நான்கு வேதங்களில் எனக்கு எதுவும் தெரியாது.
எனக்குச் சமஸ்கிருதம் தெரியாது.
விநாயகனின் ஜென்ம நட்சத்திரம் தெரியுமா?
தெரியாது
இதுகூடத் தெரியாமல் கணபதி ஹோமம் நடத்தியுள்ளீர்களே?
மவுனம்.
இவையெல்லாம் ஏதோ கற்பனை உரையாடல் அல்ல!
திருக்கோயில்களில் முறைகேடுகள் குறித்து திருவாங்கூர் தேவஸ்தானம் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்துக்கான தலைவர் கே.எஸ். பரிபூரணன் என்னும் நீதிபதி.
அந்த நீதிபதி முன் ஆஜரானவர் யார் தெரியுமா? சபரிமலை அய்யப்பன் கோயிலில் பிரதான அர்ச்சகராகயிருந்த கண்டரரு மோகனருவி என்பவர்தாம்.நீதிபதி கேட்ட கேள்விக்கு வேதம் தெரியாது, சமஸ்கிருதம் தெரியாது, விநாயகனின் ஜென்ம நட்சத்திரம் தெரியாது. இப்படி எதற்கெடுத்தாலும் `தெரியாது தெரியாது’ என்று சொல்லியிருக்கிறார் சபரிமலை அய்யப்பனின் பிரதான மேல் சாந்தியாக (அர்ச்சகராக)யிருந்தவர்.
இந்த செய்தி கேரள மாநிலத்தில் ஆன்மீக வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதாக `மாலை முரசு’ ஏட்டில் (28.6.2007) செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும்கூட `கோயில் பூனைகள்’ என்ற அரிய நூலை கோவூர் கிழார் என்பார் எழுதியுள்ளார். கோயில்களில் புகுந்து கொண்டு இந்தப் பார்ப்பன வஞ்சகப் பூனைகள் எப்படியெல்லாம் கொள்ளை அடிக்கின்றன; அசிங்கப் படுத்தியிருக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்.
நடைபெற்ற வழக்குகள் குறுக்கு விசாரணைகளையெல்லாம் வண்டி வண்டியாக இறக்கத் தள்ளினார் அவர்.1960+ஆம் ஆண்டில் சர் சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது அந்த அறிக்கை 1962 இல் தாக்கல் செய்யப் பட்டது.
அதில் வண்டி வண்டியாக அல்ல; லாரி லாரியாகக் கொட்டித் தீர்த்தார் அய்யர். அறிக்கை கொடுத்தவர் அய்யர் இல்லாமல் வேறு யாராகயிருந்தால் அதற்கு உள் நோக்கம் கற்பித்து இருப்பார்கள். அறிக்கை கொடுத்தவரோ சர். சி.பி. இராமசாமி அய்யர் ஆயிற்றே! அதற்கு உள்நோக்கம் கற்பிக்க யாரால் முடியும்?
`இந்த அர்ச்சகர்கள் தற்குறிகளாக இல்லையென்றால் தப்பாகக் கற்றுக் கொண்டவர்களாகவேயிருக்கிறார்கள். எவ்வளவு அதிகமாகப் பணம் பெற முடியுமோ, அவ்வளவு பணம் பெற வேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே வேலை’’ என்று `சான்று’ கொடுத்திருக்கிறார்.அய்யர் கமிஷன் ஓரிடத்தில் கூறுகிறது.
கோயிலுக்குச் சொந்தமான மதிப் புயர்ந்த பொருள்களும், பிற சொத்துகளும் கோயில் நிர்வாகிகளின் நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் மார்க்கெட் நிலவர விலைக்கு மிகவும் குறைந்த விலையில் ஏன், பெயரளவில் ஏதோ ஒரு விலையை வாங்கிக் கொண்டு விற்பனை செய்யப் படுகின்றன. தங்க நகைகள் உள்பட சில மதிப்புயர்ந்தபொருள்கள் கோயிலில் இருந்து திருட்டுப் போய் விடுகின்றன. இப்படித் திருட்டுப் போன பொருள்கள் பின் னர் கோயில் நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட பெரிய புள்ளிகளிடம் இருந்து கண்டுபிடிக் கப்பட்டதாக இந்தப் புகார்கள் கூறுகின்றன.
பூரி ஜகன்னாதர் கோயில் மட்டுமல்ல; தேசத்தின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள முக்கியமான கோயில்கள் பலவற்றைப் பற்றியும் இத்தகைய புகார்கள் விஸ்தாரமாகவும், பகிரங்கமாகவும் சுமத்தப்பட்டிருக்கின்றன. அவமானத்துக்குரிய இந்தப் பட்டியலில் உலகில் அதிகார துஷ்பிரயோக வகையறாக்கள் எத்தனையுண்டோ அத்தனையும் இடம் பெற்றிருக்கின்றன.
நாதத்துவாரம் என்ற இடத்தில் உள்ள கோயிலின் பிரதம பூசாரி கோயில் நிதியிலிருந்து கூசாமல் ரூ.9 லட்சத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். துவாரகை கோயிலின் சீனியர் பூசாரி ஒருவர் கோயில் பணத்தில் இருந்து ரூ.11 ஆயிரத்தை எடுத்து பங்கு மார்க்கெட் வாய்தா பேரத்தில் ஈடுபடுத்தியிருக்கிறார்.
பம்பாயின் பாபுல் நாதர் கோயிலில் நேர்த்திக் கடனாக சமர்ப்பிக்கப்பட்ட சில நகைகள் சில தஸ்தாவேஜுகளில் காட்டப் பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த 40 வருட காலமாக லாப, நஷ்டக் கணக்கு அறிக்கை யில் இவைபற்றிப் பேச்சே இல்லை என்று கூறப்படுகிறது. இப்படி, இப்படி ஏராளம்! ஏராளம்!!
இன்னொரு இடத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
"நாங்கள் சோதித்துப் பார்த்தவற்றில் பெரும்பான்மையான விவகாரங்களில் தப்பு வழியில் பயன்படுத்துவது என்பது மிகவும் பச்சையான முறையில் நடத்தப்பட்டு இருந்தன. அதாவது, அதை மோசடி என்று கூறி விடலாம். கோயில்கள் மிகவும் கேவலமான முறையில் பராமரிக்கப்பட்டு இருந்தன. சாமியை எழுந்தருள செய்து கொண்டு வரும் ஆராதனை மண்டபம்கூட பல நாள்களுக்குச் சுத்தம் செய்யப்படாமல் கிடந்தன. திரிகால பூஜை பற்றிய கணக்கில் இதற்காகப் பெருந் தொகைகள் செலவிடப் பட்டதாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் இதுபற்றி நாங்கள் நடத்திய விசாரணையின் மூலம் தொடர்ந்து பல நாள்களுக்கு தினசரி ஒரு வேளை பூஜைகூட செய் யப்படவில்லை என்ற தகவல் வெளியாயிற்று!! என்று அய்யர் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பார்ப்பன அர்ச்சகர்களின் யோக்கியதை இந்த அளவுக்கு நாய் வைத்த விட்டையில் புழுத்த புழுவாக இருக்க பார்ப்பனர் அல்லாதரான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் அடேயப்பா பூமிக்கும் ஆகாயத்துக்கும் எவ்வளவுத் தாவு தாவுகிறார்கள்!எத்தனை எத்தனை ஆகமங்களை இழுத்துப் போட்டுக் காட்டுகிறார்கள்.
தமிழ்நாடு அரசு (கலைஞர் தலைமையிலான திமுக அரசு) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை நிறைவேற்றிய போது அதனை எதிர்த்து பன்னிரெண்டு பார்ப்பனர்கள் காஞ்சி சங்கராச்சாரியாரின் `ஆசியோடு’ ராஜகோபாலாச்சாரியாரின் சிபாரிசோடு (பிரபல வழக்கறிஞர் பல்கி வாலாவுக்குப் பரிந்துரை) உச்சநீதிமன்றம் சென்றனர்.
ஆகமங்களில் பல்கிவாலாவுக்குப் பரிந்துரை) உச்சநீதி மன்றம் சென்றனர். ஆகமங்களில் நிபுணர் என்று சொல்லிக் கொண்ட ஒரு பார்ப்பனர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு குறிப்பிட்ட சாமியினை வழிபடுவதற்குரிய சடங்குகளில் கெட்டிக்காரராக ஓர் அர்ச்சகர் இருப்பதோடு அக்குறிப்பிட்ட பிரிவினரை கோயிலில் அர்ச்சகராகக் கூடிய தகுதியுடன் கூடியவராக அவர் இருப்பதோடு, ஆகமவாதிகள் கூறுகிறபடி, அக்குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவராகவும் அவர் இருத்தல் அவசியம் என்பது தெளிவாய்த் தெரிவிக்கப் படுகிறது’’ என்று உருகுகிறார்.
உச்சநீதிமன்ற நீதிபதி தம் தீர்ப்பில் கூறுகிறார்.
"மத நம்பிக்கையின் மிக முக்கிய சாரம், எந்த சந்தர்ப்பத்திலும் சாமி விக்கிரகம் தீட்டுப்படுவதோ, அசுத்தப் படுவதோ கூடாது என்பதேயாகும். எனவே அர்ச்சகர்கள் கோயில் வழிபாட்டில் மிக முக்கியமானதொரு இடத்தைப் பெற்றுள்ளார்கள்!’’ என்று எழுதுகிறார் நீதிபதி.
குறிப்பிட்டவர்கள் தான் அர்ச்சகர்களாக இருந்தார்கள். அவர்கள் யோக்கியதை எப்படிப் எப்படியிருக்கிறது என்பதை அய்யர் கமிஷன்தான் விலாவாரியாகத் திரட்டித் தந்துள்ளதே! அந்தக் கேவலமான அர்ச்சகர்கள் தொட்டால் அப்பொழுது மட்டும் சாமி தீட்டாகி விடாது; காரணம் அவர்கள் பிர்மாவின் நெற்றியில் பிறந்த `பிராமணர்கள்’ ஆயிற்றே!
சாமி விக்ரகத்தை சூத்திரர்கள் தொட்டால் சாமி தீட்டாகி விடும். நூற்றியெட்டு கவசங்களை வைத்து, பிம்பங்களுக்கு சம்ப்ரோட்சணம் செய்யப்பட வேண்டும்; தொடர்ந்து மஹா சாந்தி ஹோமமும், பிராமண போஜனமும் செய்யப்பட வேண்டும் என்று வைகனாச ஆகமம் கூறுவதாகப் பீற்றிக் கொள்கிறார்களே ஒழுக்கம் கெட்ட ஆகமம் எதுவும் தெரியாத சமஸ்கிருதமும் அறியாத வேதங்களும் படிக்காத பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக இருக்கலாம்; மற்றவர்கள் அர்ச்சகர்க்குரிய பயிற்சியைப் பெற்றாலும் அர்ச்சராகக் கூடாதா?
ராத்திரி பூராவும் மாமா வேலை செய்து விட்டு காலை-யில் குளிக்காமல் கோயிலுக்குள் செல்லும் பார்ப்பனர்-கள்பற்றி பகிரங்கமாக வட்சோப லட்ச மக்கள் கூட்டத்தில் தோலுரித்துக் காட்டியதை நாடு மறந்து விடுமா?
குஜராத்தில் சுவாமி நாராயணன் கோயில் அர்ச்சகர்கள் கோயிலுக்குள்ளேயே விபச்சாரம் நடத்திய லீலைகள் நிர்வாண படங்கள் ஏடுகளில் வெளி வந்தனவே!இந்த யோக்கியர்கள் தொட்டால் மட்டும் சாமி தீட்டாகி விடாதாம்.
திருவாளர் `சோ’ ராமசாமிக்கு ஒரே ஒரு நறுக்குக் கேள்வி.
தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு பற்றி `மொழி ஆர்வமா? மதத்துவேஷமா? என்று `துக்ளக்’கில் (18.11.1998) தலையங்கம் தீட்டினார்.
"நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும், அருள் இருக்காது. ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும், புனிதம் இருக்காது. அதாவது இங்கு முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு!!" என்று எழுதினாரே அவரை நோக்கி நாக்கைப் பிடுங்கிற மாதிரி ஒரு கேள்வி.
சபரிமலை அய்யப்பன் கோயில் தலைமை மேல் சாந்தி (அர்ச்சகர்) தனக்குச் சமஸ்கிருதம் தெரியாது என்று கூறியிருக்கிறாரே சமஸ்கிருதம் தெரியாத ஒரு ஆள் சமஸ்கிருத துதிகளைக் கூறினால் அந்த ஒலி மிக மிக சுத்தமாக அட்சரம் பிறழாமல் பிரகாசிக்குமோ! அறிவு நாணயத்தோடு பதில் கூறுவாரா திருவாளர் `சோ’ ராமசாமி?
இந்தக் கண்டரரு மோகனரு என்ற அர்ச்சகர் பார்ப்பனரின் லீலைகள் கொஞ்ச காலத்திற்கு முன் சந்தி சிரிக்கவில்லையா!
இப்படிப்பட்ட ஆசாமிகள் தொட்டால் தீட்டுப் படாத அய்யப்பன், ஜெயமாலா என்ற ஒரு பெண் தொட்டால் மட்டும் தீட்டாகி விடுவாரா?
பக்தி ஒழுக்கம் எந்தக் கதியில் இருக்கிறது?
இதற்கு ஆராய்ச்சி தேவையா? கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?
கண்டரருமோகனரு பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருந்த பம்மாத்தை தனக்குத்தானே உடைத்துக் காட்டி விட்டார். இதற்கு மேலும் பார்ப்பனர்கள் எழுந்து குதிக்க முடியவே முடியாது.
தரவு- விடுதலை
0 comments:
Post a Comment