Monday, September 10, 2007
நவாஸ் ஷெரீஃப் மீண்டும் நாடுகடத்தப் பட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு மீண்டும் சவுதி அரேபியா அனுப்பி வைக்கப்பட்டார்.
நாடு கடத்தப்பட்டிருந்த பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வந்த விமானம் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் காலை 9.15 மணிக்கு தரையிறங்கியது. ஷெரீப்பின் ஆதரவாளர்கள் இரண்டாயிரம் பேரை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் கடந்த 99 ம் ஆண்டு நடந்த ராணுவ புரட்சியில் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டார். அதன் பின் ஆட்சியை கைப்பற்றிய அதிபர் முஷாரப், நவாஸ் ஷெரீப்பையும் அவரது குடும்பத்தினரையும் சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தினார். அப்போது கையெழுத்தான உடன்பாட்டில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு நாடு திரும்ப மாட்டேன் என்று நவாஸ் ஷெரீப் உறுதி அளித்துள்ளதாக முஷாரப் கூறுகிறார். ஆனால், அதை நவாஸ் ஷெரீப் மறுத்துள்ளார். ஏற்கனவே ஒரு முறை பாக்., திரும்பிய நவாஸ் ஷெரீப், லாகூர் விமான நிலையத்திலேயே கைது செய்யப் பட்டு, சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனால், தன்னை நாடு திரும்ப அனுமதிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் நவாசும், ஷாபாசும் மனு செய்திருந்தனர். சூபாக்., குடிமக்கள் அனைவரும் நாட்டின் எந்த பகுதிக்கும் சுதந்திரமாக சென்று வரலாம் என்ற அடிப்படையில், நவாசும், ஷாபாசும் நாடு திரும்ப எந்த தடையும் இல்லை' என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப் பளித்தது. ஆனால், சூநவாஸ் நாடு திரும்பினால், ஏற்கனவே ஏற்பட்ட உடன்பாட்டின் படி, அவர் கைது செய்யப் பட்டு சவுதி அரேபிய அரசிடம் ஒப்படைக்கப்படுவார்' என்று முஷாரப் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, பஞ்சாப் மாகாண முதல்வராக ஷாபாஸ் பதவி வகித்தபோது, அவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில், அவரை கைது செய்ய லாகூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், நவாசும், ஷாபாசும் நாடு திரும்புவதில் உறுதியாக இருந்தனர். லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் காலை 09.15 மணிக்கு இஸ்லாமாபாத் விமானநிலையத்திற்கு வந்தார். பத்திரிக்கையாளர்கள் விமானநிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தான வரவில்லை.
நவாஸ் மற்றும் ஷாபாஸ் கைது செய்யப் பட்டால், பாக்., முழுவதும் பயங்கர கலவரம் வெடிக்கும் என்பதால் விமானநிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஐந்து கி.மீ சுற்றளவில் வாகனங்கள் மற்றும் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. மொபைல் போன்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
முதலில் அதிகாரிகள் விமானத்தில் இருந்து நவாஸ் ஷெரீபை இறங்கவிடவில்லை. கமாண்டோக்கள் அவர் வந்த விமானத்தை சுற்றி வளைத்துள்ளனர். குடியேற்ற அதிகாரிகள் விமானத்திற்குள் சென்று அவரது பாஸ்போர்ட்டை வாங்க முயற்சித்தனர். நவாஸ் ஷெரீப் தனது பாஸ்போர்ட்டை தர மறுத்து விட்டார். விமானத்தில் இருந்து நவாஸ் ஷெரீபை தவிர அனைத்துபயணிகள் அனைவரும் இறங்கி விட்டனர். விமானத்தில் இருந்த படியே சாட்டிலைட் போன் மூலம் அவர் தனது கட்சியினருடன் பேச முயற்சி எடுத்து கொண்டிருந்தார். விமானத்தில் அவருடன் ஏராளமான பத்திரிக்கையாளர்களும் இருந்தனர். அவர் ராய்ட்டர் பத்திரிக்கைக்கு அளித்த செய்தியில் தான் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாய் கூறினார். 90 நிமிடங்களுக்கு பின்னர் அவர் விமானத்தில் இருந்து இறங்கினார். மற்றொரு விமானம் எரிபொருள் நிரப்பப்பட்டு சவுதி அரேபியாவில் உள்ள நகரமான் ஜெடா செல்ல தயாராக இருந்தது
இந்நிலையில் நவாஸ் ஷெரீப் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு சிறிது நேரத்திலேயே அவர் சவுதி அரேபியா அனுப்பி வைக்கப்பட்டார்.
தரவு - தினமலர்
Labels:
அரசியல்,
சூடான செய்திகள்
Subscribe to:
Post Comments
0 comments:
Post a Comment