கடந்த 18ஆம் தேதி, இரவு 8 மணியளவில், சேலம், பழைய பஸ் நிலையம் பகுதியில் டூட்டி பார்த்துக் கொண்டிருந்த பெண் போலீஸ் சசிகலாவிடம்... டிப் டாப்பாக உடையணிந்த வாலிபர் ஒருவர் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடி வந்தார். "நான் அண்ணா சிலை அருகே வரும்போது நான்கு அரவாணிகள் நின்று என்னை விபச்சாரத்திற்கு அழைத்தனர்.
நான் மறுத்து, "வரவில்லை' என்றேன். அதனால் என்னைத் தாறுமாறாக திட்டி அடிக்க வருகிறார்கள். நான் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்ததே பெரும்பாடாப் போச்சு... நீங்க வந்து அவங்களை விசாரிங்க...' என்று மிரட்சியுடன் புகார் கூறினார்.
இதைத் தொடர்ந்து சசிகலா, சக போலீஸ் தீபாவை அழைத்துகொண்டு சிலையருகே சென்று பார்த்துள்ளார். அங்கே 4 அரவாணிகள் ஃபுல் மப்பில் இருக்க அவர்களிடம், "ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று கேட்டுள்ளார். அதற்கு, "நீயும் எங்களை மாதிரி பொம்பளதானே... உனக்கு வேலை கிடைச்சி போயிட்ட...
நாங்க இங்கே வவுத்துக்காக கஷ்டப்படுறோம்' என்று நால்வரும் கோரஸôக தத்துவம் பேசியுள்ளனர். இதையடுத்து சசிகலாவுக்கும் அரவாணிகளுக்கும் நடந்த வாக்குவாதத்தில் டென்ஷனான அரவாணிகள் சசி கலாவை ஓட ஓட அடித்துத் துரத்தினர். இதைப் பார்த்து அதிர்ந்து போன புகார் கொடுத்த வாலிபர் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.
தலைதெறிக்க சசிகலா ஓடினாலும் அரவாணிகள் துரத்திப் பிடித்து சூழ்ந்து அடித்து உதைத்துள்ளனர். அதைப் பார்த்த பொதுமக்கள் சிலரும், கடை வீதியில் ஹோட்டல் வைத்திருப்பவர்கள் சிலரும் அரவாணிகளிடம் இருந்து சசிகலாவை காப்பாற்றி உள்ளனர்.
இப்படி பெண் போலீஸ் தாக்கப்பட்ட தகவல் போலீஸ் உதவி ஆணையாளர் பிலிப் தாமஸுக்கு தெரிவிக்கப்பட அவர் போலீஸôருடன் விரைந்து வந்தார். பிறகு நான்கு அரவாணிகளையும் கைது செய்து, டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்தத் தகவல் பத்திரிகையாளர்களுக்கும் தெரியவர அவர்கள் டவுன் ஸ்டேஷனுக்கு படை எடுத்தனர்.
ஆனால் அங்கே, ""எங்களை வெளியே விட மாட்டீர்களா?'' என்று போலீஸாரிடம் கேள்வி எழுப்பியபடியே அரவாணிகள் நான்கு பேரும் கேபரே டான்ஸ் போல தாங்கள் அணிந்திருந்த சேலை, உள்ளாடை உள்ளிட்டவைகளை ஒவ்வொன்றாகக் கழட்டி எறிய பார்த்துக் கொண்டிருந்த போலீஸôர் வெலவெலத்துப் போயினர்.
ஒருகட்டத்தில் அரவாணிகள் முழு ஆடைகளையும் கலைந்து நிர்வாண கோலத்துக்குப் போக அதைப் பார்த்த போலீஸார் தர்ம சங்கடத்தோடு தலைகுனிந்த படியே வெளியேறினர். போலீஸôர் வெளியே சென்றவுடன் ஆடைகளை எடுத்து உடுத்திக் கொண்ட அரவாணிகள், "எங்களை வெளியே விடுங்கள்' என்று போலீஸாருக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அதை பத்திரிகை ஃபோட்டோகிராஃபர்கள் படம் எடுத்தனர்.
நாம் அரவாணிகள் பகீரூட்டும்படி இப்படி நடந்து கொண்டது குறித்து அரவாணிகள் ஜமாத் தலைவி கைலாசத்தை சந்தித்துப் பேசினோம்.
""கமலி, நித்யா, ரம்யா, ராதா என்ற இவர்கள் குகை பகுதியைச் சேர்ந்த அரவாணிகள். சேலம் மாவட்டத்தில் 3700 அரவாணிகள் இருக்கின்றனர். ஆனால் யாரும் இதுபோல தரக்குறைவாக நடந்து கொண்டதில்லை. தவறு செய்த அரவாணிகள் மீது போலீஸôர் எந்த வித நடவடிக்கை எடுத்தாலும் அரவாணிகள் சங்கம் எதிர்ப்பு காட்டாது.
அவர்களுக்கு அரசு தரும் தண்டனையுடன் ஜமாத் சார்பிலும் தண்டனை அளிக்கப்படும். அது பொதுமக்களும் ,அரசும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கும். அந்த நான்கு அரவாணிகளின் நெற்றியில் சூடு செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து சுடும் தண்டனையாகவும் அது இருக்கலாம். சிறையில் இருந்து விடுதலையாகி வந்தபின் ,தாக்கப்பட்ட பெண் போலீஸின் காலில் விழுந்து அவர்கள் மன்னிப்பு கேட்கும் தண்டனையும் உண்டு'' என்றார் சீரியஸôக.
அரவாணிகள் சங்கத் தலைவி சுமதியோ வேறு விதமாக வருத்தப்பட்டார்.
"பெண் போலீஸ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு வேதனைப்படுகிறோம். இனிமேல் தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. இதற்காக 24 மாவட்ட அரவாணிகள் சங்கமும் வருத்தம் தெரிவிக்கிறது. சில அரவாணிகள் செய்த தவறுக்காக மற்ற அப்பாவி அரவாணிகளை போலீஸார் பழி வாங்கக் கூடாது. தவறு செய்த நால்வரையும் ஒரு ஆண்டு ஊரை விட்டு விலக்கி வைக்கிறோம்'' என்றார்.
இந்நிலையில் போலீஸ் தரப்பில், அரவாணிகள் நான்கு பேர் மீதும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல், தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து அவர்களை ஜூலை 3-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் சேலம் போலீஸôருக்கு தலை வலி போய் திருகு வலி வந்த கதையாக, "கைது செய்யப்பட்ட அரவாணிகளை ஆண்கள் சிறையில் அடைப்பதா? பெண்கள் சிறையில் அடைப்பதா?' என்ற குழப்பம் ஏற்பட்டது. மத்திய சிறையில் ஆண்கள் உள்ளதால் அங்கே அரவாணிகளை அடைக்க சிறை நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை.
அதேபோல பெண்கள் சிறையிலும் அடைக்க அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நீண்ட யோசனை செய்து, ""மத்திய சிறை, பெண்கள் சிறை இரண்டிலும் இடப்பற்றாக்குறை உள்ளது'' என்று எழுதி வாங்கிகொண்ட போலீஸôர், நான்கு அரவாணிகளையும் அழைத்துக் கொண்டு ஒரு வழியாக வேலூர் சிறைக்குச் சென்றனர்.
வசீகரன்
(தரவு-தமிழன் எக்ஸ்ப்ரஸ்)
4 comments:
ஹ்ம்ம்...விழிப்புணர்வும் கல்வியும் ரெண்டு பக்கமும் தேவை என்று எடுத்து சொல்லும் நிகழ்வு...
செய்தி வந்து 12 நாள் கழித்து எடுத்து போட காரணம் நிச்சயமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
அந்த அரவாணிகளின் தைரியத்திற்கும் அவர்களின் கலகத்திற்கும் எனது பாராட்டுக்கள்! அரவாணிகளின் ஜமாத்தே (சமக நிர்பத்தங்களினால்), 'இதுவரை அரவாணிகள் மீது நடந்த வன்முறைகள் அத்துமீறல்களை விட இது என்ன பெரிய விஷயம்?' என்று ஒரு பேச்சுக்காக கூட கேட்க இயலாத நிலையில் இதையாவது சொல்லி வைக்க வேண்டியுள்ளது.
//செய்தி வந்து 12 நாள் கழித்து எடுத்து போட காரணம் நிச்சயமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
//
செய்தி வாரப்பத்திரிகை ஒன்றில் வந்திருப்பதால் இந்த தாமதம் என்று நினைக்கிறேன்.
ஏய்யா...என்னென்னவோ இடவொதுக்கீடு அதுஇதுன்னு பொலம்புறோமே...அதுல கொஞ்சத்த இவங்களுக்கும் குடுத்திருந்தா இந்தப் பிரச்சனையே வந்திருக்காதுன்னு நெனைக்கிறேன்.
இனிமே என்ன செய்யனும் தெரியுமா? ஆம்பிளைகள் அத்துமீறல்....பெண்களில் கொலை முயற்சி அப்படீன்னுதான் தலைப்புப் போடனும்.
அந்தப் பெண்கள் செய்தது தவறு என்பதில் மறுப்பேதும் இல்லை. ஆனால் நம்முடைய அணுகுமுறையும் மாறவேண்டியிருக்கிறது. i feel itz high time government does something and public changes itz perception on them.
Post a Comment