http://milakaai.blogspot.comவீட்டில் இருந்தபடியே இன்டர்நெட் மூலம் அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு: விரைவில் அறிமுகம்
அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய வீட்டில் இருந்தபடியே விரும்பிய இடத்துக்கு இன்டர்நெட் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் ஒரு பகுதியில் இருந்து தொலைதூரமாக உள்ள மற்றொரு பகுதிக்கு செல்வதற்காக, விரைவு பஸ்களை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. இதன் தலைமையிடம் சென்னையில் அமைந்துள்ளது. இக்கழகத்தின் மேலாண் இயக்குனராக ராமசுப்பிரமணி உள்ளார்.
மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி போன்ற இடங்களில் இருந்தும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவு பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கும் அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளுக்கு, நாள் இந்த பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல்வேறு சிறப்பு வசதிகளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தி வருகிறது
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (இயக்கம்) பாண்டியன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 911 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு சிறு மற்றும் பெரிய நகரங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட் டுள்ளது. பயணிகளுக்கு மேலும் வசதி அளிக்கும் வகையில், "ஆன்லைன்' (இன்டர்நெட்) மூலம் டிக்கெட் பதிவு செய்யும் வசதியை சோதனை முறையில், சென்னையில் பிராட்வே, தி.நகர், தாம்பரம் ஆகிய 3 இடங்கள் மற்றும் கோவை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 32 இடங்களில் அமல்படுத்தி இருக்கிறோம்.
இதன் மூலம், பயணி ஒருவர் தான் புறப்படும் இடத்தில் இருந்து போகும் இடத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவதுடன், திரும்ப வருவதற்கும் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ள முடியும். இந்த முறை அமல்செய்யப்பட்டதை தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு செய் வோரின் எண்ணிக்கை ஒரு நாளில் 6 ஆயிரத் தில் இருந்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது. "ஆன்லைன் புக்கிங்' வசதி படிப்படியாக அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப் படும். இதுதவிர, ரெயில்வேயில் உள்ளதுபோல் வீட்டில் இருந்தபடியே இன்டர்நெட் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் "இடிக்கெட்டிங்' முறையினை விரைவில் அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள் ளோம். இதன்படி, கிரெடிட் கார்டு வைத்திருந்தால் வீட்டில் இருந்தபடியே இந்த வசதியை பயன்படுத்தி பயனடைய லாம். சர்வீஸ் சார்ஜ் மட்டும் கூடுதலாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தரவு- மக்கள் குரல்
Sunday, September 2, 2007
Subscribe to:
Post Comments
0 comments:
Post a Comment