ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததையடுத்து துனை குடியரசு தலைவர் திரு.பைரோன் சிங் ஷெகாவத் தனது பதவியினை ராஜினாமா செய்தார். முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி மாளிகை சென்ற திரு.ஷெகாவத், ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்களிடம் தனது ராஜினாமா கடிதத்தினை கையளித்தார்.
மிக சுருக்கமான அக்கடிதத்தில் தான் தனது பதவியினை ராஜினாமா செய்வதாகவும், தனது பதவிகாலத்தில் தனக்கு தேவையான வழிகாட்டுதலையும், ஆதரவினையும் நல்கிய குடியரசுத்தலைவருக்கு தனது நன்றியினை தெரிவித்துக்கொளவதாக குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி மாளிகைக்கு அரசுவாகனத்தில் சென்ற ஷெகாவத் பின்னர் தனது சொந்த வாகனத்தில் இல்லம் திரும்பினார்.
முன்னதாக முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், வெற்றிபெற்ற திருமதி.பிரபாவதிபாட்டீலை தொலை பேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட ஷெகாவத், தேர்தல் தோல்வியை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தான் தொடர்ந்து நலிவடைந்த மற்றும் பிற்பட்டோருக்கான அடிப்படை உரிமைகளை பெற தன்னால் இயன்றவரையில் உழைக்கப்போவதாய் குறிப்பிட்டுள்ளார்.
2 comments:
சிறந்த மனிதர்கள் என்ன செய்வார்களோ அதைச் செய்திருக்கிறார் ஷெகாவத் அவர்கள்.
ஏனோ, நம்மூர் அரசியல்வாதிகளிடம்
இப்படிப்பட்ட நல்ல பண்புகளை எதிர்பார்க்க முடியவில்லை. அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர், ஒருவரை ஒருவர் எதிரிகள்
மாதிரி நினைப்பதும், எப்பொழுது
சமயம் வரும்-பழிவாங்க என்றுக்
காத்திருப்பதும், ஆரோக்கியமான
அரசியலுக்கு அழகல்ல.
இது எல்லோரும் செய்வதுதான் (நார்த்-ல்). நம்மளை பார்த்து கெட்டு போகாமல் இருந்தால் சரி
Post a Comment