வருகிறது பிளாஸ்டிக் ரூபாய்:ரிசர்வ் பாங்க் திட்டம்

பேப்பர் ரூபாய் நோட்டுக்கு பதில் பிளாஸ்டிக் ரூபாய்களை வெளியிட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் திட்டமிட்டுள்ளது.தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் ஒரு சில ஆண்டுகளில் சிதைந்து விடுகின்றன. மேலும், கள்ளநோட்டு புழக்கமும் அதிகரித்துள்ளது.
இது போன்ற சிக்கல்களை தவிர்க்க "பாலிமர்" பிளாஸ்டிக் பேப்பரில் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது பற்றி ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றன. இது எளிதில் கிழியாது, தண்ணீரில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ருமேனியா, பிரேசில் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பிளாஸ்டிக் கரன்சிகள் உபயோகத்தில் உள்ளன.
இதேபோல் இந்தியாவிலும் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் வெளி வரவிருக்கிறது. சோதனை முயற்சியாக 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் முதலில் புழக்கத்தில் விடப்படும். பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் சிறப்பு தொழில்நுட்பத்தில் தயாராவதால் அதே போல் கள்ளநோட்டுகளை தயாரிக்க முடியாது. மெக்சிகோவில் புழக்கத்தில் உள்ள பாலிமர் டெக்னாலஜி ரூபாய் நோட்டில், ஸ்டாம்ப் அளவிற்கு ஜன்னல் போன்ற டிசைன் உள்ளது. இதை போலியாக அச்சிடுவது மிகவும் சிரமமாம்.

1 comments:

June 30, 2007 at 7:44 AM மங்கை said...

அப்ப ஷ்ர்ட்/பாண்ட்ல இருக்குற பணத்த நாங்க 'தெரியாம..பார்க்காம' துவைக்க போட்டுட்டாலும் பிரச்சனை இல்லை....சீக்கிரம் வரட்டும்...:-))