Showing posts with label திரையுலகம். Show all posts
Showing posts with label திரையுலகம். Show all posts

பழம்பெரும் நடிகர் பாலாஜி காலமானார்






சென்னை, மே 2- பழம்பெரும் நடிகர் பாலாஜி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் டயாலிஸிஸ் சிசிச்சை மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.

இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இவர் எம்ஜிஆர், சிவாஜி, நாகேஷ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக இவர் திரைப்படங்களையும் தயாரித்து வந்தார். வசந்த மாளிகை, படித்தால் மட்டும் போதுமா, எங்க மாமா உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தினமணி

சிம்பு - நயன்தாரா மீண்டும் காதல்


இரண்டு வருட பிரிவுக்கு பிறகு சிம்பு - நயன்தாரா ஜோடி, நடிகையின் த்ரிஷாவின் முயற்சியால் ஒன்று சேர்ந்தது. இருவரும் அரை மணிநேரம் தனிமையில் சந்தித்து மனம் விட்டு பேசினர்.

நடிகர் சிம்புவும், நயன்தாராவும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு காதல் ஜோடியாக வலம் வந்தனர். "வல்லவன்" படத்தில் சிம்புவுடன் நெருக்கமாக நடித்தார் நயன்தாரா. இதையடுத்து இவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் சுமத்தி பேட்டி அளித்தனர். இந்நிலையில் நயன்தாராவுடன் ஒரு அறையில் சிம்பு நெருக்கமாக இருப்பதுபோன்ற புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. "இதை சிம்புதான் வெளியிட்டிருப்பார்" என்று நயன்தாரா தரப்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதுடன், "இனிமேல் அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐதராபாத்தில் "துளசி" என்ற படப்பிடிப்பில் நயன்தாரா நடித்துக் கொண்டிருந்தார். அவரை சந்திக்க சிம்பு சென்றார். நீண்ட நேரம் காத்திருந்தும் சிம்புவை நயன்தாரா சந்திக்கவில்லை. சிம்பு ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார். மேலும் கடந்த ஒரு வருடமாக சென்னை பக்கமே தலை காட்டாமல் தெலுங்கு படங்களிலேயே நயன்தாரா கவனம் செலுத்தி வந்தார். சிம்புவின் போட்டியாளர் என்று திரையுலகினரால் கூறப்படும் தனுஷ் ஜோடியாக "யாரடி நீ மோகினி"யில் நயன்தாரா நடித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட்டனர் என்று திரையுலகினரும், அவர்களது நண்பர்களும் முடிவு செய்தனர்.

இந்நிலையில் சிம்பு விவகாரத்தில் தற்போது பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அஜீத் நடிக்கும் "ஏகன்" படத்தில் நவ்தீப்பும், "சத்யம்" படத்தில் விஷாலுடன் நயன்தாராவும் நடித்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்திப்பது வழக்கம். சமீபத்தில் இந்த நண்பர்கள் குழு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து சந்தித்தது. அதில் த்ரிஷாவும் கலந்துகொண்டார். பார்ட்டி ஆரம்பித்த அரை மணி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென்று சிம்பு அங்கு வந்தார். அவரை அங்கு வரவழைத்தது த்ரிஷாதான் என்று கூறப்படுகிறது.

சிம்புவைக் கண்டதும் விஷால், நவ்தீப், த்ரிஷா எல்லோரும் கைதட்டி, கரகோஷம் செய்து வரவேற்றனர். நண்பர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த நயன்தாராவை கண்டதும் சிம்பு இமைகொட்டாமல் பார்த்தார். நயன்தாராவும் அதை ஆமோதிக்கும் விதமாக இதமான புன்னகையுடன் பார்த்தார்.

அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த நயன்தாராவை திடீரென்று சிம்பு கையைப் பிடித்து இழுத்து "உன்னிடம் தனியாக பேச வேண்டும் வா" என்று அழைத்தார். மறுப்பு சொல்லாமல் நயன்தாரா எழுந்து சிம்புவுடன் சென்றார். அங்கிருந்து மாயமான இருவரும் அரை மணி நேரத்துக்கு பிறகு சிரித்து பேசியபடியே திரும்பி வந்தனர். இருவரையும் மீண்டும் நண்பர்கள் குழு கைதட்டி கரகோஷத்துடன் வரவேற்றது. பிறகு சிம்பு அவர்களிடம் விடைபெற்று புறப்பட்டார். நயன்தாரா மட்டும் மவுனமாக அங்கே இருந்தார். இந்த திடீர் சந்திப்பு பற்றி கருத்து கூறிய ஒரு நடிகர், "சிம்பு, நயன்தாரா இடையேயான மனக்கசப்பு நீங்கி விட்டது. இருவருமே சேர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பிருக்கிறது" என்றார்.
இந்த சந்திப்பு கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரவு - தமிழ்முரசு

சத்யராஜ் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை! - பாரதிராஜா பரபரப்பு பேட்டி

உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறார் பாரதிராஜா. கிராமங்களின் முகவரியை உலகமெல்லாம் கொண்டு சென்ற இந்த போஸ்ட்மேன், அறுபதை கடந்த பின்பும் ஃபாஸ்ட்மேனாக இருப்பது ஆச்சர்யம். ஒருவர், இருவரல்ல... தமிழ் திரையுலகில் இன்று கோலாச்சிக் கொண்டிருக்கும் அற்புதமான இயக்குனர்கள் பலரின் ஓப்பன் யுனிவர்சிடி இவர்! தான் இயக்கப் போகும் புதிய தொலைக்காட்சி தொடர் குறித்து பேச ஆரம்பிக்கிறார். பேச்சு மெல்ல திசை திரும்பி பயணிக்கிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடரை இயக்க சம்மதித்திருக்கிறார் பாரதிராஜா. வருகிற ஏப்ரல் 14-ந் தேதி இரவு 8.30 க்கு மண்வாசனையோடு ஒளிப்பரப்பாக இருக்கிறாள் தெக்கத்திப் பொண்ணு. நெப்போலியன், வாகை சந்திரசேகர், ரஞ்சிதா, சொர்ணமால்யா என்று மக்களால் அறியப்பட்ட நட்சத்திரங்களுடன், புதிய நடிகர்களையும் இணைத்துக் கொண்டு இந்த நெடுந்தொடரை தரவிருக்கிறார் பாரதிராஜா.

தனது அலுவலகத்தில் என்றும் மாறாத அவருக்கேயுரிய கம்பீரத்தோடு பேச ஆரம்பிக்கிறார். சின்னத்திரையாக இருந்தாலும், பெரிய திரையாக இருந்தாலும் உழைப்பு ஒன்றேதான். சினிமாவில் வாழ்க்கையை ரொம்ப வேகமாக சொல்ல வேண்டியிருந்தது. ஆனால் சின்னத்திரையில் அப்படியல்ல. இரண்டரை மணி நேரத்தில் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. கொஞ்சம் நிதானமாக சொல்லலாம். இந்த தொடரை என்னுடைய சினிமா பாணியிலேயே சொல்லியிருக்கிறேன். 16 வயதினிலே, கிழக்கு சீமையிலே படங்களையெல்லாம் பார்த்தால் என்ன ஃபீலிங் வருமோ, அதே உணர்வை இந்த சீரியலில் அனுபவிக்கலாம். பொதுவாக சீரியல் என்றாலே அழுகிற மாதிரி காட்சியமைப்புகள் இருக்கும். இதில் அப்படி கிடையாது. ஏன் அழுகிற மாதிரி காட்சிகளே இல்லை என்று கேட்கிற அளவுக்கு இருக்கும். கொஞ்சம் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறேன். இப்போதைக்கு சுமார் 300 எபிசோடுகள் கொண்டு போகலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். எங்கே சரக்கு குறைகிறதோ, அங்கே நிறுத்திக் கொள்வேன். ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்வேன். சின்னத்திரையிலும் மரபுகளை உடைப்பேன்.

ஏன் கலைஞர் டி.வி யை தேர்ந்தெடுத்தீர்கள்?

வேறு யாரும் என்னை அணுகி இப்படி ஒரு சீரியல் எடுத்து தரும்படி கேட்கவில்லை. என்னை நாடி வந்ததால் செய்து கொடுக்க ஒப்புக் கொண்டேன்.

நீங்களே விரும்பிதான் சின்னத்திரைக்கு வந்தீர்களா?

விரும்பிதான் வந்தேன். என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. தமிழ்சினிமாவில் இத்தனை ஆண்டுகாலம் இருக்கிறேன். நடிகர் திலகம் சிவாஜியையே இயக்கியிருக்கிறேன். நான் சொன்னதைதான் அவரே கேட்டார். என்னை இப்படி எடு என்றோ, இதைதான் தரவேண்டும் என்றோ யாரும் கட்டாயப்படுத்த முடியாது. சினிமா மாதிரி இதில் பயம் இல்லை. முக்கியமாக ரெவின்யூ என்ற விஷயம் இல்லை.

நீங்கள் சின்னத்திரைக்கு வந்துவிட்டதால் தொடர்ந்து படங்களை இயக்குவீர்களா?

நிச்சயமாக இயக்குவேன். பொம்மலாட்டம் படத்தின் வேலைகளை ஒருபக்கம் செய்து கொண்டேதான் தெற்கத்தி பொண்ணையும் இயக்கி வந்தேன். இதே மாதிரி தொடர்ந்து படங்களை இயக்குவேன்.

குற்றப்பரம்பரை படத்தை இயக்கப் போவதாகவும், அதில் நீங்களே நடிக்கவிருப்பதாகவும் கூறினீர்களே?

என் வாழ்க்கையில் உச்சக்கட்ட காட்சியாக அந்த படம் இருக்கலாம்.

தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே? முன்பு கன்னடர்களுக்கு எதிரான நெய்வேலி போராட்டத்திற்கு நீங்கள்தானே தலைமை ஏற்றீர்கள்?

உண்மைதான். உணர்வை காட்ட வேண்டும் என்பதற்காக எல்லாரும் ஒன்றுபட்டு நெய்வேலி போனோம். ஆனால் மறுநாள் ஒரு உண்ணாவிரதம் தனிப்பட்ட முறையில் நடந்ததே? அது ஏன் நடத்தப்பட்டது என்று பத்திரிகைகள் கூட கேட்கவில்லை. அப்படி தனியாக நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதற்கு இவர்கள் பதில் கூறட்டும். பிறகு இந்த உண்ணாவிரதத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று என்னை கேட்கட்டும்.

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்கிறார்களே?

எனக்கு இதுவரை வரவில்லை. அப்படி வந்தால், உங்களின் முந்தைய கேள்விக்கு என்ன பதிலோ? அதையே பதிலாக அனுப்புவேன்.

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசியதற்கு பாராட்டு தெரிவித்தீர்களாமே?

டி.வி யில் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்யராஜ் பேச்சை கேட்டதும் கைதட்டினேன். உடனே போன் செய்து சில கருத்துக்களுக்காக பாராட்டினேன். அதே நேரத்தில் அவர் கூறிய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன். விமர்சனம் என்பது முறையாக இருக்க வேண்டும். சக தோழன் மேல் எச்சிலை காறி துப்பிவிடக் கூடாது. சொன்ன கருத்து நியாயமாக இருந்தாலும், அதை நாகரீகமாக சொல்லியிருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ரஜினி அவருக்கு தோன்றியதை பேசியிருக்கிறார்.

காவிரி நீர் பிரச்சனையாக இருக்கட்டும். ஒகேனக்கல் பிரச்சனையாக இருக்கட்டும். அல்லது வேறு பிரச்சனையாக இருக்கட்டும், எந்த விஷயத்தை எடுத்தாலும் இங்கே ஒட்டு மொத்தமான உணர்வுகள் இல்லை. தமிழ்நாடு மட்டும்தான் கலப்படமாக இருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் தலை வணங்கி போகிறோம். இந்த மண்ணின் மைந்தன்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற உணர்வு இல்லை. இங்கே மக்கள் மழுங்கடிக்கப்பட்டு விட்டார்கள். அதற்கு சினிமாவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

பெர்லின் திரைப்பட விழாவில் பருத்தி வீரன் படத்திற்கு விருது வாங்கி வந்த டைரக்டர் அமீருக்கு எந்த அமைப்பும் பாராட்டு விழா நடத்தவில்லையே? குறிப்பாக இயக்குனர்கள் சங்கம் கூட...

இதை இயக்குனர்கள் சங்க தலைவர் என்று ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்க வேண்டும். நான் அமீரை நேரில் அழைத்து பாராட்டினேன். என் இத்தனை வருட சினிமாவில் இப்படி ஒரு படம் எடுக்கவில்லையே என்றேன். இதைவிட வேறென்ன பாராட்ட முடியும்?

பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து மூவரும் தனித்தனியாக பிரிந்து விட்டீர்கள்? மறுபடியும் சேரும் வாய்ப்புகள் இருக்கிறதா?

நாங்கள் தனித்தனியாக பிரிந்ததால்தான் இளையராஜா இந்தி படத்திற்கு இசையமைக்க முடிகிறது. பாரதிராஜா ஒரு நானா படேகரை வைத்து படம் எடுக்க முடிகிறது. வைரமுத்துவால் ஒரு கள்ளிக்காட்டு இதிகாசம் படைக்க முடிகிறது. மூவரும் சேர்ந்திருந்தால் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டு இருந்திருப்போம். மூவரும் சேரும் காலம் வருமா என்கிறீர்கள். வயது பக்குவத்தை கொடுத்திருக்கிறது. பார்ப்போம்... நீங்கள் கேட்டது நிறைவேறலாம்.

தரவு - தமிழ்சினிமா.காம்

நடிகை மீரா வாசுதேவன் கண்ணீர் பேட்டி

நடிகை மீரா வாசுதேவன் தனது கணவர் விஷாலிடமிருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

கணவன் செய்த கொடுமைகள் குறித்து மீராவாசுதேவன் கண்ணீர்மல்க கூறியதாவது:
சிறந்த ஒளிப்பதிவாளரான அசோக்குமாரின் குடும்பம் என்பதால்தான் என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் 23 வயதிலேயே விஷாலை திருமணம் செய்து கொண்டேன். என்னை படங்களில் நடிக்க வைத்து அந்த பணத்தையெல்லாம் தாங்களே இஷ்டத்துக்கு செலவு செய்தார்கள். என்னிடம் இப்போது ஆயிரம் ரூபாய்கூட இல்லை. எல்லாவற்றையும் அவர்களே எடுத்துக் கொண்டார்கள். எனது பாலிசி, நகை எல்லாவற்றையும் பறித்துக் கொண்டார்கள். எனது பெயரை பயன்படுத்தி நிறைய கடன் வாங்கியிருக்கிறார்கள்.

என் கணவர் விஷால் தினமும் குடித்து விட்டுவந்து அடித்து உதைப்பார். சம்பாதித்த பணத்துக்கு கணக்கு கேட்டால் எல்லோரும் சேர்ந்து அடித்து துன்புறுத்தினார்கள். ஏதேதோ மருந்துகளை வலுக்கட்டாயமாக கொடுத்து என்னை மனநோயாளியாக சித்தரித்தார்கள். நான் ஒரு பெண் என்பதால் எனக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களை வெளிப்படையாக காட்ட முடியாது. எனது தாயாருடன் கடந்த 2 வருடமாக பேச விடாமல் செய்தார்கள்.

படப்பிடிப்பிலிருந்து தாமதமாக வந்தால் யாருடன் படுத்துவிட்டு வருகிறாய் என்று கேட்டு அவமானப்படுத்தினார்கள். இரவில் அறையில் படுத்திருந்தால்கூட அருகில் யாராவது படுத்திருக்கிறார்களா என்று என் கணவர் காலால் உதைத்து சோதனை செய்வார். கணவரின் தம்பியும் அம்மாவும் சேர்ந்து என்னை விபசாரத்தில் தள்ள முயற்சித்தார்கள். அதனால் வேறு வழியில்லாமல் விவாகரத்துக்கு வழக்கு போட்டுள்ளேன்.

பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தின் பெயரை கெடுக்க வேண்டாம் என்று இத்தனை நாள் மவுனமாக எல்லாவற்றையும் தாங்கி கொண்டேன். இப்போது வேறு வழியில்லாமல்தான் எல்லாவற்றையும் பேச வேண்டியுள்ளது. இனி அவருடன் சேர்ந்த வாழும் வாய்ப்பே இல்லை. மாதம் 5 ஆயிரம் ரூபாய்கூட சம்பாதித்து ஒரு மனைவியை காப்பாற்ற அவருக்கு தெரியவில்லை. என் சம்பாத்தியத்தில் வாழ நினைப்பவரோடு எப்படி வாழ முடியும்.
இவ்வாறு மீராவாசுதேவன் கூறினார்.



இது குறித்து மீரா வாசுதேவனின் கணவர் விஷால் கூறியதாவது:

என் அப்பா இயக்க இருந்த ஒரு தெலுங்கு படத்தில் வாய்ப்பு கேட்டு வந்தவர் மீரா. அப்போது அந்த படம் தள்ளிப்போனதால் Ôஎங்கள் குடும்பம் நிறைய கஷ்டத்தில் உள்ளது. எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது, நீங்கள் எனக்கு வாய்ப்பு வாங்கி கொடுங்கள்Õ என்றார். எங்கள் வீட்டிலேயே மூன்று மாதம் தங்கியிருந்து வாய்ப்பு தேடினார். அவருக்காக நாங்களும் வாய்ப்பு தேடினோம். இந்நிலையில் மீராவின் அம்மா, என் மகளை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்டார். நானும் மனிதாபிமான அடிப்படையில் அவரைத் திருமணம் செய்து கொண்டேன்.

எனது வாழ்க்கையையும் வளர்ச்சியையும் ஒதுக்கி வைத்து விட்டு அவருக்காக உழைத்தேன். அவருக்கு மனேஜராக, உதவியாளராக, அவருடைய செல்ல பிராணியை கவனித்துக் கொள்பவராக என்னை மாற்றிக் கொண்டு உழைத்தேன். அப்பாவின் செல்வாக்கு, எனது தொடர்பை பயன்படுத்தி அவருக்கு சினிமா வாய்ப்புகள் வாங்கி கொடுத்தேன். வரவுக்கு மீறி அவர் செலவு செய்தார். நான் எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. நான் சம்பாதிக்கிறேன் செலவு செய்கிறேன் என்பார். மீறி தடுத்தால் கத்தியை எடுத்துக் கொண்டு ”என்னை காயப்படுத்திக் கொண்டு உங்கள் மீது பழிபோடுவேன்” என்று மிரட்டுவார். பின்னர் விசாரித்ததில்தான் அவர் ஒரு மனநோயாளி என்றும் மும்பையில் அதற்காக சிகிச்சை பெற்றதும் தெரிய வந்தது.

பணம் இல்லாமல் சென்னையில் அவர் வந்து கஷ்டப்பட்டபோது அவரது அம்மா உள்பட யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. இப்போது அவர் ஒரு நிலைக்கு வந்ததும் அவரோடு ஒட்டிக்கொண்டுள்ள அவரது அம்மாதான் அவரை தூண்டிவிட்டு இப்படியெல்லாம் பேசவும், நடக்கவும் வைக்கிறார். அவர் சொல்லும் எதுவும் உண்மையில்லை என்று மீராவின் மனசாட்சிக்கு தெரியும். இப்போதும் நான் அவரை காதலிக்கிறேன். அவராக எதையும் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன். அதையும் மீறி நடப்பதை நானும் சட்டப்படி சந்திப்பேன்.
இவ்வாறு விஷால் கூறினார்.

தரவு -தமிழ்முரசு

நடிகர் கமலிடம் விசாரணை! உதவி இயக்குனருக்கு கொலை மிரட்டல்

சினிமா உதவி இயக்குனரின் வீட்டுக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த வழக்கு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், அவரது மேனேஜர்கள், சினிமா பி.ஆர்.ஓ. உள்ளிட்டவர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தனுஷ்", "அப்படியா" ஆகிய படங்களின் உதவி இயக்குனர் செந்தில்குமார் (32). சென்னை மேற்கு தாம்பரம் பூர்ண திலகம் குறுக்குத் தெருவில் வசிக்கிறார். தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி இவர் ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

"அர்த்தநாரி என்ற குளோனிங்" என்ற பெயரில் ஒரு கதை தயார் செய்து நடிகர் கமல்ஹாசனிடம் கூறினேன். கதை வித்தியாசமாக இருப்பதாக கூறி கமல்ஹாசனும் அவரது மேனேஜர் முரளியும் என்னை வரச்சொன்னார்கள். நண்பர் பாலாவுடன் சென்றேன். கமல்ஹாசன், மேனேஜர்கள் முரளி, கார்த்திக், பி.ஆர்.ஓ. நிகில்முருகன் ஆகியோரிடம் கதையை கூறினேன்.

சூப்பராக இருப்பதாக கூறி ரூ.501 அட்வான்ஸ் கொடுத்தனர். ரூ.25 லட்சம் தந்து, படத்தில் இணை இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு தருவதாக கூறினர். அதற்குப் பிறகு, அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. சில நாட்களுக்கு பிறகு, ஒரு படத்தில் 10 வேடங்களில் கமல் நடிக்கப்போவதாக பத்திரிகைகளில் விளம்பரம் வந்தது. நான் சொன்ன கதைதான் அது. மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களிடம் கேட்டதற்கு, தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பிவிட்டனர்.

இதையடுத்து, தசாவதாரம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பிறகு, தடை நீக்கப்பட்டது. ஐகோர்ட்டில் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. படத்துக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் மனு செய்தேன்.

இது கமல்ஹாசனுக்கு தெரியவந்ததும், அவரது மேனேஜர்கள் முரளி, கார்த்திக், பி.ஆர்.ஓ. நிகில்முருகன் மற்றும் 10 பேர் என் வீட்டுக்கு வந்தார்கள். "சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் வாங்கு. இல்லாவிட்டால் உன்னை கொலை செய்து விடுவோம். உன் குடும்பத்தினரை ஒழித்துக்கட்டி விடுவோம்" என்று மிரட்டினர். இதுகுறித்து மாநகர காவல் துறையிடம் புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

என் கதையை வாங்கி ஏமாற்றியதுடன், எனக்கும் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் செந்தில்குமார் கூறியிருந்தார்.

அவரது சார்பில் மனுவை வக்கீல் சாமி வெங்கடேசன் தாக்கல் செய்திருந்தார். வழக்கு கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு வக்கீல் ஆறுமுகம் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் போலீசார் ஆலோசனை செய்தனர். இதையடுத்து கமல்ஹாசன், மேனேஜர்கள் முரளி, கார்த்திக், பி.ஆர்.ஓ. நிகில்முருகன் மற்றும் 7 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 451 (அத்துமீறி வீட்டில் நுழைதல்), 506/2 (கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்தார்.

கமல்ஹாசன் உள்பட அனைவர் மீதும் விரைவில் விசாரணை நடத்தப்படும். விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட உள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு கமல்ஹாசன் உள்பட அனைவருக்கும் விரைவில் உத்தரவிடப்பட உள்ளது என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோடம்பாக்க வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய காப்பியாக புரட்சித்தலைவர்!

இயக்குனர் சாமி ஒரு சைக்கோ!-பத்மபிரியாவின் அழுகை பேட்டி!



டைரக்டர் சாமியிடம் அறைவாங்கிய பத்மப்ரியா, பத்திரிகையாளர்களை சந்தித்தார். நடந்த சம்பவம் குறித்து படபடப்புடன் பேச ஆரம்பித்தார்.

படப்பிடிப்பு முடிந்து காரில் ஏறப்போன என்னை அழைத்த சாமி, அத்தனை பேர் முன்னிலையிலும் பளார் என்று கன்னத்தில் அறைந்தார். அவரின் இந்த செயல், பல நாட்களாக பிளான் பண்ணி செய்தது போல் இருந்தது. நான் ஒரு மிடில்கிளாஸ் பொண்ணு. அப்படியே நடுங்கி போய்விட்டேன். நானும் 21 படங்களில் நடிச்சு முடிச்சுட்டேன். பல விருதுகள் வாங்கியிருக்கேன். இப்படி ஒரு மோசமான அனுபவம் என் வாழ்க்கையில் நடந்ததே இல்லை. எனக்கு அழுகை சரியா வரலை. அழ வைக்கதான் அடித்தேன் என்று பத்திரிகைகளில் சொல்லியிருக்கிறார். என்னை அறையும்போது எந்த கேமிராவும் ஓடவில்லை. எந்த லைட்டுகளும் ஆன் செய்யப்பட்டிருக்கவில்லை. நான் டைரக்டரிடம் அடிவாங்கிதான் அழ வேண்டும் என்ற அவசியமும் இல்லை. என்னை வைத்து படம் எடுத்த டைரக்டர் சேரனிடம் கேட்டுப்பாருங்கள். அவர் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்திற்கு 8 மாதங்கள் கால்ஷீட் கொடுத்தவள் நான். அந்த படத்தில் நான் அழாத அழுகையா? பல டைரக்டர்களிடம் வொர்க் பண்ணியிருக்கேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். எல்லா டைரக்டர்களுக்கும் வொர்க் நேரத்தில் கோபம் வரும். ஆனால், இப்படி ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை. இது திட்டமிட்ட தாக்குதல். அவர் ஒரு சைக்கோ. மூச்சுவிடாமல் பேசுகிறார் பத்மபிரியா. தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும்-

இப்படி திட்டமிட்டு அவர் உங்களை தாக்குவதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே? வேறு ஏதாவது செக்சுவல் டார்ச்சர் கொடுத்து அது நிறைவேறவில்லை என்பதால் இப்படி செய்தாரா?

அதை எப்படி நான் வெளிப்படையா சொல்லமுடியும். நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அவர் எனக்கு டார்ச்சர் கொடுத்தார். திரும்ப திரும்ப டார்ச்சர் கொடுத்தார். படப்பிடிப்பில் என்னுடைய அம்மா அப்பாவை கூட என்னோடு வரக் கூடாது என்றார். ஏன் அப்படி சொல்லணும்? நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

உங்களை அடித்ததற்காக போலீசில் புகார் செய்வீர்களா?

இல்லை. நான் நடிகர் சங்கத்திலும், பெப்சியிலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கேன். அவங்க என்ன சொல்றாங்களோ, அதுக்கு கட்டுப்படுவேன். இந்த விஷயத்தில் அவங்க நிச்சயமா நல்ல முடிவை எடுப்பாங்கன்னு நம்புகிறேன்.

ஒரு பெண்ணாகிய உங்களை கைநீட்டி அடிச்சிருக்காரு? மாதர் சங்கம், பெண்ணுரிமை சங்கம் போன்ற அமைப்புகளின் உதவியை நாடுவீர்களா?

இது முழுக்க முழுக்க ஒரு நடிகைக்கும், டைரக்டருக்கும் உள்ள பிரச்சனை. இதை எதுக்கு அங்கெல்லாம் கொண்டு போகணும்? நான் பெண்ணியவாதி இல்லை. இந்த விஷயத்தை திசை திருப்பாதீங்க. ப்ளீஸ்...

முடிவா என்ன சொல்றீங்க?

அந்த டைரக்டருக்கு எல்லார் கூடவும் பிரச்சனை இருக்கு. அந்த படத்தின் புரடக்ஷன் மேனேஜரை கேளுங்க, அவர் கூடவும் பிரச்சனை. மறுபடியும் சொல்றேன் அவர் ஒரு சைக்கோ. இந்த படத்திற்கு இதுவரைக்கும் 67 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கேன். என்னுடைய போர்ஷன் எல்லாத்தையும் எடுத்து முடிச்சதுக்கு பிறகுதான் என் மீது கைநீட்டியிருக்கார். இன்னும் என்னுடைய போர்ஷன் பாக்கியிருக்கிறதா பேட்டியிலே சொல்லியிருக்காரு. மறுபடியும் படப்பிடிப்புக்கு அழைச்சா போய் நடிச்சு கொடுப்பேன். என்னால படம் நிற்க கூடாது. ஆனா, படப்பிடிப்புக்கு நான் திரும்பவும் போகிற பட்சத்தில் என் உயிருக்கு பாதுகாப்பு வேணும்!

மறுபடியும் ஒருமுறை கண்களை துடைத்துக் கொள்கிறார் பத்மபிரியா. பேட்டியின்போது நடிகர் சங்க பொருளாளர் கே.என்.காளை மற்றும் பெப்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தரவு - தமிழ்சினிமா.காம்

செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாரா டைரக்டர் சாமி?

செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்ற நடிகை பத்மப்ரியாவின் புகாரை டைரக்டர் சாமி மறுத்தார்.
மதுரை கொரண்டி கிராமத்தில் இருதினங்களுக்கு முன் 'மிருகம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து புறப்பட்ட பத்மப்ரியாவை, இயக்குனர் சாமி திரும்ப அழைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பத்மப்ரியா நேற்று அளித்த பேட்டியில், ‘படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முடிந்து 'பேக் அப்' சொன்னபிறகுதான் ஷ¨ட்டிங்கிலிருந்து புறப்பட்டேன்.

திடீரென்று க்ளோசப் காட்சி எடுக்க வேண்டும் என்று கூறி என் கன்னத்தில் டைரக்டர் அறைந்தார்' என்றார். ‘கதறி அழும் காட்சிக்காக அடித்தேன் என்று சாமி கூறி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் ஏன் அழ வேண்டும்? என்னை அவர் திட்டமிட்டே அடித்தார். படம் ஆரம்பத்திலிருந்தே சாமி என்னிடம் வரம்பு மீறி நடந்துகொண்டார். என்னை ரொம்ப மோசமாக நடத்தினார். செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாரா என்பதையெல்லாம் சொல்ல முடியாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்' என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து இயக்குனர் சாமி இன்று கூறியதாவது:

இந்தப் படத்தில் பத்மப்ரியாவின் கேரக்டர் பெயர் அழகம்மாள். நந்திதா தாஸ் மாதிரி அவரை ஆக்க வேண்டும் என்பதற்காக என் படத்துக்கு அவரை தேர்ந்தெடுத்தேன். ஆனால் ரூ. 13 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு இஷ்டத்துக்கு வருவார், போவார் என்றால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? அதையும் பொறுத்துக்கொண்டுதான் இவ்வளவுநாள் படமாக்கினோம். கிளைமாக்ஸ் காட்சி. கணவன் இறந்து கிடக்கிறான். மனைவி கண்ணீர் விட்டு கதற வேண்டும். சுடுகாட்டில் பிணம் கிடக்கும்போது ஷாம்பு போட்டு குளித்த தலை முடியுடன் மனைவி வந்தால் நன்றாக இருக்குமா? அதற்காக டல் மேக்கப் போடுங்கள் என்றேன். ‘நான் மும்பை செல்ல வேண்டும். சீக்கிரமா எடுங்கள். இதற்கு மேல் மேக்கப் போட்டால் நேரமாகிவிடும்' என்றார்.

இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதை பிரபல நடிகரும், எங்கள் படத்தின் எக்ஸ்சிகியூட்டிவ் புரொடியூசருமான சங்கிலி முருகனும் சொன்னார். அவரையும் எடுத்தெறிந்து பேசினார் பத்மப்ரியா. சரி அழுகையாவது நன்றாக வரவேண்டும் என்பதற்காக அடித்தேன். அவர் செய்த தவறை அப்படியே மாற்றி இப்போது செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்கிறார். இது, தவறான பெண்கள் தங்கள் தவறை மறைக்க ஆண்கள் மீது சுமத்தும் சீப்பான புகார்.

எனக்கும் அம்மா இருக்கிறார். குடும்பம் இருக்கிறது. இதை படித்துவிட்டு அவர்கள் எப்படி மன வேதனை அடைந்திருப்பார்கள்? அந்தளவுக்கு கீழ்த்தரமானவன் அல்ல நான். நிறைய விஷயங்களை பேச வேண்டாமென்றே இருக்கிறேன்.

இன்றும் எங்கள் படக்குழு மதுரையில்தான் இருக்கிறது. படப்பிடிப்பு நடக்கவில்லை. தயாரிப்பாளருக்கு ரூ. 3 லட்சம் நஷ்டம். இன்றிரவு சென்னை வருகிறோம். நாளை காலை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் கவுன்சிலில் பேசுகிறோம். முடிவு தெரியவில்லை என்றால் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். எங்கு இருக்க போகிறோம் என்பதை நாளை சொல்கிறேன்.

இவ்வாறு சாமி சொன்னார்.

தேவதை மாதிரி வந்து என் வாழ்க்கையை மாற்றியது "மொழி' -பிரகாஷ்ராஜ்

"மொழி' படம் தேவதை மாதிரி வந்து என் வாழ்க்கையை மாற்றி விட்டது என்று பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் பெருமிதத்தோடு கூறினார்.

சினிமா தொழில் இல்லை. வாழ்க்கை. இதில் நமது அடையாளத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் அவர் மனம் திறந்து கூறினார்.

சினிமா காஸ்ட்லியான விஷயம் தான். "மொழி' பட வெற்றிக்குப் பிறகு என்னிடம் சொன்னவர்கள், நீங்கள் தான் வெற்றிப்படம் கொடுத்து விட்டீர்களே, இனிமேல் உங்கள் பேனரில் வரும் படங்களை பார்ப்பார்கள். நிறைய படம் எடுத்து சம்பாதிக்க வேண்டியது தானே? என்றார்கள். சினிமா எடுப்பது பணம் சம்பாதிக்க மட்டும் தான் என்று நினைக்கவில்லை. "மொழி' வெற்றி படத்தை கொடுத்து விட்டோம் என்ற அகங்காரமும் எனக்கு இல்லை. மறுபடியும் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். இதே எண்ணத்தைத் தான் என்னோடு இணைந்துள்ள மோசர் பியர் நிறுவனமும் கொண்டுள்ளது.

அது தான் எங்களை தயாரிப்பு துறையில் இணைத்திருக்கிறது. தமிழில் நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர் களுக்கு வாய்ப்பு தர வேண்டும். உலக சினிமாவில் ஒரிஜினல் கதைகளும், வாழ்க்கையை பற்றி சொன்ன கதைகளும் தான் வெற்றி பெற்றிருக்கிறது.

கமர்ஷியல் படங்கள் சில பேருடைய பாக்கெட்டை மட்டுமே நிரப்பும் பட்டாம்பூச்சியாக இருக்கிறது. யாரும் தமிழ் சினிமாவை இன்னொரு இடத்துக்கு கொண்டு போகிற எண்ணத்தில் இருப்பதாக தெரியவில்லை. திறமையாளர்களுக்கு நான் தொடர்ந்து வாய்ப்பு தருவேன்' என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டார்.

ஒரு படத்தை ஏற்பதும், தூக்கி போடுவதும் ரசிகர்கள் கையில் இருக்கிறது. ஆனால் ஒரு படத்தை தயாரிப்பதற்கு பின்னால் நிறைய கஷ்டம் இருக்கிறது. இதுவரை 7 படங்கள் தயாரித்திருக்கிறேன். அதை எப்படி வரவேற்றார்கள், சாதித்தது என்ன என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பிரகாஷ் ராஜின் டூயட் மூவீஸ், மோசர்பியர் நிறுவனம் இணைந்து வெள்ளித் திரை, அபியும் நானும், மயிலு ஆகிய 3 படங்களைத் தயாரிக்கிறது. இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. மோசர்பியர் நிறுவன தலைமை செயல் இயக்குனர் ஜி. தனஞ்செயன், இயக்குனர்கள் ராதாமோகன், ஜீவன், நடிகர் ஸ்ரீ ஸ்ரீகோவிந்த், லட்சுமிராய் ஆகியோர் கலந்து கொண்டனர். வந்திருந்தவர்களை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் வரவேற்றார்.


தரவு - மக்கள் குரல்

ஸ்ரீகாந்த்-வந்தனா இன்று மீண்டும் திருமணம்...





மணமக்களை வாழ்த்துவோம்....

தரவு - தமிழ்முரசு

ஜாக்கி சான் ஓய்வு பெறுகிறார்?


ஆசியாவின் நம்பர் ஒன் நடிகரான ஜாக்கி சான் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆக்ஷன் படங்களால் புகழ்ப்பெற்றவர் ஜாக்கிசான். தனது படங்களில் இடம்பெறும் அதிரடி சண்டைக் காட்சிகளை, தானே அமைத்து அதில் டூப் போடாமல் நடிப்பதுதான் இவரது தனித்திறன். இதனால் பலமுறை விபத்துகளில் சிக்கினார். மரணத்தை நெருங்கி பிழைத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இப்போது 53 வயதாகும் ஜாக்கி, "தி ஃபர்பிடன் கிங்டம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சண்டைக் காட்சியில் நடித்தபோது, ஜாக்கியின் முதுகில் அடிபட்டது. இப்போது நடக்க முடியாமல் அவதிப்படுகிறார் ஜாக்கி. இதனால் டாக்டர்களும் குடும்பத்தினரும் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுமாறு ஜாக்கியை வற்புறுத்தி வருகின்றனர். இதை அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜாக்கிசான் கூறுகையில், "முதுகில் காயம்பட்டபோது வலி தெரியவில்லை. மறுநாள் படுக்கையிலிருந்து எழ முடியவில்லை. சித்ரவதை தரும் வலியாக இது உள்ளது. ஓரிரு ஸ்டெப்தான் நடக்கவே முடிகிறது" என்றார்.

"பல முறை ஜாக்கிக்கு அடிபட்டுள்ளது. இதைவிட மோசமான கட்டங்களையெல்லாம் தாண்டி வந்துள்ளார். அப்போது ஓய்வு பெறாதவர், இந்த சிறு காயத்துக்கா ஓய்வு பெறுவார்? அதனால் ரசிகர்கள் நிம்மதியாக இருக்கலாம்" என ஜாக்கியின் நண்பர் ஒருவர் கூறினார்.

தரவு - தினகரன்

சரத்குமாரின் கட்சி பெயர் மற்றும் கொடி வெளியிடப்பட்டது.


அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி - சரத்குமாரின் புதிய கட்சி உதயம்.



புதிய கட்சியை துவங்கினார் நடிகர் சரத்குமார். பல மாதங்களாக தனிக்கட்சி ஆரம்பிக்க போகிறார் என்று எழுந்த யூகத்திற்கு பதிலளிக்கும் விதமாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயருடன் ஆகஸ்ட் 31-ந் தேதி மாலை சரியாக 6.03 மணிக்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் தன் கட்சியின் கொடியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் அவர். அண்ணியார் அவர்கள் குத்துவிளக்கேற்றுவார்கள் என்று மேடையிலே அறிவிக்கப்பட்டது. லேசான வெட்கத்தோடும், ஆர்ப்பரிக்கும் பெருமையோடும் குத்துவிளக்கேற்றினார் ராதிகா.

இது நாடார் கட்சி என்று தனிமைபடுத்த நினைக்கிறார்கள். இது அனைத்து சமுதாயத்தினருக்கான கட்சி. காமராஜர் எப்படி அனைத்து மக்களையும் அரவணைத்து சென்றாரோ, எனது தலைமையிலான இந்த கட்சியும்

அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து செல்லும். மீண்டும் காமராஜர் ஆட்சி. இதுவே எங்கள் லட்சியம் என்று முழங்கினார் சரத்குமார்.

பிறகு தன் கட்சியின் நிர்வாகிகளை மேடையில் அறிமுகப்படுத்தினார். நான் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக இந்த கட்சியை துவங்கவில்லை. உங்களில் ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் என் லட்சியம் என்று சரத்குமார் சொல்ல, ரசிகர்களின் விசில் காற்றை கிழித்தது.

ஒருபக்கம் விஜயகாந்த், மறுபக்கம் சரத்குமார். அரசியல் அரங்கில் பரபரப்பான சினிமா ஆரம்பம்....

தரவு -தமிழ்சினிமா.காம்



செய்திகளை முந்தித் தருவது....மிளகாய்..

தீபாவளிக்கு ஹிந்தி சிவாஜி

சிவாஜி ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் தீபாவளிக்கு ரிலிஸ் ஆகிறது. ஹிந்தி மார்க்கெட்டு ஏற்றார் போல் படத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. சிறப்புத் தோற்றத்தில் ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் தோன்றுவார் என தெரிகிறது.

மேலும் விவரங்களுக்கு CNN IBN ன் செய்தித் தொகுப்பினை பார்க்கவும்

சஞ்சய் தத்துக்கு ஜாமீன் கிடைத்தது

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட்டிருந்த பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சர் தத்துக்கு இன்று சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது.

சூர்யா, கார்த்தி மீது ரூ. 80 லட்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார் டைரக்டர் அமீர்

'பருத்தி வீரன்' படத்தை தயாரித்ததற்காக தனக்கு 80 லட்சம் ரூபாயை வட்டியுடன் தர வேண்டும் என்று கேட்டு நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் மீது இயக்குனர் அமீர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் டைரக்டர் அமீர் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தியிடம் 2005-ம் ஆண்டு 'பருத்திவீரன்' கதையை கூறினேன். அவர்களுக்கு கதை பிடித்திருந்ததால், ஞானவேல் ராஜா என்பவரை அறிமுகப்படுத்தி இவர்தான் தயாரிக்கிறார் என்றார்கள். 2006-ம் ஆண்டுவரை பாதி படம் ஷ¨ட்டிங் நடந்தது. இதற்கிடையே ஞானவேல், நடிகர் சூர்யாவை நாயகனாக வைத்து 'சில்லுனு ஒரு காதல்' என்ற படத்தை தயாரித்தார். இதனால் 'பருத்தி வீரன்' படத்தை தயாரிக்க பணம் தராமல் நிறுத்திவிட்டார்.

இந்நிலையில், சூர்யா ரூ.47 லட்சம் பணத்தை கொடுத்து நீங்களே (அமீர்) 'பருத்தி வீரன்' படத்தை தயாரித்து வெளியிடுங்கள் என்றார். அதை ஏற்று டீம் ஒர்க் நிறுவனம் சார்பில் வெளியில் பணம் வாங்கி படம் தயாரித்தேன். என் பெயரில்தான் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது.

படத்தை சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஞானவேல் ஆகியோருக்கு போட்டுக் காட்டினேன். படம் நன்றாக இருந்ததால் அவர்கள் மனம் மாறி, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் என் மீது புகார் கொடுத்தனர். தயாரிப்பாளர் சங்கத்தினர் இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தினர். ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் என்னுடைய டீம் ஒர்க் நிறுவனம் ஆகிய 2 பட நிறுவன பெயரையும் சேர்த்து படத்தில் போட வேண்டும், அதன் பிறகு இருதரப்பின் கணக்கு வழக்கும் பார்த்து தயாரிப்பாளர் சங்கம் இறுதி முடிவு எடுக்கும், இதற்கிடையில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் ரீமேக் ரைட்ஸ், டப்பிங் ரைட்ஸ், டி.வி. ரைட்ஸ் போன்றவற்றை விற்கக்கூடாது என அவர்கள் கூறினர்.

அதன்படியே, இரண்டு நிறுவனம் பெயரையும் போட்டு படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் எனக்கு தெரியாமல் இப்படத்தை வேறு மொழிக்கு விற்பதற்கான முயற்சியை ஞானவேல் செய்து வருகிறார். மேலும் விளம்பரங்களில் எனது பட நிறுவமான டீம் ஒர்க் பெயரை போடாமல் புறக்கணிக்கிறார். இது ஒப்பந்தத்தை மீறிய செயல். எனவே எனக்கு ஏற்பட்ட செலவான ரூ. 80 லட்சத்தை வட்டியுடன் தர உத்தரவிட வேண்டும். மேலும் மாற்று மொழி உரிமையையோ, டி.வி. ரைட்சையோ எனக்கு தெரியாமல் யாருக்கும் வழங்கக்கூடாது என உத்தர வேண்டும்.
இவ்வாறு அமீர் கூறி இருந்தார்.

நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ஞானவேல் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம், பிரசாத் பிலிம் லேப் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கை நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் விசாரித்து, சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஞானவேல் ஆகியோர் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டார். அமீர் சார்பில் வக்கீல்கள் என்.கண்ணன், எஸ்.நம்பி அரூரான் ஆகியோர் ஆஜராயினர்.

தரவு - தமிழ்முரசு

ஈழத்து 'ஆனிவேர்' இந்தியா வருமா?


எத்தனையோ படங்கள்.... எத்தனையோ நடிகர்கள்... தமிழ்சினிமாவின் ஆணிவேருக்கு அடர்த்தி அதிகம்தான். ஆனால் கடந்த வாரம் நம்மை உலுக்கிய ஆணிவேர், இதயத்தை துளைத்து குருதியில் குளித்ததை என்னவென்று சொல்வது?

ஈழமண்ணில் எடுக்கப்பட்ட படம் இது. நாமறிந்த முகங்கள் அதிகம் இல்லை. நந்தா, மதுமிதா, நீலீமா இவர்கள்தான். மற்றவர்கள் எல்லாம் ஈழ மண்ணில் நடக்கும் கோரத்தாண்டவத்தில் எதையெல்லாமோ இழந்தவர்கள். "தமிழனா பொறந்ததுதான் நாங்க செய்த பாவமா?" என்று கடவுளை கேட்கிறான் இளைஞன். கன்னத்தில் அறைந்துவிட்டு போவது மாதிரி இருக்கிறது. கடவுளின் கன்னம் வலிக்கும் நாளிலாவது விடிவு கிடைக்கிறதா பார்ப்போம்.

நிஜமா? படமா? என்ற திக்பிரமையை ஏற்படுத்தியிருக்கிறார் படத்தின் இயக்குனர் ஜான். போர்க்களத்தில் பூ பூக்கும் என்பதையும் சொல்லி, காதலை இழையோட விட்டிருக்கிறார் ஆங்காங்கே! கவர் ஸ்டோரிக்காக இலங்கையின் யுத்த பகுதிக்கு வந்திறங்கும் நிருபர் மதுமிதா, கவர் ஸ்டோரிக்கு ஏற்றமாதிரி புகைப்படங்கள் கேட்க, "எங்களின் வேதனை உங்களுக்கு கவர் ஸ்டோரியா மட்டும்தான் தெரியுது இல்ல...? வா, இதை வந்து எடுத்துக்கோ" என்று டாக்டர் நந்தா காட்டும் கொடூரங்கள் ஒவ்வொன்றும் நரகத்தின் நகல்கள். "கேவலம் 2500 ரூபாய் பணத்துக்காக எங்களை போட்டோ எடுக்க வந்திட்டே" என்று வெடிக்கும்போது, இதையும் வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் சிலரை எண்ணி வேதனைதான் மிஞ்சுகிறது. தன் மக்களுக்காக, போர்களத்தில் டாக்டராக சேவையாற்றி வரும் நந்தா கடைசி காட்சி வரைக்கும், நடிகனாக வெளிப்படாமல் ஈழ பிரஜையாகவே மாறியிருப்பது வேதனைக்கிடையில் கிடைக்கும் மகிழ்ச்சி.

ஒவ்வொரு காட்சிகள் விரிவதற்கு முன்பும், இது இங்கே நடந்த சம்பவம் என்று எழுத்துக்கள் பதிவு செய்யப்பட, அதை தொடர்ந்து வரும் சம்பவங்கள், வெறும் சம்பவங்கள் அல்ல.... பயங்கரங்கள்! அதிலும், சிங்கள ராணுவ டாங்கிகள் உயிரோடு நசுக்கிய தமிழர்களின் உடல்களை காட்டும் போது, கண்களில் ரத்தமே வந்துவிடுகிறது. ஐந்து லட்சம் பேர் ஈழத்தை விட்டு வெளியேறும் அந்த காட்சியும் பதைபதைக்க வைக்கிறது. நீலிமா கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதும், நிருபர் என்றும் பார்க்காமல் மதுமிதா மேல் கொலை வெறி தாக்குதல் நடத்துவதும் சிங்கள ராணுவத்தின் முன்பு மனிதாபிமானத்தின் மரியாதை என்ன என்பதையே காட்டுகிறது.

இவை எல்லாவற்றையும் எப்படி படமாக்கினார்கள் என்பதே பெரும் வியப்பாக இருக்கிறது. ஏனென்றால் யுத்த பூமியில் ஆர்ப்பாட்டமாக உபகரணங்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலையே நிலவுமல்லவா? ஒளிப்பதிவாளர் சஞ்சய் மிக,மிக பாராட்டுக்குரியவர். பாராட்டுகளை அள்ளிச் செல்லும் மற்றொருவர் கலை இயக்குனர்.

படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன், தமிழின் அற்புதமான இயக்குனர்களில் முன்னோடியான மகேந்திரனின் புதல்வர். இந்தியாவில் எப்படியாவது இந்த படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்று நம்புகிறார். "வன்னி பகுதியில் படம் எடுக்கப்பட்டிருந்தாலும், சில இடங்களை தவிர பிற இடங்களில் புலி என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை. அது போல யாரையும் ஆதரித்து இந்த படத்தில் கருத்துகள் கூறப்படவில்லை. என்ன நடந்தது என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறோம். படத்தை இந்தியாவில் திரையிட அனுமதி கிடைக்கும்Õ" என்று நம்புவதாக கூறுகிறார்.

அந்நிய தேசங்களில் சில நாடுகள் தவிர பெரும்பாலான நாடுகளில் படத்தை திரையிட்டிருக்கிறார்கள். சுமார் 30 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது ஆணிவேர்.

வெறும் சுண்ணாம்பு கட்டிகளையே வைரங்களாக காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிற தமிழ்சினிமாவில், இதுபோன்ற படங்கள் என்னவாக வைக்கப்படும் என்பதெல்லாம் பிறகு இருக்கட்டும்... முதலில் காட்சிப்படுத்தும் பாக்கியமாவது வாய்க்குமா?

தரவு - தமிழ்சினிமா.காம்

4 நாட்களில் நல்ல முடிவு ஏற்படும்'' - நடிகர் ஸ்ரீகாந்த்

"ஒரு பெண்ணை ஏமாற்றும் எண்ணம் எனக்கு கிடையாது. வந்தனா பிரச்சினையில், வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடக்கிறது. 4 நாட்களில் நல்ல முடிவு ஏற்படும்" என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறினார்.

'ரோஜாக்கூட்டம்,' `ஏப்ரல் மாதத்தில்,' `பார்த்திபன் கனவு,' `ஜுட்,' `பம்பரக்கண்ணாலே,' `கனா கண்டேன்' உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த ஸ்ரீகாந்த், வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்யப்போவதாக 2 மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து வந்தனா குடும்பத்தினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவல் காரணமாக, ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் நடைபெற இருந்த திருமணத்தை ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் ரத்து செய்தார்கள்.

இந்த சூழ்நிலையில், வந்தனா திடீரென்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஸ்ரீகாந்த் வீட்டில் குடியேறினார். தனக்கும், ஸ்ரீகாந்துக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டதாக அறிவித்தார். "ஸ்ரீகாந்த் எனக்கு முறைப்படி தாலி கட்டியிருக்கிறார். இனிமேல் இந்த வீட்டில்தான் இருப்பேன்" என்று அவர் கூறினார்.

வந்தனா அந்த வீட்டை விட்டு வெளியேற மறுத்ததால், ஸ்ரீகாந்தும், அவருடைய பெற்றோர்களும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினார்கள். சொந்த வீடு இருந்தும் ஸ்ரீகாந்தும், அவருடைய பெற்றோர்களும் கடந்த 2 மாதங்களாக ஓட்டல்களிலும், உறவினர் வீடுகளிலும் மாறி மாறி தங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஸ்ரீகாந்த், வந்தனாவை ஊர் அறிய திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற தகவல் பரவியது.

இதுபற்றி நடிகர் ஸ்ரீகாந்திடம், `தினத்தந்தி' நிருபர் விசாரித்தபோது, அவர் கூறியதாவது:-

"ஒரு பெண்ணை ஏமாற்றும் எண்ணம் எனக்கு இல்லை. எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்சினைகள் உண்டு. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, என் வாழ்க்கையிலும் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. நான் நடிகர் என்பதால், என் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டுவிட்டது.

மன்னிப்பது, மனித சுபாவம். நல்ல விஷயம். எங்கள் பிரச்சினை பற்றி நாங்கள் வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். அதில், நல்ல முடிவு ஏற்படும். அதை, 4 நாட்களில் தெரிவிக்கிறேன்."

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

- தினத்தந்தி

நடிகை ஜோதிகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

கடைசி செய்தி:

நடிகை ஜோதிகாவுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 0925 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது.



குட்டி ஜோ..விற்கும், சூர்யா தம்பதியருக்கும் வாழ்த்துக்கள்....


செய்திகளை முந்தித்தருவது....மிளகாய்...மிளகாய்..மிளகாய்...

சற்றுமுன் நடநத செய்திகளை உடனுக்குடன் அறிய மிளகாய்...மிளகாய்...

யுவன்-சுஜயா விவாகரத்து ஏன்? - -அதிர்ச்சியூட்டும் பின்னணி!

தமிழ்த்திரையுலகின் மற்றொரு ஜோடியும் "டமார்" ஆகிவிட்டது. வழக்கமாக நடிகைகள்தான் "பொசுக்"கென்று அவிழ்த்து போடுவார்கள் (தாலியைதான்) ஆனால் இந்த வகையில் சேராத, யுவன்சங்கர்ராஜா-சுஜயா தம்பதியின் விவாகரத்து, கேட்பவர்களின் புருவத்தை உயர்த்தியிருக்கிறது.

2002-ல் இங்கிலாந்து சென்றபோது அங்கு சுஜயா என்ற இந்திய வம்சாவளி பெண்ணை சந்தித்தார் யுவன். இருவரும் காதலித்தார்கள். 2003 செப்டம்பர் மாதம் 3-ந் தேதி இவர்களுக்கு லண்டனில் பதிவு திருமணம் நடந்தது. பின்னர் இருவரும் சென்னையில் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரிந்துவிடுவது என்று முடிவெடுத்த இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்து திருமண சட்டம் பிரிவு 13(பி) யின் கீழ் இருவரும் ஒரு மனதுடன் விவாகரத்து கேட்டிருப்பதால் சிக்கல் இல்லாமல் விவாகரத்து கிடைத்துவிடும் என்றே தெரிகிறது.

தம்பதிகள் பிரிந்தது ஏன்? இதுபற்றிய தகவல்களை அறிய கோலிவுட் ஆந்தைகள் சிலவற்றை பிடித்து அவர்களின் காதை கடித்தோம்.

பெயர் சொல்ல விரும்பாத அந்த ஆந்தைகள் கக்கிய செய்திகள் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தன.

கடந்த 9 மாதங்களாகவே இருவரும் பிரிந்திருக்கிறார்களாம். இளையராஜா குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் சுஜயாவை மிகவும் சிரமப்படுத்தியதாக தெரிகிறது. இதை பலமுறை யுவனிடம் எடுத்துச் சொல்லியும் அவர் காது கொடுத்து கேட்டதாக தெரியவில்லை என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல... திருமணம் ஆகிய சில மாதங்களுக்கு பிறகு நள்ளிரவில் வீடு திரும்புவதையும் சில நேரங்களில் அதுவும் இல்லாமல் வெளியில் தங்கிவிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தாராம் யுவன். இதுவும் சுஜயாவை வருத்தமுற செய்திருக்கிறது. அடிக்கடி பாங்காங் பறந்துவிடும் யுவன், அங்குள்ள பாட்டயா, மற்றும் உல்லாச தீவுகளில் சுற்றி வேண்டாத சில பழக்கங்களை கற்றுக் கொண்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில்தான் பிரிவது என்று முடிவெடுத்தாராம் சுஜயா. பரஸ்பரம் பிரிந்துவிடுவது என்ற முடிவை இருவரும் எடுத்தாலும், சுஜயாவுக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை எழுதி தர சம்மதித்திருக்கிறாராம் யுவன்சங்கராஜா.

ஆக, விவாகரத்துக்கு பின் சுஜயா, சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லப்போவதில்லை. இங்குதான் இருக்க போகிறார் என்பது மட்டும் இப்போதைக்கு தெரிகிறது. சங்கீதத்தை நேசிக்கிற யுவனுக்கு சம்சாரம் என்பதும் ஒரு சங்கீதம் என்பது இந்த வயசில் புரியாதோ?


தரவு - தமிழ்சினிமா

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்' படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா' என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.

தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்' தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.

மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:

சிறந்த இயக்குனர்- ராகுல் தோடாக்கியா (பர்சானியா)

அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.

சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)

சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.

நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).

தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).

சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)

லால்குடி ஜெயராமன்

சிறந்த பின்னணி பாடகர்- நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)

சிறந்த பின்னணி பாடகி- ஸ்ரேயா கோஷால்(பகெலி)

சிறந்த இசையமைப்பாளர்- வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)

சிறந்த பாடலாசிரியர்- பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)

சிறந்த எடிட்டர்- பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).

சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)

சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)

சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).

தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.