போக்கிரி விழா...-இணையதளங்கள் புறக்கணிப்பு

போக்கிரி படத்தின் 175 வது நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு இணையதளங்கள் எதற்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. இதையடுத்து இந்த விழா குறித்த தகவல்களையும் படங்களையும் தங்கள் இணையதளத்தில் வெளியிடப் போவதில்லை என்று இணையதளங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இணைய தளங்களை ஏன் அழைக்கவில்லை? என்று போக்கிரி, மற்றும் விஜய் தரப்பில் விசாரித்தபோது, இந்த விழாவை படம்பிடித்து அதை மொத்தமாக இணையதளம் ஒன்றிற்கும், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கும் விற்றுள்ளதாகவும், அதனால்தான் அழைப்பு அனுப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த Ôசந்திரமுகிÕ படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வர் கலந்து கொண்ட இந்த விழாவை ஒளிபரப்பும் உரிமையை, முன்னணி தனியார் தொலைக்காட்சி ஒன்று பெற்றிருந்தது. ஆனாலும், இணைய தளங்கள் அனைத்திற்கும் அழைப்பு அனுப்பிய சிவாஜி புரடக்ஷன், வரும்போது கேமிராவை எடுத்து வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. அதே நேரத்தில் சந்திரமுகி வெற்றி விழா செய்தியை இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

இந்த பெருந்தன்மையைதான் விஜயிடமும், போக்கிரி தயாரிப்பாளரிடமும் எதிர்பார்த்தார்கள் இணையதள நிருபர்கள். சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு ஆசைப்படும் விஜய், தற்போதைய சூப்பர் ஸ்டாரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அதில் ஒன்றுதான் நாம் மேலே கூறிய சந்திரமுகி பட விழா.

நாற்காலி மட்டும் வேண்டும். அதை அடைவதற்கான நடைபாதை தேவையில்லை என்று விஜய் முடிவு செய்தால், அதை "விதி" என்று விட்டுவிட வேண்டியதுதான்!

தரவு- தமிழ்சினிமா

1 comments:

July 9, 2007 at 6:00 AM வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

ஏதோ வீறாப்பான அறிக்கை என நினைத்தால் இது வெறும் வேண்டுதல் போலத் தெரிகிறது! அய்யோ பாவம்! கண்டிப்பாக வாசகர்கள் கேட்டு ஊடகங்கள் சினிமா செய்திகளை வெளியிடவில்லை. எனவே, சினிமா நடிகர்களின் படச் செய்திகளை நம்பியிருக்கும்வரை இதுபோன்ற வீறாப்பு எந்த ஊடகங்களுக்கும் தேவையில்லை.