இந்த அமைப்பு கோடீஸ்வரர் பெர்னார்ட் வெப்பர் என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். கடந்த 2001ம் ஆண்டு முதல் புதிய உலக அதிசயங்களை தேர்ந்தெடுக்கும் ஓட்டெடுப்பு இன்டெர்நெட், தொலைபேசி. எஸ்எம்.எஸ் மூலம் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் நிபுணர் குழு புதிய 7 உலக அதிசயங்களை தேர்ந்தெடுத்து அறிவித்தது. உலகெங்கிலும் உள்ள 20 அதிசயங்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன.
கடந்த பல மாதங்களாக உலக அதிசயங்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இரவுடன் வாக்கெடுப்பு முடிவடைந்தது. இதுவரை மொத்தம் 9 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 7 உலக அதிசயங்களின் பட்டியல்போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் அறிவிக்கப்பட்டது. அனைத்து இந்திய மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த தாஜ்மஹால் 7 அதிசயங்களில் ஒன்றாக இடம் பெற்றது. *
1. சீனபெருஞ்சுவர்
2. பெட்ரா ( ஜோர்டான் )
3. கிறிஸ்துடிரீமர் ( பிரேசில்)
4. மாச்சுபிச்சு( பெரு) ,
5. கிசென்இட்சா ( மெக்சிகோ)
6. கொலாசியம் ( இத்தாலி)
7. தாஜ்மகால்
4 comments:
வாவ்!..பட்ட பாடுக்கு கடைசியில் தாஜ்மஹாலும் சேர்ந்து
விட்டதே!..
இந்த வாக்கெடுப்பெல்லாம் பொய் என்று சொன்னவர்களின்
யூகங்கள் எல்லாம் பொய்த்துப் போனதே!..
ஸ்வீட் செய்திக்கு நன்றி...
மகிழ்ச்சியோ...மகிழ்ச்சி.என்னோட ஓட்டின் தசம விழுக்காடும் இதில் சேர்த்தி.
அண்ணே இது எல்லாம் பிராடு வேலை.. சும்மா காசு பாக்க இவனுங்க விட்ட பீலா.. இதை பத்தி இங்க எழுதி இருக்கேன் பாருங்க .
Post a Comment