அண்மை செய்தி :சகஜ நிலைக்கு திரும்பியது!

கொழும்பு சகஜநிலைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இலங்கை வான்படையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், வான் படை தலைமையமே விடுதலை புலிகளின் தாக்குதல் இலக்காயிருந்திருக்க வேண்டுமென்றும்,ஆனால் அருகிலிருந்த வருவாய்துறை அலுவலகம் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்துள்ளார். உயிர் மட்டும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்க்கிடையில் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்களும், விமானியின் உடலும் தங்கள் வசம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

புலிகளின் விமானம் கொழும்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது!

இன்று இரவு 9.10 மணியளவில் விடுதலைபுலிகளின் இரண்டு விமானங்கள் கொழும்பு நகருக்குள் ஊடுறுவியதாக தெரிகிறது. இலங்கை அரசின் ராணுவ தலைமையகம், கொழும்பு துறைமுகம் ஆகிய நிலைகளின் மீது தாக்குதல் நடந்ததாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கொழும்பு நகரம் முழுவதும் மின் தடைசெய்யப்பட்டு இருளில் மூழ்கியதாக தெரிகிறது, தொலை தொடர்பு வசதிகளும் செயலிழந்தன.

இந்த நிலையில் புலிகளின் விமானமொன்று கொழும்பு சர்வதேச விமான வளாகத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிசெய்யப் படாத தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.