"பரத்வாஜ் ஸ்கூல் ஆஃப் மியூசிக்"

ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இசை கற்றுத்தர முன் வருகிறார் இசையமைப்பாளர் பரத்வாஜ்!



தமிழ் சினிமாவில் எண்ணற்ற சூப்பர்ஹிட் பாடல்களை அளித்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ். தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, வளரத்துடிக்கும் இசை ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதத்தில் இசைப்பள்ளி ஒன்றை துவங்கியிருக்கிறார்.

"பரத்வாஜ் ஸ்கூல் ஆஃப் மியூசிக்" என்று அழைக்கப்படுகிறது இந்த இசைப்பள்ளி. கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை, போன்ற பாரம்பரிய இசை வடிவங்களை பல இசை நிறுவனங்கள் கற்றுத்தந்தாலும் மெல்லிசை பயிற்சிக்கென எந்த அமைப்பும் இல்லை. அதை ஈடு செய்வதுதான் இந்த இசைப்பள்ளியின் நோக்கம் என்கிறார் பரத்வாஜ்.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் கூடிய ஓராண்டு மெல்லிசை பட்டய படிப்பினை பரத்வாஜ் இசைப்பள்ளி துவங்குகிறது. இந்த பள்ளியில் என்னவெல்லாம் சிறப்புகள் இருக்கின்றன?

தொழில் முறை நோக்கமும், சிறந்த அமைப்புடன் கூடிய மெல்லிசை பட்டயம்
நவீன சிறப்பு தொழில் நுட்பங்களுடன் விஞ்ஞான பூர்வமான பயிற்சி.
தொலை நிலை கல்வி (சுய கற்பித்தல் முறை)
ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் (பணி புரிபவர்களின் வசதிக்காக)

இவற்றோடு இசையமைப்பாளர் பரத்வாஜ் மற்றும் அவருடன் சேர்ந்த இசை ஜாம்பவான்கள் உருவாக்கிய பாடத்திட்டம்!செப்டம்பர் மாதம் 2007 லிருந்து சென்னை, கோயமுத்தூர், ஈரோடு. சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன.

எதிர்காலத்தில் எண்ணற்ற எஃப்.எம்.களும், தொலைக்காட்சிகளும் உருவாக இருப்பதால் இந்த பட்டயப்படிப்பு நிச்சயம், மாணவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை விளக்கேற்றும் என்கிறார் பரத்வாஜ்.

-ஆர்.எஸ்.அந்தணன்

2 comments:

July 5, 2007 at 9:53 AM சிவபாலன் said...

அழிந்துவரும் தமிழ் பண்களுக்கும் ஏதாதவது செய்வாரா? செய்தால் நல்லது.

July 5, 2007 at 7:31 PM காட்டாறு said...

சிறப்பு இருக்குறது சரி..... எவ்வளவு ஃபீஸ்ஸுன்னு கேட்டு சொல்லுங்க.

நம்ம தமிழ்மண மக்கள் எட்டு எட்டில் பாடும் ஆசையை அறிவிச்சிருக்காங்க. அவங்களுக்கும் இது நல்ல செய்தி! ;-)