துள்ளல் - விமர்சனம்

இந்த கதைக்கு யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடி நீதிமன்றதுக்கு போகலாம். ஏனென்றால் இது உங்கள் கதை என்ற முன்னறிவிப்போடு படம் துவங்குகிறது. ஐயோ சாமி, இது நம்ப கதை இல்லை.... இல்லவே இல்லை!

கிடைக்கிற பெண்ணையெல்லாம் காதலிக்கிறேன் பேர்வழி என்று நம்ப வைத்து கற்பழிக்கிறார் பிரவீன்காந்த். இவர் போடும் Ôபுதிய பாதைÕயில் சிக்குகிறார்கள் இரண்டு இளம்பெண்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து பிரவீன்காந்த்துக்கு புத்தியை கொடுப்பதுதான் துள்ளல்! இளசுகளின் பலவீனமான ஏரியாவை குறி வைத்திருக்கிறார் பிரவீன். ஹீரோவும் இவரே, இயக்கமும் இவரே! ஏரியாவை தீர்மானிக்கும் பொறுப்பும் இவரிடமே இருப்பதால் எல்லையில்லாமல் சுற்றியிருக்கிறது பிரவீனின் புத்தி. டீசண்டாக சொன்னால் கற்பனை!

பெண்களை மயக்க இவர் போடும் திட்டங்கள் தமிழ்சினிமா அறிந்திராதது. கையில் செருப்பை வைத்துக் கொண்டு, ஏங்க உங்க அழகு என்ன? என் அழகு என்ன? உங்களை போய் காதலிக்கணும்னு இந்த மனசு நினைக்குதுங்க. அதனால் உங்க செருப்பாலயே என்னை அடிங்க என்று அவர்களை விரட்டி விரட்டி, கடைசியில் அவர்களையே புரட்டி போடுவது செமத்தியான டெக்னிக்! பல இடங்களில் Ôபார்த்திபÕத்தனம் எட்டிப்பார்க்கிறது. அதுதான் இவருடைய ப்ளஸ்சும் கூட!

பிரட்டுக்கு இரண்டு பக்கமும் ஜாம் தடவிய மாதிரி பிரவீனுக்கு இரண்டு ஹீரோயின்கள். பாடல் காட்சிகளில் இருவரும் பஞ்சம் வைக்காமல் Ôபந்திÕ வைக்கிறார்கள். இவர்களில் அழுகாச்சி குல்லின் சோப்ராவை முந்துகிறார் அதிரடி சோனிகா. தன்னை ஏமாற்றியவனே தன் தோழிக்கு கணவனாக இருப்பதை பார்த்த பிறகும் வாய்மூடியாக இருக்கிற குர்லின் பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். அரபுக்குதிரையை மிஞ்சுகிற அழகு குதிரை சோனிகா!

விவேக்கின் காமெடியில் அந்த ஆட்டோகிராஃப் சீன் கலகல. இரட்டை அர்த்த வசனங்களை பேசுவதில் பிரவீனோடு போட்டி போடுகிறார் விவேக். (அந்த ஊட்டி ட்ரிப் முழுக்க உவ்வே) இவருக்கு பயந்து மாத்ருபூதம் வீடு மாறும் காட்சிகள் சிரிப்புக்கு பதில் எரிச்சலையே வரவழைக்கிறது.

செய்கூலி உண்டு சேதாரம் இல்லை என்ற கருத்தாழம் மிக்க பாடலை புகழ்பெற்ற லலிதா ஜுவல்லரியில் எடுத்திருக்கிறார்கள். பல நல்ல குடும்பங்கள் வந்து போகிற இடம். ஹ§ம்ம்ம்....

நெற்றி பொட்டில் அடித்த மாதிரி அதிரடியான க்ளைமாக்ஸ். பார்ப்பவர்கள் பல பேரின் ஆட்டம் ஒடுங்கலாம்!

தமிழ்சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களையும், குறிப்பிட தகுந்த ஹிட் படங்களையும் கொடுத்தவர் ப்ரவீன்காந்த். முதன்முதலாக அரிதாரம் பூசியிருக்கிறார். தேர்தெடுத்து நடித்தால் சேரன், பார்த்திபன் ஆகலாம்! இந்த படம் எல்லாவகையிலும்... "அரைக்கிணறு!"

-ஆர்.எஸ்.அந்தணன்

0 comments: