தேவதை மாதிரி வந்து என் வாழ்க்கையை மாற்றியது "மொழி' -பிரகாஷ்ராஜ்

"மொழி' படம் தேவதை மாதிரி வந்து என் வாழ்க்கையை மாற்றி விட்டது என்று பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் பெருமிதத்தோடு கூறினார்.

சினிமா தொழில் இல்லை. வாழ்க்கை. இதில் நமது அடையாளத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் அவர் மனம் திறந்து கூறினார்.

சினிமா காஸ்ட்லியான விஷயம் தான். "மொழி' பட வெற்றிக்குப் பிறகு என்னிடம் சொன்னவர்கள், நீங்கள் தான் வெற்றிப்படம் கொடுத்து விட்டீர்களே, இனிமேல் உங்கள் பேனரில் வரும் படங்களை பார்ப்பார்கள். நிறைய படம் எடுத்து சம்பாதிக்க வேண்டியது தானே? என்றார்கள். சினிமா எடுப்பது பணம் சம்பாதிக்க மட்டும் தான் என்று நினைக்கவில்லை. "மொழி' வெற்றி படத்தை கொடுத்து விட்டோம் என்ற அகங்காரமும் எனக்கு இல்லை. மறுபடியும் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். இதே எண்ணத்தைத் தான் என்னோடு இணைந்துள்ள மோசர் பியர் நிறுவனமும் கொண்டுள்ளது.

அது தான் எங்களை தயாரிப்பு துறையில் இணைத்திருக்கிறது. தமிழில் நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர் களுக்கு வாய்ப்பு தர வேண்டும். உலக சினிமாவில் ஒரிஜினல் கதைகளும், வாழ்க்கையை பற்றி சொன்ன கதைகளும் தான் வெற்றி பெற்றிருக்கிறது.

கமர்ஷியல் படங்கள் சில பேருடைய பாக்கெட்டை மட்டுமே நிரப்பும் பட்டாம்பூச்சியாக இருக்கிறது. யாரும் தமிழ் சினிமாவை இன்னொரு இடத்துக்கு கொண்டு போகிற எண்ணத்தில் இருப்பதாக தெரியவில்லை. திறமையாளர்களுக்கு நான் தொடர்ந்து வாய்ப்பு தருவேன்' என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டார்.

ஒரு படத்தை ஏற்பதும், தூக்கி போடுவதும் ரசிகர்கள் கையில் இருக்கிறது. ஆனால் ஒரு படத்தை தயாரிப்பதற்கு பின்னால் நிறைய கஷ்டம் இருக்கிறது. இதுவரை 7 படங்கள் தயாரித்திருக்கிறேன். அதை எப்படி வரவேற்றார்கள், சாதித்தது என்ன என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பிரகாஷ் ராஜின் டூயட் மூவீஸ், மோசர்பியர் நிறுவனம் இணைந்து வெள்ளித் திரை, அபியும் நானும், மயிலு ஆகிய 3 படங்களைத் தயாரிக்கிறது. இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. மோசர்பியர் நிறுவன தலைமை செயல் இயக்குனர் ஜி. தனஞ்செயன், இயக்குனர்கள் ராதாமோகன், ஜீவன், நடிகர் ஸ்ரீ ஸ்ரீகோவிந்த், லட்சுமிராய் ஆகியோர் கலந்து கொண்டனர். வந்திருந்தவர்களை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் வரவேற்றார்.


தரவு - மக்கள் குரல்

0 comments: