
கிழக்கே போகும் ரெயில் என்ற படம் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமாகி 1980- களில் கொடி கட்டி பறந்தவர் விஜயன் உதிரிப்பூக்கள் படம் அவரை உச்சியில் ஏற்றியது.
பசி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, நாயகன், பாலைவன ரோஜாக்கள் என பல படங்களில் நடித்தார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
இளம் நடிகர்கள் மாத வனுடன் ரன் படத்திலும் அஜீத்துடன் வரலாறு படத் திலும் நடித்தார். அதன் பிறகு சொந்த ஊரான கேரள மாநிலம் கோழிக்கோடு சென்று விட்டார்.
சுந்தர் சி. யின் ஆயுதம் செய்வோம் படத்தில் மீண்டும் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. இதையடுத்து சென்னை வந்து கடந்த சில நாட்களாக இந்த படத்தில் நடித்து வந்தார்.
நேற்று இரவு 12 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. வாந்தி எடுத்தார். உடனடியாக அவரை வட பழனியில் உள்ள சூர்யா ஆஸ் பத்திரியில் அனு மதித்தனர் அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63.
விஜயன் 10 வருடத்துக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்தார். அவரது மகளுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது.
விஜயன் மரணம் அடைந்த தகவல் கோழிக்கோட்டில் உள்ள உறவினர்களுக்கு தெரி விக்கப்பட்டது. அவர்கள் சென்னை வருகிறார்கள்.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், ராதாரவி, விஜய குமார் மற்றும் நடிகர் நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பார்கள் ஏராள மானோர் விஜயன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
தரவு - மாலைமலர்
3 comments:
ஹ்ஹ்ம்ம்ம்..நல்ல நடிகர்..
பசி, உதிரிப்பூக்கள் படத்துல அமைதியான அசத்தலான நடிப்பு..
hmm. udhirip pookkal innum manasulaye irukku :(
7G rainbow colonyumilum amaidhiyana azagana nadippu. :(
nalla nadigan.
தமிழ்த் திரையுலகம் சரிவரப் பயன்படுத்தாத நல்ல நடிகர்.
ஆத்மா சாந்தியடையட்டும்.
Post a Comment