யுவன்சங்கர் ராஜா விவாகரத்து மனு- மனைவியும் சம்மதம் தெரிவித்தார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா, விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா (28). பருத்தி வீரன் உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இவர் ஒரு இசை நிகழ்ச்சிக்காக கடந்த 2002ல் இங்கிலாந்து சென்றபோது அங்கு சுஜாயா (28) என்ற இந்திய வம்சாவளி பெண்ணை சந்தித்தார். இருவரும் காதலித்து 2003 செப்டம்பர் 3ம் தேதி லண்டனில் உள்ள பிரன்ட் மாவட்டத்தில் பதிவு திருமணம் செய்தனர்.

பின்னர், இருவரும் சென்னை சாந்தோமில் உள்ள ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் மத்தியில் இந்து முறைப்படி திருமணம் செய்தனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் பிரிவதென்று முடிவு செய்தனர். இந்நிலையில், யுவன்சங்கர் ராஜாவும் அவரது மனைவி சுஜாயாவும் நேற்று உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்து திருமணச் சட்டம் பிரிவு 13 (பி) யின் கீழ் இருவரும் ஒருமனதுடன் விவாகரத்து கேட்டுள்ளனர். இந்த மனு முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில், நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. யுவனும் சுஜாயாவும் நேரில் ஆஜராயினர். அவர்கள் சார்பில் வக்கீல் சுமதி ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

4 comments:

August 7, 2007 at 10:05 PM Unknown said...

அளவுக்கு அதிகமா தாய்லாந்து விசிட் போனா இப்படிதான் ஆவும் போல இருக்கு :)

August 7, 2007 at 10:13 PM SurveySan said...

அடப்பாவமே. என்ன கொடுமைங்க இது?

August 8, 2007 at 8:23 AM குமரன் said...

செய்தியை ஒழுங்க படியுங்கப்பா! இங்கிலாந்து தானே யுவன் போனார்.
தாய்லாந்துன்னு சொல்றீங்க!

August 8, 2007 at 6:21 PM Unknown said...

அவர் இங்கிலாந்து போனது வேறு விசயத்துக்கு! தாய்லாந்து போனது வேறு விசயத்துக்கு! ஏதோ ஒரு கிசுகிசு படிச்ச ஞாபகம்..