விடை பெறுகிறார் 'மக்கள்' ஜனாதிபதி.....

ஜனாதிபதி மாளிகையில் தங்கி சாப்பிட்டதற்கு பணம் கட்டிய பண்பாளர் அப்துல்கலாம்.




ஜனாதிபதி மாளிகையில் தனது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் தங்கி சாப்பிட்டதற்கு கூட பணம் செலுத்திய பண்பினை பெற்றவர் அப்துல் கலாம் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிறப்பு அலுவல் அதிகாரியாக இருந்த சுதீந்திர குல்கர்னி கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் செயலாளராக இருக்கும் சுதீந்திரி குல்கர்ன், அப்துல் கலாமின் குணநலன்கள் குறித்து வியந்து எழுதியுள்ள ஒரு கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு:

அரசியலின் தரம் குறைந்து கொண்டு வந்த இந்திய வானில், இக்கால இளமையான இந்தியர்களுக்கு அரசியலின் மீது ஒரு புது நம்பிக்கையை அவர் ஏற்படுத்தி வந்தார். அப்துல்கலாம் நாட்டின் கடைகோடியில் இருக்கும் குடிமகனுக்கும் நாட்டின் வளர்ச்சியின் பயனை எட்டச் செய்யும், "வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறவேண்டும்" என்ற அவரது கொள்கையானது, சரியான கோணத்தில் சிந்திக்கும் எல்லா இந்தியர்களின் உணர்வையும் தட்டி எழுப்பக் கூடியதாக இருந்தது.

அவரது நன்நடத்தையும், அவரின் எளிமையுமே ஆகும். அவரது ஈடில்லா பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக, ""ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்பது போல்'', ஒரே ஒரு சிறந்த உதாரணத்தை இங்கு குறிப்பிடலாம்.

கடந்த ஆண்டில் ஜனாதிபதி மாளிகைக்கு அப்துல் கலாமின் சொந்த கிராமத்தில் இருந்து 60 உறவினர்களும், நண்பர்களும் வந்தார்கள். அவர்கள் சுமார் ஒரு வாரம் தங்கியிருந்தார்கள். அவர்கள் டெல்லியை சுற்றி பார்க்க விரும்பினார்கள். ஜனாதிபதி மாளிகையில் ஏராளமான கார்கள் இருந்தாலும், டெல்லி மாநகரை அவரது உறவினர்கள் சுற்றி பார்க்க சென்றபோது ஒரு காரை கூட அவர்களுக்காக அப்துல் கலாம் அனுப்ப உத்தரவிடவில்லை. அவர்களுக்காக ஒரு பஸ்ஸை ஏற்பாடு செய்தார். அதற்கு தனது சொந்த கணக்கில் இருந்தே பணம் செலுத்தினார்.

அவர்கள் தங்கியதற்கான அறை வாடகை, உணவுக்கான செலவினையும் அவரே செலுத்திவிட்டார். அப்துல் கலாமின் தனி பங்களாவில் அவரது 90 வயது சகோதரர் ஏ.பி.கே. முத்து மரைக்காயர் அப்போது தங்கினார். அவர் தங்கியதற்காக பணம் செலுத்த அப்துல் கலாம் முன்வந்தார். அப்போது, மிகுந்த உணர்ச்சி பெருக்கால் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, "ஐயா, தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள். இதற்கு மட்டும் எங்களால் கட்டணம் வாங்கவே முடியாது'' என்று ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டார்கள். இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

3 comments:

July 23, 2007 at 6:55 AM யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

"நல்லார் ஒருவர் உளரேனும் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை!!
மழை பெய்யுதது தானே!!!!

July 23, 2007 at 11:04 AM Santhosh said...

ம்ம் இவர் மனிதர். இவரை போன்றவர்களையும் விமர்சிக்கிறேன் பேர்விழிகள் கண்டதையும் கிறுக்கி இருந்தார்கள் தமிழ்மணத்தில் சில நாட்கள்..என்னான்னு சொல்லுறது அவங்களை?

July 23, 2007 at 2:29 PM வெட்டிப்பயல் said...

//சந்தோஷ் said...

ம்ம் இவர் மனிதர். இவரை போன்றவர்களையும் விமர்சிக்கிறேன் பேர்விழிகள் கண்டதையும் கிறுக்கி இருந்தார்கள் தமிழ்மணத்தில் சில நாட்கள்..என்னான்னு சொல்லுறது அவங்களை? //

அது எப்படி அவர் மட்டும் நல்லவரா இருக்கலாம்???