கொடநாடு எஸ்டேட்டில் நானும் பங்குதாரர்தான் - 'ஜெ'

கொடநாடு எஸ்டேட்டில் பங்குதாரராக இருக்கிறேன்; ஆனால், அந்த நிறுவனத்திலிருந்து இன்று வரை 1 ரூபாய் கூட லாபம் அடையவில்லை என்று தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

இதுபற்றி சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 1996-ல் கருணாநிதி அரசு என் மீதும் இன்னும் சிலர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்தது. அதில், கொடநாடு எஸ்டேட்டும் சேர்க்கப்பட்டது. அப்போது எனக்கும், எஸ்டேட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அந்தக் காலகட்டத்தில் கொடநாடு எஸ்டேட் என்னுடையது அல்ல. அது சசிகலாவுக்கும் வேறு சிலருக்கும் சொந்தமானது என்று கூறினேன். அதுதான் உண்மை. வழக்கின் தன்மையும் அது தான்.

சட்ட விரோதமான காரியம் அல்ல:பல ஆண்டுகள் கழித்து, 2000-ம் ஆண்டு தொடக்கத்தில் கொடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் நானும் பங்குதாரராக இணைந்தேன்.

இதைப் பிரச்னையாக்கி, முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கருத்துகளுக்கு இரண்டு அறிக்கைகள் மூலம் பதில் அளித்தேன். அதில், எந்த இடத்திலும் கொடநாடு எஸ்டேட்டுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றோ, அதில் எனக்கு பங்கு இல்லை என்றோ சொல்லவில்லை.

தேயிலை எஸ்டேட் நடத்துவதோ, அங்கே வீடு கட்டி தங்குவதோ சட்ட விரோதமான காரியங்கள் அல்ல.

கொடநாடு எஸ்டேட் வரலாறு: கொடநாடு எஸ்டேட் 889.79 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

1993-ம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, கொடநாடு டீ எஸ்டேட் நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ஏறக்குறைய ரூ.7 கோடி அளவுக்கு இருந்தது.

இதையடுத்து, கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் கொடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் பங்குதாரர்களாகச் சேர்ந்தார்கள். இதன்பின், 1994-ம் ஆண்டு இறுதியில் ராதா வெங்கடாசலம் மற்றும் அவருடைய உறவினர்கள் 2 பேர் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இணைந்தார்கள்.

1995-ம் ஆண்டு பிப்ரவரியில் கிரேக் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர் மற்றும் அவரது உறவினர்களும், குடும்ப அறக்கட்டளைகளும் அந்த கம்பெனியின் பங்குதாரர்களில் இருந்து விலகிக் கொண்டார்கள்.

1995-ம் ஆண்டு ஜூனில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இணைந்தனர். 1996-ம் ஆண்டு செப்டம்பரில் சுதாகரன் அந்த நிறுவனத்தில் இருந்து விலகினார்.

2000-ம் ஆண்டில் பங்குதாரர் ஆனேன்: இத்தனை மாற்றங்கள் செய்த பின்பும், எஸ்டேட் கடன்களை செலுத்த முடியவில்லை. இந்த எஸ்டேட் நிறுவனத்தை சீரமைக்க வேண்டும் என்ற நோக்கில் 2000-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர்ந்தேன்.

லாபமோ, ஆதாயமோ பெறவில்லை: கொடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் பங்குதாரராக இணைந்தபோது, என்னுடைய முதலீடு ரூ.1 கோடியே 80 லட்சம். இது, கணக்கில் காட்டப்பட்டு வருமான வரித்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. அச்சமயத்தில் கொடநாடு எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ.6 கோடியே 60 லட்சம் அளவுக்கு கடன் இருந்தது.

2004-ம் ஆண்டில் இருந்துதான் அந்த நிறுவனத்துக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்தது. கடந்த ஐந்தாண்டில் இந்த நிறுவனத்தில் இருந்து 1 ரூபாய் கூட நான் எடுத்துக் கொள்ளவில்லை.

எஸ்டேட் என்னுடையது அல்ல என்று நான் சொன்னது 1996-ல்தான். அப்போது எனக்கும் எல்டேட்டுக்கும் சம்பந்தம் இல்லை. கொடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் சேர்ந்தது 2000-வது ஆண்டு. அதன்பின், எஸ்டேட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று நான் சொன்னதில்லை.

தேர்தலின்போது விலகினேன்: கடந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் கவனம் செலுத்த செலுத்த வேண்டி இருந்தது. இதனால், 2006-ம் ஆண்டு ஏப்ரலில் கொடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து விலகிக் கொண்டேன்.

விலகியபோது, நிறுவனத்தின் கணக்குகள் முடிக்கப்பட்டு, இழப்பில், அதாவது நஷ்டத்தில் என்னுடைய பங்காக நான் செலுத்த வேண்டிய தொகை ரூ.1 கோடியே 93 லட்சம் என்று மதிப்பிடப்பட்டது. ஆக, எஸ்டேட் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்ததில் எந்த லாபமும் அடையவில்லை. மாறாக, நிறுவனத்துக்கு நான் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ. 1 கோடியே 93 லட்சம் என்பதுதான் உண்மை.

தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது, கொடநாடு எஸ்டேட் நிறுவனத்தில் நான் பங்குதாரராக இல்லை. அதனால்தான் எனது வேட்பு மனுவோடு சமர்ப்பிக்கப்பட்ட சொத்து விவரத்தில் இதனைக் காட்டவில்லை. ஆகவே, எந்தத் தவறும் நடைபெறவில்லை. எந்த உண்மையையும் மூடி மறைக்கவில்லை.

மீண்டும் சேர்ந்தேன்: கொடநாடு எஸ்டேட் நிறுவனம் தொடர்ந்து பல பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது, மீண்டும் இணைந்தால் நல்லது என மற்ற பங்குதாரர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இதையடுத்து, கடந்த 2006 ஜூனில் மீண்டும் பங்குதாரராக இணைந்தேன். இதுவரை இருந்து வருகிறேன் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா - சல்மான் அரிய புகைப்படம்



தலையங்கம் - 'விடுதலை'

இடைத்தேர்தல் முடிவும் எண்ண ஓட்டமும்!



மதுரை மேற்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அபார வெற்றி பெற்று இருக்கிறது. அடுத்து வந்த அ.இ.அ.தி.மு.க.; தே.மு.தி.க., ஆகிய இரு கட்சிகளும் பெற்ற வாக்குகளைக் கூட்டினாலும், அதனையும் விஞ்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர்.


இந்த இடைத்தேர்தலால் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதில்லையென்றாலும், ஆளும் கட்சி வேட்பாளர் தோல்வி கண்டால், `மக்களிடம் ஆளும் கட்சி செல்வாக்கை இழந்துவிட்டது; நம்பிக்கையை இழந்துவிட்டது; எனவே, பதவி விலகுக!’ என்று கூப்பாடு போட ஆரம்பித்து விடுவார்கள். இப்பொழுது அந்தக் கேள்விக்கே இடம் இல்லாமற் போய்விட்டது.

கடந்த முறை அ.இ.அ.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதியை அது இழந்திருக்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கதாகும். அதுவும் கடந்த முறை பெற்ற வாக்குகளில் சரி பாதியை இழந்து பரிதாப நிலையில் தலைவிரிகோலமாய் நிற்கிறது.

இதற்குக் காரணங்கள் என்ன? மாநிலத்தை ஆளும் தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சி காங்கிரஸ் என்பது; மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்தது. இவ்விரண்டு ஆட்சிகளும் மக்கள் வளர்ச்சியில் அக்கறை காட்டக் கூடியவைகளாக இருக்கின்றன.குறிப்பாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க., கடந்த ஓராண்டுக் காலத்தில் சாதித்து இருப்பவை அசாதாரணமானவை.

பதவியையேற்ற அந்த இடத்திலேயே மக்கள் சமுத்திரத்தின் முன் தேர்தலில் தாம் கொடுத்த வாக்குறுதியை நிலை நாட்டும் வண்ணம் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்பதற்கான கோப்பில் முதல் கையொப்பமிட்டாரே! பிறகு செய்தும் காட்டினாரே!
அன்றாடக் கூலிகளாய் அல்லல்படும் மக்களின் வாழ்வில் பால் வார்த்த செயல்பாடல்லவா அது! தி.மு.க., அரசு எந்த மக்களின் பால் கண்ணோட்டம் செலுத்துகிறது என்பதற்கான அடையாளமாகவே இது கருதப்படுகிறது.

சித்தாந்த அளவில் என்று சொல்லும்பொழுது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கான செயல்பாட்டுக்கு ஒப்பம்!
கொள்கை, மக்கள் வளர்ச்சி என்கிற இரு தண்டவாளங்களில் கலைஞர் தலைமையிலான ஆட்சி மக்கள் நல அரசு என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாகச் செயல்பட்டு வருகிறது.
மிக முக்கியமான பிரச்சினையாகத் தலையெடுத்து நிற்பது வேலையின்மையாகும்.

கலைஞர் தலைமையிலான ஆட்சியைப் பொறுத்தவரை தொழிற்சாலைகள், ஆலைகள் தொடங்கப் படுவதற்கு இருகரம் நீட்டிக் காத்திருக்கும் அரசாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப் பட்டும் உள்ளன; தொடங்கப்படவும் உள்ளன. இதனால் உற்பத்திப் பெருக்கம் என்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கத்தில் படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டக்கூடிய சூழ்நிலையாகும்.

படித்துவிட்டு வேலை கிட்டாமல் தத்தளிக்கும் இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை அளிப்பது என்பது இந்தியாவிலேயே தி.மு.க., ஆளும் தமிழ்நாட்டில் மட்டும்தான்! ஒரு மாநில அரசு இதனைச் செய்வது என்பது, மனந்திறந்த பாராட்டுக்குரியதாகும்.
ஆளும் கட்சி இந்தச் சிறப்பில் இருக்கிறது என்றால், அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய அ.இ.அ.தி.மு.க.,வின் செயல்பாடோ அறிவார்ந்த முறையில், பொறுப்பான தன்மையில் இல்லாமல் எதிரிக்கட்சியாகவே செயல்படுகிறது.

சட்டமன்றத்திற்குச் செல்வதே அமைதியைக் குலைப்ப தற்குத்தான், வெளி நடப்புச் செய்வதற்குத்தான் என்கிற தண்டவாளங்களில் அது ஓடிக் கொண்டு இருக்கிறது.
இவர்களை எதிர்க்கட்சியாக அனுப்பியதேகூட தவறுதான் என்று வாக்களித்த நாட்டு மக்கள் நினைத்து வருந்தும் அளவுக்கு, தான்தோன்றித்தனமாக அது செயல்படுகிறது. மதுரை மேற்கு இடைத்தேர்தல் உணர்த்தும் பாடம் இதுதான்.

தே.மு.தி.க.,வைப் பொறுத்தவரை, அதன் வளர்ச்சி நாட்டுநலன் கண்ணோட்டத்தில் கவலையைத் தரக் கூடியதாக இருக்கிறது.கொள்கைக் கோட்பாடுகள் ஏதும் இன்றி சினிமாத்தனத்தின் வக்கிரத்தில் வீழ்ந்துவிடும் விட்டில் பூச்சிகளாக பதினெட்டு வயது இளைஞர்கள் ஆகக் கூடிய ஆபத்தை சமுதாய, அரசியல் களத்தில் உள்ள பொறுப்பான பெருமக்கள் உணர்ந்து, ஆக்க ரீதியான வழிகாட்டுதலைத் தரவேண்டியது அவசியமான கடமையாகும்.

எல்லாமே சினிமா என்பது ஆரோக்கியமானது அல்ல, சித்தாந்தம் இருக்குமானால் விமர்சிக்கலாம். அது இல்லாத இடத்தை என்ன செய்வது!ஊடகங்களுக்கும்கூட இதில் பொறுப்பு இருக்கிறது, எச்சரிக்கை!

வருகிறது பிளாஸ்டிக் ரூபாய்:ரிசர்வ் பாங்க் திட்டம்

பேப்பர் ரூபாய் நோட்டுக்கு பதில் பிளாஸ்டிக் ரூபாய்களை வெளியிட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் திட்டமிட்டுள்ளது.தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் ஒரு சில ஆண்டுகளில் சிதைந்து விடுகின்றன. மேலும், கள்ளநோட்டு புழக்கமும் அதிகரித்துள்ளது.
இது போன்ற சிக்கல்களை தவிர்க்க "பாலிமர்" பிளாஸ்டிக் பேப்பரில் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது பற்றி ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றன. இது எளிதில் கிழியாது, தண்ணீரில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ருமேனியா, பிரேசில் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பிளாஸ்டிக் கரன்சிகள் உபயோகத்தில் உள்ளன.
இதேபோல் இந்தியாவிலும் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் வெளி வரவிருக்கிறது. சோதனை முயற்சியாக 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் முதலில் புழக்கத்தில் விடப்படும். பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் சிறப்பு தொழில்நுட்பத்தில் தயாராவதால் அதே போல் கள்ளநோட்டுகளை தயாரிக்க முடியாது. மெக்சிகோவில் புழக்கத்தில் உள்ள பாலிமர் டெக்னாலஜி ரூபாய் நோட்டில், ஸ்டாம்ப் அளவிற்கு ஜன்னல் போன்ற டிசைன் உள்ளது. இதை போலியாக அச்சிடுவது மிகவும் சிரமமாம்.

ஸ்ரீகாந்த் விவாகரத்து வழக்கில் புது சிக்கல்

மனுவை வாபஸ் பெற்றார் ஸ்ரீகாந்த்



வந்தனாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ஸ்ரீகாந்த் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாததால் மனுவை அவரே திரும்பப் பெற்றார்.
நடிகர் ஸ்ரீகாந்த்துக்கும், தொழிலதிபர் சாரங்கபாணி மகள் வந்தனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கிடையே, வந்தனாவின் சகோதரர் மீது மோசடி புகார்கள் இருப்பதாக செய்திகள் வெளியானதால், ஸ்ரீகாந்த்தின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர். ஆனாலும் ஸ்ரீகாந்த்துடன்தான் வாழ்வேன் என்று வந்தனா பிடிவாதமாக கூறிவந்தார்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இரவு திடீரென ஸ்ரீகாந்த் வீட்டுக்கு தனது பெற்றோருடன் சென்ற வந்தனா, அங்கேயே தங்கப் போவதாக தெரிவித்தார். தனக்கும், ஸ்ரீகாந்த்துக்கும் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிப்ரவரி 7-ம் தேதியே திருமணம் நடந்துவிட்டதாக சொல்லி, அதற்கான போட்டோ ஆதாரங்களையும் வெளியிட்டார்.

வந்தனா புகாரைத் தொடர்ந்து போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் என அஞ்சிய ஸ்ரீகாந்த், முன் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த வந்தனா மீது நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீகாந்த் குடும்பத்தார் கூறியதால் வந்தனாவும் முன்ஜாமீன் பெற்றார்.

வீட்டை விட்டு வந்தனா வெளியேற மறுத்துவரும் நிலையில், ஐகோர்ட் வளாகத்தில் உள்ள குடும்பநல கோர்ட்டுக்கு கடந்த வாரம் ஸ்ரீகாந்த் வந்தார். வந்தனாவிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அதில், வந்தனா தன்னை கொடுமை செய்ததாகவும், அவர் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததால் தனக்கு அதிக மனவேதனை ஏற்பட்டதாகவும் அதனால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நேற்று வரை பதிவாகாமல் இருந்தது. மனுவில் குறைபாடுகள் உள்ளதால் அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதையடுத்து, அந்த மனுவை திரும்பப் பெறுமாறு அவருக்கு தகவல் அனுப்பப்பட்டது. இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் குடும்ப நல கோர்ட்டுக்கு நேற்று தனது வக்கீலுடன் வந்தார். பதிவு செய்யப்படாமல் இருந்த தனது விவாகரத்து மனுவை திரும்ப பெற்றுச் சென்றார். விவாகரத்து முடிவில் உறுதியாக இருக்கும் ஸ்ரீகாந்த், ஓரிரு நாட்களில் புதிய மனுதாக்கல் செய்வார் என தெரிகிறது.

அரவாணிகளின் அத்துமீறல்

கடந்த 18ஆம் தேதி, இரவு 8 மணியளவில், சேலம், பழைய பஸ் நிலையம் பகுதியில் டூட்டி பார்த்துக் கொண்டிருந்த பெண் போலீஸ் சசிகலாவிடம்... டிப் டாப்பாக உடையணிந்த வாலிபர் ஒருவர் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடி வந்தார். "நான் அண்ணா சிலை அருகே வரும்போது நான்கு அரவாணிகள் நின்று என்னை விபச்சாரத்திற்கு அழைத்தனர்.

நான் மறுத்து, "வரவில்லை' என்றேன். அதனால் என்னைத் தாறுமாறாக திட்டி அடிக்க வருகிறார்கள். நான் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்ததே பெரும்பாடாப் போச்சு... நீங்க வந்து அவங்களை விசாரிங்க...' என்று மிரட்சியுடன் புகார் கூறினார்.

இதைத் தொடர்ந்து சசிகலா, சக போலீஸ் தீபாவை அழைத்துகொண்டு சிலையருகே சென்று பார்த்துள்ளார். அங்கே 4 அரவாணிகள் ஃபுல் மப்பில் இருக்க அவர்களிடம், "ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று கேட்டுள்ளார். அதற்கு, "நீயும் எங்களை மாதிரி பொம்பளதானே... உனக்கு வேலை கிடைச்சி போயிட்ட...

நாங்க இங்கே வவுத்துக்காக கஷ்டப்படுறோம்' என்று நால்வரும் கோரஸôக தத்துவம் பேசியுள்ளனர். இதையடுத்து சசிகலாவுக்கும் அரவாணிகளுக்கும் நடந்த வாக்குவாதத்தில் டென்ஷனான அரவாணிகள் சசி கலாவை ஓட ஓட அடித்துத் துரத்தினர். இதைப் பார்த்து அதிர்ந்து போன புகார் கொடுத்த வாலிபர் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.

தலைதெறிக்க சசிகலா ஓடினாலும் அரவாணிகள் துரத்திப் பிடித்து சூழ்ந்து அடித்து உதைத்துள்ளனர். அதைப் பார்த்த பொதுமக்கள் சிலரும், கடை வீதியில் ஹோட்டல் வைத்திருப்பவர்கள் சிலரும் அரவாணிகளிடம் இருந்து சசிகலாவை காப்பாற்றி உள்ளனர்.

இப்படி பெண் போலீஸ் தாக்கப்பட்ட தகவல் போலீஸ் உதவி ஆணையாளர் பிலிப் தாமஸுக்கு தெரிவிக்கப்பட அவர் போலீஸôருடன் விரைந்து வந்தார். பிறகு நான்கு அரவாணிகளையும் கைது செய்து, டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்தத் தகவல் பத்திரிகையாளர்களுக்கும் தெரியவர அவர்கள் டவுன் ஸ்டேஷனுக்கு படை எடுத்தனர்.

ஆனால் அங்கே, ""எங்களை வெளியே விட மாட்டீர்களா?'' என்று போலீஸாரிடம் கேள்வி எழுப்பியபடியே அரவாணிகள் நான்கு பேரும் கேபரே டான்ஸ் போல தாங்கள் அணிந்திருந்த சேலை, உள்ளாடை உள்ளிட்டவைகளை ஒவ்வொன்றாகக் கழட்டி எறிய பார்த்துக் கொண்டிருந்த போலீஸôர் வெலவெலத்துப் போயினர்.

ஒருகட்டத்தில் அரவாணிகள் முழு ஆடைகளையும் கலைந்து நிர்வாண கோலத்துக்குப் போக அதைப் பார்த்த போலீஸார் தர்ம சங்கடத்தோடு தலைகுனிந்த படியே வெளியேறினர். போலீஸôர் வெளியே சென்றவுடன் ஆடைகளை எடுத்து உடுத்திக் கொண்ட அரவாணிகள், "எங்களை வெளியே விடுங்கள்' என்று போலீஸாருக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அதை பத்திரிகை ஃபோட்டோகிராஃபர்கள் படம் எடுத்தனர்.

நாம் அரவாணிகள் பகீரூட்டும்படி இப்படி நடந்து கொண்டது குறித்து அரவாணிகள் ஜமாத் தலைவி கைலாசத்தை சந்தித்துப் பேசினோம்.

""கமலி, நித்யா, ரம்யா, ராதா என்ற இவர்கள் குகை பகுதியைச் சேர்ந்த அரவாணிகள். சேலம் மாவட்டத்தில் 3700 அரவாணிகள் இருக்கின்றனர். ஆனால் யாரும் இதுபோல தரக்குறைவாக நடந்து கொண்டதில்லை. தவறு செய்த அரவாணிகள் மீது போலீஸôர் எந்த வித நடவடிக்கை எடுத்தாலும் அரவாணிகள் சங்கம் எதிர்ப்பு காட்டாது.

அவர்களுக்கு அரசு தரும் தண்டனையுடன் ஜமாத் சார்பிலும் தண்டனை அளிக்கப்படும். அது பொதுமக்களும் ,அரசும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கும். அந்த நான்கு அரவாணிகளின் நெற்றியில் சூடு செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து சுடும் தண்டனையாகவும் அது இருக்கலாம். சிறையில் இருந்து விடுதலையாகி வந்தபின் ,தாக்கப்பட்ட பெண் போலீஸின் காலில் விழுந்து அவர்கள் மன்னிப்பு கேட்கும் தண்டனையும் உண்டு'' என்றார் சீரியஸôக.

அரவாணிகள் சங்கத் தலைவி சுமதியோ வேறு விதமாக வருத்தப்பட்டார்.

"பெண் போலீஸ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு வேதனைப்படுகிறோம். இனிமேல் தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. இதற்காக 24 மாவட்ட அரவாணிகள் சங்கமும் வருத்தம் தெரிவிக்கிறது. சில அரவாணிகள் செய்த தவறுக்காக மற்ற அப்பாவி அரவாணிகளை போலீஸார் பழி வாங்கக் கூடாது. தவறு செய்த நால்வரையும் ஒரு ஆண்டு ஊரை விட்டு விலக்கி வைக்கிறோம்'' என்றார்.

இந்நிலையில் போலீஸ் தரப்பில், அரவாணிகள் நான்கு பேர் மீதும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல், தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து அவர்களை ஜூலை 3-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் சேலம் போலீஸôருக்கு தலை வலி போய் திருகு வலி வந்த கதையாக, "கைது செய்யப்பட்ட அரவாணிகளை ஆண்கள் சிறையில் அடைப்பதா? பெண்கள் சிறையில் அடைப்பதா?' என்ற குழப்பம் ஏற்பட்டது. மத்திய சிறையில் ஆண்கள் உள்ளதால் அங்கே அரவாணிகளை அடைக்க சிறை நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை.

அதேபோல பெண்கள் சிறையிலும் அடைக்க அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நீண்ட யோசனை செய்து, ""மத்திய சிறை, பெண்கள் சிறை இரண்டிலும் இடப்பற்றாக்குறை உள்ளது'' என்று எழுதி வாங்கிகொண்ட போலீஸôர், நான்கு அரவாணிகளையும் அழைத்துக் கொண்டு ஒரு வழியாக வேலூர் சிறைக்குச் சென்றனர்.

வசீகரன்
(தரவு-தமிழன் எக்ஸ்ப்ரஸ்)

நாட்டியமேதை சித்ராவின் கணவர் மரணம்

பிரபல நாட்டிய மேதை சித்ராவின் கணவர் விஸ்வேஸ்வரன் மரணம்.



பிரபல பரத நாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனின் கணவர் விஸ்வேஸ்வரன் காலமானார். அவருக்கு வயது 60.

காஷ்மீரி சந்தூர் என்ற இசைக் கருவி, சரஸ்வதி வீணை, சிதார் போன்ற பல இசைக் கருவிகள் வாசித்து இசை உலகில் புகழ் பெற்றவர் ஆர்.விஸ்வேஸ்வரன். அவரது மனைவி சித்ரா விஸ்வேஸ்வரன் உலகப்புகழ் பெற்ற பரதநாட்டிய கலைஞர். சித்ரா விஸ்வேஸ்வரனின் பரதநாட்டியத்திற்கு ஏற்ற கர்னாடக இசைப் பாடல்களை பாடுவதில் விஸ்வேஸ்வரன் வல்லவர்.

சித்ரா விஸ்வேஸ்வரனுடன் சேர்ந்து உலக நாடுகள் முழுவதற்கும் போய் பக்க வாத்திய இசை வாசித்து திரும்பியவர்.

கர்னாடக சங்கீத மேதை ஜி.என். பாலசுப்பிரமணியத்தின் மருமகன் விஸ்வேஸ்வரன். ஜி.என்.பி.யின் மாணவர். தஞ்சாவூர் எஸ். கல்யாணராமனிடம் சங்கீதம் படித்த ராஜேஸ்வரி ரங்கநாதனின் மகன் விஸ்வேஸ்வரன். இவர் ஆடிட்டர் வேலைக்கு செல்ல சி.ஏ. படித்தவர். பிறகு முழு நேர இசைக் கலைஞராக மாறி விட்டவர். இந்தி இசையமைப்பாளர்கள் ஆர்.டி. பர்மன், லட்சுமி காந்த் பியாரிலால் ஆகியோருக்கு இசைக் கருவிகள் வாசித்தவர் விஸ்வேஸ்வரன்.

சதி, சூது, சூழ்ச்சி, அராஜகம் வென்றது: ஜெயலலிதா

சதி, சூது, சூழ்ச்சி, அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் வென்று விட்டது என்று மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு குறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருத்து தெரிவித் திருக்கிறார்.

இந்த தேர்தல் முடிவு செயற்கையான முடிவு. இது உண்மையான மக்கள் தீர்ப்பு அல்ல என்றும், ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்த தேர்தல் முடிவை கண்டு அண்ணா தி.மு.க. உடன்பிறப்புகள் சோர்வடைய வேண்டாம், மனம் தளர வேண்டாம். நிச்சயம் நமக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. மக்கள் நம்முடன் தான் இருக்கிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் மீறி அண்ணா தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.



மதுரை மேற்கு தொகுதி தேர்தல் முடிவு பற்றி அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வந்துள்ள முடிவு எதிர்பார்த்ததுதான். இப்போது வந்துள்ளது மக்கள் தீர்ப்பு அல்ல. இது தி.மு.கவினரின் திட்டமிட்ட சதி.

இந்தத் தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடக்காது, அல்லது நடத்த முடியாது என்பதை உணர்ந்து தான் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரே இந்தத் தேர்தலை ரத்து செய்ய விரும்பினார். அதற்காக தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி அவசரமாக டெல்லிக்கு அழைக் கப்பட்டார். தேர்தல் ரத்து செய்யப்படப் போகிறது அல்லது ஒத்தி வைக்கப்படப் போகிறது என்கிற அறிவிப்பு வெளியிடப் படுவதற்கு முன்பாக அதைத் தெரிந்து கொண்ட கருணாநிதி, எப்படியும் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார்.

கருணாநிதியின் மிரட்டல்

தேர்தல் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ஒத்தி வைக்கப்பட்டாலோ, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்றும், இந்திய அரசியல் சாசனப்படி மாநில அரசு செயல்படவில்லை என்ற ஒரு பெரிய உண்மை பட்டவர்த்தனமாக நிரூபணம் ஆகி விடும் என்பதால், அதற்குப் பயந்து தேர்தலை குறித்த தேதியில் நடத்தியே ஆக வேண்டும்; இல்லாவிடில் ""தேர்தல் ஆணையம் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்'' என்று கருணாநிதி மிரட்டினார். கருணாநிதியின் வற்புறுத்தலால் சோனியா காந்தியும் இதில் தலையிட்டு இந்திய தேர்தல் ஆணையத் திற்கு நெருக்கடி கொடுத்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக மத்திய தி.மு.க. மந்திரி டி.ஆர். பாலு நேரில் சென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையரை பயங்கரமாக மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவுடி பட்டாளத்துடன் அழகிரி

மு.க. அழகிரி சம்பந்தப்பட்ட, "தினகரன்' நாளிதழ் ஊழியர்கள் மூன்று பேர் படு கொலையால் மதுரை மக்கள் வெறுப் படைந்து தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து விட்டால், இந்தத் தோல்விக்கு மு.க.அழகிரி தான் முழு பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதால், எல்லோரையும் மிரட்டி பணிய வைத்து எப்படியும் ஒரு செயற்கையான வெற்றியைக் காட்டி விட வேண்டும் என்று மு.க. அழகிரி கங்கணம் கட்டிக் கொண்டு தனது ரவுடி பட்டாளத் துடன் களத்தில் இறங்கினார்.

மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர காவல் துறை ஆணையர், தேர்தல் அதிகாரி உட்பட பல உயர் அதிகாரிகள் அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டாலும் கூட, மேலிருந்து கீழ் வரை எல்லாமே மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், அந்த அளவிற்கு மதுரையில் அரசு எந்திரம் கெட்டுப் போய், புரையோடிப் போய் இருப் பதாலும் தான், தேர்தலை நடத்த முடியாது என்ற நிலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் வந்தது. இதைத் தான் இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

சதி, சூது, சூழ்ச்சி, அராஜகம் வென்றது

நிலைமை சரியில்லை, தேர்தலை நடத்த முடியாது என்ற முடிவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் வந்த பிறகு, அந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? மிரட்டலுக்கும், பலவிதமான அச்சுறுத்தல் களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் பணிந்ததே தவிர, மதுரையில் உள்ள நிலை மையில் எந்த மாற்றமும் ஏற்பட வில்லையே? கடைசி வரை மு.க. அழகிரி அங்கே தானே இருந்தார்? அதன் விளை வாகத் தான் இந்தத் தேர்தல் முடிவு. சதியும், சூதும், சூழ்ச்சியும், அராஜகமும், அதிகார துஷ்பிரயோகமும் வென்றுவிட்டது.

அண்ணா தி.மு.க. வேட்பாளருக்காக தேர்தல் பணியாற்றிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும், தோழமை கட்சி தலைவர் களுக்கும், தோழமை கட்சிகளின் தொண்டர் களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரத்தம் சிந்திய உடன்பிறப்புகள்

குறிப்பாக தேர்தல் பணியின் போது, எப்பாடுபட்டேனும் கழக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற் காக ரத்தத்தை சிந்திய மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர். ஜெயராமன், மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எம்.எஸ். பாண்டியன், கழக வழக்கறிஞர்கள் கோவிந்தன், சீத்தாராமன், தொழிற் சங்கத்தைச் சேர்ந்த முருகன், தேனி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.ஆர். தயாளன், போடிநாயக்கனூர் ஒன்றியக் கழகச் செயலாளர் எஸ்.எம். சற்குணம், மதுரை மாநகர் மாவட்டம், 34வது வட்ட கழக செயலாளர் சக்தி பாண்டியன், 27வது வட்டத்தைச் சேர்ந்த சந்துரு, அருண் போன்ற கழக உடன்பிறப்புகள் செய்த தியாகத்தை நான் என்றும் போற்றி நினைவில் வைத் திருப்பேன்.

செயற்கையான முடிவு

இந்த தேர்தல் முடிவால் கழக உடன் பிறப்புகள் சோர்வு அடைய வேண்டாம், மனம் தளர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இது உண்மையான தோல்வி அல்ல; ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பெற்ற செயற்கையான முடிவு. இது உண்மையான மக்கள் தீர்ப்பு அல்ல. மக்கள் நம்முடன் தான் இருக்கிறார்கள்; நமக்கு ஆதரவாகத் தான் இருக்கிறார்கள்.

விரைவில் நமக்கு நல்ல காலம் வரும்; இருள் நீங்கி ஒளி பிறக்கும் என்ற நம்பிக் கையுடன் தொடர்ந்து மக்கள் பணி யாற்றுவோம். ராவணனை வீழ்த்தவே முடியாது என்று உலகம் கருதிய போது ராமர் வந்தார், ராவணனை வீழ்த்தினார். கம்சனை வீழ்த்தவே முடியாது என்று உலகம் நினைத்த போது கிருஷ்ணர் வந்தார், கம்சனை வீழ்த்தினார். இரணியனை வீழ்த்தவே முடியாது என்று அனைவரும் கருதிய போது நரசிம்மர் வந்தார், இரணியனை வதம் செய்தார்.

கொடுங்கோல் ஆட்சி முடிவு வரும்

அதைப் போல, எந்தக் கொடுங்கோலனாக இருந்தாலும், எவ்வளவு தான் கொடூரமான கொடுங்கோல் ஆட்சி நடத்தினாலும், தீயவை அனைத்திற்கும் ஒரு நாள் முடிவு வந்தே தீரும். தர்மம் ஒரு நாள் நிலை நாட்டப்படும். நிச்சயமாக நமக்கு ஒளிமய மான எதிர்காலம் உண்டு. ஆகவே, செயற்கையான இந்த தேர்தல் முடிவை நினைத்து அண்ணா தி.மு.க. உடன்பிறப்புகள் வருந்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இத்தனை மிரட்டல்களையும், அச்சுறுத்தல் களையும் மீறி, அண்ணா தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியிருக்கிறார்.

மதுரை - சில ஆன்மீக துணுக்க்குகள்

பிரியாணி பிரசாதம்!

மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது வடக்கம்பட்டி. ஆண்டுதோறும் தைமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை, முனியண்டி விலாஸ் ஓட்டல் காரர்கள் அனைவரும் கூடி இங்குள்ள முனியாண்டியை கும்பிடுகின்றனர். அப்போது வழங்கப்படும் பிரசாதம் எது தெரியுமா? மணமணக்கும் பிரியாணி!

***
முதல் மரியாதை!

மதுரை கீழமாசி வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் `மொட்டைப் பிள்ளையார்' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள விநாயகருக்கு தலை இல்லை! கீழமாசி வீதி என்பது வணிகர்கள் நிறைந்த பகுதி. தினமும் காலையில் இந்தப் பிள்ளையார் முன் கடைச்சாவியை வைத்து, வணங்கிய பின்னரே, கடையை திறக்கின்றனர் வியாபாரிகள்!

***
உட்கார்ந்த நவக்கிரகங்கள்!

மதுரைக்கு அருகில் உள்ளது நத்தம் கைலாசநாதர் கோவில். இங்குள்ள நவக்கிரகங் கள் அனைத்தும் உட்கார்ந்த நிலையில் உள்ளன. இதுமாதிரி வேறுஎங்கும் இல்லை!

***
`ரிஷபாரூடர்!'

மதுரைக்கு அருகில் உள்ள விராதனூரில் சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் `ரிஷபாரூடர்' வடிவத்தில் அருள்பாலிக்கிறார். இந்த உருவத்தில் வேறு எங்கும் சிவன் காட்சியளிப்பதில்லை!

***
வித்தியாசமான விரதம்!

மதுரை அருகே வெள்ளளூரில் `வல்லடிகாரர் கோவில்' உள்ளது. மாசி மாதத்தில் இங்கு கோவில் திருவிழா நடக்கும். இந்த விழாவுக்கு 15 நாட்களுக்கு முன்பே கோவிலை சுற்றியுள்ள ஊர்களில் உள்ளவர்கள் நான்வெஜ், எண்ணெய் பொருட்களைத் தொடக்கூட மாட்டார்கள்! இந்த பகுதியில் உள்ள ஓட்டல்களிலும் சாப்பாடு, இட்லியைத் தவிர வேறு எதுவும் விற்க மாட்டார்கள்! இதைவிட அதிசயம் அங்குள்ள முஸ்லீம் மக்களும் இந்த விரதத்தை கடைபிடிப்பதுதான்!

***
மணி மணியாய்...!

மதுரையில் தல்லாக் குளம் பகுதியில், அரிஹரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறினால் நேர்த்திக்கடனாக மணிகளை கட்டு கின்றனர்!

பிரசாந்த் தான் எனது முதல் கணவர் - கிரகலட்சுமி

வேணுபிரசாத்தை நான் திருமணம் செய்யவில்லை'
கிரகலட்சுமி வாக்குமூலம்.



நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமி நேற்று சென்னை மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி 2 மணி நேரம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் `நடிகர் பிரசாந்த் தான் எனது முதல் கணவர் என்றும், வேணுபிரசாத்தை திருமணம் செய்யவில்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமி சென்னை ஐகோர்ட்டு கொடுத்துள்ள முன்ஜாமீன் நிபந்தனைபடி நேற்று காலை 10.30 மணியளவில் சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். இன்ஸ்பெக்டர் சரஸ்வதி முன்னிலையில் கிரகலட்சுமி கையெழுத்து போட்டார்.

பின்னர் கிரகலட்சுமியிடம், இன்ஸ்பெக்டர் சரஸ்வதி விசாரணை நடத்தினார். நடிகர் பிரசாந்தை திருமணம் செய்வதற்கு முன்பு நீங்கள் நாராயணன் வேணுபிரசாத்தை காதலித்தீர்களா? அவரை ரகசிய பதிவு திருமணம் செய்தீர்களா? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கிரகலட்சுமியிடம் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி கேட்டார். கேள்விகளுக்கு பதிலளித்து கிரகலட்சுமி கொடுத்த வாக்குமூல விவரம் வருமாறு:-

எனது தந்தை பெயர் தனசேகரன். தாயார் பெயர் சிவகாமுசுந்தரி. எனக்கு 2 அண்ணன்கள் உள்ளனர். நான் வீட்டுக்கு ஒரே பெண் பிள்ளை. இதனால் என் பெற்றோர் என்னை செல்லமாக வளர்த்தனர். நான் தொடக்க கல்வி முதல் உயர்நிலை பள்ளி கல்வி வரை சென்னை அடையாறில் உள்ள `கான்வென்ட்' பள்ளி ஒன்றில் படித்தேன். அதன்பிறகு பி.ஏ. பொருளாதார பட்டப்படிப்பை சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் படித்தேன்.

கல்லூரியில் என்னுடன் ஒன்றாக படித்த தோழிகள் இருவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புத்தக கடை ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்தனர். அவ்வாறு வேலை பார்க்கும்போது நாராயணன் வேணுபிரசாத் எனது தோழிகளுக்கு பழக்கமாகி உள்ளார். எனது தோழிகள் மூலம் நாராயணன் வேணுபிரசாத் எனக்கு அறிமுகமானார்.

நான் அவரை காதலிக்கவும் இல்லை. அவர் என்னை காதலிப்பதாக சொல்லவும் இல்லை. தோழிகளை பார்க்க வரும்போது நானும் அவரை பார்த்து இருக்கிறேன். அவரது அக்கா கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்தார். அவர் எனக்கு படிப்பிற்கு உதவி புரிந்துள்ளார்.

தோழிகள் மூலமாக நாராயணன் வேணுபிரசாத்தை நான் சந்தித்து பேசியுள்ளேன். இந்த பழக்கத்தை வைத்து அவர் என்னை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, ஒரு நாள் திடீரென்று அவர் என் வீட்டிற்கு வந்து எனது தந்தையை சந்தித்து பெண் கேட்டார்.

எனது தந்தையோ `உங்கள் பெற்றோரை அழைத்து வாருங்கள்' என்று நாராயணன் வேணுபிரசாத்தை திருப்பி அனுப்பிவிட்டார். அதன்பிறகு நாராயணன் வேணுபிரசாத் என்னை பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை. நான் அவரை பதிவு திருமணம் செய்து கொண்டதாக சொல்லியிருப்பதும் தவறானது.

நாராயணன் வேணுபிரசாத்தை நான் ரகசிய பதிவு திருமணம் செய்து கொண்டதாக சொல்லி பிரசாந்த் திருமண பதிவு சான்றிதழ் நகல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள என் கையெழுத்து போலியான கையெழுத்தாகும். நடிகர் பிரசாந்த் தான் என்னுடைய முதல் கணவர். என் மீது களங்கம் கற்பிப்பதற்காக வேணுபிரசாத்தை தூண்டிவிட்டு நான் அவரை திருமணம் செய்ததாக கதை சொல்ல வைத்துள்ளனர். கோர்ட்டில் எல்லா விவரங்களும் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு கிரகலட்சுமி தனது வாக்குமூலத்தில் கூறியிருந்ததாக தெரிகிறது.

கிரகலட்சுமி போலீஸ் நிலையத்திற்கு வந்தபோது அவரது தந்தையும் உடன் வந்திருந்தார். கிரகலட்சுமி வாக்குமூலம் அளித்தபோது அந்த காட்சி வீடியோ படமாக்கப்பட்டது. கிரகலட்சுமியின் வாக்குமூலத்தை போலீசார் எழுத்து மூலமாக பதிவு செய்து, பின்னர் கிரகலட்சுமியிடம் படித்து காண்பித்து அதில் கிரகலட்சுமியின் கையெழுத்தையும் வாங்கினார்கள்.

வேணுபிரசாத்துடன் திருமணம் நடக்கவில்லை என்றும், திருமணம் நடந்ததாக வெளியாகியுள்ள பதிவு திருமண நகல் போலியானது என்றும் கிரகலட்சுமி போலீசாரிடம் உறுதியாக கூறிவிட்டார். எனவே நடிகர் பிரசாந்த் கொடுத்த திருமண சான்றிதழ் நகலில் உள்ள கிரகலட்சுமியின் கையெழுத்து உண்மையானதா? என்பதை தடய அறிவியல் துறை மூலம் கண்டறிய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தமிழக அரசின் மீது ராமதாஸ் பாய்ச்சல்

"கருணாநிதி ஆட்சியில் காவல்துறைக்கு ஈரல் அடியோடு இல்லாமல் போய்விட்டது"




தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் "போலீஸ் துறைக்கு ஈரல் அடியோடு இல்லை' என்ற நிலை ஏற்பட்டு உள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மதுரையில் அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மருத்துவம், மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்லூரிகளில் அதிக கட்டணமும், நன்கொடையும் வசூலிக்கப் படுகிறது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை தடுக்க சட்டமும் உள்ளது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் 2 குழு அமைக்கப் பட்டது. ஆனால் அந்த குழுக்கள் ஏழை மாணவர்களுக்கு பாதகம் செய்துள்ளது. சுயநிதி கல்லூரிக்கு சாதகமாக செயல் பட்டார்கள்.

இதுகுறித்து உயர் கல்வித்துறை கண்டு கொள்வதில்லை. உயர் கல்வித்துறை தமிழகத் தில் இருக்கிறதா? அப்படி இருந்தால் செயல் பாட்டில் இருக்கிறதா என்று மாணவர்களின் பெற்றோர்கள் கேட்கிறார் கள்.

கோட்டையில் போராட்டம் உயர் கல்வித்துறை ஏழைகளுக்கு எட்டாக் கனியாக உள்ளது. அதிக கட்டணம், நன்கொடை வசூலிப்பதை தடுப்பதற்கு தீர்வு காணவில்லை என்றால் முதல்வரிடம் அனுமதி பெற்று சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் 25 பேருடன் கோட்டைக்குள் சென்று போராட்டம் நடத்துவேன். கிராமப்புற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு அமுல்படுத்த வேண்டும். அதற்கான சட்டத்தையும் அரசு கொண்டு வரவேண்டும்.

தமிழகத்தில் காவல்துறையில் முழுமை யாக சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும். கடந்த ஆட்சியைப் பற்றி முதல்வர் கருணாநிதி காவல்துறையை பற்றி பேசிய போது "ஈரல் கெட்டு விட்டது' என்று கூறினார். ஆனால் இன்று "காவல் துறைக்கு ஈரல் அடியோடு இல்லை'. இதற்கு காரணம் அரசியல் குறுக்கீடு தான்.

கிரிமினல்கள், போலீசார், அரசியல் வாதிகள் கைகோர்த்து வருகிறார்கள். இவர்களை பிடிக்க முடியவில்லை. நேர்மையான காவல்துறை அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டால் குற்றங்கள் குறையும். குற்றச் செயல்களை கிரிமினல் களை கண்டுபிடித்து அடக்கி ஒடுக்க போலீஸ் துறையில் ஒரு தனிப்பிரிவு உருவாக்க வேண்டும். அதற்கு புலனாய்வு பயிற்சி அவசியம்.

கிரிமினல் வழக்குகளை 3 மாதத்தில் முடித்து குற்றவாளிகளை சிறையில் தள்ள வேண்டும். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. இப்படி முனைப்பாக செயல்பட்டால் தான் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடியும். நிகர் நிலை பல்கலைக்கழகம் என்பது ஒரு கொள்ளை கூடாரம் என்றும் அவர் கூறினார்.

ரஜினி கொடுத்த கோடி - இரா.பார்த்திபன்

வாஜி... வாஜி... வாஜி... சிவாஜி!
வாஜிகினா... வாஜிகினா
சிவாஜிகினா!

இது ஒரு பாட்டுக்குத் தொகையறா!

ஜாக்கிசானின் மார்க்கெட்டுக்கு மங்களம் பாடப்போகும் பாட்டுக்கு 100 கோடி தொகையறா!

நூறுகோடி + மக்கள் தொகையுள்ள இந்திய நாட்டில் நூறு கோடி வர்த்தகம். சினிமாவின் சூப்பர் ஜிகினா ரஜினி நடித்த சிவாஜியின் வித்தகம்! அமிதாப் + ஷாருக் ஒன்றுக்குள் ஒன்றாக −ணைந்து ‘அஷாமிருதாக்ப்’ என்ற ஹிந்தி படத்துக்குக்கூட அறுபது கோடிதான் வியாபாரம் ஆகுமென விநியோகஸ்தர்கள் முணுமுணுக்கிறார்கள்.

சிவாஜிக்கான எதிர்பார்ப்பு எப்படியிருந்தது என்றால்... சுனிதா வில்லியம்ஸ், விண்கலத்தின் கோளாறைச் சரி செய்து தரையிறங்க, சிவாஜிக்கு ரெண்டு டிக்கெட் லஞ்சமாக வேண்டுமென ‘புஷ்’ஷிடம் கேட்க, புஷ் - மன்மோகன் சிங் - ஏவி.எம்.சரவணன் மூவரும் இது சம்பந்தமாக ஓர் ஒப்பந்தத்தில் ஒப்பம் இட்டிருப்பதாகத் தகவல் கசிந்தது.

வழக்கம்போல, ரஜினி திருமலை வழியாக இமயமலை யாத்திரைக்குக் கிளம்ப, அங்கு இமயமலையையே காணவில்லையாம்! விசனத்துடன் ரஜினி விமானமேறி சென்னை திரும்பும் வழியில், கர்நாடகாவை கடக்கும்போது விமானம் எதன் மீதோ மோத... மூடியை மேற்புறமாய்த் தள்ளிவிட்டு நீள் செவ்வகக் கண்ணாடி வழியே பார்த்தால்... ரஜினியின் நீண்டகால நண்பர் என்ற பந்தா எதுவுமில்லாமல் முண்டாசுக் கட்டிக் கொண்டு ‘சிவாஜி’க்கான ரிசர்வேஷன் கவுன்ட்டரில் வியர்க்க விறுவிறுக்க நின்று கொண்டிருக்கிறது இமயமலை! மலையளவு எதிர்பார்ப்போடு சிவாஜி ரிலீஸானது.

சிவாஜிராவ் சூப்பர் ஸ்டாராக திரு.பாலசந்தர் முதல் நிறைய காரணங்கள்... அதில் ஒருவர் திருமதி.லதா! அவருடைய பொறுமையும் அமைதியும் விட்டுக் கொடுக்கும் பாங்கும்தான் ரஜினி வாழ்க்கையில் ஏற்பட்ட எத்தனையோ சூறாவளி சுனாமிகளுக்கு சூ... மந்திரக்காளி சொல்லி விரட்டியது. அந்த அன்புச் சகோதரியின் அழைப்பின் பேரில் எனக்கு அந்த நாலாயிர திவ்யப் பிரபந்த தரிசனம் கிடைத்தது. (நாலாயிரத்துக்கு திவ்யமாக விலை போனது எங்களுக்கு கொடுக்கப்பட்ட நாலு டிக்கெட்டின் மதிப்பு). படம் தொடங்கக் காத்திருந்தோம். காத்திருத்தல் எப்போதுமே சுகம். பாவாடை சட்டையில் பார்த்த அத்தைப் பெண் பத்து வருடங் கழித்து வரப்போகிறாள். அவளை வரவேற்க ரயில் நிலையத்தில் வழி மீது விழி வைத்துக் காத்திருப்பது (விழியை யாரும் வழியில் மிதித்து விடாமல்), அந்த ரயில் பத்து மணி நேரம் தாமதமானாலும் காத்திருப்பது சொல்லி மாளா சுகம். வரப்போகும் அத்தை மகள் வத்தலும் தொத்தலுமாக வருவாளா? தெத்துப் பல்லும் நத்தை மூக்குமாக வருவாளா? தப்பித்தவறி தளதளன்னு, தக தகன்னு வருவாளா? எதுவுமே தெரியாம, கருவிழி கபடி ஆடக் காத்திருப்பது உலகளாவிய உவகை!

திரையுலகக் காத்திருப்பு திரை விலகக் காத்திருந்தபோது எனக்குள் ஏகப்பட்ட flash backs.எனக்கும் ரஜினி சாருக்கும் இடையே!

நானும் ரஜினி ரசிகன்தான்! ஆனால் நல்ல படங்களுக்கும் அவரது நல்ல நடிப்புக்கும். ‘முள்ளும் மலரும்’,‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘அவள் அப்படித்தான்’... இப்படி ‘பாட்ஷா’ வரை!

நடிகரை மீறி அவர் மிக எளிமையான மனிதர். அந்த எளிமைக்கு நான் அடிமை! என் திருமணத்தைப் பற்றி நான் அவரிடம்தான் முதன் முதலில் சொன்னேன்!

அந்தளவு என் வாழ்க்கையில் முக்கியமானவர். தனக்குத் தெரிந்த ஞானத்தையும் - புத்திசாலித்தனத்தையும் திரையிடாமல், ரசிகனுக்கு எது பிடிக்குமோ அதை மட்டுமே செய்யக்கூடிய புத்திசாலி!

நான் ‘சுகமான சுமைகள்’ எடுத்து நஷ்டப்பட்டு, வங்கியில் வாங்கிய கடனை தவணை முறையில் அடைக்க நெஞ்சடைக்கப் போராடிக் கொண்டிருந்தபோது ரஜினி சார் அழைத்தார். அடுத்து நான் தயாரிக்கும் படத்தில் அவர் ‘கெஸ்ட் ரோல்’ நடித்துத் தருவதாகவும், முக்கிய பாத்திரத்தில் என்னை நடிக்கவும் சொன்னார். அப்போதைய சூழ்நிலையில் அவர் கௌரவ தோற்றத்தில் நடித்தாலே குறைந்த பட்சம் சில கோடியாவது லாபம் பார்க்கலாம்.

எவ்வளவு உயர்ந்த மனம் இருந்தால் இப்படி ஓர் உதவி செய்ய முன் வருவார்! கூடவே ஒன்றும் சொன்னார். ‘SPM மாதிரி நான் கடமைப்பட்ட சிலபேரு கேக்குறாங்க... கெஸ்ட் ரோல் பண்ணச் சொல்லி... நான் யாருக்கும் பண்ணலை. ஆனா உங்களுக்குப் பண்ணித் தரேன்’ என்றார். அந்த நெகிழ்ச்சியில் யாருக்குமே தூக்கம் வராது. எனக்கும் வரவில்லை. இரவெல்லாம் யோசித்தேன்.

மறுநாள் வாஹினி ஸ்டூடியோவில் ‘பாட்ஷா’ படப்பிடிப்பு. மதிய வேளையில் போய் அவரைச் சந்தித்தேன். உணவுக்குப் பின் என் உணர்வைச் சொன்னேன். ‘எனக்குச் சின்ன வயசு. உடம்புல தெம்பும் மனசுல தன்னம்பிக்கையும் நிறைய இருக்கு. ஆனா, SPM சாரெல்லாம் இப்பவே வயசானவங்க - நீங்களும் கடமைப்பட்டிருக்கீங்க! அவங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பைக் குடுத்தீங்கன்னா அவங்க உங்களை தெய்வமாப் பார்ப்பாங்க! அதுமட்டுமில்லாம எனக்குள்ள பிரச்னைக்காக நீங்க படம் பண்ணாம, எனக்குள்ள திறமைக்காகவும் என்னுடைய ஸ்கிரிப்டுக்காகவும் என்னைக்காவது நீங்க படம் பண்ணா... ரொம்ப நல்லா... பெருமையாயிருக்கும்’ சொல்லி முடித்ததும் அவர் அமர்ந்திருந்த ரிவால்விங் சேர் தானாக என் திசைக்குத் திரும்ப, பார்வையாலேயே பெருமிதம் பொங்கப் பார்த்தார்.

அந்தப் பார்வை என் உயரத்தை உயர்த்துவதாகயிருந்தது. ஐயோ அதுவே... அந்த வினாடியில் எனக்குக் கிடைத்த பெருமையே, பல கோடி பெறும்!

இன்று வரை அதே உயரத்தில் நான்... அதே நட்போடு அவர்...

திரையில் டைட்டில் ஓடிக் கொண்டிருந்தது.

இணை தயாரிப்பு...

S.P. முத்துராமன்

அப்பாடா!

(தரவு-கல்கி)

ஐஸ்வர்யாராயின் பலான புகைப்படங்கள்

தயவு செய்து பெண்கள்,குழந்தைகள்,சிறுவர்கள் இந்த பதிவினை தவிர்க்கவும்.



ஐஸ்வர்யா ராயின் திரைவாழ்வில் சர்ச்சையை கிளப்பிய சில புகைப்படங்கள் இங்கே!







டூ பீஸ் உடையில் நயன்தாரா!


'நயன்தாராவை நேரில் பார்த்தா பேசுவேன்'-சிம்பு!



சிவாஜி படத்தில் நயன்தாராவை பார்த்தவர்கள் முடி கயிறு போட வேண்டிய அவசியத்துக்கு ஆளாகியிருப்பார்கள். அந்தளவுக்கு ஓடாக தேய்ந்து உருமாறி போயிருக்கிறார். "தள, தள" நயன், இப்படி "தொள, தொள" நயன் ஆனதற்கு என்ன காரணம்? காதல் தோல்வியா? கடின உழைப்பா? இப்படி பட்டிமன்றம் வைக்காத குறையாக பேசிக் கொண்டிருக்கிறது கோலிவுட்!

இதற்கிடையில் அஜீத் நடிக்கும் பில்லா படத்தில் டூ பீஸ் உடையில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம் நயன்தாரா. இந்த செய்தி வந்ததிலிருந்து கலக்கத்தில் இருக்கிறார்கள் சிவாஜி படம் பார்த்த பில்லா தொழிலாளர்கள்.

மேலும், தெலுங்கு படமான துபாய் சீனுவில் முடிந்தளவு ஆடை குறைப்பு செய்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் அந்த படத்திலும் கருவாட்டுக்கு கால்சட்டை போட்ட மாதிரிதான் இருக்கிறாராம்.

நயன்தாரா பற்றி இன்னொரு செய்தி. யாரடி நீ மோகினி படப்பிடிப்பில் கையோடு ஒரு வீடியோ கேமிரா எடுத்துவந்து எல்லாவற்றையும் ஷ§ட் பண்ணிக் கொள்கிறாராம். எதற்கு என்பதுதான் புரியவில்லை.

இதற்கிடையில்

நயன்தாராவை நேரில் பார்த்தா பேசுவீங்களா? சிம்புவிடம் கேட்டால், ஏன்? பேசக்கூடாதா, அதிலென்ன தப்பு? பேசுவேன்.. கண்டிப்பா பேசுவேன்! என்கிறார். நயன்தாராவும் தனுஷும் இணைந்து நடிக்கிறார்கள். சிம்புவை பழிவாங்கதான் அவர் தனுஷோடு ஜோடி சேர்கிறார் என்ற பரவலான பேச்சும் இருக்கிறது. இதுபற்றி சிம்புவிடம் கேட்டால், தனுஷ் ஒரு நடிகர், நயன்தாரா ஒரு நடிகை. இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்க. இதைபற்றி ஏன் என்கிட்ட கேட்கிறீங்க? ஒருவேளை நயன்தாராவே என்னிடம், தனுஷோடு நடிக்கட்டுமா என்ற கேட்டால் நான் நடிக்கத்தான் சொல்லுவேன் என்கிறார் சிரித்துக் கொண்டே!

கமல் மாதிரி ஆகணும், ரஜினி மாதிரி ஆகணும்னு இப்போ உள்ள நடிகர்கள் சொல்றாங்க. எனக்கு பின்னாடி வர்ற நடிகர்கள் சிம்பு மாதிரி ஆகணும் என்று சொல்ற மாதிரி நான் சினிமாவில் பேர் எடுக்கணும் என்ற சிம்பு, அடுத்து கெட்டவன் என்ற படத்தை இயக்கி நடிக்கவிருக்கிறார்.

இந்த டைட்டில் வச்சப்போ இது வேண்டாம்னு சொன்னவங்க பல பேர். ஆனா, இந்த டைட்டிலுக்காகவே இந்த படம் ஓடும் என்கிறார் நம்பிக்கையோடு! சிம்பு ஆசை சிம்பிள் ஆசையா போய்விட கூடாது!




ஜீவாவின் வீட்டில் முன்னணி நடிகர்கள்

உடலை பார்க்க கண்ணீருடன் காத்திருக்கும் திரையுலகம்!



தமிழ் திரையுலகத்தையே உலுக்கி போட்டிருக்கிறது ஒளிப்பதிவாளாரும், இயக்குனருமான ஜீவாவின் மரணம். அவரது உடல் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு வர இரண்டு நாட்கள் ஆகும் என்ற நிலையில் தமிழ் திரையுலக முக்கிய பிரமுகர்கள் அவரது வீட்டிற்கு சென்று ஜீவாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். செய்தி கேள்விப்பட்ட உடன் விஜய் சென்று தனது துக்கத்தை வெளிப்படுத்தினார்.

ஜீவாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்யாவும், ஷாமும் தொடர்ந்து அவரது வீட்டிலேயே இருந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் விக்ரமின் நெருங்கிய நண்பராம் ஜீவா. செய்தி வந்த நிமிடத்திலிருந்து தொடர்ந்து அவரது வீட்டிலேயே இருக்கிறார் விக்ரம்.

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் ஜீவாவின் உடலை சென்னை கொண்டு வரவும், இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். லண்டனிலிருந்து தாம் தூம் பட யூனிட்டை சேர்ந்த யாரும் இன்னும் சென்னை வரவில்லை.

'கல்கி' தலையங்கம்

நெரிபடுகிறது நீதியின் குரல்வலை




ஆர்ஜன்டீனா தேசத்து நீதிபதி, நமது சி.பி.ஐ.க்கு வைத்துள்ள குட்டு நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டுமல்ல, நடுநிலையான, அரசு சாரா அமைப்பாக இயங்க வேண்டிய சி.பி.ஐ.யை இனி எந்த விஷயத்துக்குமே நம்ப முடியாது என்கிற முடிவுக்கு நம்மை வரச் செய்கிறது.

போ·பர்ஸ் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த
ஒட்டாவியோ குவாட்ரோச்சியை முதலில் தப்பவிட்டது சி.பி.ஐ. அவரது மேல்நாட்டு வங்கிக் கணக்கை இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, ஓசைப்படாமல் நீக்கி, அத்தனை பணத்தையும் அவர் வேறு தேசத்துக்குக் கொண்டு செல்ல சௌகரியம் செய்து கொடுத்தார் ஒரு மத்திய அமைச்சர்! அரசின் கவனத்துக்குக் கொண்டு வராமல் அமைச்சர் தன்னிச்சையாக இயங்கிவிட்டதாகத் தெரிவித்தார் பிரதமர்! சர்வதேச போலீஸ் குவாட்ரோச்சிக்கு வலை விரித்ததன் அடிப்படையில் ஆர்ஜன்டீனாவில் அவரை போலீஸ் கைது செய்து இந்தியாவுக்குத் தகவல் தந்தது. இதன் பிறகே வேறு வழியின்றி அவரை விசாரணைக்கு அழைத்து வர சி.பி.ஐ. மனு செய்தது! அந்த முயற்சியில் படுதோல்வியும் அடைந்திருக்கிறது!

தோல்விக்குக் காரணம் சி.பி.ஐ.யின் திறமையின்மை என்பதைக் காட்டிலும் திட்டமிட்ட முயற்சியின்மை என்றே கூற வேண்டும். வெறும் கண்துடைப்புக்காக ஒரு மனு தயாரித்தளித்து, ஆர்ஜன்டீன நீதிபதியின் வன்மையான கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது சி.பி.ஐ. நீதிபதி, கண்டனம் தெரிவித்ததோடல்லாமல், எதிர்த்தரப்புக்கு வீண் செலவு ஏற்படுத்தியதற்காக நஷ்ட ஈடும் அபராதமும் விதித்திருக்கிறார்.

வரி செலுத்தும் அப்பாவி இந்திய குடிமக்கள், போ·பர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குவாட்ரோச்சி முறைகேடு செய்து கோடிகோடியாக சம்பாதித்ததைச் சகித்துக் கொண்டதோடு, இப்போது சி.பி.ஐ.யின் மோசடி காரணமாக விளைந்துள்ள அபராதச் செலவையும் குவாட்ரோச்சிக்குக் கொடுத்து அழ வேண்டும்!

ராஜீவ்காந்திக்கும் போ·பர்ஸ் ஊழலுக்கும் தொடர்பு இருப்பதை
ஊர்ஜிதப்படுத்தக் கூடிய விசாரணைகள் அனைத்துமே அரசியல் செல்வாக்கினால் தடைபடுத்தப்பட்டு வந்துள்ளன; அல்லது பூசி மெழுகப்பட்டு வருகின்றன. ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறிவிட்டது சி.பி.ஐ. குற்றம் சாட்டப்பெற்ற அரசியல்வாதி அல்லது அவரது கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், வழக்குகள் உடனே வாபஸ் பெறப்படுகின்றன; அல்லது கிடப்பில் போடப்படுகின்றன. தப்பித் தவறி வழக்கை எடுத்து நடத்தினாலும், குற்றவாளி தப்புவதற்கு வசதியான விதத்தில் அது நடத்தப்படுகிறது. எதிர்கட்சியினர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு சி.பி.ஐ. விசாரணை ஆரம்பமாகிறது!



இப்படி எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்ட சி.பி.ஐ.தான் மதுரை தினகரன் அலுவலகத் தாக்குதல் வழக்கையும் விசாரித்துக் கொண்டிருக்கிறது; ஜெயலலிதா பேரில் உள்ள குற்றச்சாட்டுகளையும் விசாரித்துக் கொண்டிருக்கிறது. மாயாவதி ஆட்சிக்கு வந்ததுமே ‘தாஜ் காரிடார்’ வழக்கு கிடப்பில் போடப்படுகிறது. முலாயம் சிங் பேரில்
விசாரணை தொடங்க ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது.

நீதித்துறையைக் கடைசி நம்பிக்கையாக நாம் கொண்டிருக்கிறோம். ஆனால், வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்காமல் கண்துடைப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டால் நீதி ஜெயிப்பதற்குப் பதிலாக அதன் குரல்வளை நெரிக்கப்படுகிறது. வஞ்சகம்தான் ஜெயிக்கிறது.

எட்டாம் நூற்றாண்டில் சர்ஜரி - 'சுஜாதா'

நம் பழைய நூல்களில் மருத்துவக் குறிப்புகள் பல இருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டாம் நூற்றாண்டில் சுஸ்ருதர் எழுதிய நூல்களில் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சைகள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். தமிழிலக்கியத்தில் எனக்குத் தெரிந்தவரை முதல் அறுவை சிகிச்சையை பற்றிக் குறிப்பிட்டவர் குலசேகர ஆழ்வார்.

இவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரமன்னர். இன்றைய கொல்லம் நகரம் அன்று கொல்லி என்று அழைக்கப்பட்டது. அதைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர மன்னர் திடவிரதனின் மகன் குலசேகரர் பட்டத்துக்கு வந்து, மெள்ள மெள்ள அரசியல் நாட்டம் குறைந்து திருமாலின்பால் ஈர்க்கப்பட்டார் குலசேகரர். அதற்குச் சாட்சியாக −இருப்பது இவரது ‘பெருமாள் திருமொழி’யின் 105 பாடல்களே.

இவற்றில் ஒன்றில்தான் இந்த சர்ஜரிக் குறிப்பு உள்ளது.

‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல், மாயத்தால்
மீளாத் துயர் தா¢னும் வித்துவக்கோட்டு அம்மா! நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே’
(மாயத்தால் - விளையாட்டாக, ஆளா- அடிமை செய்வதற்கு)

‘ஒரு மருத்துவன் கத்தியால் அறுத்துச் சூடு போட்டாலும் அவன் அதை நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் செய்வதால் மருத்துவன் மேல் நீங்காத அன்பு ஏற்படுகிறது. அதுபோல் விளையாட்டு போல் நீ எனக்கு விடாத துன்பம் தந்தாலும் உனக்கு அடிமை செய்ய உன் அருளையே எதிர்பார்த்துக் காத்திருப்பேன்’ என்று வித்துவக்கோட்டில் உள்ள பெருமானிடம் சொல்கிறார்.

வித்துவக்கோடு கேரளத்தில் பட்டாம்பியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருக்கும் உய்யவந்த பெருமாள் கோயில் என்று சொல்கிறார்கள். இதை இன்று தேடிச் சென்று கண்டுபிடிக்க முடிந்தால் குலசேகரன் என்ற மன்னனையும் இந்த அருமையான பாடலையும் நினைத்துக் கொள்ளலாம்.

வாளால் அறுத்துச் சூடுபோட்டு! அனஸ்தீஸியா வரும்வரை ஜனங்கள் பெருமாளை நினைத்துக்கொண்டுதான் வலியைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்..

அமிதாப் - ரஜினி சந்திப்பு : பரபரப்பு பேட்டி

தமிழ்நாடு மட்டுமல்ல, உலக நாடுகளை யே பரபரப்பாக பேச வைத்திருக்கும் ஏவிஎம்மின் பிரம்மாண்ட தயாரிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மெகா டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "சிவாஜி' படத்தின் பிரத்யேக காட்சி இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக மும்பையில் நேற்று திரையிடப்பட்டது.

"சிவாஜி' படத்தை பார்த்து அமிதாப் பிரமித்தார். ரஜினியின் வித்யாசமான நடிப்பை ரசித்து பார்த்த அவர் ரஜினியை கட்டிப்பிடித்து மனம் திறந்து பாராட்டினார்."நான் நடிப்பில் மன்னன் என்றால், அமிதாப்பச்சன் நடிப்பில் சக்கரவர்த்தி' என்று நிருபர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

ரஜினி என்னை சக்கரவர்த்தி என்று விமர்சித்திருக்கிறார். அது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. ஆனால் உள்ளபடியே சொல்ல வேண்டும் என்றால் ரஜினி மிகமிக சிறந்தவர் என்று அமிதாப் பாராட்டினார்.

ரஜினியும், நானும் பல படங்களில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறோம். அவர் என்னுடைய சிறந்த நண்பர். அவருடைய நல்ல குணம், தோற்றம், குணாதிசயம் ஆகிய வற்றை பார்க்கும்போது ஒரே வார்த்தையில் கூறுவதாக இருந்தால் அவர் ஒரு அபூர்வமான மனிதர்.
அவர் முதன் முதலாக தனது சம்பாத் தியத்தில் வாங்கிய "பியட்' காரைத்தான் இன்னமும் பயன் படுத்தி வருகிறார்.

சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து இந்த உயர்ந்த நிலையை அவர் அடைந்துள்ளார். எனினும், அவர் தன்னுடைய பழக்க வழக்கங் களில் சிறு துளி அளவுக்கு கூட மாறவில்லை. ஒவ்வொரு இந்திய இளைஞனுக்கும் அவர் சிறந்த உதாரணம்.

"நம்பிக்கை, உறுதி, திறமை உங்களுக்கு இருந்தால் கடினமாக உழையுங்கள் வானத்தை தொடலாம்' என்பதே அவரது வாழ்க்கை உணர்த்தும் பாடம். எனவே அவரை அபூர்வமான மனிதர் என்று கூறுவது மிகவும் பொருத்தமானது.

மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இந்தி திரைப்படங்களுக்கு இணையாக ஹவுஸ்புல் காட்சிகளாக "சிவாஜி' ஓடிக் கொண்டு இருக்கிறது. இங்கிலாந்தில் "டாப் 10' பட வரிசையில் முதன் முதலாக ஒரு தமிழ் படத்தை இடம்பெற செய்த பெருமையையும் "சிவாஜி' தட்டிச் சென்றுள்ளது.

"வாழ்க்கை ஒரு ரயில்வே பிளாட்பாரம்' - லாலு

உலக வாழ்க்கை என்பது ரயில்வே பிளாட்பாரம் போன்றது. ஒரு ரயிலில் வருபவர் மற்றொரு ரயிலில் போய்த்தான் ஆக வேண்டும்' என்று தத்துவம் பேசி மெய்சிலிர்க்க வைத்தார் மத்திய அமைச்சர் லாலு பிரசாத்.

யோகா குரு ராம்தேவ் தலைமையிலான புத்தக வெளியீட்டு விழாவில் செவ்வாய்க்கிழமை லாலு கலந்து கொண்டார்.

வாழ்க்கையில் அனைவருக்குமே நோய்கள் வரும் என்பது இயற்கைக்கு முன்பே தெரியும். இதற்காகவே தில்லி முழுவதும் நாவல் மரங்கள் நிறைந்திருக்கின்றன. வயிறுமுட்ட நாவல் பழங்களைச் சாப்பிட்டால் நோயே வராது. தில்லியில் உள்ள வேப்ப மரத்தில் துர்காதேவி குடியிருப்பதாக நம்பப்படுகிறது. சமைப்பதற்காக வீடுளில் குக்கர்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

முறையற்ற வாழ்விலிருந்து முறையான வாழ்க்கைக்கு மாறுவதற்கு செலவில்லாத, வலியில்லா வழி யோகாசனம்தான். எங்கள் ஊரில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் சிறுநீர் அல்லது எலுமிச்சையைப் பயன்படுத்தி எளிதாகக் குணமாக்குவார்கள். குரு ராம்தேவ் தனது எல்லா மருத்துவ ரகசியங்களையும் வெளியிட்டுவிடக் கூடாது. தனது மருந்து தயாரிப்பு நிலையங்களுக்குள் நம்பிக்கைக்கு உரியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், அந்த ரகசியங்களைத் தெரிந்துகொண்டு சிலர் பணம் சம்பாதித்துவிடுவர் என்றார் லாலு.

'ஜெ' க்கு தேர்தல் ஆனையம் ஆப்பு!

ஜெயலலிதா மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையம் உத்தரவு


ஜெயலலிதா மீது வழக்குத் தொடருமாறு, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என விதிமுறை உள்ளது. ஆனால், 2001 சட்டப் பேரவைத் தேர்தலின்போது கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஆண்டிபட்டி மற்றும் புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்த ஜெயலலிதா, தான் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதாக தேர்தல் ஆணையத்துக்கு தவறான தகவல்களைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2001 சட்டப் பேரவைத் தேர்தலில் தவறான தகவல்களைக் கொடுத்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, திமுக எம்பி குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 6 வாரங்களுக்குள் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 13-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. தவறான தகவல்களைக் கொடுத்ததாக ஜெயலலிதா மீது வழக்குத் தொடர போதிய சான்றுகள் உள்ளதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குகளைப் பதிவு செய்யுமாறு புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"2001 சட்டப் பேரவைத் தேர்தலின்போது மேற்குறிப்பிட்ட 2 தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகளாகப் பணிபுரிந்தவர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டும், அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது தொடர்பாக அவர்களின் சொந்தக் கருத்தை தெரிவிக்குமாறு கூறியும் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு' தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

2001 சட்டப் பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல்கள் முடிவடைந்த பின்னர், அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி, அரசமைக்குமாறு ஜெயலலிதாவை மே 2001-ல் அழைத்தார். இதைத் தொடர்ந்து அவர் முதல்வரானார்.

ஆனால், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என நவம்பர் 23, 2001-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. டான்சி வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்தது.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் சிறிது காலம் முதல்வராகப் பதவி வகித்தார். பின்னர் ஆண்டிபட்டித் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா மார்ச் 2002-ல் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றார்.

ரஜினி சொன்ன 3 தவளை கதை

"வெற்றி பெறுவது எப்படி? - ரஜினி"




""பேசுகிறவர்கள் பேசட்டும். வாழ்க்கை யில் சில மனிதர்கள் மத்தியில் செவிடாகி விட வேண்டும். அப்பதான் சாதிக்க முடியும். இல்லைன்னா வாழ்க்கை வீணாகப் போய் விடும்'' என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

"சந்திரமுகி' படத்தின் 804வது நாள் விழாவில் ரஜினிகாந்த், 3 தவளைகளின் கதையை சொன்னார். வெற்றியை தக்க வைத்துக் கொள்வது எப்படி? என்று அந்த கதையில் அவர் குறிப்பிட்டார். விழாவில், முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர் களுக்கு கேடயங்களை வழங்கினார்.

ரஜினிகாந்த், பிரபு, வடிவேல், விஜயகுமார், நாசர், வினித், டி.பி.கஜேந்திரன், மனோ பாலா, தியாகு, மதன்பாப், நடிகை ஷீலா, இசையமைப்பாளர் வித்யாசாகர், டைரக்டர் பி.வாசு மற்றும் பலர் முதலமைச்சர் கருணாநிதி யிடம் இருந்து கேடயங்களை பெற்றார்கள்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய தாவது:

"சந்திரமுகி' இத்தனை நாட்கள் ஏன் ஓடியது? என்று எண்ணிப் பார்த்தேன். அந்த படத்தை, என் குருநாதர் பாலசந்தர் அருகில் அமர்ந்துதான் பார்த்தேன். படம் பார்க்கும் போது அவர் ஒன்றுமே சொல்லவில்லை. படம் முடிந்ததும் அவருடைய இரும்பு கையினால் என்னை தட்டிக்கொடுத்து, "பென்டாஸ்டிக்' என்றார். அப்போதே எனக்கு குளிர் விட்டுப்போச்சு.

"சந்திரமுகி' படத்தின் கதை புதுசாக இருந்தது. புது புது சீன்கள். புது சூழல். படத்தில் ஒரு புதுமை இருக்கணும்னு ஜனங்க விரும்பறாங்க. அது, சந்திரமுகியில் இருந்தது. காதல், நட்பு, குரோதம் என எல்லா அம்சங்களும் படத்தில் இருந்தது.

சந்திரமுகி படத்தை ஆரம்பித்தபோது, ரஜினி பாட்ஷா, முத்து, படையப்பான்னு படம் பண்ணிட்டு, அதென்ன சந்திர முகின்னு ஒரு படம் பண்றார். சரியா வராதுப்பா என்றார்கள். சிலர், அந்த படத்தின் மலையாள பதிப்பை பார்த்துவிட்டு, ஒண்ணுமே இல்லை என்றார்கள். சிலர், "ஆப்தமித்ரா' கன்னட படத்தை பார்த்து விட்டு, 4 வாரம்தான் என்றார்கள்.

ஒரு கதை உண்டு. ஒரு பெரிய மலை. அதில், மூன்று தவளைகள் ஏற முயன்றன. மலையின் வழி நெடுக பாம்பு, தேள்கள் இருக்கிறது... போகாதே என்று பயம் காட்டினார்கள். ஒரு தவளை 100 அடி ஏறியதும் கீழே விழுந்து விட்டது. இன்னொரு தவளை 300 அடி தூரம் ஏறியதும் கீழே விழுந்து விட்டது. இன்னொரு தவளை மட்டும் மலை உச்சியை தொட்டது.

அந்த தவளைக்கு காது கேட்காது. அது மாதிரிதான் ரஜினிக்கும் காது கேட்காது. இது சிவாஜி, என்.டி.ஆர்., கருணாநிதி போன்றவர்களிடம் நான் கற்றுக்கொண்டது.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

எழுத்தாளர்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு - எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என தனது எழுத்துகளின் மூலம் தமிழக மக்களின் மனங்களுடன் மிகுந்த நெருக்கத்தில் இருப்பவர். `பாபா', `சண்டைக்கோழி', `உன்னாலே உன்னாலே' முதலிய படங்களுக்கு வசனம் எழுதியவர். தற்போது ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கும் `தாம் தூம்' படத்திற்கும், இயக்குநர் லிங்குசாமியின் `பீமா' படத்திற்கும் வசனம் எழுதியிருக்கிறார். அவரிடம் நடந்த சிறிய உரையாடல்...

நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்?

குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்தது போல்தான் நாம் அனைவரும் வாழ்க்கையைப் புரிந்து வைத்துள்ளோம். எனது வீட்டிற்கு எதிரில் இருக்கும் மரமும், நான் ஆஸ்திரேலியாவில் பார்த்த மரமும் வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். அவை ஒரே பூமியில்தான் வேரூன்றி இருக்கின்றன என்ற உண்மையை மறந்து விடுகிறோம். இப்படி வாழ்க்கையை ஒட்டு மொத்தமாகப் புரிந்து கொள்ள, நான் புரிந்து கொண்டதை இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்ளத்தான் எழுதுகிறேன்.

நாவல், சிறுகதை எழுதுவதற்கும், திரைப்பட வசனம் எழுதுவதற்கும் என்ன வேறுபாடு?

நாவல், சிறுகதைகளை நான் முழுக்க முழுக்க எனக்காகத்தான் எழுதுகிறேன். விருப்பப்பட்டால் மட்டுமே அதை நான் வெளியிட்டு மற்றவர்கள் படிக்க முடியும். ஆனால் திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சி. அதில் ஒரு பகுதியாக இயக்குநரின் கதாபாத்திரங்களுக்கு வசனம் எழுதி கொடுக்கும் பொறுப்புதான் என்னுடையது. எனவே அடிப்படையில் இரண்டுமே வெவ்வேறு துறைகள்.

ஒரு எழுத்தாளர் சினிமாவில் வந்து என்ன சாதிக்க முடியும்?

திரைப்பட வசனங்கள் மூலம் நான் நினைக்கும் சில விஷயங்களை சொல்ல முடியும் என நினைக்கிறேன். கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி சுவாரஸ்யமான வசனங்களையும் எழுத முடியும். உதாரணமாக `தாம் தூம்' படத்தில் பாதிக்கதை பொள்ளாச்சி பகுதிகளிலும், மீதிக் கதை ரஷ்யாவிலும் நடக்கிறது. ரஷ்யர்கள் கதாநாயகனிடம் பேசும் போது, ரஷ்ய மொழி புரியாவிட்டாலும் படம் பார்ப்பவர்களுக்கு புரியும் வகையில் வசனங்களை அமைத்துள்ளேன்.

சண்டைக்கோழி படத்தில் "வா! வந்து அருவாள வீசிப்பாரு'' என்று தென்மாவட்ட பேச்சுவழக்கில் வசனம் அமைத்திருப்பீர்கள். ஆனால் `உன்னாலே உன்னாலே' படத்தில் மேல்தட்டு மக்களின் வசனங்களை எழுதியிருக்கிறீர்கள். இப்படி பல்வேறு தரப்பு வசனங்களை எழுதுவதில் சிரமம் இல்லையா?

நான் வசனம் எழுதப்போகிற கதாபாத்திரங்களின் வாழ்வியல் சூழல், குணநலன் என வேர் வரை ஆய்வு செய்து பிறகுதான் வசனம் எழுதுகிறேன். கிராமங்கள் எனக்கு நன்கு அறிமுகமானவை. பொருளாதார ரீதியில் வசதியான இளைஞர்களிடம் பழகி இருக்கிறேன். எனவே அவற்றை எழுதுவது சிரமமாக இல்லை. வெளிவர இருக்கும் `பீமா' படம் நிழல் உலக தாதாக்களின் கதை என்பதால் அதற்கு தகுந்தபடி வசனம் எழுதி இருக்கிறேன்.

வசனங்கள் எழுதுவதற்கான வரையறை என்ன?

படம் பார்க்கும் ரசிகர்களுக்கு, வசனங்களுக்கும் பின் ராமகிருஷ்ணன் என்னும் எழுத்தாளன் மறைந்திருக்கிறான் என்ற எண்ணம் ஏற்படாதபடி எழுதுகிறேன். படத்தில் கதாபாத்திரங்கள் மிகையில்லாத வசனங்களை பேச வேண்டும். அதில் எனது புத்திசாலித்தனத்தைப் புகுத்த மாட்டேன். இதுதான் நான் கடைப்பிடித்து வரும் வரையறை.

புதுமைப்பித்தன், பாரதிதாசன் என முந்தைய தமிழக எழுத்தாளர்கள் சினிமாவில் நுழைந்து அதில் வெற்றி பெறவில்லை. `எல்லா நதியும் கடலில் கலப்பது போல எழுத்தாளர்களின் முடிவான ஆசை சினிமாதான்' என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

புதுமைப்பித்தன் சினிமாத்துறைக்கு வந்ததன் பின்புலம் வேறு. அவரது நண்பர் பி.எஸ்.ராமையா போன்றவர்கள் அப்போது சினிமாத்துறையில் இருந்தார்கள். பாரதிதாசன் திராவிட இயக்கத் தலைவர்களான அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் சினிமாவில் இருந்ததால் ஈர்க்கப்பட்டு சினிமாத்துறையில் ஈடுபட்டார். நான் சினிமாவிற்கு வந்த பாதை வேறு.

கதை என்னை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறதோ அங்கு நான் செல்வேன். கதைக்கான எல்லா வடிவங்களையும் முயற்சித்து பார்த்த நாம் ஏன் சினிமாவிலும் முயற்சித்து பார்க்கக்கூடாது? என்று தோன்றியதன் விளைவாக நான் வசனம் எழுத வந்தேன்.

தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு மரியாதை கிடையாது என்ற கருத்து உள்ளதே?

என்னைப் பொறுத்தவரையில் நான் இந்தக் கருத்தை மறுக்கிறேன். தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களை விட, மக்களுக்கு திருவள்ளுவர், கம்பர் போன்ற புலவர்களைத்தான் அதிகம் தெரியும். அவர்களை மக்கள் இன்றும் போற்றி வருகிறார்கள். அதைப்போல் பாரதி, ஜெயகாந்தன் என தமிழ்நாட்டின் எழுத்தாளர்களுக்கு மக்களின் மனதில் நீங்காத இடம் உண்டு.

எழுத்தாளர்கள் என்றால் கோபக்காரர்கள், சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாத மனிதர்கள் என்ற கருத்தும் உள்ளதே?

இதுவும் தவறான கருத்தாகும். எழுத்தாளர் என்பவர் எழுதும் போது மட்டும்தான் வேறு மனிதர். மற்றபடி அவரும் சாதாரணமானவர்தான். எழுத்தாளர் மக்களுக்காக என்ன எழுதியிருக்கிறார், அது மக்களை எந்த அளவிற்கு சென்றடைந்துள்ளது என்பதைப் பொறுத்துதான் மக்கள் எழுத்தாளரை மதிக்கிறார்கள். மக்களைப் பற்றி கவனமோ, கவலையோ கொள்ளாத எழுத்தாளர்களை மக்களும் மறந்து விடுவார்கள். எனவே மக்கள் எழுத்தாளர்களிடம் சாதாரணமாகவே பழகி வருகிறார்கள்.

ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வீச்சு உடைய எழுத்தாளர்கள் இல்லாதது ஏன்?

உண்மைதான். ஆனால் ஜெயகாந்தனின் பின்புலமும், அவர் எழுதிய காலம் வேறு. அதற்கு பிறகான காலம் வேறு. அவருக்கு அரசியல் இயக்கங்களுடன் தொடர்பிருந்ததாலும், ஒரு போராளியாக இருந்த காரணத்தாலும் மக்களை சென்றடைய முடிந்தது. ஆனால் இப்போது ஊடகங்கள் பெருகிவிட்டன. எழுத்தாளர்கள் சொல்ல விரும்பும் பிரச்சினைகளை இப்போது ஊடகங்கள் எழுதி, விவாதித்து விடுகின்றன. இதனால் எழுதுவதற்கான விஷயங்களும் சுருங்கிவிட்டதும் இதற்கு ஒரு காரணம்.

உங்களின் எழுத்துகள், சகித்து கொண்டு வாழ வேண்டிய, தவறு நடக்கும்போது தட்டி கேட்க முடியாமல் வேடிக்கைப் பார்த்துவிட்டு பிறகு புலம்புகிற நடுத்தரவர்க்க மனநிலையின் வெளிப்பாடாக இருப்பது ஏன்?

நான் வாழ்வது நடுத்தர வர்க்கச் சூழல்தான். எனது சொந்தக்காரர்கள், என்னைச் சுற்றி வாழ்பவர்கள் என எல்லோரும் நடுத்தர வர்க்கமாக இருக்கிறார்கள். எனவேதான் மேலேயும் போகமுடியாமல் கீழேயும் வரமுடியாமல் இடையில் தவித்து மிதக்கிற நடுத்தர மக்களின் வாழ்வையும், ஆசையையும்தான் பெரும்பாலும் நான் பதிவு செய்கிறேன்.

உதாரணமாக ஒருவரைப் போட்டு போலீஸ்காரர் அடித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு முந்தைய நிகழ்வும் எனக்குத் தெரியாது, அதற்கு அடுத்த நிகழ்வும் எனக்கு தெரியாது. இந்நிலையில் இடையில் போய் நுழைந்து சிக்கலில் மாட்ட விரும்பவில்லை. தவறை தட்டிக்கேட்க நான் ஒரு `ஆக்டிவிஸ்ட்' இல்லை. எனவே அந்நிகழ்வை பதிவு செய்வதோடு இருந்துவிடுகிறேன்.

தமிழ் சினிமா தொடாத கதை வடிவங்கள் இருக்கின்றதா?

ஏகப்பட்டவை உண்டு. நமது வரலாற்று நாயகர்கள், சுதந்திரப்போராட்ட வீரர்களின் வாழ்வை நாம் திரைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தவில்லை. இந்தியில் `மங்கள் பாண்டே', `பகத்சிங்' என்று சுதந்திர போராட்டத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கிறார்கள். தமிழில் வாஞ்சிநாதனின் வாழ்க்கை, அவர் ஆங்கிலேய கலெக்டரை சுட்டுக்கொள்ள போட்ட திட்டம் போன்றவற்றை நாம் படமாக எடுத்தால் வணிக ரீதியாகவும் அப்படம் வெற்றி பெறும். அதைப்போல பெண்களை நாயகிகளாக கொண்ட படங்கள் தமிழில் அதிகம் வரவில்லை. பதினைந்து வயதுக்குள்ளான சிறுவர்களின் வாழ்க்கை... இப்படி தமிழ் சினிமா தொடாத எத்தனையோ கதை வடிவங்கள் உண்டு.

வசனத்திற்கு அடுத்தபடியாக படங்களை இயக்கும் எண்ணம் உண்டா?

நான் தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை மட்டுமே யோசித்து அதில் கவனம் செலுத்துவேன். அடுத்தகட்ட திட்டங்களைப் பற்றி நான் சிந்திப்பதில்லை. நாளையே நான் இயக்குநராகவும் ஆகலாம் அல்லது சினிமா வேண்டாமென்று ஒதுங்கியும் விடலாம்.

பிரதிபாவுக்கு சிவசேனை ஆதரவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதிபா பாட்டீலை ஆதரிப்பது என்று பால் தாக்கரே தலைமையிலான சிவசேனைக் கட்சி முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி-இடதுசாரி கட்சிகளின் ஆதரவில் பிரதிபா பாட்டீல் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவசேனை எடுத்துள்ள இந்த முடிவு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், பைரோன் சிங் ஷெகாவத்துக்கும் பெருத்த பின்னடைவாகும்.

சிவசேனை கட்சிக்கு மகாராஷ்டிர சட்டப் பேரவையில் 56 எம்.எல்.ஏ.க்களும் மக்களவையில் 15 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 3 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த அனைவரின் வாக்குகளுடைய மொத்த மதிப்பு 22 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரதிபாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

சிவசேனை கட்சி நிர்வாகிகள் கூட்டம் தலைவர் பால் தாக்கரே தலைமையில் மும்பையில் திங்கள்கிழமை நடந்தது. பிறகு இந்த முடிவு குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது.

"பைரோன் சிங் ஷெகாவத் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அல்ல; சுயேச்சையாகத்தான் போட்டியிடுகிறார். சுயேச்சையாக நிறுத்தப்பட்டால்தான் பிற அணியிலிருந்தும் அவரை ஆதரிப்பார்கள் என்று கூறுகிறார்கள். இந்த மாதிரியான நேர்மையற்ற அரசியல் பேரத்தை நாங்கள் விரும்பவில்லை.

"நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த எவருமே உயர் பதவிக்கு வந்ததே இல்லை. முதல்முறையாக இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை கட்சிக் கண்ணோட்டத்தில் கோட்டைவிட சிவசேனை தயாராக இல்லை.

"மகாராஷ்டிரம் என்ற தனி மாநிலம் ஏற்பட்டதன் பொன்விழா ஆண்டு நெருங்கி வருகையில் மாநிலத்துக்கு இப்படியொரு கெüரவம் கிடைப்பதை சிவசேனை இழக்க விரும்பவில்லை. பிரதிபா குறித்து ஊழல் புகார்களையும் வேறு புகார்களையும் கூறி, புழுதிவாரித் தூற்ற வேண்டாம் என்று தேசிய ஜனநாயக கூட்டணியை, குறிப்பாக பாரதீய ஜனதாவை கேட்டுக் கொள்கிறோம்.

மராட்டியர்களின் மொழி, கலாசாரம், பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் காப்பதற்காகத்தான் சிவசேனை பாடுபடுகிறது. எனவே பிரதிபாவை ஆதரிப்பது என்ற முடிவை கட்சி எடுத்துள்ளது' என்று சிவசேனை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

3 கட்சிகள் ஆதரவில்லை: பைரோன் சிங் ஷெகாவத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள 3 கட்சிகள் ஆதரிக்கவில்லை என்பது திங்கள்கிழமை அக் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்புமனு தாக்கலுக்கு வராததிலிருந்து தெரிகிறது.

சிவசேனை, திரிணமூல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளின் பிரதிநிதிகள் வேட்புமனு தாக்கலுக்கு வரவில்லை.

""பிரதிபாவும் வேண்டாம், ஷெகாவத்தும் வேண்டாம், அப்துல் கலாமே தொடரட்டும்'' என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மம்தா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றிருந்தாலும், ஒப்புக்கொண்டபடி அக் கட்சியைச் சேர்ந்தவருக்கு உரிய நேரத்தில் முதல்வர் பதவியை மாற்றித் தருவார்களா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. எனவே அவர்கள் சார்பில் யாரும் வராததால், ஷெகாவத்தை அவர்கள் ஆதரிப்பதும் சந்தேகமாகவே இருக்கிறது.

சென்னையில் அணுஆயுத கப்பல்!


அமெரிக்காவின் அணு ஆற்றல் போர்க்கப்பல் ஜூலை முதல் தேதியில் சென்னைக்கு வந்து, அங்கு நான்கு நாள்கள் இருக்கும்.இந்தக் கப்பலுக்கு யு.எஸ்.எஸ்., நிமிட்ஜ் என்று பெயர். ஓல்டு சால்ட் (பழைய உப்பு) என்றும் அதை அழைப்பார்கள். அமெரிக்க நாட்டின் நியூபோர்ட் நகரில் கட்டப் பட்ட இக்கப்பல் 1975 மே 3 இல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது அட்மிரல் செஸ்டர் நிமிட்ஜ் என்பவர், பசிபிக் மாக்கடலில் கடற்படைத் தளபதியாக இருந்தவர். அவர் நினைவாக இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
மணிக்கு 30 (கடல்) மைல்கள் வேகத்தில் இந்த அணு ஆற்றல் கப்பல் செல்லும். 1988 இல் சியோல் உலக (ஒலிம்பிக்) விளையாட்டின்போது, பாதுகாப்புத் தருவதற்காக இதைக் கொரியா நாட்டின் கடற் கரையில் நிறுத்தியிருந்தார்கள்.

இந்தக் கப்பலில் விமானங்களை நிறுத்துவதற்கு எனத் தனியாக விமானத்தளம் இருக்கிறது. 4.5 ஏக்கர் பரப்புள்ள அந்தத் தளத்தில் இருந்து 75 போர் விமானங்கள் பறந்து சென்று செயல்படலாம். 2003 ஏப்ரலில், இக்கப்பலின் ஓடு தளத்தில் இருந்து விமானங்கள் புறப்பட்டு, ஈராக்கைத் தாக்கின.

இந்த நிமிட்ஜ் போர்க் கப்பல் இப்பொழுது மேற்கு ஆசியாவில் உள்ள பாரசீக வளைகுடாவில் இருந்து வருகிறது. இதில் 6000 மாலுமிகள் இருக்கிறார்கள். மூன்று ``கடல் குருவி’’ ஏவுகணைகள் மற்றும் வெவ்வேறு வகையான பீரங்கிகள் பல இதில் உள்ளன. அவற்றுடன் மூன்று வகையான போர் விமானங்கள் பலவும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தக் கப்பலுக்குள் இருக்கும் இரண்டு அணுஉலைகள், இதற்கு வேண்டிய ஆற்றலை அளிக்கின்றன.

அச்சம் பரவியது ஏன்?

சென்னைத் துறைமுகத் தொழிலாளிகளும், இந்திய நீர்ப் போக்குவரத்து ஊழியர் பேரவையும் இந்தக் கப்பல், இந்தியாவைச் சேர்ந்த கடல் எல்லைக்குள் வருவதைத் தடுத்து நிறுத்தக் கோருகிறார்கள். இந்தக் கப்பல் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என அஞ்சுகிறார்கள்.
அச்சத்தின் காரணம், துறைமுகக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில் உள்ள விசயம்தான்.

எந்த வகையான நெருக்கடியையும் சமாளிக்கத் தயாராக இருக்கும்படி அந்தச் சுற்றறிக்கை அலுவலர்களைக் கேட்டுக் கொள்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் ஆகியோரைக் கொண்ட அணி ஒன்றை உருவாக்கிட முதன்மை மருத்துவ அலுவலர் (சி.எம்.ஓ.) கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார். எதிர்பாராத ஆபத்து ஏற்பட்டால், தேவை யான மருந்துகள் அணு ஆற்றல் துறையால் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

நீர்ப் போக்குவரத்து ஊழியர் பேரவையின் பொதுச்செயலாளர் டி. நரேந்திர ராவ், மத்திய அமைச்சுச் செயலாளருக்கும், கப்பல் மற்றும் துறைமுகக் கழகத் தலைவருக்கும் மடல் வரைந்துள்ளார். அதில், "அணு ஆற்றல் கப்பலில் ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால், அதனால் உண்டாகும் கதிர் வீச்சு சென்னை மாநகரையும், அண்டை மாநிலங்களையும் அழித்துவிடும்’’ எனக் கூறப்பட்டிருக்கிறது.

வெளிப்புற நங்கூரம் பாய்ச்சும் இடத்தில் கப்பல் நிறுத்தப்படும். அதைச் செலுத்துவோர், சிறு படகுகளில் துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். இருப்பினும், கப்பலில் உள்ள இரண்டு அணு உலைகளால் ஆபத்து ஏற்படும் எனப் பேரவையினர் கருதுகிறார்கள்.

தமிழகத்தில் குழந்தையின்மை - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் 10 சதவிகித தம்பதிகளுக்கு குழந்தை இல்லை: சுகாதார செயலாளர் தகவல்.



தமிழகத்தில் புகை பிடித்தல் உள்பட பல் வேறு காரணங்களால் 10 சதவிகித தம்பதியினருக்கு குழந்தையின்மை பிரச்சினை உள்ளது என சுகாதாரத் துறைச் செயலாளர் வி.கே. சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை - வடபழநியில் உள்ள ஆகாஷ் குழந்தை யின்மை சிறப்பு சிகிச்சை மையம் ஏற்பாடு செய்திருந்த தேசிய குழந்தையின்மை சிகிச்சை மாநாட்டை ஜூன் 24 அன்று தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

உலக சுகாதார நிறுவனத் தின் அறிக்கையின்படி 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களில் 15 சதவிகித சிறுவர்களுக்கும், 7 சதவிகித சிறுமிகளுக்கும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. உலகில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் புதிதாக புகை பிடிக்க ஆரம்பிக்கின்றனர். ஆண்மைக் குறைவுக்கு புகை பிடிக்கும் பழக்கம் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

புகை பிடித்தல், சுற்றுச் சூழல் மாசு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் 10 சதவிகித தம்பதியினருக்கு குழந்தையின்மைப் பிரச்சினை உள்ளது. குறிப்பாக கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இது அதிகமாக உள்ளது. இதற்கான காரணம் தெரிய வில்லை.

குழந்தையின்மைப் பிரச்சினையைப் பொறுத்தவரை மூடநம்பிக்கைகள் அதிக அளவுக்கு உள்ளன. இதுபோன்ற மருத்துவ மாநாடுகளை தமிழகம் முழுவதும் நடத்தி பொது மக்களிடையே குழந்தையின் மைப் பிரச்சினைக்கான காரணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

புதிய திராவிட மொழி!

வங்காளத்தில் இதுவரை தெரியாத
ஒரு திராவிட மொழி


கிழக்கு வங்காளத்தில், அதாவது வங்காள தேசத்தில், பெரிய அளவில் உள்ள சிறுபான்மையர் பேசும் பகதி (Bagdi) மொழி ஒரு திராவிட மொழி எனக் கருதப்படுகிறது. அம் மொழியைப் பேசுவோர் கறுப்பாகவும் சுருட்டை முடியை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பேசும் மொழியின் சொற்கள் அதிகமாக இல்லை.

இந்தியத் துணைக் கண்டத்தில் பேசப்படும் திராவிட மொழிகளுடன் பகதி மொழிக்கு அதிக ஒற்றுமை இல்லை. சங்கமித்ரா சஹா எனும் அம்மையார், கிழக்கு வங்காளத்தில் உள்ள மொழிகளைக் குறித்த கள ஆய்வு செய்தார். அப்பொழுது பல முஸ்லீம்கள் தங்களை திராவிடர்கள் எனக் கூறிக் கொண்டதைக் கண்டார். அப்பொழுது அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்து மத்தைச் சேர்ந்த வங்காளிகளின் மீதான வெறுப்பின் வெளிப்பாடாக அவ்வாறு அவர்கள் சொல்வதாக (அப்பொழுது) விளங்கிக் கொள்ளப்பட்டது. அவர்கள் திராவிடர் எனக் கூறிக் கொண்டது, கிழக்கு வங்காளத்தில் அவர்கள் பேசிய திராவிட மொழி காரணமாக இருக்கலாம். மேற்கொண்டு புலனாய்வு தேவைப்படுகிறது.

மூலம்:Mohammed Zahidar Rahman, “Bagdi” in Journal of the Asiatic Society of Bangladesh, Vol. 51 (2), 2006, pp 349-366.
e‹¿: DLA News, Thiruvananthapuram, June 2007)

சம்பந்திகளு!


ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் நாயுடுவுக்கும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகள் பிராம்மனிக்கும் ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. அதாவது, என்.டி.ராமராவின் பேரன், பேத்தியான அத்தை மகனும் மாமன் மகளும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். நிச்சய விழாவில் கைகோர்த்து போஸ் கொடுக்கின்றனர் சம்பந்திகள்.

சிறுவன் செய்த சிசேரியன் - பெற்றோர் கைது

மாணவர் சிசேரியன் செய்த விவகாரம் ,டாக்டர்களான தாய், தந்தை கைது.






மணப்பாறை மாணவன் சிசேரியன் செய்த வழக்கில் டாக்டர் தம்பதிகளை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் போலீஸ் ஸ்டேஷனில் தீவிர விசாரணை நடக்கிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் டாக்டர் முருகேசன். இவரது மனைவி டாக்டர் காந்திமதி. இவர்களது மகன் திலீபன்ராஜ். கடந்த மே மாதம் மணப்பாறையில் நடந்த இந்திய மருத்துவர் கழக கூட்டத்தில் பேசிய டாக்டர் முருகேசன், தனது 14 வயது மகன் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் செய்ததாகவும், ஒரு சாதனை முயற்சிக்காக இது செய்யப் பட்டதாகவும் கூறினார். அப்போது அதுபற்றிய ஒரு சிடியையும் போட்டுக் காண்பித்தார். இதை பார்த்த மற்ற டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். டாக்டர் முருகேசனின் இந்த செயலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்த புகார் எழுந்ததை தொடர்ந்து திருச்சி கலெக்டர் ஆசிஷ் வச்சானி உத்தரவின்பேரில் ஆர்டிஓ ரமணிதரன் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு டாக்டர்கள் முருகேசன், காந்திமதி, இவர்களது மகன் திலீபன்ராஜ், ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தாங்கள் ஆபரேஷன் செய்தபோது, திலீபன்ராஜ் உடன் இருந்து கவனித்ததாக வாக்குமூலம் அளித்தனர். ஆனால் சிடியை பார்த்த டாக்டர்கள், ஆபரேஷனை திலீபன்ராஜ் செய்தது உண்மை என எழுத்து மூலமாக வாக்குமூலம் அளித்தனர்.

பின்னர் ஆஸ்பத்திரியிலிருந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுபற்றிய விசாரணை அறிக்கையை கலெக்டர் ஆசிஷ்வச்சானியிடம் ஆர்டிஓ ரமணிதரன் நேற்று மாலை வழங்கினார்.


இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் டாக்டர் முருகேசனின் வீட்டுக்கு வந்த இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், கோபிநாத் பாண்டியன் மற்றும் போலீசார் டாக்டர் வீட்டுக்கு சென்று முருகேசன், காந்திமதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 20 நிமிட விசாரணைக்கு பின்னர் தம்பதிகள் இருவரையும் அவர்களது காரில் ஏற்றிய போலீசார் இருவரையும் மணப்பாறை அருகே உள்ள வளநாடு போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், டாக்டர் தம்பதிகளிடம் ஆர்டிஒ தலைமையிலான அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டாலும், முக்கிய ஆதாரமாக கருதப்படும் சிடி கிடைக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் போலீசாரின் உதவியை கேட்டுள்ளனர். எனவே தான் போலீசார் அவர்களை அழைத்து சென்றுள்ளனர் என்றார்.

விசாரணை அறிக்கையில் டாக்டர் தம்பதிகளை கைது செய்வதற்கான அனைத்து ஆதாரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை பகுதியில் வைத்து அவர்களை கைது செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்று கருதிய போலீசார் அவர்களை வளநாடு அழைத்து சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

டாக்டர் தம்பதிகள் இருவரும் அழைத்து செல்லப்பட்டதை கேள்விப்பட்ட நிருபர்களும், போட்டோகிராபர்களும் காரை பின்தொடர ஆரம்பித்தனர். கார் வளநாடு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி செல்வதை கேள்விப்பட்ட அவர்கள் அங்கு செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் வழிமறித்து தடுத்தனர். இது தொடர்பாக டிஐஜி அசோக்குமார் தாசிடம் புகார் செய்யப்பட்டது. அவர் தலையிட்ட பின்னர் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

'விடுதலை' தலையங்கம்

தி.க.,வும் - தி.மு.க.,வும்!


21.6.2007 அன்று மாலை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இருபெரும் விழாக்களில் திராவிடர் கழகத் தலைவரும் சரி, தி.மு.க., தலைவரும் சரி மிக முக்கியமான கருத்தொன்றைத் தெளிவுபடுத்தினார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நிலையில், செய்தியாளர்கள், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களிடம் ஒரு வினாவைத் தொடுத்தனர்.
`பெரியார் மறைவிற்குப் பிறகு தி.க., தி.மு.க.,வோடு இணைந்து விடும் என்ற பேச்சு அடிபடுகிறதே? என்பது தான் அந்தக் கேள்வி.

தந்தை பெரியார் அவர்களின் உடல் அடக்கம் செய்யப் படாத அந்த நிலையிலும், துன்பத்தின் சுமை கடுமையாக அழுத்திக் கொண்டிருந்த நிலையிலும், கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் துப்பாக்கியிலிருந்து தோட்டா புறப்பட்டதுபோல, ``கலையாது -இணையாது தனித்தன்மையுடன் செயல்படும்’’ என்றார்.

தந்தை பெரியார் அவர்களை அடக்கம் செய்த நிலையில், கழகத் தோழர்கள் மத்தியில் குமுறும் உள்ளத்தோடு கூறினார் கழகப் பொதுச்செயலாளர் ``அய்யா காட்டிய வழியில் நூலிழை பிறழாமல் நடப்போம்!’’ என்று சூளுரை புகன்றார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கூறிய அந்தக் கருத்தினை வழிமொழிகின்ற வகையில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வரவேற்று, திராவிடர் கழகம் தனித்தன்மையோடு இயங்கும், இயங்கவேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். இந்த இரு செய்திகளையும் திராவிடர் கழகத் தலைவரும், தி.மு.க., தலைவரும் அவ்விழாவில் நினைவூட்டினார்கள். ஏராளமான இளைஞர்கள் திரண்டிருந்த அந்த விழாவில் அந்தப் பழைய தகவலை வெளிப்படுத்தியது மிகவும் பொருத்தமானதாக இருந்தது.

திராவிடர் கழகம் சமுதாயத் தளத்திலும், தி.மு.க., அரசியல் தளத்திலும் இருந்து தந்தை பெரியார் கொள்கைகளை, திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்புதல், செயல்படுத்துதல் என்கிற இருபாட்டைகளில் பயணம் செய்யும் என்றும் தலைவர்கள் அறிவித்தது, குறிப்பாக தி.மு.க., இளைஞர்களுக்கு 1949--க்குப் பின் தி.மு.க.,வில் சேர்ந்தவர்களுக்குத் தேவையான அறிவிப்பும், தகவலுமாகும்.

தி.மு.க., என்பது மற்ற அரசியல் கட்சியைப் போன்றதல்ல; சமுதாயக் கொள்கை உடைய அரசியல் கட்சி என்பதை வெளிப்படுத்தினார்-- காஞ்சீபுரத்தில் 1999 மே 27 இல் நடைபெற்ற திருமண விழாவில் கலைஞர்.

``இன்றைக்குச் சமுதாயத்திலே திராவிட இயக்கமாக யிருப்பது திராவிடர் கழகமும், அரசியல் ரீதியாக திராவிட இயக்கமாக இருப்பது திராவிட முன்னேற்றக் கழகமும்தான்’’ என்பதைத் (`முரசொலி’, 24.7.2006 பக்கம் 1) திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தினார்.

சென்னை- கலைவாணர் அரங்கத்தில் (நீதிக் கட்சி முன்னோடி டாக்டர் சி. நடேசனார் அரங்கில்) தான் இப்படிக் கூறினார் என்றால், அதற்கு முன்பும் அவ்வாறே கூறி வந்திருக்கிறார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

மானமிகு இல்லையேல் மாண்புமிகு இல்லை என்றும் ஆணி அடித்ததுபோல கூறியிருப்பவரும் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்தாம் (`முரசொலி’, 15.9.2005).
திராவிட என்கிற பெயரைக் கட்சியில் ஒட்டி வைத்துக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம் உண்மையான திராவிடர் இயக்கம் ஆகிவிட முடியாது. குறிப்பாக இளைஞர்கள் வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

சமுதாய இயக்கத்தின் தலைவரும், அரசியல் கட்சியின் தலைவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து இந்தப் பிரகடனத்தை இந்தக் காலகட்டத்தில் அளித்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
`திராவிட’ என்ற பெயரைச் சொல்லி ஆரியக் கலாச்சாரமான யாகம் நடத்துபவர்களும், சமூகநீதிக் கொள்கையைக் குழப்புபவர்களும் இருக்கும் நிலையில், இந்த அறிவிக்கை சரியான நேரத்தில் கொடுக்கப் பட்டதாகவே கருதவேண்டும்.

உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு(பாகம் 2) நூல் வெளியீட்டு விழாவில் பொருத்தமாக தெளிவு படுத்தப்பட வேண்டிய ஒன்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நாம் நடத்தும் விழாக்கள் என்றால், வாண வேடிக்கையைச் சார்ந்ததல்ல, தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் சேர்ந்ததாகும் என்பதற்கு சென்னை விழா கட்டியம் கூறியது.

நான் பகடை காயா?- கலாம்

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை வைத்து இந்த நாட்டின் பெரிய அரசியல் கட்சிகள் நடத்தும் அரசியல் விளையாட்டில், தான் ஒரு பகடைக்காயாக இருக்க விரும்பாததாலும், மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவி, அரசியல் மனமாச்சரியங்கள் காரணமாக பந்தயப் பொருளாக மாறிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தாலும் இனி போட்டியிடுவதில்லை என்று வெள்ளிக்கிழமை அப்துல் கலாம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னமும் அதே மன நிலையிலேயே இருப்பதையே சனிக்கிழமை சந்திப்பின்போதும் அவர் வெளிப்படுத்தினார்.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள் அவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து 40 நிமிஷம் உரையாடினர். அப்போது, தேர்தலில் மீண்டும் போட்டியிட மறுத்துவிட்டது ஏன் என்று கேட்டபோது, ""போதும், போதும்; இனி போட்டியிட மாட்டேன்'' என்று பதில் அளித்தார்.

மக்கள் பவனம்: கடந்த ஐந்து ஆண்டுகளில் ராஷ்டிரபதி பவனத்தை, மக்கள் பவனமாக அனைவரின் ஒத்துழைப்போடு மாற்றிவிட்டேன். இந்த மாளிகை நாட்டுக்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இந்த இடம் தொடர்பாகவோ, இதில் குடியிருக்க வருகிறவர் (குடியரசுத் தலைவர்) தொடர்பாகவோ எந்த சர்ச்சையும் ஏற்படக்கூடாது. அது நாட்டின் கெüரவத்தையே தாழ்த்திவிடும். போட்டி போடவும், அதில் வெற்றியை ஈட்டவும் இது சாதாரணமான பதவி அல்ல.

குடியரசுத் தலைவர் தேர்வு என்பது அரசியல் நடவடிக்கை அல்ல; எனவே எந்தவித அரசியல் நடவடிக்கைக்கும் உள்பட்டு குடியரசுத் தலைவர் மாளிகையின் மாண்பைக் குறைக்க நான் விரும்பவில்லை.

அடுத்து குடியரசுத் தலைவராக வருகிறவர் நல்லவராக இருக்க வேண்டும்; அப்படிப்பட்டவர்தான் வருவார். அவருடைய வருகை, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மேலும் புகழ் சேர்க்கும்.

""மக்களின் (மனம் கவர்ந்த) குடியரசுத் தலைவர்'' என்றே என்னை எல்லோரும் நினைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆதாயம் தரும் பதவி மசோதா: ""இரட்டை உறுப்பினர் பதவி'' என்றும் அழைக்கப்படும், ""ஆதாயம் தரும் பதவியை'' வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யக்கோரும் விவகாரம்தான் என்னைச் சிக்கலில் ஆழ்த்திய விஷயமாகும். அதிலும், அரசியல் சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக்கேட்டு அதன்படியே நடந்தேன். எனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீது மேலும் சில விளக்கங்கள் பெறுவது அவசியம் என்று கருதியதால் நாடாளுமன்றத்துக்கு அதை மீண்டும் திருப்பி அனுப்பினேன். அதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது. பிறகு நாடாளுமன்றம் அதன் மீது விவாதம் நடத்தி, சில வழிகாட்டு நெறிகளையும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

உயிரி எரிபொருள்: பெட்ரோலுடன் உயிரி-எரிபொருளைக் கலப்பது தொடர்பான முடிவு, எனது ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்று நான் கருதுகிறேன். உயிரி-எரிபொருளில் ஓடுமாறு கார்களை நம்நாட்டில் தயாரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிபொருள் நமக்குத் தேவை என்பதற்காக, பெட்ரோலில் உயிரி-எரிபொருள் (தாவரங்களிலிருந்து எடுத்தது) 10% அளவு வரை சேர்க்கப்படலாம் என்று அரசு இப்போது அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது' என்றார் கலாம்.

வாஜ்பாய், மன்மோகன்: எனது பதவிக்காலத்தில் வாஜ்பாய், மன்மோகன் சிங் என்ற இரு பிரதமர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். ஒருவர் முடிவுகளை எடுப்பதில் வல்லவர் என்றால், மற்றொருவர் இயல்பாகவே வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது என்று மனம் திறந்து பாராட்டினார் அப்துல் கலாம்.

4 முறை காபி போடுவது கொடுமையா?

கணவர்கள் சங்கத்தில் பிரசாந்த் உருக்கம்!



வரதட்சணை தடுப்பு சட்டத்தால் பாதிக்கப்பட்டோர் இணைந்து, இந்திய குடும்பப் பாதுகாப்பு அமைப்பை நடத்தி வருகின்றனர். கண வர்களை உறுப்பினர் களாகக் கொண்ட இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர் பிரசாந்த் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:

நான் 17ஆண்டுகளாக திரைப்படத்துறையில் இருக்கிறேன். நல்ல மனைவி அமைய வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருந்தேன். கிரகலட்சுமியுடன் எனக்கு திருமணமும் முடிந்தது. பிரசவத்துக்காக அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றவர் திரும்பவில்லை.
மனைவியை சேர்த்து வைக்கக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால், அவர் தப்பான முடிவை எடுத்து விட்டார்.

என் மீது வரதட்சணை புகார் கொடுத்தார். மாமியாரும், மாமனாரும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர், புருஷனுடன் மட்டும் வாழ ஆசை என்கிறார். 3, 4 முறை காபி போட வைப்பதெல்லாம் கொடுமையாகுமா?

வரதட்சணை கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கவே இந்திய தண்டனை சட்டத்தில் பிரிவு 498-ஏ கொண்டுவரப்பட்டது. ஆனால், அதை பல மனைவிகள் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். சட்டத்தை கணவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதுடன் அவர்களின் குடும்பத்தினரையும் பழி வாங்குகிறார்கள். ஆண்கள் திருமணம் செய்யவே பயப்பட வேண்டியுள்ளது. இவ்வாறு பிரசாந்த் கூறினார்.

நதி நீருக்காக உண்ணாவிரதமிருப்பாரா கலைஞர்?-விஜயகாந்த் கேள்வி

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைத்தால் உண்ணாவிரதம் இருப்பதாக கூறும் முதல்வர் கருணாநிதி, நதி நீர் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருப்பாரா? என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

மதுரையில் மேற்கு இடைத்தேர்தலில் வேட்பாளர் சிவமுத்துக்குமரனுக்கு ஆதரவாக இந்திராநகர், ஆரப்பாளையம் கிராஸ், பாரதியார் ரோடு போன்ற பகுதிகளில் விஜயகாந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: இத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரசார் சோனியா படத்தை போட்டு ஒட்டு கேட்கவில்லை. மாறாக கருணாநிதி படத்தை போட்டுள்ளனர். காமராஜர் ஆட்சி அமைப்போம் என கூறும் காங்கிரசார், ஒரு காலத்தில் மூப்பனார் பிரதமராகாமல் தடுத்த கருணாநிதிக்கு பல்லக்கு துõக்குகின்றனர்.

தி.மு.க., என்றாலே தில்லுமுல்லு கட்சி தான். தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கொள்கைகளை சொல்லி ஓட்டு கேட்கவில்லை. பணத்தை கொடுத்து ஓட்டு கேட்கின்றனர். மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைத்தால் டில்லியில் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதாக மத்தியமைச்சர் ஒருவர் கூறுகிறார். பாலாற்றில் அணை கட்டுவதை தவிர்க்கவும், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைஉயர்த்தவும், காவிரி பிரச்னையில் தமிழகத்திற்குரிய பங்கு கிடைக்கவும் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பாரா?

அ.தி.மு.க., தி.மு.க., போன்ற கட்சிகளுக்கு மக்கள் ஓட்டு போட்டது போதும். அரசியலில் புதிய சிந்தனை, கொள்கைகள் மலர தே.மு.தி.க.,வுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நான் சொன்ன சொல் மாற மாட்டேன். அதனால் தான் தெய்வத்தையும், மக்களையும் நம்பி தனித்து நிற்கிறேன். ஆனால் தி.மு.க., அ.தி.மு.க., மாறி மாறி கூட்டணி வைத்து கொள்கின்றன. தெய்வம் இல்லை என வெளியில் கூறும் கருணாநிதி மஞ்சள் துண்டை அணிந்து கொள்வதன் மர்மம் என்ன? எனவே மக்கள் சிந்தித்து இந்த இடைத்தேர்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்த முடியும். இவ்வாறு பேசினார்.

வழிநெடுகிலும் அவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தனர். குழந்தைகளுக்கு அவர் பெயர் சூட்டினார். மழை பெய்த போதும் ஏராளமான பெண்கள் அவரது பேச்சை கேட்டனர். அவர் இந்திராநகர் பகுதியில் பிரசாரம் செய்த போது கரிமேடு பகுதியில் அவரது மனைவி பிரேமலதா தனியாக பிரசாரம் செய்தார்.

இத்தாலிய துர்க்கை!


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இந்து கடவுளான துர்கையாக சித்திரித்து உள்ளூர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது இந்த ஓவியம் வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்து மாயாவதி தலைமையில் புதிய ஆட்சியும் அமைந்துவிட்டது. இருந்தபோதிலும் அந்த ஓவியம் இன்னும் அங்கிருந்து அகற்றப்படவில்லை.

இப்போதுதான் அந்த ஓவியம் குறித்த சர்ச்சையே எழுந்துள்ளது. கட்சித் தலைவர்களை கடவுளாக சித்திரிக்கும் கலாசாரம் நாடு முழுவதும் பரவிவருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது என்று விமர்சகர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.

மதச்சார்பற்ற கட்சி காங்கிரஸ். கட்சித் தலைவர்களை கடவுளாக சித்திரிக்கும் போக்கை நாங்களும் கண்டிக்கவே செய்கிறோம் என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஹபீஸ் சித்திக். இதே கருத்தை கட்சியின் நகரத் தலைவர் ஆஸôதும் ஏற்றுக்கொண்டார்.

அதிரும் ஆணுறை - இந்தியாவில்



மத்திய அரசு நிறுவனமான Hindustan Latex Ltd, புதிய ஆணுறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பற்றி நிறுவனம் வெளியுட்டுள்ள விளக்கமாவது...

"CREZENDO VIBRATING RING FOR ULTIMATE PLEASURE --- The pack has a vibrating ring and three premium condoms. With Crezendo Vibrating Ring you can take your lovemaking to places it hasn't been before. Crezendo Vibrating ring is designed to take you for a 20 minute joyride through the realms of vibrating pleasure. It provides the ultimate stimulation for you and your partner. It is safe , reliable and comes with an instruction leaflet. It is truly your passport to "The Republic of Pleasure"


இந்த ஆணுறை வேண்டுவோர் இந்த தளத்தில் வாங்கலாம்.

பிரதீபா 'ஜோக்கா'- ஜெ க்கு கருணாநிதி கேள்வி

ஒரு பெண், இந்தியாவின் குடியரசு தலைவராக வருவது எந்த வகையில் ஜோக் வரிசையில் வைக்கப்படக் கூடியது என்று ஜெயலலிதா விளக்க முன்வருவாரா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க. தலைவர் முதல்வர் கருணாநிதி, தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவரை அறிவித்து, அவருக்கு ஆதரவு திரட்டிட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியினர் தொடங்கியுள்ள முயற்சியை ஆதிக்க வெறி கொண்டவர்கள், ஆதரித்துத்தான் தீர வேண்டுமென்று நம்மவர் எவரும் கட்டாயப்படுத்தவில்லை.
ஆனால், மூத்த தலைவர்கள் கூடி, அறிவித்துள்ள முடிவை மிகக் கேவலமாக விமர்சிக்கவும், கேலி செய்யவும் முனைந்துள்ளவர்களின் போக்கினைக் கண்டு சிரிப்பும் வருகிறது, சீற்றமும் பிறக்கிறது. சிரிப்பை அடக்கிக் கொண்டு, சீற்றத்தையும் தவிர்த்து, சிந்தனைக்கு இடமளித்தால் சில உண்மைகள் பேருரு எடுக்கும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

பிரதிபா பாட்டீல் வேட்பாளர் என்று நமது அணி அறிவித்துள்ளதை "ஜோக்" என்று ஆணவத்துடன் விமர்சிக்க ஐந்தாறு பிரபல தலைவர்கள் சென்னையில் மூன்றாவது அணியாகக் கூடினார்கள் என்றால், அடடா, என்னே நாகரீகம்-எத்தகைய அரசியல் பண்பாடு?- எப்படிப்பட்ட ஐனநாயக மேம்பாடு? நமது கூட்டணியை "ஹ்யூமர் கிளப்" என்றே ஒருவர் வர்ணித்து எழுதியிருக்கிறார்.

பல பெயர்கள், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளருக்கென தேர்வு செய்யப்பட்டு கடைசியாகத்தான் பிரதிபா பெயர் அறிவிக்கப்பட்டதாக ஏதோ அதிசயத்தைக் கண்டுபிடித்தது போலவும் எழுதுகிறார்கள், செய்தி வெளியிடுகிறார்கள்.

எந்தவொரு தேர்தல் என்றாலும், வேட்பாளர் யார் என்பதை ஒரு முறைக்குப் பலமுறை பரிசீலிப்பது என்பது பொறுப்புடையோர் செயலாகத்தான் பல காலமாக இருந்து வருகிறது. அந்தப் பரிசீலனை இப்போதும் நடைபெற்றது.

60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராக வரக்கூடிய வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்பதும், அவரை வேட்பாளராக தேர்வு செய்ததும் எந்த வகையில் "ஜோக்" வரிசையில் வைக்கப்படக் கூடியது என்பதை அந்த "வசவாளர்கள்" விளக்கிட முன்வருவார்களா?

சரி, இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்திட தனக்கு விருப்பமே இல்லை என்றும், மீண்டும் கல்விப் பணியாற்றுவதில் தான் அக்கறையோடு இருப்பதாகவும் கூறி, மறுத்துரைத்த மாமனிதர் அப்துல் கலாமை, இப்போது மூன்றாவது அணியினர் வேட்பாளராக அறிவிக்கிறோம் என்று கூறி, அவர் ஒப்புதலுக்காக டெல்லியில் படையெடுத்துள்ளனர். அவரோ, வெற்றி உறுதி என்றால் பரிசீலிப்பேன் என்று கூறி, அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

அவரைப்பற்றி, அவர் குடியரசுத் தலைவராக 2002ம் ஆண்டு பொறுப்பேற்ற போது, அவரை வாழ்த்தி நான் எழுதிய கவிதையில் சில வரிகளை நினைவுகூர்ந்து நினைவூட்டுகிறேன்.

இராமேஸ்வரம் கடற்கரையில் மோதுகின்ற
அலைகள் கூட இன்று மலையளவு உயர்கின்றன
மகிழ்ந்து கூத்தடிக்கின்றன
நடுக்கடலில் காற்றழுத்தத்தின் விளைவு என
நானும் நீயும் கருதினால், அது தவறு
நாள்தோறும் கேட்கும் கடல்பாட்டல்ல இது
அலைகள் நடனம் அனுதினமும் கண்டுள்ளோம்.
அற்புதமாய் இன்று மட்டும் இந்த ஆனந்தக்கூத்து ஏன்?
மன்பதை ஆளும் விஞ்ஞானம்- இந்திய
மாநாட்டையும் ஆளப்போகிற தென்ற
மகிழ்ச்சியின் துள்ளலே, இதோ
மணல்மீது அலையின் நடனம்.


இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கலைஞர் கடிதம்

`ஜோக்கர்’ அணி ஆக்குவதா?



அவர் ஒரு பெண்மணி -
கல்வித் தகுதி எம்.ஏ., எல்.எல்.பி. -
சமூக சேவகி, வழக்கறிஞராகத் தொழில் புரிந்தவர் -
1967 முதல் 1985 வரையில் மராட்டிய மாநிலத்து சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் -
1967 முதல் 1972 வரையில் மராட்டிய மாநில அரசாங்கத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை, மதுவிலக்குத் துறை, சுற்றுலாத் துறை, வீட்டு வசதித் துறை ஆகியவற்றின் துணை அமைச்சராகப் பணியாற்றியவர் -
1972 முதல் 1974 வரையில் மராட்டிய மாநில அரசின் சமூகநலத்துறை அமைச்சர் -
1974 முதல் 1975 வரையில் மராட்டிய மாநில அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் -
1975 முதல் 1976 வரையில் மராட்டிய மாநிலத்தில் மதுவிலக்கு, கலை பண்பாட்டுத் துறைகளின் அமைச்சர் -
1977 முதல் 1978 வரை மராட்டிய மாநிலத்தின் கல்வி அமைச்சர் -
1979 - 1980-இல் மராட்டிய மாநில சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் -
1982 முதல் 1985 வரையில் மராட்டிய மாநில வீட்டு வசதித் துறை அமைச்சர் -
1983 முதல் 1985 வரையில் மராட்டிய மாநில சமூகநலத்துறை அமைச்சர் -
1985 - 1990 மாநிலங்களவை உறுப்பினர் -
1986 முதல் 1988 வரை மாநிலங்களவை துணைத் தலைவர் -
2004 நவம்பரில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநர் இத்தனை பதவிகளில் அமர்ந்து பணியாற்றியவர் என்பதுடன், மும்பையிலும், டில்லியிலும் பெண்களுக்கென தனியே விடுதிகளை ஏற்படுத்தியவர்,கிராமப்புற இளைஞர்களுக்காக ஜல்கோனில் பொறியியல் கல்லூரி ஒன்றினைத் தோற்றுவித்தவர்;`ஷ்ரம் சாதனா’ அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருந்தவர்;
அரசு சார்புள்ள மகிள விகாஸ் மகாமண்டல் என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்;
பார்வையற்றோருக்கென ஒரு தொழில் பயிற்சிப் பள்ளியையும், மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கென ஒரு பள்ளியையும் தோற்றுவித்து நடத்தி வருபவர்;
பெண்களுக்கென ஒரு கூட்டுறவு வங்கியையே உருவாக்கியவர்;
நைரோபியிலும், போர்ட்டோரிகோவிலும் நடைபெற்ற சர்வதே சமூக நல மாநாடுகளில் கலந்து கொண்டவர்;
பெண்களின் நிலைபற்றி ஆஸ்திரியாவில் நடைபெற்ற மாநாட்டுக்கு பெண்களுக்குத் தலைமை தாங்கி அழைத்துச் சென்றவர்; அதைப் போலவே பல்கேரியாவில் நடைபெற்ற மாநாட்டிற்கும் அழைத்துச் சென்றவர்;
பீஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டவர்;
பெண்கள் மட்டுமே பங்கெடுத்துக் கொள்ளும் ஊர்காவல் படையை அமைத்தவர்;
பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மழலையர் பள்ளிகளை உருவாக்கியவர்;
ஆகிய இத்தனை பொது நலம் சார்ந்த பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றியவர் அவரைத்தான் தியாகத் திருவிளக்கு திருமதி சோனியா காந்தி அவர்களும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும், இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைவர்களும், இடதுசாரித் தலைவர்களும், தி.மு. கழகத்தின் தலைவராகிய நானும், மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் டில்லியில் கூடிக் கூடி விவாதித்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக இதுவரை ஒரு பெண்மணி அமையாத குறையை இந்த முறை நீக்க வேண்டுமென்று உறுதி செய்து கொண்டு; குடியரசுத் தலைவர் பொறுப்பு வகிப்பதற்கான வேட்பாளராகத் தேர்வு செய்துள்ளோம்.

அவரைத் தேர்ந்தெடுத்து இந்திய சுதந்திரத்தில் மகளிர்க்குரிய சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டுமென்று இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை படைத்தவர்கள் அனைவரையும் மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிற நேரத்தில், தேர்தல் களத்தில் நிற்கிற திருமிகு ஷெகாவத் அவர்கள்மீது நமக்குள்ள மரியாதையையும், மதிப்பையும் நினைவிற் கொள்கிறோம். போட்டி வேட்பாளர் என்பதற்காக அவரது அறிவாற்றலை அலட்சியப்படுத்தி; விமர்சிக்க மாட்டோம்.
ஆனால் சென்னையில் மூன்றாவது அணி என்ற பெயரால் ஒரு அணி கூடியது - அப்படிக் கூடுவது அவர்கள் உரிமை - அந்த அணி, ஒரு வேட்பாளரை அறிவிப்பதும் அதன் உரிமை - ஆனால் அதை விடுத்து;

திருமதி பிரதிபா பட்டீல் அம்மையார் அவர்களை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருப்பது `நல்ல நகைச்சுவை’ - `ஜோக்’ என்று அந்த மூன்றாவது அணியினர் கேலி செய்திருப்பது; அந்த அணியிலே உள்ள மூலவர்களின் தரத்தையும், தகுதியையும் குறைக்கக் கூடியதாகும்.

பெரியவர்கள்கூடி `பிள்ளையார் பிடிப்பார்கள்’ என்று எதிர்பார்த்தால்; அவர்கள் பிடித்தது பிள்ளையாராக இல்லையே?என்பதுதான் ஏமாற்றம் தரும் செய்தியாகும்.

பிரதிபா தேவி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது `நகைச்சுவை’ என்றால்; அப்படிச் சொன்னவர்கள்; ஒன்பான் சுவைகளில் ஒரு சுவையையும் அறியாதவர்கள் என்றே கருத வேண்டியுள்ளது. இலையிலிட்ட உண்டியின் அறுசுவை மட்டும் அறிந்தவர்கள் போலும் என வருந்திடவும் வேண்டியுள்ளது. குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பை `ஜோக்’ என மொழிந்து மூன்றாம் அணிக்கே `ஜோக்கர்’ அணி என்ற பெயர் சூட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்பது நமது தாழ்மையான கருத்து!

கூடங்குளம் - கதிரியக்க அபாயம்

“பூச்சி மருந்தில்கூட அனுமதிக்கப்பட்ட அளவு என்பது (permissible level) உண்டு. ஆனால், கதிரியக்கத்தைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு (safe dose) என்பதே கிடையாது.” அணுக் கதிரியக்கத்தின் விளைவுகள் தொடர்பாக ஐ.நா. அறிவியல் குழு இவ்வாறு அறிக்கை அளித்திருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை மீண்டும் முழு வீச்சோடு தலையெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, அங்குள்ள இரண்டு அணு உலைகள் போதாதென்று மேலும் நான்கு அணு உலைகள் அமைக்க முடிவெடுத்துச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு.

கூடங்குளம் என்று குறிப்பிடப்பட்டாலும் அதற்கு அருகே உள்ளகிராமமான இடிந்தகரையில்தான் அணுமின் நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் உதவியுடன் நிறுவப்படும் இந்த அணுமின் நிலையம் கடல் நீரைக் கொண்டு அணு உலைகளைக் குளிர்ப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் கன்னியாகுமா¢க்கு அருகிலுள்ள கூடங்குளத்தில் இதை நிறுவியிருக்கிறார்கள்.

கூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்க, அரசும் தன் முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

“இதெல்லாம் கண்துடைப்பு நாடகம். நான்கு அணு உலைகளுக்குமான அனைத்து திட்டங்களையும் எல்லா ஏற்பாடுகளையும் அரசு செய்துவிட்டது. இதற்கான ஒப்பந்தங்களும் ரஷ்ய அதிகாரிகளுடன் கையெழுத்திடப்பட்டுவிட்டன. பிறகென்ன கருத்துக் கேட்புக் கூட்டம்?” என்று கொதிக்கிறார்கள் மக்கள்.

இது குறித்துச் சுற்றுப்புற ஆய்வாளரும் லயோலா கல்லூரிப் பேராசிரியருமான டாக்டர்
வின்சென்ட்டைக் கேட்டபோது “நம் நாட்டில் மின்சாரம் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. மரபுசார்ந்த எரிபொருட்கள் (பெட்ரோல், டீசல் போன்றவை) மிக வேகமாகக் குறைந்து வருகின்றன. மரபுசாராத சக்திகள் - காற்றாலைகள், சூரியசக்தி போன்றவை மிக அதிக தயாரிப்புச் செலவு பிடிப்பவை. தவிர பொது மக்களால் இவை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

வளர்ந்து வரும் நாடு என்பதிலிருந்து வளர்ந்த நாடு என்ற நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அணுசக்தியை மாற்றாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது ஏற்கத்தக்கது தான். பாதுகாப்பு உணர்வு, வீண் பொருட்கள் வெளியேற்றம் இந்த இரண்டு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். இந்த இரண்டையும் கவனித்து கண்காணிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எனவே, கவலை வேண்டாம்.
அமரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வரை அணு சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் நம் நாடும் சுயச் சார்போடு விளங்க அணுசக்தி உற்பத்தி அவசியம்தான் என்றார். ஆனால், கல்பாக்கம் ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மருத்துவக் குழு’வின் உறுப்பினரான டாக்டர் புகழேந்தி −ந்தக் கருத்திலிருந்து வேறுபடுகிறார்.

“தமிழகம் மிகவும் எச்சரீக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. வரவிருக்கும் அணு உலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இரண்டிலுமாகச் சேர்ந்து, மொத்தம் பத்து அணு உலைகள் தமிழகத்தில் செயல்படப் போகின்றன.

“அணுமின் நிலையம் தேவையா? என்பது முதல் கேள்வி. இதனால் பாதிப்பு உண்டா? என்பது அடுத்த கேள்வி.

“அணுசக்தியின் மூலம் மின்சாரம் என்று கூறப்படுவதே ஒரு பொய். அணுகுண்டு தயாரிக்கதான் இந்த உலைகள் உருவாக்கப்படுகின்றன. மின்சாரம் என்பது இதில் ஒரு உபரிப் பொருள், அவ்வளவு தான். தவிர, அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது அதிக செலவு
பிடிப்பது. இதனால் மக்களுக்குப் பயன் இராது.

“மாறாக, கதிரியக்கம் என்பது நாம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தாக இருக்கப் போகிறது.

“2005 ஜனவரி 31 அன்று அமரிக்காவின் பொது சுகாதாரத் துறை அளித்த அறிக்கையின்படி எக்ஸ்ரே, நியூட்ரான், காமா கதிர்கள் ஆகியவை கார்சினோஜின்கள் என்று அங்கீகரிக்கப் பட்டுள்ளன.கார்சினோஜின் என்பது புற்றுநோயை உண்டாக்கும் காரணி. இதுவரை இவற்றால் புற்றுநோய் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதுபோல் கூறிக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்தப் பாதிப்புகள் நிச்சயம் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.

கல்பாக்கத்தில் அறிவியல் பூர்வமான ஒரு சோதனையை மேற்கொண்டோம். ‘மல்டிபிள் மைலோமா’ என்ற நோய் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டோம். இது
கதிரியக்கத்தால் எலும்பு மஜ்ஜையில் உருவாகக் கூடிய ஒரு வகை புற்றுநோய். கல்பாக்கம் பகுதியில் ஒன்றரை வருடங்களுக்கு நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் அணு உலைகளில்
பணியாற்றிய இரண்டு பேரும், கல்பாக்கம் நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகம் ‘ஆண்களில் ஒருலட்சத்தில் 1.7 பேரும், பெண்களில் ஒரு லட்சத்தில் 0.7 லட்சம் பேரும் இதனால் இறக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது. அதாவது, ஒரு லட்சத்துக்கு 2.4 நபர்கள்.

ஆனால் கல்பாக்கத்தின் மக்கள் தொகை அதிகபட்சம் 25,000தான். பாதிப்போ மூன்று பேருக்கு அதாவது, பொதுவான விகிதத்தைவிட நான்கு மடங்கு அதிகம்!

“மேலும் ஜப்பான், அமரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிப்பார்கள். அமொ¢க்காவில் இதற்கெனவே ஒரு (எனர்ஜி எம்ப்ளாயீஸ் ஆக்ட்) சட்டம் உண்டு. இங்கே சட்டமும் கிடையாது. இழப்பீடும் கிடையாது” என்று குமுறினார்.

இந்த வாதங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியவை. சோவியத் யூனியனின் (இன்றைய உக்ரைன்) செர்னோபில் அணுமின் நிலைய விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அணுசக்தி இல்லாமலேயேகூட விஷவாயுவின் கோரத் தாண்டவத்தை போபாலில் அனுபவித்திருக்கிறோம். மார்ச் 1999-ல் கல்பாக்கத்தில் கனநீர்க் (heavy water) கசிவு ஏற்பட்டபோது ‘அதெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள்தான்’ என்றனர் அதிகாரிகள்.

‘இன்னும் எதையெல்லாம் அனுமதிக்கப் போகிறோம்?’ என்பதுதான் அச்சுறுத்தும் கேள்வி.


தரவு - கல்கி