நாட்டியமேதை சித்ராவின் கணவர் மரணம்

பிரபல நாட்டிய மேதை சித்ராவின் கணவர் விஸ்வேஸ்வரன் மரணம்.



பிரபல பரத நாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனின் கணவர் விஸ்வேஸ்வரன் காலமானார். அவருக்கு வயது 60.

காஷ்மீரி சந்தூர் என்ற இசைக் கருவி, சரஸ்வதி வீணை, சிதார் போன்ற பல இசைக் கருவிகள் வாசித்து இசை உலகில் புகழ் பெற்றவர் ஆர்.விஸ்வேஸ்வரன். அவரது மனைவி சித்ரா விஸ்வேஸ்வரன் உலகப்புகழ் பெற்ற பரதநாட்டிய கலைஞர். சித்ரா விஸ்வேஸ்வரனின் பரதநாட்டியத்திற்கு ஏற்ற கர்னாடக இசைப் பாடல்களை பாடுவதில் விஸ்வேஸ்வரன் வல்லவர்.

சித்ரா விஸ்வேஸ்வரனுடன் சேர்ந்து உலக நாடுகள் முழுவதற்கும் போய் பக்க வாத்திய இசை வாசித்து திரும்பியவர்.

கர்னாடக சங்கீத மேதை ஜி.என். பாலசுப்பிரமணியத்தின் மருமகன் விஸ்வேஸ்வரன். ஜி.என்.பி.யின் மாணவர். தஞ்சாவூர் எஸ். கல்யாணராமனிடம் சங்கீதம் படித்த ராஜேஸ்வரி ரங்கநாதனின் மகன் விஸ்வேஸ்வரன். இவர் ஆடிட்டர் வேலைக்கு செல்ல சி.ஏ. படித்தவர். பிறகு முழு நேர இசைக் கலைஞராக மாறி விட்டவர். இந்தி இசையமைப்பாளர்கள் ஆர்.டி. பர்மன், லட்சுமி காந்த் பியாரிலால் ஆகியோருக்கு இசைக் கருவிகள் வாசித்தவர் விஸ்வேஸ்வரன்.

6 comments:

June 29, 2007 at 7:11 AM மங்கை said...

அவரது இல்லத்தார்க்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள்

June 29, 2007 at 7:27 AM Sridhar Narayanan said...

திரு விஷ்வேஷ்வரனும், திருமதி சித்ராவும் தங்களை முழுமையாக கலைக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்கள். தங்கள் கலை சேவைக்கு இடையூறாக குடும்ப வாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காக குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்ததாக ஒரு பேட்டியில் படித்தேன்..

திருமதி சித்ராவிற்க்கு இது மிகப் பெரும் துக்கம்தான்.

அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

June 29, 2007 at 7:50 AM Sud Gopal said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

He was seen in velli thirai as the Prime minister in "Unnal mudiyum thambi".

June 29, 2007 at 12:34 PM யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுமார் 15 வருடங்களுக்கு முன் இவர்கள் நிகழ்ச்சியைப் பாரிசில் பார்த்தேன். மிக்க ஈடுபாடும் திறமையும் உள்ளவர்கள்.
அன்னார் ஆத்மா சாந்தியும்,சித்ரா
அம்மாவுக்கு மனவமைதியும் கிட்டட்டும்.

June 29, 2007 at 3:10 PM துளசி கோபால் said...

அடடா.......... இந்த டிசம்பர் சீஸனில் கூட அவுங்க
ரெண்டுபேரையும் பார்த்தேனே.

சித்ராவிற்கு என் மனமார்ந்த அனுதாபங்கள். இந்த துக்கத்தைத் தாங்கும்
மனோதிடத்தை அவுங்களுக்கு அளிக்கணுமுன்னு ஆண்டவனை வேண்டுகின்றோம்.

திரு.விஸ்வேஸ்வரனின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறோம்.

June 29, 2007 at 11:49 PM வல்லிசிம்ஹன் said...

அழகான தம்பதிகள்.ஜயா டிவியில் அவரின் அமைதியான பேட்டி பார்த்திருக்கிறேன்.

திருமதி சித்ராவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.