செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் !

நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங்தேசியக்கொடி ஏற்றினார்.

நமது நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதையொட்டி இன்று சுதந்திர தின வைரவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அதன் பின்னர் அவர் பேசுகையில், விவசாயத்துறையில் வளர்ச்சி தேவை என்று வற்புறுத்தினார். மேலும் அவர் பேசுகையில், விவசாயத் துறைக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக அதிக அளவில் செலவிடப்படும் என்றும் கூறினார். நாட்டில் 8 புதிய ஐஐடிகள், 7 புதிய ஐஐஎம்கள், 5 அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி இந்திய இன்ஸ்டிடியூட்கள், 20 தகவல் தொழில் நுட்ப இந்திய இன்ஸ்டிடியூட்கள் ஆகியவை அமைக்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி டில்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 10 ஆயிரத்துக்கு அதிகமான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். செங்கோட்டைக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதேப்போல மற்ற மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் தேசியக்கொடியேற்றி சுதந்திரத்தை போற்றினார்கள். தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தேசியக் கொடி ஏற்றினார். காலை 8.30 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல்வர் கருணாநிதி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர் சாதனையாளர்களுக்கு தமிழக அரசின் விருதை வழங்கி பேசினார். அப்போது தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பேசிய அவர், இந்தியாவின் இதர மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டியாக இருக்கிறது என்று அண்மையில் சோனியா பாராட்டியதை நினைவு கூர்ந்தார். மேலும் நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், பல்வேறு தனியார் நிறுவனங்களிலும்.இன்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலுல் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்ததந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இந்திய தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த விழாவில் ஆஸ்திரேலியாவுக்கான் இந்திய தூதர் சுக்லா தேசியக்கொடியேற்றினார்.

சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அனைத்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

தரவு - தினமலர்

0 comments: