தமிழகத்தில் 10 சதவிகித தம்பதிகளுக்கு குழந்தை இல்லை: சுகாதார செயலாளர் தகவல்.
தமிழகத்தில் புகை பிடித்தல் உள்பட பல் வேறு காரணங்களால் 10 சதவிகித தம்பதியினருக்கு குழந்தையின்மை பிரச்சினை உள்ளது என சுகாதாரத் துறைச் செயலாளர் வி.கே. சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை - வடபழநியில் உள்ள ஆகாஷ் குழந்தை யின்மை சிறப்பு சிகிச்சை மையம் ஏற்பாடு செய்திருந்த தேசிய குழந்தையின்மை சிகிச்சை மாநாட்டை ஜூன் 24 அன்று தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
உலக சுகாதார நிறுவனத் தின் அறிக்கையின்படி 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களில் 15 சதவிகித சிறுவர்களுக்கும், 7 சதவிகித சிறுமிகளுக்கும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. உலகில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் புதிதாக புகை பிடிக்க ஆரம்பிக்கின்றனர். ஆண்மைக் குறைவுக்கு புகை பிடிக்கும் பழக்கம் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.
புகை பிடித்தல், சுற்றுச் சூழல் மாசு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் 10 சதவிகித தம்பதியினருக்கு குழந்தையின்மைப் பிரச்சினை உள்ளது. குறிப்பாக கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இது அதிகமாக உள்ளது. இதற்கான காரணம் தெரிய வில்லை.
குழந்தையின்மைப் பிரச்சினையைப் பொறுத்தவரை மூடநம்பிக்கைகள் அதிக அளவுக்கு உள்ளன. இதுபோன்ற மருத்துவ மாநாடுகளை தமிழகம் முழுவதும் நடத்தி பொது மக்களிடையே குழந்தையின் மைப் பிரச்சினைக்கான காரணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
2 comments:
அதிர்ச்சியாத்தான் இருக்குது! இப்போ தான் Children of Men படம் வேறு பார்த்தேன்.
அது சரிங்க அண்ணாச்சி.... இப்பிடி மிளகாய்ன்னு காரமா ஆரம்பிச்சிட்டீகளே! எப்படி ஓஷோ வருவாரு?
வநததுக்கும் வாழ்த்துக்கும் நன்றி...காட்டாறு.
ஓஷோ எங்க போய்டப்போறாரு எளுதீருவோம்....
Post a Comment