயிரம் கொடுத்து விலைமாதுவை அழைத்துச் சென்று அவளை நிம்மதியாக உறங்க வைத்து அனுப்புகிறார். இப்படியெல்லாம் செய்யும் ஒரு பணக்காரனை பார்த்தால் என்ன வரும்? காதல் வருகிறது பாரதிக்கு. இவர் உருகி உருகி காதலை சொல்ல, அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் விக்ராந்த்.

அதன்பின் நிஜமாகவே பாரதி மேல் காதல் வருகிறது விக்ராந்துக்கு. இது பாரதியின் முறை. விக்ராந்த் செய்த அத்தனை அவமானங்களையும் இவரும் செய்ய, சேர்வார்களா? மாட்டார்களா? என்ற கேள்வியோடு நகர்கிறது படம். இடையில் பாரதிக்கும் விக்ரமாதித்யாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. தாலி கட்டுகிற கடைசி வினாடி வரைக்கும் தனக்கு வாய்ப்பிருக்கும் என்று நம்புகிற விக்ராந்த் மணமேடைக்கு எதிரிலேயே நிற்கிறார். கடைசியில் அதுவும் கிட்டாமல் இரண்டு சொட்டு கண்ணீர் சிந்த, 'உணர்வும் ஆக்கமும் அகத்தியன்!' நல்லவேளையாக தமிழ்சினிமா சம்பிரதாயங்களை உடைத்து, இந்த படத்திலாவது இடையில் வந்த மாப்பிள்ளையோடு ஹீரோயினை அனுப்ப சம்மதித்தார்களே!

விக்ராந்த் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ, நகர விடாமல் நங்கூரம் பாய்ச்சுகிறது விதி! நக்கல், நையாண்டி, காதல், சோகம் என்று நாலாபுறமும் கவனிக்க வைக்கிற நடிப்பு இருக்கிறது அவரிடம். ஒவ்வொரு முறையும் பாரதி அவமானப்படுத்தும் போதெல்லாம், கவலையும் புன்சிரிப்புமாக அவர் ஏற்றுக் கொள்வது பரிதாபம்.

சில காட்சிகளில் ஆச்சர்யப்படுத்துகிறது அகத்தியன் பிராண்ட்! தன்னுடைய அப்பாவிற்கு இன்னொரு மனைவி இருப்பது தெரியவர, அதை டீசண்டாக அணுகுவது... தங்கையின் காதலனை வரவழைத்து பேசுவது... ஒரே ரூமில் ஒரே பெட்டில் கண்ணியமாக இருப்பது சாத்தியமா? இப்படி நிறைய! விபசாரத்திற்கு சப்போர்ட் பண்ணுகிற வசனங்களிலும் முற்போக்கு சிந்தனை!

அம்முவில் பார்த்த பாரதியா இது? சில கோணங்களில் அழகு. பல கோணங்களில் பகீர். நடிப்பை பற்றி கவலைப்படுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். அவருக்கு தேவை, அவசரமாக ஒரு ஜிம்!

கேரளாவின் படகு வீடும், அதையட்டிய காட்சிகளும், அழகாக இருந்தாலும் நீளமாக தொடர்வது ஆயாசம்...

பின்னணி இசையில் படுத்தியிருக்கிறார் யுகேந்திரன். ஒரே ரீரெக்கார்டிங் ஒலியை வைத்துக் கொண்டு எல்லா ரீல்களையும் ஒப்பேற்றுவதை எதில் சேர்ப்பது? நல்லவேளையாக நேரே வரட்டுமா என்ற பாடல் இனிமை.

வலிக்கிற மாதிரி கிள்ளியிருக்கிறார்கள்!

WE(A)eKEND



ராஜ் தாக்கரே பினையில் விடுவிக்கபட்டார்

மும்பையில் இன்று மாலை கைது செய்யபட்ட மஹாராஷ்ட்ர நவநிர்மான் சேனா வின் தனனவரான ராஜ் தாக்கரே தன் சொந்த பினையில் நீதிமன்றத்தால் விடுவிக்கபட்டார்.

பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்க கூடாது மற்றும் பொது இடங்களில் பேசக்கூடாது போன்ற நிபந்தைகளுடன் அவர் பினையில் விடப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக ராஜ் தாக்கரேயின் வழக்கறிஞர்கள் இத்தகைய நிபந்தனைகளள ஏற்கமறுத்து நீதிபதியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், நிபந்தனையை ஏற்காத பட்சத்தில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்ன நீதிபதி திட்டவட்டமா கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன....





சற்றுமுன் நடந்த செய்திகளை முந்தித்தருவது மிளகாய் மட்டுமே.....

ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்டார்....


பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிய குற்றத்திற்காக மஹாராஷ்ட்ர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே சிறிது நேரத்திற்கு முன்னர் மஹாராஷ்ட்ர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மஹாராஷ்ட்டிர மாநில துனை முதல்வர் கூறும்போது யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என கூறினார்...

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன...

பிற்சேர்க்கை...

இன்று மாலை 4.20 மணியளவில் ராஜ்தாக்கரே அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 153,153A,153D,117 கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இவை பினையில் வர இயலாத குற்றச்சாட்டுகளாகும்.

இதே சமயத்தில் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் அபு ஆஸ்மியும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.




செய்திகளை முந்தித் தருவது.....மிளகாய்....மட்டுமே

சஞ்சய் தத் திருமணம்.....




பிரபல ஹிந்தி நடிகரும், புகழ்பெற்ற சுனில் தத் - நர்கீஸ் தத் தம்பதியரின் மகனுமான சஞ்சய்தத் தனது நெடுநாள் காதலியான மான்யதா வை இன்று கோவாவில் திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய குடும்ப நண்பர்கள் மட்டும் பங்கேற்ற இந்த திருமண நிகழ்ச்சிக்கு பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படவில்லை.

இது சஞ்சய் தத்துக்கு மூன்றாவது திருமணம். முதல் மனைவி ரிச்சா புற்று நோயால் காலமானார். இரண்டாவது மனைவியான மாடல் அழகி ரேகா பிள்ளையிடமிருந்து கடந்த மாதம்தான் விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

சிறுநீரக மோசடி டாக்டர் டெல்லி கொண்டுவரப்படார்...

நாட்டை உலுக்கிய சிறுநீரக மோச்டி வழக்கின் பிரதான குற்றவாளியான டாக்டர்.அமித் சற்று முன் டெல்லி கொண்டு வரப்பட்டார்.கட்ந்த இரு நாட்களுக்கு முன்னர் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட டாக்டர்.அமித் குமார் இந்திய அரசின் வேண்டுகோளின் பேரில், இன்று காலை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டார்.

300 க்கும் அதிகமான சிறுநீரக அறுவை சிகிச்சைகளை முறைகேடாக செய்ததாக அவர் மீது சி.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன...



செய்திகளை முந்தி தருவது....மிளகாய்....

WE(A)eKEND







மும்பையில் பதட்டம்...

சமாஜ்வாதி கட்சிக்கும், ராஜ் தாக்ரேயின் மஹராஷ்ட்டிரா நவநிர்மான் சேனா கட்சியினருக்குமிடையேயான மோதல் இன்று வலுத்தது. இதன் எதிரொலியாக மும்பை தாதர் பகுதியில் வட இந்தியர்கள் ராஜ் தாக்கரேயின் கட்சியினரால் தாக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்ச்சியாக பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனின் வீடும் தாக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் மஹாராஷ்ட்ர மாநில அரசு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பான CNNIBN ன் செய்திதொகுப்பு....

இந்திரலோகத்தில் நா அழகப்பன். - திரைவிமர்சனம்

எல்லாரையும் கொல்லும் எமனையே கொன்றுவிட்டால்? ஒரு நரனின் ஆசையை படமாக்கியிருக்கிறார்கள். பூவுலகில் நாடகம் போட்டு பிழைப்பு நடத்தும் அழகப்பன், பரிகாரம் செய்வதாக நினைத்துக் கொண்டு ஒரு சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அந்த சிலையோ தேவலோகத்து ரம்பை! வம்பை விலை கொடுத்து வாங்கியது மாதிரி ஆகிவிடுகிறது வாழ்க்கை. மாலை நேரமானால் அலேக்காக தேவலோகத்துக்கு தூக்கிச் செல்லப்படும் அழகப்பன், மறுநாள் பூவுலத்தில் இறக்கிவிடப்படுகிறார். இப்படி மாறி மாறி சவாரி அடிக்கும் அழகப்பன் நம்ப வடிவேலுவேதான்! தேவலோகத்திலும் இந்திரன், எமன் இவர்தான். நல்லவேளை... நீ என்னை மாதிரியே இருக்கியே என்ற வழக்கமான டயலாக் விடாமல் ஆகவேண்டியதை பார்த்திருக்கிறார்கள்.

தோற்றம் - மறைவு என்றுதானே போட்டோவுக்கு கீழே குறிப்பு எழுதுவார்கள்? இங்கே தோற்றம் - ஓட்டம் என்று எழுதி, வடிவேலுவின் தாத்தாக்களின் 'எஸ்கேப்பிசத்தை' பற்றி விவரிக்க, ஆரம்பமே அதிரடி! சதைபோட வேண்டும் என்று நினைப்பவன் மொத்த டானிக்கையும் ஒரே மூச்சில் குடித்த மாதிரி, ஆசைப்பட்ட கெட்டப்பையெல்லாம் போட்டிருக்கிறார் வடிவேலு. இந்த சிரிப்பு ராஜா போட்டிருக்கும் 90 வயது தாத்தா வேடம், நகைச்சுவைக்கு பதிலாக சோகத்தை வரவழைப்பதால், அழகப்பன் பல நேரங்களில் அழுகையப்பனாகவும் ஆகியிருப்பது சற்றே ஆயாசத்தை வரவழைக்கிறது... எமன் கெட்டப்பில் பிரமாண்டமாக உயர்ந்து நிற்கிறார் வடிவேலு. அவரின் தூய தமிழ் வசனங்களும், அடிவயிற்று பிளிறல்களும் புதிய வடிவேலுவை காட்டியிருக்கிறது. எந்நேரமும் பெண்களிடம் கடலை போடும் இந்திரனாகவும் அவரே.

தன்னிடம் அன்பை பொழியும் சிறுமி ஒருத்தியின் மரணத்திற்கு பின் எமனை கொல்லும் உத்தேசத்தோடு இந்திரலோகம் போகும் வடிவேலு, கூடவே சாராய பேரலையும் கொண்டு செல்வது சுவாரஸ்யம். அதில் கொஞ்சத்தை எமனுக்கே ஊற்றிக் கொடுக்கிற கற்பனையும் பலே. ஆனால், அங்கே பொங்கி வழிய வேண்டிய கலகலப்பு, வெறும் சலசலப்பாகவே முடிந்து விடுவதுதான் சப்!

ரம்பா, மேனகா, ஊர்வசி ஆகியோருக்கு போட்டியாக இந்திரலோகத்தில் ஆடவிட யோசித்தார்களோ என்னவோ? 'கோடங்கி பிடாரி ஆத்தா' என்ற பெயரோடு இறக்கிவிடப்பட்டிருக்கிறார் ஸ்ரேயா! ஆத்தா...இதுக்கா இத்தனை பில்டப்பு?

திரும்பிய பக்கமெல்லாம் தன் அசுர கரங்களாலும், கற்பனைகளாலும் பிரமிப்பூட்டியிருக்கிறார் கலை இயக்குனர் தோட்டா தரணி. கண் முன் விரியும் இந்த அதிசயங்களை அதே அழகோடு திரையில் வார்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத்.

கதைகேற்ற பழைய வாசனையோடு உருவாக்கப்பட்டிருக்கும் பாடல்களும், பின்னணி இசையும் நம்மை அந்த உலகத்திற்கே இட்டுச் செல்கின்றன. இசை சபேஷ் - முரளியா? சபாஷ் - முரளியா?

இந்திரலோகத்தில் ஒரு 'இம்சை' அரசன்!

தரவு - தமிழ்சினிமா.காம்

WE(A)eKEND




WE(A)eKEND





சானியா மிர்சா தோல்வி....


ஆஸ்த்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியிலிருந்து சானியா மிர்சா வெளியேறினார்.சற்று முன் முடிவடைந்த மூன்றாவது சுற்று ஆட்டமொன்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லிம்ஸிடம் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி தோற்றார்.















பொங்கல் போனஸ் பற்றிய அறிவிப்புகள்...
இலங்கை அழைப்பை இந்திய பிரதமர்
நிராகரித்தது...
ஆஸ்த்திரேலிய தொடரினை ரத்து செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம்
எடுத்த முடிவுகள்...
ICC பணிந்த செய்தி...
டாட்டாவின் NANO CAR படம்
மற்றும் செய்தி...
ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிய செய்தி..
இந்திய
கிரிக்கெட் அணியின் மகத்தான வெற்றி...
டென்னிஸ்ஸில் சானியா மிர்சாவின் தோல்வி....


என சூடான செய்திகளை உடனுக்குடன் தமிழ் வலைபதிவுகளில் செய்திகளை முந்தித்தருவது....



மிளகாய் மட்டுமே.....

இந்தியா வென்றது....


ஆஸ்த்ரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது.
India in Australia 3rd Test
Day 4: Session 3
India won by 72 runs
1st Innings
India 330
Australia 212
2nd Innings
India 294
Australia 340
Commentary/reports: Day 1 Day 2 Day 3 Detach Scoreboard





சற்றுமுன் நடந்த செய்திகளை முந்தித்தருவது....மிளகாய்...மட்டுமே

பிரிவோம் சந்திப்போம் - திரை விமர்சனம்

மார்கழி மாசத்து கோலமும், மத்தியில் வைக்கப்பட்ட பூசணிப்பூவும் போன்றவை கரு.பழனியப்பனின் படங்கள். இரைச்சல்களையே விளைச்சல்களாக நினைக்கிற கோடம்பாக்கத்தில், பழனியப்பனின் படங்கள் இதமான தாலாட்டு.

குத்துப்பாட்டு, குத்தீட்டி சண்டை, இரட்டை கூட அல்ல... ஒற்றை அர்த்தமாகவே ஆகிவிட்ட டயலாக்குகள்.. இவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு கமர்ஷியல் படத்தை கொடுத்துவிட முடியுமா? அதெப்படி? என்பவர்கள் பிரிவோம் சந்திப்போம் படத்தை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு உள்ளே நுழையலாம்.

விட்டால், ரங்கநாதன் தெருவை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு உறவுகள் நிறைந்த குடும்பத்தில் சேரன். அதற்கு நேர் எதிராக ஒரே பெண்ணாக பிறந்துவிட்ட சினேகா. இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். தியான மண்டபத்து அமைதியை, திருவிழா கூட்டம் அசத்துகிறது. இந்த உறவுகளும், அவர்கள் தரும் அன்பும் நிரந்தரம் என்று மகிழும் சினேகாவின் ஆசையில் திடீரென்று விழுகிறது டிரான்ஸ்பர். சேரனே விரும்பி ஏற்கும் இந்த டிரான்ஸ்பர் அட்டக்கட்டி மலைப்பிரதேசத்துக்கு தனிக்குடித்தனமாக இடம் பெயர்கிறது. அங்கே...? தமிழ்சினிமாவே பார்த்திராத வில்லன் ஒருவன்! வேறு யாருமல்ல, தனிமை! சேரன் வேலைக்கு போய்விட தனிமையில் இருக்கும் சினேகா படுகிற வேதனையை அப்படியே தியேட்டருக்குள் 'பாஸ்' பண்ணுகிறார் இயக்குனர். இருவரும் மறுபடியும் சொந்த ஊருக்கே திரும்பிவிட மாட்டார்களா என்று ஏங்குகிற நேரத்தில் ஒரு திடுக் திருப்பம். சற்றே தவிக்க வைத்து வணக்கம் போடுகிறார் இயக்குனர்.

எதிரே நிற்பவரின் நடிப்பையும் சேர்த்து பறிக்கும் வாலியின் வலிமை கொண்டவர் சினேகா. விடுவாரா, இப்படி ஒரு கேரக்டர் கிடைத்தால்? தெரியாத மொழிகளிலும் டப்பிங் பேசுகிற ஆற்றல் அவர் கண்களுக்கு உண்டு. மகிழ்ச்சி, ஏமாற்றம், விரக்தி, வெறுமை எல்லாவற்றையும் நொடி பொழுதில் புரிய வைக்கின்றன அந்த கண்கள். 'நமக்கு எல்லாம் தருகிற அந்த கடவுளுக்கு நன்றி சொல்லணும்' என்றபடி, ஒவ்வொரு முறையும் உண்டியலை நிரப்புவது அழகு. பேச ஆளில்லாமல் தன்னை சுற்றி ஒலிக்கிற சப்தங்களை பதிவு செய்து அவற்றோடு பழக ஆரம்பிப்பது பரிதாபம். நல்லவேளையாக அவரை முழு மனநோயாளியாக்காமல் கரை சேர்க்கிறார்கள்.

சேரன்- சினேகா காதலில் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லை. திருமணத்திற்கு முன்பு சினேகாவை தனிமையில் சந்திக்க விரும்பி, அவர் செய்யும் முயற்சிகளும், அது பலிக்காமல் போய் தவிப்பதும் கலகலப்பு.

ஒரு மருத்துவராக மட்டுமல்லாமல், அந்த ஊரின் செல்லப்பிள்ளையாகவே வலம் வரும் ஜெயராம் சட்டென்று சினேகாவின் மன ஓட்டத்தை புரிந்து கொள்வது ஆறுதல். தானாக மருந்து எடுத்துக் கொள்ளும் பலருக்கு ஜெயராமின் அட்வைஸ் ரொம்ப அவசியமான விஷயம்.

எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமணன் டயலாக்குகள் கரு.பழனியப்பன் ஒரு பொறுப்பான பத்திரிகையாளர் என்பதையும் பறைசாற்றுகிறது. 'ஃபாதர் ஆஃப் நேஷனை, ஃபாதர் ஆஃப் ஸ்டேட் ஆக்கிட்டீங்களே' என்று கவலைப்படுவதை சொல்லலாமா? காந்தியும் மதுக்கடைகளும் குறித்த அவரது கேள்வியில் இருக்கிற நியாயம், நெருப்பு! இரட்டை புலவர்கள் கதையையெல்லாம் சினிமாவில் சொல்கிற அளவுக்கு தைரியத்தை பெற்ற விஷயத்தில் பழனியப்பன், படவுலக ராமதாஸ் ஆகியிருக்கிறார்.

'லைட் புரோன்' என்று தன் கலருக்கு விளக்கம் கொடுக்கும் கஞ்சா கருப்புவின் காமெடி தனி ஆவர்த்தனம்.

கதை மனிதர்களில் ஒருவராக நம்மையும் கடத்திச் செல்கிறது எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு. வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் மனசை வருடும் மயிலிறகு!

இரண்டாம் பாதியின் துவக்கத்திலிருந்தே சண்டிக்குதிரையாகி அடம் பிடிக்கிறது திரைக்கதை. நேரம்போகாமல் தவிக்கிறார் சினேகா என்ற ஒரு விஷயம் திரும்ப திரும்ப ரிப்பீட் ஆகி, ரசிகர்களை நெளிய வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
பரிசுத்தமான பனித்துளிதான்... தாகம் தணிக்குமா?

ஜல்லிக்கட்டு தடை நீங்கியது....

ஜல்லிகட்டு மீதான தடையினை உச்சநீதி மன்றம் நிபந்தனைகளுடன் நீக்கியுள்ளது.

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன....

சாதனை படைக்குமா TATA வின் 'NANO'






















டாட்டாவின் 1 லட்சரூபாய் கார் NANO அறிமுகம்...


டாட்டாவின் ஒரு லட்ச ரூபாய் கார் அறிமுகம்...

சுடச்சுட படங்கள்.....

The car will have a three-cylinder 800-cc petrol engine with 33 bhp of power. It will also have a 30-litre fuel tank and four-speed manual gearshift. The car will come with air conditioning, but will have no power steering.


The car will have front disk and rear drum brakes. The company claims mileage of 22 kmpl in city and 26 kmpl on highway.


On Thursday, the $7.8-billion company will unveil its boldest initiative yet, a car that will sell for just Rs 1 lakh, less than half the cheapest car on the market.




செய்திகளை முந்தித்தருவது மிளகாய்...

காதல் கடிதம் - திரை விமர்சனம்



குட்டிப்பூனையை பட்டுத்துணியால் போர்த்திய மாதிரி மென்மையான கதை. சற்று மேன்மையான கதையும் கூட! படம் முடிந்து வெளியே வந்தபின்பும், 'மரணத்தை பார்த்து பார்த்து எங்களுக்கு பழகிப்போச்சு' என்கிற அந்த அப்பாவின் குரல், அடி வயிற்றை பிசைந்து கொண்டேயிருக்கிறது. காதலின் வலியையும், வாழ்க்கையின் உத்தரவாதமின்மையையும் இதை விட அழுத்தமாக யாரால் சொல்லிவிட முடியும்?

இலங்கையிலிருந்து சென்னைக்கு இசை கற்றுக் கொள்ள வரும் அனிஷா, இங்கே ஸ்ரீபாலாஜியை சந்திக்கிறார். முதலில் பிணக்கமும், இரண்டு மூன்று ரீல்களுக்குள்ளாகவே இணக்கமும் ஏற்படுகிறது இருவருக்கும். காதல் என்ற வார்த்தைக்கு இருவருமே கொண்டிருக்கும் ஒரே அர்த்தம் 'நம்பிக்கையில்லை' என்பதுதான். ஆனால், மனசு 'ஒன்வே'யில் பயணிக்க ஆசைப்படுகிற சாத்தான் ஆயிற்றே? கொஞ்சம் கொஞ்சமாக அனிஷாவின் மேல் காதல் கொள்ளும் பாலாஜி, அதை வெளிப்படுத்துகிற நாளில் இலங்கைக்கு பறந்து விடுகிறார் அனிஷா. 'யோசிக்க கொஞ்சம் அவகாசம் வேண்டும். ஊருக்கு போய் கடிதம் எழுதுகிறேன' இதுதான் அனிஷா பாலாஜியிடம் பேசிய கடைசி வார்த்தை! ஊருக்கு போன அனிஷா காதல் கடிதம் எழுதினாரா? அது பாலாஜியின் கைகளுக்கு வந்து சேர்ந்ததா? இதுதான் முடிவு.

ஹீரோ, ஹீரோயின் இருவருமே புதுமுகங்கள். நடிப்பும் அத்தனை கச்சிதம். வழக்கமாக ஹீரோயின் அறிமுகங்கள் தமிழ்சினிமாவில் எப்படியிருக்கும்? இதில் வேறு மாதிரி. இவரை சிக்னலில் சந்திக்கும் ஹீரோவும் கண்டவுடன் காதல் கொள்ளாமல் மரபை உடைத்திருப்பது ஆறுதல். சங்கீத குருவே சந்தேக குருவான பின்பு, மேற்கொண்டு படிப்பை எப்படி தொடர்வது? தவிக்கும் அனிஷாவுக்கு அற்புதமான ஒரு ஐடியாவின் மூலம் அவரை மீட்கும் ஸ்ரீபாலாஜி பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். காதலில் விழுந்தபின் இவரிடம் தொற்றிக் கொள்ளும் தயக்கத்தையும் அநாயசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். எஸ்.எம்.எஸ் மூலம் பாடல் கேட்கும் அனிஷாவுக்கு, வேறொரு நேயரின் விருப்பமாக அதே பாடலை ஒலிக்க செய்வது அழகு.

ஸ்ரீபாலாஜி இலங்கைக்கு போய் இறங்கியதும், மொத்த தியேட்டரும் அமைதியாகிவிடுகிறது. என்னவோ நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு மட்டும் மனசை பிசைய ஆரம்பித்துவிடுகிறது. படத்தில் இந்த இலங்கை பகுதி முழுவதும் நமக்கு என்னென்னவோ உணர்வுகளை கொடுக்கிற நேரத்தில், அதை மேலும் கனமாக்குகிறது இலங்கை அறிவிப்பாளர் நடராஜசிவத்தின் நடிப்பு.

ஆரம்ப கூச்சல்களுக்கு (உபயம் காதல் சுகுமார்) நெளிகிற நம்மை, காதல் என்ற மெல்லிய இழையால் கட்டிப் போட்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். அதன்பின் இலங்கைக்கு பயணிக்கிற கதையை தன் வசம் இழுத்துக் கொள்கிறது கேமிராவும், இசையும், வசனங்களும்! யாழ்தேவி என்ற இரயிலையும், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத இலங்கையின் உள்ளடங்கிய தமிழர் பகுதிகளையும் பார்க்கும்போது மெய் சிலிர்த்துப் போகிறது. அதுவும் யாழ்தேவியில் என்ற பாடலும், அந்த மெட்டும், அந்த தாளமும் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல் வரிசையில் அமையும்! இசையமைப்பாளர் உதயா எதிர்கால தமிழ்சினிமாவின் நம்பிக்கை வரவு. ஒளிப்பதிவாளர் பி.ஆர்.ராஜனையும் அந்த வரிசையில் வைக்கலாம். பெயருக்கேற்றார் போல் வசீகர வரிகளை தந்திருக்கிறார் பாடலாசிரியர் வசீகரன்.

சென்சாரின் கத்தரிக்கு சின்ன வேலைகூட தராமல், ஈழத்தின் வேதனையை எடுத்து சொல்லிவிட முடியுமா? ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் முகேஷ்! மனசுக்குள் விதையாக விழுந்து, மரமாக முளைத்து நிற்கும் ஒரு சில பதிவுகளுக்கு மத்தியில், காதல் கடிதமும் ஒரு முக்கியமான பதிவு. சந்தேகமேயில்லை!

தரவு - தமிழ்சினிமா

ICC பணிந்தது....

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கோரிக்கையின் மீதான தனது முடிவினை ICC அறிவித்துள்ளது...

இதன் படி...

நடுவர் ஸ்டீவ் பக்னருக்கு பதிலாக நியிசிலாந்து நடுவர் பில்லி பௌதன் நியமிக்கப்படுகிறார் எனவும்,இந்த முடிவு யாருடைய நிர்பந்தமுமின்றி தொடரின் நலன் கருதி எடுக்கப்பட்டிருப்பதாக ICC தலைவர் கூறியுள்ளார்.

மேலும், ஹர்பஜன் சிங்கின் மேல்முறையீட்டு மனுவின் மீது முடிவு அறிவிக்கும் வரை அவர் தொடர்ந்து விளையாடலாமெனவும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்த்ரேலிய தொடர் ரத்து...?

இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீது விதிக்கப்பட்ட தடையின் மீதான மேல்முறையீட்டு மனுவின் மீதான முடிவினை ICC அறிவிக்கும் வரை,இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயனத்தை இடைநிறுத்தி வைத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதனிடையே இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணியின் தலைவர்கள் சந்தித்து சமாதான தீர்வு ஒன்றினை எட்டுமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட்வாரியத்தின் தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன....

இலங்கை அரசின் அழைப்பை நிராகரித்தார் பிரதமர்...

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இலங்கை அரசின் சுதந்திர தின விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள இலங்கை அரசு விடுத்திருந்த அழைப்பினை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்து விட்டதாக அவரது அலுவலகம் அறிவித்திருக்கிறது.

அந்த நாளில் பிரதமருக்கு வேறு அலுவல்கள் இருப்பதால் பிரதமர் கலந்து கொள்ள இயலாது என இலங்கை அரசிறகு கடிதம் அனுப்ப பட்டிருப்பதாக தெரிகிறது.

பொங்கல் போனஸ் முதல்வர் அறிவிப்பு!

சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 30 நாள் சம்பளம்
ஏ, பி பிரிவு அலுவலருக்கு சிறப்பு போனஸ் ரூ.1000
பென்ஷன்தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.300



தமிழக அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியம் போனஸாகவும், 'ஏ' மற்றும் 'பி' பிரிவு அலுவலர்களுக்கு சிறப்பு போனஸாக ரூ. 1000 மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 300 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் பணியாளர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள் ஆகியோருக்கு 1999-2000ம் ஆண்டிற்கான 30 நாட்கள் பொங்கல் போனஸும், சிறப்பு போனஸாக ரூ.825ம், 2000-2001-ல் வழங்கப்பட்டது. 2000-2001-ம் ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட இந்த சலுகையினை இந்த அரசு பொறுப்பேற்றவுடன் மீண்டும் 2005-06-ம் ஆண்டுக்கான பொங்கல் போனஸும், சிறப்பு போனஸ§மாக 2007-ம் ஆண்டு பொங்கலையட்டி வழங்கியது.

2006-07ம் ஆண்டிற்கும் இந்த சலுகையினை தொடர்ந்து வழங்குவது என அரசு முடிவெடுத்து 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக போனஸ் வழங்கிடவும், 'ஏ' மற்றும் 'பி' பிரிவு அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சிறப்பு போனஸ் ரூ.825 என நிர்ணயித்து பத்து ஆண்டுகளாகி விட்டதாலும், விலைவாசி உயர்வினை கருத்தில் கொண்டும் சிறப்பு போனஸை ரூ.1000 என உயர்த்தி வழங்கிடவும், அதே போல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பொங்கல் பரிசான ரூ.150-ஐ உயர்த்தி ரூ.300 என வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

‘சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் மாதச் சம்பளம் ரூ. 2500 என்ற அளவிலேயே கணக்கிட்டு போனஸ் வழங்கப்படும்.

உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும்.

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த சில்லரை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் சத்துணவுத் திட்டப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், வரையறுக்கப்படாத ஊதிய விகிதத்தில் உள்ள சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியமாக ரூ.1000 வழங்கப்படும்.

இந்த ஆணையின் மூலம் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ.267.08 கோடி செலவாகும். இதனால் சுமார் 12.68 லட்சம் அரசு அலுவலர்களுக்கும், 5.38 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களும் பயனடைவார்கள்.

நடிகை மீரா வாசுதேவன் கண்ணீர் பேட்டி

நடிகை மீரா வாசுதேவன் தனது கணவர் விஷாலிடமிருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

கணவன் செய்த கொடுமைகள் குறித்து மீராவாசுதேவன் கண்ணீர்மல்க கூறியதாவது:
சிறந்த ஒளிப்பதிவாளரான அசோக்குமாரின் குடும்பம் என்பதால்தான் என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் 23 வயதிலேயே விஷாலை திருமணம் செய்து கொண்டேன். என்னை படங்களில் நடிக்க வைத்து அந்த பணத்தையெல்லாம் தாங்களே இஷ்டத்துக்கு செலவு செய்தார்கள். என்னிடம் இப்போது ஆயிரம் ரூபாய்கூட இல்லை. எல்லாவற்றையும் அவர்களே எடுத்துக் கொண்டார்கள். எனது பாலிசி, நகை எல்லாவற்றையும் பறித்துக் கொண்டார்கள். எனது பெயரை பயன்படுத்தி நிறைய கடன் வாங்கியிருக்கிறார்கள்.

என் கணவர் விஷால் தினமும் குடித்து விட்டுவந்து அடித்து உதைப்பார். சம்பாதித்த பணத்துக்கு கணக்கு கேட்டால் எல்லோரும் சேர்ந்து அடித்து துன்புறுத்தினார்கள். ஏதேதோ மருந்துகளை வலுக்கட்டாயமாக கொடுத்து என்னை மனநோயாளியாக சித்தரித்தார்கள். நான் ஒரு பெண் என்பதால் எனக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களை வெளிப்படையாக காட்ட முடியாது. எனது தாயாருடன் கடந்த 2 வருடமாக பேச விடாமல் செய்தார்கள்.

படப்பிடிப்பிலிருந்து தாமதமாக வந்தால் யாருடன் படுத்துவிட்டு வருகிறாய் என்று கேட்டு அவமானப்படுத்தினார்கள். இரவில் அறையில் படுத்திருந்தால்கூட அருகில் யாராவது படுத்திருக்கிறார்களா என்று என் கணவர் காலால் உதைத்து சோதனை செய்வார். கணவரின் தம்பியும் அம்மாவும் சேர்ந்து என்னை விபசாரத்தில் தள்ள முயற்சித்தார்கள். அதனால் வேறு வழியில்லாமல் விவாகரத்துக்கு வழக்கு போட்டுள்ளேன்.

பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தின் பெயரை கெடுக்க வேண்டாம் என்று இத்தனை நாள் மவுனமாக எல்லாவற்றையும் தாங்கி கொண்டேன். இப்போது வேறு வழியில்லாமல்தான் எல்லாவற்றையும் பேச வேண்டியுள்ளது. இனி அவருடன் சேர்ந்த வாழும் வாய்ப்பே இல்லை. மாதம் 5 ஆயிரம் ரூபாய்கூட சம்பாதித்து ஒரு மனைவியை காப்பாற்ற அவருக்கு தெரியவில்லை. என் சம்பாத்தியத்தில் வாழ நினைப்பவரோடு எப்படி வாழ முடியும்.
இவ்வாறு மீராவாசுதேவன் கூறினார்.



இது குறித்து மீரா வாசுதேவனின் கணவர் விஷால் கூறியதாவது:

என் அப்பா இயக்க இருந்த ஒரு தெலுங்கு படத்தில் வாய்ப்பு கேட்டு வந்தவர் மீரா. அப்போது அந்த படம் தள்ளிப்போனதால் Ôஎங்கள் குடும்பம் நிறைய கஷ்டத்தில் உள்ளது. எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது, நீங்கள் எனக்கு வாய்ப்பு வாங்கி கொடுங்கள்Õ என்றார். எங்கள் வீட்டிலேயே மூன்று மாதம் தங்கியிருந்து வாய்ப்பு தேடினார். அவருக்காக நாங்களும் வாய்ப்பு தேடினோம். இந்நிலையில் மீராவின் அம்மா, என் மகளை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்டார். நானும் மனிதாபிமான அடிப்படையில் அவரைத் திருமணம் செய்து கொண்டேன்.

எனது வாழ்க்கையையும் வளர்ச்சியையும் ஒதுக்கி வைத்து விட்டு அவருக்காக உழைத்தேன். அவருக்கு மனேஜராக, உதவியாளராக, அவருடைய செல்ல பிராணியை கவனித்துக் கொள்பவராக என்னை மாற்றிக் கொண்டு உழைத்தேன். அப்பாவின் செல்வாக்கு, எனது தொடர்பை பயன்படுத்தி அவருக்கு சினிமா வாய்ப்புகள் வாங்கி கொடுத்தேன். வரவுக்கு மீறி அவர் செலவு செய்தார். நான் எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. நான் சம்பாதிக்கிறேன் செலவு செய்கிறேன் என்பார். மீறி தடுத்தால் கத்தியை எடுத்துக் கொண்டு ”என்னை காயப்படுத்திக் கொண்டு உங்கள் மீது பழிபோடுவேன்” என்று மிரட்டுவார். பின்னர் விசாரித்ததில்தான் அவர் ஒரு மனநோயாளி என்றும் மும்பையில் அதற்காக சிகிச்சை பெற்றதும் தெரிய வந்தது.

பணம் இல்லாமல் சென்னையில் அவர் வந்து கஷ்டப்பட்டபோது அவரது அம்மா உள்பட யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. இப்போது அவர் ஒரு நிலைக்கு வந்ததும் அவரோடு ஒட்டிக்கொண்டுள்ள அவரது அம்மாதான் அவரை தூண்டிவிட்டு இப்படியெல்லாம் பேசவும், நடக்கவும் வைக்கிறார். அவர் சொல்லும் எதுவும் உண்மையில்லை என்று மீராவின் மனசாட்சிக்கு தெரியும். இப்போதும் நான் அவரை காதலிக்கிறேன். அவராக எதையும் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன். அதையும் மீறி நடப்பதை நானும் சட்டப்படி சந்திப்பேன்.
இவ்வாறு விஷால் கூறினார்.

தரவு -தமிழ்முரசு

சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்கும் !

விலையை குறைக்காவிட்டால் சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்கும் -தமிழக அரசு எச்சரிக்கை

சிமென்ட் விலையை குறைக்காத தனியார் சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இப்போது தனியார் ஆலைகள் உற்பத்தி செய்யும் சிமென்ட் ஒரு மூட்டை ரூ.245க்கு விற்கப்படுகிறது. சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சிமென்ட் விலையை குறைக்க அரசு பல முறை எச்சரித்தும், தனியார் ஆலைகள் அசைந்து கொடுக்கவில்லை. பல்வேறு எதிர்க்கட்சிகளும் சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்து, குறைந்த விலைக்கு விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்னும் தனியார் நிறுவனங்கள் விலையை குறைக்க முன் வரவில்லை.

இந்நிலையில், சிமென்ட் விலையை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கனிம வளத் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் திரிபாதி, நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் சண்முகம், தமிழ்நாடு சிமென்ட் நிறுவன நிர்வாக இயக்குனர் சத்யகோபால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் பணீந்திர ரெட்டி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் கனிமப் பொருள் மற்றும் உலோகங்கள் வணிகக் கழகம் (எம்.எம்.டி.சி.) மூலம், அரசு நிறுவனமான டான்செம் நிறுவனம் உடனடியாக ஒரு லட்சம் டன் சிமென்ட் இறக்குமதி செய்வதற்கான ஆணையை உடனே பிறப்பிப்பது என்று முடிவு செய்யப் பட்டது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சிமென்டை, மாவட்ட மற்றும் வட்டங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 200க்கும் மேற்பட்ட கிடங்குகளில் இருப்பு வைத்து நேரடியாக நுகர்வோருக்கு அடக்க விலையில் லாபம் ஏதுமின்றி விற்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், டான்செம் தேவைக்கேற்ப நேரடி ஒப்பந்தப் புள்ளி மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஏற்பாட்டினை விரைவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவைகளுக்கெல்லாம் பிறகும் தனியார் சிமென்ட் ஆலை அதிபர்கள் தங்கள் விலையைக் குறைத்துக் கொள்ள முன்வரவில்லை என்றால், பொது மக்கள் நலன் கருதி தமிழகத்திலே உள்ள தனியார் சிமென்ட் தொழிற்சாலைகளை அரசே நாட்டுடமையாக்கிட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.