மாரடைப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோய் மருந்துகள்...தடை விதிக்க இந்தியா பரிசீலனை
சர்க்கரை நோய்க்குப் பயன்படுத்தும் இரண்டு மருந்துகள் மாரடைப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதையடுத்து, அந்த மருந்துகளுக்குத் தடை விதிப்பது பற்றி இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.
சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடு இந்தியா; இந்நோயாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டியுள்ளது. அவற்றில் இரண்டு மருந்துகள் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை 43 சதவிகிதம் அதிகரிப்பதாக அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘அவண்டியா’, ‘ஆக்டோஸ்’ ஆகிய மருந்துகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
இதையடுத்து ‘வின்டியா’, ‘பிளோக்ளார்’ என்ற பெயர்களில் இந்தியாவில் விற்கப்படும் அம் மருந்துகளுக்குத் தடை விதிப்பது பற்றி இந்தியா பரிசீலித்து வருவதாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் எம்.வெங்கடேசன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது:
‘வின்டியா’, ‘பிளோக்ளார்’ மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். டில்லி, மும்பை உள்ளிட்ட 5 நகரங்களில் இந்த ஆய்வுகள் நடக்கின்றன. முதல் கட்ட முடிவுகள் இன்னும் 6 மாதத்தில் வெளியாகும். அதில், இந்த மருந்துகளால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது மெய்ப்பிக்கப்பட்டால், இந்த மருந்துகளை இந்தியாவில் விற்கத் தடை விதிக்கப்படும் என அவர் கூறினார்.
0 comments:
Post a Comment