ஜீவாவின் வீட்டில் முன்னணி நடிகர்கள்

உடலை பார்க்க கண்ணீருடன் காத்திருக்கும் திரையுலகம்!



தமிழ் திரையுலகத்தையே உலுக்கி போட்டிருக்கிறது ஒளிப்பதிவாளாரும், இயக்குனருமான ஜீவாவின் மரணம். அவரது உடல் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு வர இரண்டு நாட்கள் ஆகும் என்ற நிலையில் தமிழ் திரையுலக முக்கிய பிரமுகர்கள் அவரது வீட்டிற்கு சென்று ஜீவாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். செய்தி கேள்விப்பட்ட உடன் விஜய் சென்று தனது துக்கத்தை வெளிப்படுத்தினார்.

ஜீவாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்யாவும், ஷாமும் தொடர்ந்து அவரது வீட்டிலேயே இருந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் விக்ரமின் நெருங்கிய நண்பராம் ஜீவா. செய்தி வந்த நிமிடத்திலிருந்து தொடர்ந்து அவரது வீட்டிலேயே இருக்கிறார் விக்ரம்.

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் ஜீவாவின் உடலை சென்னை கொண்டு வரவும், இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். லண்டனிலிருந்து தாம் தூம் பட யூனிட்டை சேர்ந்த யாரும் இன்னும் சென்னை வரவில்லை.

4 comments:

June 28, 2007 at 7:01 PM காட்டாறு said...

சிறு வயதில் மாரடைப்பு... ம்ம்ம்.. என்னவென்று சொல்லுவது....

June 28, 2007 at 8:23 PM உண்மை said...

இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியதால் எங்கள் துக்ளக் சோ சார் போகவில்லை!

June 29, 2007 at 11:50 AM தமிழன் said...

புதிய த்மிழ்த் திரைப்பட நெறியாள்கையாளர்களில் ஜீவா ஒரு ஒளிவீசிய மாணிக்கம்,
அவர் பேசியதை விட அவருடைய திறமை பேசியது மிகமிக அதிகம்.
வெளிநாட்டுப்படங்களுக்கு இணையாக அவருடைய திறமை ஒளிவீசியது.
தமிழ்த்திரையுலகத்திற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு.
என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை அவருடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்கின்றேன்.

June 29, 2007 at 12:08 PM சோமி said...

இம்...நானும் இன்று அவரி வீட்டிற்க்கு சென்று இறுதி நிகழ்வில் கலந்துகொண்டேன். ஒரு நல்ல ஒளிப்பதிவாளன் இயக்குனர்....இப்படி பாதிவழியில் போகவேண்டியனது. வாழ்கையெபது இப்படி யாகிபொவதே..சே ..என்ன வாழ்க்கையிது..என்று இயக்குனர் ஒருவர் சொன்னது எனகருகில் கேட்டது..ம் ..வாழ்கயெபது எம் தீர்மானங்களில் இருந்து வெகுதூரத்தில் உள்ளது.