கலைஞர் உண்ணாவிரதம்....

தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சியினர், சேதுசமுத்திர திட்டத்தினை விரைவுபடுத்திட வேண்டி மத்திய அரசின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் நாளை நடத்த உத்தேசித்திருந்த முழு அளவிளான வேலை நிறுத்தத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சியான அகில இந்திய அன்னா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்க்கினை விசாரித நீதிபதிகள்,சாதாரண மக்களின் அன்றாட வாழ்வினை முடக்கும் இத்தகைய வேலைநிறுத்தத்தினை ஏற்க இயலாது எனக் கூறி நாளைய வேலை நிறுத்தத்திற்கு தடையாணை வழங்கினர்.

இதனால் ஏமாற்றமடைந்த தி.மு.க தலைவர கலைஞர் நாளை உச்சநீதி மன்ற தீர்ப்பின் மீதான தனது எதிர்ப்பினை வெளிக்காட்டும் வகையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்வார் என உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உண்ணாவிரதம் அவரது தொகுதியான சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுமென தெரிகிறது.

இதற்கிடையில் இன்று மாலை தி.மு.க ம்ற்றும் கூட்டனி கட்சிகள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அலோசிக்குமென தெரிகிறது.




கடைசிச் செய்தி

சேது சமுத்திர திட்டத்துக்கு ஆதரவாக நடத்தவிருந்த முழு அடைப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை வீதித்தது. இதையடுத்து முழு அடைப்புக்கு பதிலாக தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். திருவல்லிக்கேணியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்கிறார். தமிழகம் முழுவதிலும் நடைபெறும் உண்ணாவிரதத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எத்தனை நந்திகள் குறுக்கே வந்தாலும் சேது திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தரவு-தினமலர்

1 comments:

September 30, 2007 at 9:47 AM Thamizhan said...

உச்ச நீதி மன்றம் ஞாயிற்றுக் கிழமையில் மிகவும் முக்கியமானத் தீர்வு
என்று தமிழ்நாட்டுத் தலைவர்களைக்
கிண்டலும் செய்கிறது.
ஏதோ நாட்டுக்கு நல்லது செய்வது போல
நடித்துள்ளார்கள்.
இதே போக்கும் வேகமும் அனைத்து வழக்குகளிலுமிருந்தால் பாராட்டலாம்.அங்கே தான் அவர்கள் ஜாதி வெறி தாண்டவ மாடுவது நன்றாகத் தெரிகிறது.
நட்க்கட்டும் நாடகம்.
முகத்திரைகள் விரைவில் கிழியும்.