பழனியில் ரோப்கார் விபத்து....

பழனி அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோவிலில் மலையின் மேலே செல்ல ரோப் கார் இயக்கப்படுகிறது. இன்று மாலை சுமார் 4 மணி அளவில் ஏற்பட்ட கோர விபத்தில் ரோப்கார் அறுந்து விழுந்ததாக தெரிகிறது.

சாவு எண்ணிக்கை குறித்தான விவரங்கள் தெரியவில்லை....மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த தகவல் இந்த பதிவினை எழுதும் இந்த நிமிடத்தில், இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.




தினமலர் செய்தி...


பழநி கோவில் மலை உச்சிக்கு சென்று கொண்டிருந்த ரோப் காரின் ஒரு பெட்டி அறுந்து விழுந்ததில் நான்கு பேர் பலியாயினர். பழநி கோவிலில் பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக ரோப் கார்கள் இயக்கப்படுகின்றன. இன்று மாலை 5 மணியளவில் வழக்கம்போல் சென்று கொண்டிருந்த ரோப் காரின் 3ம் எண் பெட்டி திடீரென அறுந்து 9ம் நம்பர் பெட்டி மீது மோதியது. அறுந்துவிட்ட 3ம் நம்பர் பெட்டி கீழ்நோக்கி வேகமாக வந்து விழுந்தது. இதில் பயணம் செய்த ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணி (54) அவரது மகள் நித்யா (25), திண்டுக்கல் ஆவின் நிர்வாக இயக்குனர் உட்பட மூன்று பேர் பலியாயினர். 9ம் நம்பர் பெட்டியிலிருந்த சுப்பிரமணியத்தின் மனைவி அமுதா வும் (45) கீழே விழுந்து இறந்தார். இதனால் பழநி மலை பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 comments:

August 26, 2007 at 6:48 AM Osai Chella said...

3 per maranam. oruthar kavalaikkidam.