சரத்குமாரின் கட்சி பெயர் மற்றும் கொடி வெளியிடப்பட்டது.


அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி - சரத்குமாரின் புதிய கட்சி உதயம்.



புதிய கட்சியை துவங்கினார் நடிகர் சரத்குமார். பல மாதங்களாக தனிக்கட்சி ஆரம்பிக்க போகிறார் என்று எழுந்த யூகத்திற்கு பதிலளிக்கும் விதமாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயருடன் ஆகஸ்ட் 31-ந் தேதி மாலை சரியாக 6.03 மணிக்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் தன் கட்சியின் கொடியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் அவர். அண்ணியார் அவர்கள் குத்துவிளக்கேற்றுவார்கள் என்று மேடையிலே அறிவிக்கப்பட்டது. லேசான வெட்கத்தோடும், ஆர்ப்பரிக்கும் பெருமையோடும் குத்துவிளக்கேற்றினார் ராதிகா.

இது நாடார் கட்சி என்று தனிமைபடுத்த நினைக்கிறார்கள். இது அனைத்து சமுதாயத்தினருக்கான கட்சி. காமராஜர் எப்படி அனைத்து மக்களையும் அரவணைத்து சென்றாரோ, எனது தலைமையிலான இந்த கட்சியும்

அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து செல்லும். மீண்டும் காமராஜர் ஆட்சி. இதுவே எங்கள் லட்சியம் என்று முழங்கினார் சரத்குமார்.

பிறகு தன் கட்சியின் நிர்வாகிகளை மேடையில் அறிமுகப்படுத்தினார். நான் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக இந்த கட்சியை துவங்கவில்லை. உங்களில் ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் என் லட்சியம் என்று சரத்குமார் சொல்ல, ரசிகர்களின் விசில் காற்றை கிழித்தது.

ஒருபக்கம் விஜயகாந்த், மறுபக்கம் சரத்குமார். அரசியல் அரங்கில் பரபரப்பான சினிமா ஆரம்பம்....

தரவு -தமிழ்சினிமா.காம்



செய்திகளை முந்தித் தருவது....மிளகாய்..

2 comments:

August 31, 2007 at 9:58 AM கோவி.கண்ணன் said...

//மீண்டும் காமராஜர் ஆட்சி. //

சரத்,
காமராஜர் சமாதியை உடைத்து அவரை எழுப்ப முயலாமல் இருந்தால் சரி !

வாழ்த்துவோம் !
:)

August 31, 2007 at 11:29 AM சிவபாலன் said...

மிளகாய்,

இந்த இடுக்கையில் உள்ள சரத்குமார் கொடியை சற்றுமுன் இடுக்கையில் இனைத்துள்ளேன்.

படத்திற்கு மிக்க நன்றி!

இது உங்கள் தகவலுக்கா!

நன்றி!