"வாழ்க்கை ஒரு ரயில்வே பிளாட்பாரம்' - லாலு

உலக வாழ்க்கை என்பது ரயில்வே பிளாட்பாரம் போன்றது. ஒரு ரயிலில் வருபவர் மற்றொரு ரயிலில் போய்த்தான் ஆக வேண்டும்' என்று தத்துவம் பேசி மெய்சிலிர்க்க வைத்தார் மத்திய அமைச்சர் லாலு பிரசாத்.

யோகா குரு ராம்தேவ் தலைமையிலான புத்தக வெளியீட்டு விழாவில் செவ்வாய்க்கிழமை லாலு கலந்து கொண்டார்.

வாழ்க்கையில் அனைவருக்குமே நோய்கள் வரும் என்பது இயற்கைக்கு முன்பே தெரியும். இதற்காகவே தில்லி முழுவதும் நாவல் மரங்கள் நிறைந்திருக்கின்றன. வயிறுமுட்ட நாவல் பழங்களைச் சாப்பிட்டால் நோயே வராது. தில்லியில் உள்ள வேப்ப மரத்தில் துர்காதேவி குடியிருப்பதாக நம்பப்படுகிறது. சமைப்பதற்காக வீடுளில் குக்கர்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

முறையற்ற வாழ்விலிருந்து முறையான வாழ்க்கைக்கு மாறுவதற்கு செலவில்லாத, வலியில்லா வழி யோகாசனம்தான். எங்கள் ஊரில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் சிறுநீர் அல்லது எலுமிச்சையைப் பயன்படுத்தி எளிதாகக் குணமாக்குவார்கள். குரு ராம்தேவ் தனது எல்லா மருத்துவ ரகசியங்களையும் வெளியிட்டுவிடக் கூடாது. தனது மருந்து தயாரிப்பு நிலையங்களுக்குள் நம்பிக்கைக்கு உரியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், அந்த ரகசியங்களைத் தெரிந்துகொண்டு சிலர் பணம் சம்பாதித்துவிடுவர் என்றார் லாலு.

2 comments:

June 27, 2007 at 7:02 AM பொன்ஸ்~~Poorna said...

CAP technology என்றால் என்ன? அது பற்றி ஒரு பதிவு ப்ளீஸ்..

June 27, 2007 at 7:11 AM பங்காளி... said...

பொன்ஸ் எல்லாந் தெரிஞ்சுட்டே இப்படி கேக்றது கொஞ்சம் ஓவரா இல்லை...ஹி..ஹி..

நாம பண்ற Cut and Paste...a..கொஞ்சம் மருவாதியா படங்காட்டியிருக்கேன் அவ்ளோதான்...ஹி..ஹி