Wednesday, September 12, 2007
சென்னையில் சந்திரிகா குமாரதுங்க....
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா 2 நாள் பயணமாக நேற்று காலை சென்னை வந்தார். அங்கு அவரது வருகையை எதிர்பார்த்து ஏராளமான நிருபர்கள் மற்றும் தொலைக் காட்சியினர், புகைப்படக்காரர்கள் குவிந்திருந்தனர். அவர் வந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பேட்டி அளிக்க மறுத்து விட்டார்.
இரண்டு நாட்கள் அவர் சென்னையில் தங்கியிருக்கிறார். அவரது வருகையட்டி சென்னை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர் கார் நின்ற பகுதியில் நிருபர்கள், பாதுகாப்பு அதிகாரிகளை தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க 2 இலங்கை பெண்கள் அங்கு நிருபர்களுடன் நின்றிருந்தனர். உடனே பாதுகாப்பு அதிகாரிகள், ‘நீங்கள் யார்?' என்று அவர்களிடம் கேட்டபோது, “நாங்கள் ஏற்கனவே வந்த விமானத்தில் கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்தோம். எங்களது உடமைகள் இன்னும் வந்து சேரவில்லை. அதற்காகத்தான் இங்கு நிற்கிறோம்" என்றனர்.
உடனே, ‘மேனேஜரிடம் புகார் செய்யுங்கள்' என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறி அவர்களை அப்புறப்படுத்தினர். அதோடு, அந்த இடத்தில் மேலும் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments
0 comments:
Post a Comment