பிரசாந்த் தான் எனது முதல் கணவர் - கிரகலட்சுமி

வேணுபிரசாத்தை நான் திருமணம் செய்யவில்லை'
கிரகலட்சுமி வாக்குமூலம்.



நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமி நேற்று சென்னை மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி 2 மணி நேரம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் `நடிகர் பிரசாந்த் தான் எனது முதல் கணவர் என்றும், வேணுபிரசாத்தை திருமணம் செய்யவில்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமி சென்னை ஐகோர்ட்டு கொடுத்துள்ள முன்ஜாமீன் நிபந்தனைபடி நேற்று காலை 10.30 மணியளவில் சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். இன்ஸ்பெக்டர் சரஸ்வதி முன்னிலையில் கிரகலட்சுமி கையெழுத்து போட்டார்.

பின்னர் கிரகலட்சுமியிடம், இன்ஸ்பெக்டர் சரஸ்வதி விசாரணை நடத்தினார். நடிகர் பிரசாந்தை திருமணம் செய்வதற்கு முன்பு நீங்கள் நாராயணன் வேணுபிரசாத்தை காதலித்தீர்களா? அவரை ரகசிய பதிவு திருமணம் செய்தீர்களா? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கிரகலட்சுமியிடம் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி கேட்டார். கேள்விகளுக்கு பதிலளித்து கிரகலட்சுமி கொடுத்த வாக்குமூல விவரம் வருமாறு:-

எனது தந்தை பெயர் தனசேகரன். தாயார் பெயர் சிவகாமுசுந்தரி. எனக்கு 2 அண்ணன்கள் உள்ளனர். நான் வீட்டுக்கு ஒரே பெண் பிள்ளை. இதனால் என் பெற்றோர் என்னை செல்லமாக வளர்த்தனர். நான் தொடக்க கல்வி முதல் உயர்நிலை பள்ளி கல்வி வரை சென்னை அடையாறில் உள்ள `கான்வென்ட்' பள்ளி ஒன்றில் படித்தேன். அதன்பிறகு பி.ஏ. பொருளாதார பட்டப்படிப்பை சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் படித்தேன்.

கல்லூரியில் என்னுடன் ஒன்றாக படித்த தோழிகள் இருவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புத்தக கடை ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்தனர். அவ்வாறு வேலை பார்க்கும்போது நாராயணன் வேணுபிரசாத் எனது தோழிகளுக்கு பழக்கமாகி உள்ளார். எனது தோழிகள் மூலம் நாராயணன் வேணுபிரசாத் எனக்கு அறிமுகமானார்.

நான் அவரை காதலிக்கவும் இல்லை. அவர் என்னை காதலிப்பதாக சொல்லவும் இல்லை. தோழிகளை பார்க்க வரும்போது நானும் அவரை பார்த்து இருக்கிறேன். அவரது அக்கா கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்தார். அவர் எனக்கு படிப்பிற்கு உதவி புரிந்துள்ளார்.

தோழிகள் மூலமாக நாராயணன் வேணுபிரசாத்தை நான் சந்தித்து பேசியுள்ளேன். இந்த பழக்கத்தை வைத்து அவர் என்னை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, ஒரு நாள் திடீரென்று அவர் என் வீட்டிற்கு வந்து எனது தந்தையை சந்தித்து பெண் கேட்டார்.

எனது தந்தையோ `உங்கள் பெற்றோரை அழைத்து வாருங்கள்' என்று நாராயணன் வேணுபிரசாத்தை திருப்பி அனுப்பிவிட்டார். அதன்பிறகு நாராயணன் வேணுபிரசாத் என்னை பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை. நான் அவரை பதிவு திருமணம் செய்து கொண்டதாக சொல்லியிருப்பதும் தவறானது.

நாராயணன் வேணுபிரசாத்தை நான் ரகசிய பதிவு திருமணம் செய்து கொண்டதாக சொல்லி பிரசாந்த் திருமண பதிவு சான்றிதழ் நகல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள என் கையெழுத்து போலியான கையெழுத்தாகும். நடிகர் பிரசாந்த் தான் என்னுடைய முதல் கணவர். என் மீது களங்கம் கற்பிப்பதற்காக வேணுபிரசாத்தை தூண்டிவிட்டு நான் அவரை திருமணம் செய்ததாக கதை சொல்ல வைத்துள்ளனர். கோர்ட்டில் எல்லா விவரங்களும் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு கிரகலட்சுமி தனது வாக்குமூலத்தில் கூறியிருந்ததாக தெரிகிறது.

கிரகலட்சுமி போலீஸ் நிலையத்திற்கு வந்தபோது அவரது தந்தையும் உடன் வந்திருந்தார். கிரகலட்சுமி வாக்குமூலம் அளித்தபோது அந்த காட்சி வீடியோ படமாக்கப்பட்டது. கிரகலட்சுமியின் வாக்குமூலத்தை போலீசார் எழுத்து மூலமாக பதிவு செய்து, பின்னர் கிரகலட்சுமியிடம் படித்து காண்பித்து அதில் கிரகலட்சுமியின் கையெழுத்தையும் வாங்கினார்கள்.

வேணுபிரசாத்துடன் திருமணம் நடக்கவில்லை என்றும், திருமணம் நடந்ததாக வெளியாகியுள்ள பதிவு திருமண நகல் போலியானது என்றும் கிரகலட்சுமி போலீசாரிடம் உறுதியாக கூறிவிட்டார். எனவே நடிகர் பிரசாந்த் கொடுத்த திருமண சான்றிதழ் நகலில் உள்ள கிரகலட்சுமியின் கையெழுத்து உண்மையானதா? என்பதை தடய அறிவியல் துறை மூலம் கண்டறிய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

1 comments:

July 7, 2007 at 5:06 AM யாரோ said...

கிரகலட்சுமி சரியான ஏமாற்றுப் பேர்வழி. சத்தியமாக அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. பிரசாந்தைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

மூன்று வருடங்கள் வேணுபிரசாத்துடன் மல்லாக்கப் படுத்து கூத்தடித்து விட்டு, சப்பிப் போட்ட மாங்கொட்டை போல் இருக்கும் கிரகலட்சுமியைப் போய் "இரண்டாம் கணவனாக" கட்டிக் கொண்டு விட்டாரே பிரசாந்த்.

சென்னை தி.நகர் பிரபல ஜவுளிக்கடை முதலாளியின் மகள் என்பதை வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறாள் கிரகலட்சுமி. பிரசாந்த் ரசிகர்களுக்கு விஷயம் தெரிந்தால் கடையையே கொளுத்தி விடுவார்களே!