தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சியினர், சேதுசமுத்திர திட்டத்தினை விரைவுபடுத்திட வேண்டி மத்திய அரசின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் நாளை நடத்த உத்தேசித்திருந்த முழு அளவிளான வேலை நிறுத்தத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சியான அகில இந்திய அன்னா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்க்கினை விசாரித நீதிபதிகள்,சாதாரண மக்களின் அன்றாட வாழ்வினை முடக்கும் இத்தகைய வேலைநிறுத்தத்தினை ஏற்க இயலாது எனக் கூறி நாளைய வேலை நிறுத்தத்திற்கு தடையாணை வழங்கினர்.
இதனால் ஏமாற்றமடைந்த தி.மு.க தலைவர கலைஞர் நாளை உச்சநீதி மன்ற தீர்ப்பின் மீதான தனது எதிர்ப்பினை வெளிக்காட்டும் வகையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்வார் என உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உண்ணாவிரதம் அவரது தொகுதியான சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுமென தெரிகிறது.
இதற்கிடையில் இன்று மாலை தி.மு.க ம்ற்றும் கூட்டனி கட்சிகள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அலோசிக்குமென தெரிகிறது.
கடைசிச் செய்தி
சேது சமுத்திர திட்டத்துக்கு ஆதரவாக நடத்தவிருந்த முழு அடைப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை வீதித்தது. இதையடுத்து முழு அடைப்புக்கு பதிலாக தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். திருவல்லிக்கேணியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்கிறார். தமிழகம் முழுவதிலும் நடைபெறும் உண்ணாவிரதத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எத்தனை நந்திகள் குறுக்கே வந்தாலும் சேது திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
தரவு-தினமலர்
Sunday, September 30, 2007
1
Saturday, September 29, 2007
0
மலைக்கோட்டை - விமர்சனம்
சண்டக்கோழியில் ஆரம்பித்த துரத்தல், இன்னும் முடிந்தபாடில்லை. ஒவ்வொரு முறையும் வெளியூருக்கு போகிற விஷாலுக்கு லக்கேஜ் மாதிரி கூடவே ஒட்டிக்கொண்டு வருகிறது பிரச்சனை. இந்த முறை பட்டுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு போகிற விஷாலுக்கு அந்த ஊரில் தேவராஜ் ரூபத்தில் வருகிறது சண்டை. திருச்சியையே ஆட்டி வைக்கிற தேவராஜின் தம்பியை மூக்கு வேறு, காது வேறாக பிய்த்துப்போடுகிறார் விஷால். பழிவாங்க அண்ணன் துடிக்க, முரட்டு புஜத்தை விஷால் உயர்த்த, கிடுகிடுத்து போகிறது திருச்சியும், நாம் படம் பார்த்துக் கொண்டிருக்கிற தியேட்டரும்! தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கெல்லாம் எனிமா கொடுத்து தொடர் வெற்றி அடைந்திருக்கிறார் விஷால்!
கண்டிஷன் பைலில் கையெழுத்து போட திருச்சிக்கு பஸ்ஸில் வரும் விஷால், மொட்டை மாடியில் காக்காய்க்கு சோறு வைக்கும் ப்ரியாமணியை பார்க்கிறார். கா... கா... என்று காகத்தை அழைத்து அவற்றையும் தன் சொந்தங்களில் ஒருவராக பார்க்கும் அவரின் “புளுகிராஸ்” மனசு விஷாலை கவர, காதல்! கூடவே மணிசர்மா ஆர்மோனியத்திற்கும் அரிப்பு வர, சுட சுட இரண்டு டூயட். விரட்டி விரட்டி வரும் விஷாலை தவிர்ப்பதற்காக யாரோ ஒரு ரவுடியை காட்டி அவனை காதலிப்பதாக சொல்கிறார் ப்ரியாமணி. போதாதா? காதல் வழிய வீட்டுக்கே வருகிறான் ரவுடி. முதலில் ஒதுங்கிக் கொள்ளும் விஷால், அதெல்லாம் ச்சும்மா என்று தெரிய வர, கனல் கண்ணனின் கைங்கர்யம் ஆரம்பமாகிறது. இடைவேளைக்கு முன்பு வரும் அந்த சண்டைக்காட்சி இரண்டாம் புருஸ்லீயாக புரமோஷன் கொடுக்கிறது விஷாலுக்கு. சண்டைக்காட்சியில் அவருடைய கடுமையான உழைப்புக்கு முறுக்கேறி நிற்கிற ரசிகர்களே சாட்சி. இன்டர்வெல் பிளாக்கில் டிரான்ஸ்பார்மரை வெடிக்க வைத்து, அதிலிருந்து விழும் ஒயரிலிருந்து பொறி பறக்க சிகரெட் பற்ற வைக்கிறார் விஷால். (உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ?)
முதன்முறையாக காமெடியையும் ஊறுகாயாக தொட்டுக் கொண்டிருக்கிறார் விஷால். ஃபுல் போதையில் கிளிக்கூண்டில் காக்காவை அடைத்துவந்து சித்தப்பா ஆசிஷ்வித்யாத்தியிடம் அசடு வழிவதும், ஊருக்கு போன் பண்ணி தன் நண்பர்கள் எல்லோரிடமும் காக்காவுக்கு சோறு வைங்கடா என்று உத்தரவிடுவதுமாக அமர்க்களம் பண்ணியிருக்கிறார். போதாதற்கு மயில்சாமி கூட்டணி வேறு. ரணகளமாகிறது தியேட்டர்.
இன்னொருபக்கம் ஊர்வசிவித்யார்த்தி பிளாஷ்பேக். அப்படி ஒரு முரட்டு வில்லனை இப்படி சிரிக்க சிரிக்க காட்டுவதற்கே ஒரு தைரியம் வேண்டும். தன் இயல்பான காமெடியை படம் நெடுகிலும் வழிய விட்டிருக்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன். நாய் சேகரின் முடிவையும், மாட்டு சேகரின் ஆரம்பத்தையும் நினைத்து நினைத்து சிரிக்கலாம்.
ப்ரியாமணிக்கு அவரின் நிஜக்குரலையே பயன்படுத்தியிருக்கலாம். டப்பிங் குரல் டம்மி குரலாகிவிட்டது. மாடர்ன் மணியை விட, தாவணி மணிதான் அழகு. அடுத்த படத்தில் திருத்திக் கொள்வாராக.
கன்னட இறக்குமதி தேவராஜின் வில்லத்தனம் பார்த்து பார்த்து சலித்ததுதான். டாடா சுமோக்களின் உதவியுடன் டயர் தேய பறப்பதும் அதே ரகம்.
மேன் ஆஃப் த மேட்ச் கனல் கண்ணனுக்குதான்.
ஏ..ஆத்தா ஆத்தோரமா வாரியா ரீமிக்ஸ் பாடலும், கந்தா கடம்பா என்ற குத்துப்பாட்டும் கொஞ்ச நாட்களுக்கு டீக்கடைகளின் பூபாளமாக ஒலிக்கும்.
உச்சி நரம்பை பற்றி இழுத்திருக்கிறது மலைக்கோட்டையின் வேகம்.
தரவு - தமிழ்சினிமா.காம்

Labels:
திரை விமர்சனம்
Monday, September 24, 2007
0
Saturday, September 22, 2007
0
ராமாயணம்-எத்தனை எத்தனை ராமாயணம்!
ராமாயணம் நடந்ததுதான்; கற்பனை அல்ல. ராமர் வாழ்ந்தார்; பாலம் கட்டினார் என்பவர்கள், எந்த ராமாயணத்தில் உள்ளபடி ராமர் வாழ்ந்தார் என்று எதிர்கேள்வி எழுப்பினால் முறையாக பதிலளிக்க முன்வருவதில்லை.
இன்றைக்கு நேற்றல்ல; 1920-களிலேயே தந்தை பெரியார் அவர்கள் ராமாயணம்பற்றி ஆய்வு நடத்தி பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்!
வால்மீகி ராமாயணம் - கம்ப ராமாயணம், துளசி தாசர் ராமாயணம் மட்டுமே ராமாயணங்களல்ல. இவை தவிர அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு முரண்பட்ட தகவல்கள் கொண்ட ராமாயணங்களும், மூட நம்பிக்கைகளும் இருக்கின்றன.
சீதை ராமனின் தங்கை என்று சொல்கிற ராமாயணமும் இருக்கிறது என்றெல்லாம் பல்வேறு ராமாயணங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு - அவற்றில் காணப்படும் முரண்பாடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
பெரியார் மட்டுமல்ல; பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, சந்திரசேகரப் பாவலர், பண்டிதர் சவரிராயப் பிள்ளை, ஆர்.சி. தத்தா போன்ற ஆராய்ச்சியாளர்கள் பலரும் பல்வேறு ராமாய ணக் கதைகளை ஒப்பிட்டுக் காட்டி - ராமாயணம் நடந்த கதையல்ல; கற்பனைதான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.
ந.சி. கந்தையாப்பிள்ளை அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த அரும்பெரும் ஆராய்ச்சியாளர். அவர் எழுதிய நூல்களையெல்லாம் திரட்டி - தொகுப்பாக 20-க்கும் மேற்பட்ட தொகுப்பாக - வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலே பத்தாவது தொகுப்பு ஆரியர் - தமிழர் கலப்பு என்ற தலைப்பில் வெளி வந்திருக்கிற நூலாகும்.
அமிழ்தம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலில்,தசரத சாதகம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இராம காதையை எடுத்துக் காட்டியிருக்கிறார்.
ராமாயணத்தில் தென்னாடு சம்பந்தமாகக் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்குச் சமாதானம் காண மாட்டாத வடநாட்டு வரலாற்றாசிரியர்கள் இலங்கை என்பது இலங்கைத் தீவு அன்று; அது தண்ட காருண்யத்தை அடுத்திருந்த ஓர் இடம் எனக் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
கவுதம புத்தர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் விளங்கினார். அவர் காலத்தோ, அதற்குச் சிறிது பின்போ, புத்தரின் பழம் பிறப்புகளைக் கூறும் சாதகக் கதைகள் எழுந்தன. அக்கதைகளுள் ஒன்றாகிய தசரத சாதகத்தில் இராம கதை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்திலே வாரணவாசியில் தசரதன் என்னும் அரசன் வாழ்ந்தான். அவனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் இருந்தனர். அவர்களுள் பட்டத்துத்தேவி இரு குமாரரையும், ஒரு குமாரத்தியையும் பெற்றாள். மூத்த குமாரன் இராமன், இரண்டாம் குமாரன் இலக்குமணன்; புதல்வி சீதை.
பின்பு அரசி இறந்து போனாள். அவள் இறந்து போதலும் அரசன் இன்னொருத்தியை மணந்தான். அவன் அவளிடத்தில் மிக மயங்கியிருந்தான். அவள் வயிற்றில் ஒரு மகன் பிறந்தான். அவனுக்குப் பரதன் என்ற பெயர். மகன்மீது கொண்ட பற்றினால் அரசன் பட்டத்துத் தேவியை ஒரு வரம் கேட்கும்படி சொன்னான். அவள், தான் வேண்டும்போது வரத்தைக் கேட்டுக் கொள்வதாகச் சொன்னாள். பரதனுக்கு எட்டு வயதாயிற்று. அப்பொழுது அவள் அரசனிடம் சென்றாள்.
முன் கொடுப்பதாகச் சொன்ன வரத்தின்படி இராச்சியத்தை மகனுக்குக் கொடுக்கும்படி கேட்டாள். அரசன் கையை உதறி, ``நாயே, எனது அழகிய இரண்டு மக்களையும் கொன்றுவிட்டு இராச்சியத்தை உன் மகனுக்குக் கொடுக்கும்படி கேட்கிறாயா? என்றான். அவள் அரசனின் கோபமான சொற்களைக் கேட்டுப் பேசாது அறையினுள் சென்றாள். அவள் தினமும் அரசனை அடைந்து நாட்டை மகனுக்குக் கொடுக்கும்படி கேட்டு வந்தாள். அவன், ``பெண்கள் தீயவர்கள்; இவள் பொய்யான கடிதம் எழுதி அல்லது எவருக்காவது கைக்கூலி கொடுத்து என் புதல்வரைக் கொன்று விடுவாள் என்று தனக்குள்ளே நினைத்தான்.
அவன் தனது இரு புதல்வரையும் அழைத்து, ``நீங்கள் இங்கிருந்தால் உங்களுக்குப் பல துன்பங்கள் நேரும்; நீங்கள் அடுத்த இராச்சியத்துக்கு அல்லது காட்டுக்குச் செல்லுங்கள்; எனது மரணக்கிரியை நடக்கும்போது வந்து எனது இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னான்.
அவன் சோதிடரை அழைத்தான். தனக்கு இன்னும் எவ்வளவு கால வாழ்நாள் இருக்கின்றதென்று பார்க்கும்படி சொன்னான். அவர்கள் இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் இருக்கின்றன என்று சொன்னார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து வரும்படி அரசன் தனது இரு புதல்வர்களுக்கும் சொன்னான். ``நானும் எனது சகோதரர்களுடன் செல்லப் போகின்றேன் என்று சீதை சொன்னாள். பலர் பின் தொடர மூவரும் நாட்டுக்கு வெளியே சென்றார்கள். அவர்கள் உடன் வந்தவர்களைப் போகும்படிச் சொல்லிவிட்டு ஹமவந்தா என்னும் காட்டை அடைந்தார்கள்.
அங்கே இலைகளால் வேய்ந்த குடிசை ஒன்றை அமைத்தார்கள். இராமனைக் குடிசையில் இருக்கும்படி சொல்லிவிட்டு இலக்குமணனும், சீதையும் பழங்கள் கொண்டுவர வெளியே சென்றார்கள். அன்றுமுதல் இராமன் குடிசையில் இருந்தான்; மற்ற இருவர் பழங்களைக் கொண்டு வந்தார்கள்.
இவர்கள் இவ்வாறு இருக்கும்போது தசரதன் மக்களைப் பிரிந்த கவலையினால் ஒன்பதாவது ஆண்டே மரணமானான். ஈமக்கிரியை முடிந்தது. ``எனது குமாரனுக்கு முடிசூட்டுங்கள் என்று அரசி, மந்திரிமாரிடம் சொன்னாள். அவர்கள் அதற்கு இணங்கவில்லை. பரதன் இராமனைக் காட்டினின்றும் அழைத்து வருவதாகச் சொல்லி நால்வகைச் சேனைகளோடும் புறப்பட்டான். அவன் சேனையைத் தூரத்தில் நிறுத்திவிட்டுச் சென்றான். அப்பொழுது இலக்குமணனும், சீதையும் பழம் பறிக்க வெளியே சென்றிருந்தார்கள். பரதன் இராமனைக் கண்டான்; அவன் பாதங்களில் விழுந்து வணங்கித் தந்தையின் மரணத்தைக் கூறினான்.
இராமன் கவலை கொள்ளவும் இல்லை, அழவும் இல்லை; பரதன் அழுதுகொண்டிருந்தான். அப்பொழுது மற்ற இருவரும் பழங்கள் கொண்டு வந்தனர். தந்தையின் மரணத்தைக் கேட்டதும் அவர்கள் மயக்கமடைந்தார்கள். அறிவு தெளிந்த பின் அவர்கள் எல்லாரும் அழுது கொண்டிருந்தார்கள்; இராமன் அழவில்லை. பரதன் இராமனை நோக்கி ``நீர் அழாமல் உறுதியாக இருப்பதற்குக் காரணம் என்ன என்று கேட்டான். ``மனிதனால் ஆகாத ஒன்றிற்காகப் புலம்புவதால் பயனில்லை. பழுத்த பழம் எப்பொழுதாவது நிலத்தில் விழுந்துவிடும். பிறந்தவர் எல்லாரும் ஒரு நாளைக்கு இறந்துவிடுவர் என்று இராமன் சொன்னான். இதைக் கேட்டு மற்றவர்கள் ஆறுதலடைந்தார்கள்.
பரதன் வணங்கி வாரணவாசியை ஆளும்படி இராமனைக் கேட்டான். ``இலக்குமணனையும், சீதையையும் அழைத்துச் சென்று நீயே ஆட்சி செய். எனது தந்தை பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து வரும்படிக் கட்டளையிட்டார். இப்பொழுது வந்தால் நான் தந்தையின் கட்டளையைக் கடந்தவனாவேன். நான் இன்னும் மூன்று ஆண்டுகளின் பின் வருவேன் என்றான். அவ்வ ளவு காலமும் யார் ஆட்சி புரிவார் என்று பரதன் கேட்டான்.
இராமன் ``எனது மிதியடிகள் ஆட்சி புரியும் என்று சொல்லித் தனது, புல்லால் முடைந்த மிதியடிகளை அவனிடம் கொடுத்தான். மூவரும் மிதியடிகளை எடுத்துக்கொண்டு வாரணவாசி சென்றார்கள். மந்திரிமார், சிங்காசனத்தின்மீது மிதியடிகளை வைத்து ஆட்சி புரிந்தார்கள். ஆகாத யோசனைகளை அவர்கள் செய்ய நேர்ந்ததால், மிதியடிகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டன. மூன்று ஆண்டுகள் கழிந்தன. இராமன் காட்டினின்றும் வந்தான். அவன் பதினாறாயிரம் ஆண்டுகள் நீதி ஆட்சி புரிந்து வானுலகடைந்தான்.
இவ்வரலாற்றில் இராவணன் சீதையைக் கவர்ந்ததைப் பற்றியோ, இராம இராவணப் போர்களைப் பற்றியோ யாதும் கூறப்படவில்லை. தசரத சாதகக் கதை எழுதப்படுகின்ற காலத்தில் இராம. இராவணப் போர்களைப்பற்றிய வரலாறு வழங்கவில்லை என நன்கு புலப்படுகின்றது. தொடக்கத்தில் தசரத சாதகத்தில் சொல்லப்பட்டதுபோல வழங்கிய கதையே பிற்காலத்தில் இன்றைய இராமாயணமாக வளர்ச்சியடைந்தது. இவ்வாறு இராமாயணம் மேலும் மேலும் வளர்வதற்குள்ள காரணம் இராமர் விட்டுணுவின் அவதாரமெனப் பிற்காலத்திலெழுந்த தவறான கருத்தேயாகும்.
- என்று குறிப்பிட்டிருக்கிறார் ந. சி. கந்தையாப் பிள்ளை.
பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் என்ற கவியரசு கண்ணதாசனின் பாடலைப்போல இராமாயணங்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதாகப் பல்வேறு இராமாயணங் களும் பல்வேறு முரண்பாடுகளுடன் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.
தசரத சாதகம் - சீதைக்கு இராமன் அண்ணன் என்கிறது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகத்தில் சீதை ராமனின் சகோதரியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாள். பிற்காலத்தில் ராமாயணம் எழுதியவர்கள் - அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு புதுப்புது இராமாயணங்களைப் படைத்து விட்டார்கள்.
தமிழ்நாட்டிலேகூட "சீதைக்கு ராமன் சித்தப்பா" என்று கேலி பொங்கிடும் ஒரு பழமொழி இருக்கிறதே.
நன்றி: `முரசொலி, 21.9.2007

நடிகர் விஜயன் திடீர் மரணம்
கிழக்கே போகும் ரெயில் என்ற படம் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமாகி 1980- களில் கொடி கட்டி பறந்தவர் விஜயன் உதிரிப்பூக்கள் படம் அவரை உச்சியில் ஏற்றியது.
பசி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, நாயகன், பாலைவன ரோஜாக்கள் என பல படங்களில் நடித்தார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
இளம் நடிகர்கள் மாத வனுடன் ரன் படத்திலும் அஜீத்துடன் வரலாறு படத் திலும் நடித்தார். அதன் பிறகு சொந்த ஊரான கேரள மாநிலம் கோழிக்கோடு சென்று விட்டார்.
சுந்தர் சி. யின் ஆயுதம் செய்வோம் படத்தில் மீண்டும் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. இதையடுத்து சென்னை வந்து கடந்த சில நாட்களாக இந்த படத்தில் நடித்து வந்தார்.
நேற்று இரவு 12 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. வாந்தி எடுத்தார். உடனடியாக அவரை வட பழனியில் உள்ள சூர்யா ஆஸ் பத்திரியில் அனு மதித்தனர் அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63.
விஜயன் 10 வருடத்துக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்தார். அவரது மகளுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது.
விஜயன் மரணம் அடைந்த தகவல் கோழிக்கோட்டில் உள்ள உறவினர்களுக்கு தெரி விக்கப்பட்டது. அவர்கள் சென்னை வருகிறார்கள்.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், ராதாரவி, விஜய குமார் மற்றும் நடிகர் நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பார்கள் ஏராள மானோர் விஜயன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
தரவு - மாலைமலர்
Friday, September 21, 2007
0
தமிழுக்கே இந்த கதியா..?
உண்ணாவிரதம், தர்ணா, போராட்டம்...
-தனுஷ், யுவன்சங்கர்ராஜா, ராம் ஆவேசம்!
கடந்த இரு தினங்களுக்கு முன்பே தமிழ்.எம்.ஏ. படத்தின் ஆடியோ கேசட்டுகள்,
சி.டி க்கள் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து நமது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். பொறுத்து பொறுத்து பார்த்த தமிழ் எம்.ஏ படத்தின் இயக்குனர் ராம், பிக் மியூசிக் அலுவலகத்தின் முன் தர்ணா செய்தார். இவருக்கு ஆதரவு தெரிவித்து இசைமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, நடிகர் தனுஷ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
கடந்த மாதம் வெளியானது தமிழ் எம்.ஏ படத்தின் ஆடியோ. ஆனால் அதை கடைகளில் விற்பனை செய்யும் உரிமையை பெற்ற பிக் மியூசிக் நிறுவனம் கடந்த ஒரு மாத காலமாகியும் அந்த வேலையை செய்வதில் மெத்தனம் காட்டி வந்தது. இன்னும் கடைகளுக்கு சி.டி வராத நிலையில்தான் மேற்படி போராட்டத்தை அறிவித்தார் இயக்குனர் ராம்.
காலை 9 மணிக்கே தன் உதவி இயக்குனர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார் ராம். சரியாக பத்து மணிக்கு வந்திறங்கினார்கள் யுவன், தனுஷ் இருவரும். இயக்குனரின் எட்டு வருட கனவு இந்த படம். தமிழ் நாட்டில் தமிழ் என்றே பெயர் வைக்கப்பட்ட படத்திற்கு இந்த சோதனையா என்று வெடித்தார் தனுஷ். சுமார் பத்து நிமிடம் மட்டுமே அங்கிருந்தவர் யுவனையும் அழைத்துக் கொண்டு உடனே புறப்பட்டார். படத்தின் நாயகன் ஜீவா, கும்பகோணத்தில் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. அழைப்பே இல்லாமல் கலந்து கொண்டார் மன்சூரலிகான். (தமிழ் ஒன்று சேர்த்தது?)
இதற்கிடையில் உண்ணாவிரதத்தையும், தர்ணாவையும் கைவிட சொல்லி பிக் மியூசிக்கின் சென்னை கிளை மேலாளர் முரளி கேட்டுக் கொண்டார். அவரிடம், கேசட் வெளியிட்டு ஒரு மாதமாகியும் கடைகளில் போடாததற்கு என்ன காரணம்? இந்த ஒரு மாதமாக எங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், இழப்பிற்கும் என்ன ஈடு செய்ய போகிறீர்கள்? இவற்றுக்கெல்லாம் மீடியாவின் முன் பதில் சொல்லுங்கள். உண்ணாவிரதத்தை கைவிட்டு விடுகிறேன் என்று இயக்குனர் ராம் அடம் பிடிக்க, பதட்டம் தொடர்ந்தது. அனுமதியில்லாமல் உண்ணாவிரதம் இருப்பதால் ராம் உள்ளிட்ட தமிழ் எம்.ஏ குழுவை கைது செய்ய தயாராக இருந்தது காவல்துறை.
விஷயத்தை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணனும், செயலாளர் சிவசக்தி பாண்டியனும், பேச்சு வார்த்தை நடத்த இயக்குனர் ராமை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அழைத்தார்கள். அதன்பின் தயாரிப்பாளர் சங்கத்திற்கு புறப்பட்டார் ராம். போகும் முன் பத்திரிகையாளர்களிடம், படத்தின் ஆடியோ கேசட் கடைக்கு வரும்வரை என் உண்ணாவிரதம் தொடரும். இங்கிருந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு செல்லும் நான், அங்கும் என் உண்ணாவிரதத்தை தொடர்வேன் என்றார் விடாப்பிடியாக. நண்பகல் ஒன்றரை மணி நிலவரப்படி பேச்சு வார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் வெல்லுமா?
பின்குறிப்பு- தமிழ் எம்.ஏ படத்தின் தலைப்பை 'கற்றது தமிழ்' என்று மாற்றியிருக்கிறார்கள்.
தரவு - தமிழ்சினிமா.காம்
Thursday, September 20, 2007
1
கலைஞரா புண்படுத்துகிறார்?
தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் இந்து மக்களின் மனதைப் புண்படுத்துகிறார், ராமனை இழிவாகப் பேசுகிறார் என்பது போன்ற ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.
செல்வி உமாபாரதி தலைமை வகிக்கும் பாரதீய ஜனசக்தி என்ற அமைப்பின் தமிழகத் தலைவராக இருக்கக்கூடிய ஒருவர் (யாரோ, ராம. தங்கராசாம்) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கையே தொடுத்துள்ளார்.
"முதல்வர் கருணாநிதி ராமர் பற்றி தவறாக விமர்சித்துப் பேசி வருகிறார் - அவரது பேச்சு பெரும்பாலான இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. அவரது பேச்சு சமுதாய அமைதியைக் கெடுப்பதாக உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 504, 505 ஆகிய பிரிவுகளின்கீழ் அவரைத் தண்டிக்கவேண்டும். முதல்வர் பதவியிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்று வழக்குக்கான மனுவில் கூறப்பட்டுள்ளது (`தினமணி, 19.9.2007).
வீதிமன்றங்களில் பேசப்பட்ட ராமன், ராமாயணம் என்பனவற்றின் யோக்கியதைகள் இனி நீதிமன்றங்களிலும் பதிவு செய்யப்படக் கூடிய வாய்ப்பு என்றே இதனைக் கருதலாம்.
ராமன் பிறப்பு, தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் என்கிற சமாச்சாரங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அந்த ராமாயணம் திராவிடர்களை இழிவுபடுத்துகிறதே - குரங்குகள் என்று சொல்லுகிறதே - ராட்சதர்கள் என்று கேவலப்படுத்துகிறதே, பவுத்தர்களைத் திருடர்கள் - நாட்டை விட்டுத் துரத்தவேண்டும் என்று சொல்லுகிறதே - சூத்திரன் தவம் செய்தால் அவன் கழுத்தை வெட்டு என்று போதிக் கிறதே - வருணாசிரமத்தைக் கெட்டிப்படுத்துகிறதே, பெண்ணை அவமானப்படுத்துகிறதே - இதற்கெல்லாம் என்ன பதில்?
அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அவமானப் படுத்தலாம் - இழிவு செய்யலாம் - மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று அவர்கள் போற்றும் ராமன் சூத்திரன் என்பதற்காக சம்புகனை வெட்டிக் கொல்லலாம் - அவற்றைப்பற்றியெல்லாம் பேசக்கூடாதா? அடிபட்டவன் வலிக்கிறதே என்று கூடக் கூறக்கூடாதா?
ராமன் செய்கை குற்றமானது - தவறான நடவடிக்கை - மோசமான போதனை என்று பாதிக்கப்பட்ட நாங்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடாதா?
"நீதி தேவன் மயக்கம் என்னும் நாடகத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் "யார் இரக்கமற்றவர்கள்? என்று அடுக்கடுக்காக அம்பறாத் தூணியிலிருந்து புறப்படும் கணைகள்போல அலை அலையாக வினாக்கள் எழுப்பினாரே - இதுவரை எந்தக் கொம்பர்கள் பதில் அளித்தனர்?
தந்தை பெரியார் செய்ததைவிட - அதனைத் தாண்டி ராமாயண ஆராய்ச்சி செய்தவர்கள் உண்டா?
"இராமாயணப் பாத்திரங்கள் என்ற தந்தை பெரியார் அவர்களின் நூல் இதுவரை எத்தனை எத்தனைப் பதிப்புகள் வெளிவந்துள்ளன - எத்தனை இலட்சம் நூல்களும் மக்கள் மன்றத்தைச் சென்றடைந்தன?
ஆங்கிலத்திலும் (Ramayana A true treading) இந்தி யிலும் (சச்சி இராமாயணா) வெளிவந்துள்ளதே - ஒரே ஒரு வரி இதுவரை மறுக்கப்பட்டதுண்டா?
தந்தை பெரியார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (1974 டிசம்பர் 25) அன்னை மணியம்மையார் அவர்கள் "இராவண லீலா நடத்தி ராமன், சீதை, லட்சுமணன் வகை யறாக்களைக் கொளுத்தினார்களே - அந்த வழக்கில்கூட திராவிடர் கழகம் வெற்றி பெற்றதே - நினைவிருக்கிறதா?
மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு இப்போது உயர் நீதிமன்றத்திற்கு வருகிறது - வரவேற்கிறோம். ராமனை, ராமாயண வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றுவோம்!
ராமாயணத்தைப்பற்றி மீண்டும் புது வீச்சோடு மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய கிடைத்தற்கரிய வாய்ப்பாக இதனைக் கருதுவோம்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
விடுதலை தலையங்கம்

தலையங்கம்
Wednesday, September 19, 2007
1
டி.ராஜேந்தருக்கு அரசு பதவி !
லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தனது கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை. இனி தனித்து செயல்படுவேன் என்றார்.
பின்னர் அவர், தங்களுக்கு தி.மு.க. கூட்டணியில் உரிய மரியாதை அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப் பட்டுள்ளது. விரைவில் முதல்-அமைச்சர் கருணா நிதியை சந்தித்துப் பேசுவேன் என்று கூறினார்.
இந்த நிலையில்ப டி.ராஜேந்தருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதா வது:-
விஜய டி.ராஜேந்தரை தமிழ்நாடு மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நியமனம் செய்து இன்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த பதவியை எம்.ஜி.ஆர். அதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரகுமான்கான் ஆகியோர் வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல்
Tuesday, September 18, 2007
2
'சத்தம் போடாதே' - திரை விமர்சனம்
வேலை நிமித்தமாக தன் புது மனைவியுடன் கேரளாவுக்கு செல்லும் பிருத்விராஜுக்கு ரெயில் சிநேகிதனாக அறிமுகமாகிறார் நிதின் சத்யா. அவன், தன் மனைவியின் முதல் கணவன். குடிபழக்கத்தால் ஆண்மை இழந்தவன், ஒரு வகையான சைக்கோ என்பது அவருக்குத் தெரியாது. ஆனால் தன்னை ஆண்மையற்றவன் என்று அவமானப்படுத்தி விவாகரத்து பெற்ற தன் மனைவியின் கணவன்தான்தான் பிருத்வி என்பதை நிதின் தெரிந்து கொள்கிறார்.
கேரளாவில் கணவனும், மனைவியும் நெருக்கமாக இருக்கும் தருணங்களைப் பார்த்து பார்த்து நிதின் சத்யாவின் தாழ்வு மனப்பான்மை நெருப்பாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் கேஸ் வெடித்து பத்மபிரியா இறந்தது போல செட்டப் செய்துவிட்டு, அவரை கடத்தும் நிதின் பழைய பங்களாவில் அடைத்து வைத்து மன ரீதியான சித்ரவதை செய்கிறார். பிருத்வி பத்மபிரியாவை எப்படி கண்டு பிடிக்கிறார்? நிதின் முடிவு என்ன? என்பதை சொல்கிறது படம். நாயகியின் காதலுக்காக ஏங்கும் கேரக்டரை இந்த படத்திலும் தொடர்கிறார் பிருத்விராஜ், அவரின் அழகான முகமும், மலையாள வாசனை வீசும் தமிழும் ரசிக்க வைக்கிறது.
போனில் கெட்டவனாகவும், நேரில் நல்லவனாகவும் அவர் நடத்தும் காதல் நாடகம் ரவுசு. மனைவி இறக்கும் போதும் அவர் திரும்ப கிடைக்கும் போதும் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்து உருக உருக வசனம் பேசாமல் முக வாட்டத்திலேயே உணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பது பிருத்வி ஸ்பெஷல். கணவன் தாம்பத்தியத்துக்கு தகுதியில்லாதவன் என்பது தெரிந்தும் “எனக்கு அப்படி ஒரு குறையிருந்தா..?’’ என்று அவருடன் வாழத் தயாராவது... நிதினின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவர அதிர்ச்சியாவது... என அசத்துகிறார் பத்மபிரியா.
இருவரையும் தனி ஆளாக ஓவர்டேக் பண்ணுகிறார் நிதின் சத்யா. முகத்தில் பாலையும் நெஞ்சில் நஞ்சையும் வைத்துக் கொண்டு அவர் வரும்போதெல்லாம் சீட்டிலிருந்து எழுந்து போய் நாலு அறை விட வேண்டும்போல இருக்கிறது. பின்னணி இசையில் யுவன் தெரிகிறார். நெருங்கிய நண்பரின் தங்கை திருமணத்துக்கு பிருத்வி போகாதது, ஆண்மை பறிபோகும் அளவிற்கு குடிக்கிற நிதின் அழகாகவும், ஆரோக்யமாகவும் இருப்பது, ஒரே அறைக்குள் மாதக் கணக்கில் அடைபட்டுக்கிடக்கும் பத்மபிரியாவிடம் உடல் ரீதியாக எந்த மாற்றமும் ஏற்படாமல் இருப்பது, தன்னந்தனி ஆளாக சவுண்ட் புரூப் அறை கட்டுவது என்று ஆங்காங்கே லாஜிக் மிஸ்சிங் என்றாலும் ‘சத்தம் போடாதே’ வித்தியாசமான படம்.
Labels:
திரை விமர்சனம்
Monday, September 17, 2007
3
தந்தை பெரியார் 129
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 129 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்.
இந்நாளில் உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும், மனிதநேயர்களுக்கும் புரட்சிகரமான பகுத்தறிவு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தந்தை பெரியார் மறைந்து 34 ஆண்டுகள் மறைந்தன என்றாலும், அவர் நினைக்கப்படாத, அவர் சிந்தனைகள் பேசப்படாத, சர்ச்சை செய்யப்படாத நாளோ, நாழிகையோ இல்லை என்றே சொல்லலாம்.
வெகுதூரம் செல்லவேண்டாம். ராமன் பாலம் பிரச்சினை, ராமாயணப் பிரச்சினை என்று இந்தியா முழுமையும் இன்று விமர்சிக்கப்படுகிறதே - இதில் அறிவார்ந்த பக்கம், உண்மையின் பக்கம், ஆய்வின் பக்கம் எழுந்து நிற்கும் அலைகளின் மையப் புள்ளி தந்தை பெரியார் அவர்களே!
ஒரு முக்கால் நூற்றாண்டுகளுக்குமுன் ராமனை, ராமாயணத் தைக் கையில் எடுத்துக்கொண்டு மக்கள் மன்றத்தில் தந்தை பெரியார் சர்ச்சையைக் கிளப்பியபோது, பரவலாக மக்கள் மதித்துக் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மாறாக புதிய வெளிச்சத்தை அவற்றின் மீது பாய்ச்சியபோது, படித்தவர்கள்கூட முற்போக்கு, இடதுசாரி எண்ணம் கொண்டவர்கள்கூட, அதன் வீரியத்தை, விவேகத்தைப் புரிந்துகொண்டார்கள் இல்லை.
இப்பிரச்சினையில் மக்களின் சிந்தனைகளை வளர்த்து, அடுத்தகட்டமாக, மக்களின் வெறுப்பை அவற்றின்மீது காட்டும் வகையில் ராமாயண எரிப்பு, ராமன் பட எரிப்பு என்கிற அளவுக்கு மேலால் வளர்த்துக்கொண்டு சென்றாரே!
இந்த வெறுப்பும், எதிர்ப்பும்தான் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் போதிய சிந்தனை வளத்தையும், மாந்த நேயத்தையும், சகோதரத்துவத்தையும், இணக்கமான சமூகச் சூழலையும் உருவாக்கிற்று என்று உறுதியாகவே கூறலாம்.
இந்தியாவின் பிற பகுதிகளில் அந்த நிலை எட்டப்படாததால், ஆங்கெல்லாம் அவலமும், அமைதியற்ற சூழலும், மதவெறித் தீயின் தீய ஆட்டமும், கோரத் தன்மையாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.
தந்தை பெரியார் சிந்தனை வெளிச்சம் எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக மற்ற மற்ற பகுதிகளுக்குப் பரவுகிறதோ, அந்த அளவுக்குத்தான் அப்பகுதிகளும் தமிழ் மண்ணாகி, சமூக நல்லிணக்கம் பட்டொளி வீசி பறந்திடும் என்பது கல்லின்மீது எழுத்தாகும்.
பச்சைத் தமிழர் காமராசர் போன்றவர்களே இந்தக் கருத்தை வேறு சொற்களில் பலமுறை சொன்னதுண்டு. வட மாநிலங் களுக்குப் பெரியார் தேவைப்படுகிறார் என்று சொல்லவில்லையா?
இன்றைக்கு இந்திய அளவில் தேவைப்படும் சமூகநீதி - இட ஒதுக்கீடு, மகளிர் இட ஒதுக்கீடு - மதச்சார்பின்மை என்பனவற்றுக் கும் தந்தை பெரியார் அவர்களின் வலுவான சித்தாந்தங்கள் தேவைப்படுகின்றன.
இந்தப் பிரச்சினைகளால் சமூகம் அமைதியற்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அரசியல் மட்டத்திலும் குழப்பங்களும், கண்மூடித்தனமான சச்சரவுகளும் தலைதூக்கி நிற்கின்றன. மதவெறிக் கூட்டம் மாச்சரியங்களை ஏற்படுத்தி வருகின்றன.
அரசியல் தலைவர்களுக்கும் சரி, ஆட்சியாளர்களுக்கும் சரி, ஏன் உயர் அதிகாரம் படைத்த நீதிபதிகளுக்கும் சரி தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வெளிச்சம் மட்டுமே சரியான பாதையைக் காட்ட முடியும். அவர்கள் அத்தனைப் பேரும் பெரியாரியத்தை அறிந்திட முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம், கல்விக் கூடங்கள், அலுவலக வளாகங்கள்; மக்கள் கூடும் பொது இடங்கள் அத்தனையிலும் தந்தை பெரியார் அவர்களின் பிரம்மாண்டமான சிலைகள் நிறுவப்படவேண்டும். மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று தந்தை பெரியார் அவர்களைப்பற்றி புரட்சிக்கவிஞர் பாடினாரே - அந்தக் கருத்தை உருவகப்படுத்தும் வகையில் அந்தச் சிலைகள் அமையவேண்டும். அதைப் பார்த்த அளவிலே அய்யாவின் சித்தாந்தங்கள் பீறிடுகின்ற வகையில் அவை வடிவமைக்கப்பட வேண்டும்.
தொடக்கப்பள்ளி முதல் முதுநிலை ஆய்வுப் பட்டப் படிப்புவுரை தந்தை பெரியாரியல் கட்டாயப் பாடமாக ஆக்கப்படவேண்டும்.
ஏன் எனில், அவர் மட்டுமேதான் வேறு எந்தப் பற்றுக்கும், ஆசாபாசத்திற்கும் பலியாகாமல் மனிதப் பற்றை மட்டுமே முன் னிறுத்தி, தாராள சிந்தனைக்குத் தன்னை முற்றிலுமாக ஒப் படைத்து, உயர் எண்ணங்கள் மலரும் சோலையாக மணம் வீசினார்.
அது அறியாமை நோய் தீர்க்கம் மாமருந்து; சமத்துவச் சீர் தூக்கும் துலாக்கோல், தன்னம்பிக்கைக்கு ஆக்கம் சேர்க்கும் ஆணி வேர்!
அதனைச் சிக்கெனச் சமூகம் பிடித்துக் கொண்டு உய்யுமாக!

Friday, September 14, 2007
0
Wednesday, September 12, 2007
0
'விடுதலை' - தலையங்கம்
மோடி அரசின் பாசிசம்
விண்வெளியில் பல மாதங்கள் தங்கி ஆய்வு செய்து சாதனை படைத்தவர் சுனிதா வில்லியம்ஸ். உலகம் முழுமையும் இதற்காகப் பாராட்டு கிடைத்தது. அதுவும் பெண் ஒருவர் இந்தச் சாதனையைச் செய்ததற்காகக் கூடுதல் புகழும் கிடைத்தது.
அவரின் பூர்வீகம் குஜராத் மாநிலம் - அவரின் உறவுக்காரர்கள் இன்னும் குஜராத் மாநிலத்தில் இருக்கிறார்கள். சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவுக்கு, குறிப்பாக குஜராத்துக்கு வர விரும்பினார். குஜராத் ஏடுகளிலும் அந்த செய்தி வெளிவந்தபோது, பொதுமக்கள் மத்தியிலே நல் வரவேற்பும் இருந்தது.
ஆனாலும், அம்மாநில முதலமைச்சரான நரேந்திர மோடிக்கோ சுனிதா வில்லியம்ஸ் குஜராத் வருவதில் விருப்பமில்லை. ``சுனிதா இந்தியப் பெண் அல்ல - அவர் சாதனையால் நமக்கு ஒன்றும் பெருமை வந்துவிடப் போவதில்லை - அவர் வருகையை நான் அங்கீகரிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
மோடியைப்பற்றி அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இருக்காது. பா.ஜ.க.,வைச் சேர்ந்தவர்களின் பார்வையெல்லாம் ஒரு வழிப்பாதைதான் - பாசிசப் பாதைதான். ``நீரோ மன்னன் என்று உச்சநீதி மன்றத்தால் படம் பிடித்துக் காட்டப்பட்டவராயிற்றே - பின் எப்படி நடந்துகொள்வார்?
சுனிதாவின் பெயரை ஒட்டி வில்லியம்ஸ் என்று இருப்பது அவர் கண்களை உறுத்தக்கூடும். காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றக்கூடும் - மனதைக் கோடரியாகப் பிளக்கவும் செய்யும். அப்படிப் பார்க்கப் போனால், மோடி பறந்து செல்லும் விமானத்தைக்கூட முதலில் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் கூட கிறித்தவர்கள் தான். ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஸ்டீவன்சன் கூட அந்த மதத்துக்காரர்தான். மின்சாரத்தைக் கண்டு பிடித்தவர்களும் அவர்களே!
கிறித்தவர்கள் கண்டுபிடித்ததை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று அஞ்ஞாத வாசம் செய்யப் போகிறாரா?இந்த 2007 ஆம் ஆண்டிலும் இத்தகு மனிதர்கள் இருக்கிறார்களே - அதுவும் மிக முக்கியமாக ஆட்சிப் பொறுப்பிலும் இருக்கிறார்களே என்பதை எண்ணும் போது, எந்த அளவுக்கு வாக்காளர்கள் மத்தியில் நஞ்சைப் புகுத்தி வைத்திருக்கின்றனர் என்று எண்ணும் போது வேதனையும், வெட்கமும் தான் மிஞ்சுகின்றன.
இன்னொரு காரணமும் கசிந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் முன்னாள் பா.ஜ.க.,வைச் சேர்ந்தவரும், பின்னாளில் மோடிக்கு எதிரணியாகச் சென்றவருமான ஒருவரின் தூரத்து உறவுக்காரராம் இந்த சுனிதா. அதன் காரணமாகவும் மோடிக்கு வெறுப்பு என்று கூறப்படுகிறது.
தனக்கு எதிராக இருப்பவர்கள், தம் கருத்துக்கு மாறாகயிருப்பவர்கள் யாராக இருந்தாலும் வெறுக்கத் தகுந்தவர்கள் என்ற மன நோய்க்காரர்களாக காவி வட்டாரம் இருப்பதையும் இது காட்டுகிறது.
இப்படி ஒரு மனப்பான்மை அவர்களுக்கு இல்லா விட்டால், குஜராத் மாநிலத்தில் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கானவர்களை நரவேட்டை ஆடித் தீர்த்து இருப்பார்களா?
தேர்தல் நேரம் வருகிற காரணத்தால், சுனிதா வில்லியம்ஸ் பிரச்சினை குஜராத் மாநிலத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக சுனிதாவின் வருகையைக் குறித்து மோடி எதிர்க்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளதாம்.
குஜராத் பல்கலைக் கழகம் சுனிதாவுக்கு அழைப்புக் கொடுத்துள்ளது. அந்த விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாலும், இதுவரை அவர் இசைவு தெரிவிக்கவில்லையாம்.
பா.ஜ.க.,வின் அரசியல், தேசியம், இந்துத்துவா பார்வை எவ்வளவு மோசமானது என்பதைத் தெரிந்து கொள்ள இதுவும் ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.
Labels:
தலையங்கம்
சுனாமி எச்சரிக்கை....
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுப் பகுதிகளில் மத்திய அரசு சுனாமி எச்சரிக்கை செய்துள்ளது.
மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப் படுகின்றன....
வலையுலகில் செய்திகளை முந்தித் தருவது...மிளகாய்...மட்டுமே

அறிவிப்பு
சென்னையில் சந்திரிகா குமாரதுங்க....
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா 2 நாள் பயணமாக நேற்று காலை சென்னை வந்தார். அங்கு அவரது வருகையை எதிர்பார்த்து ஏராளமான நிருபர்கள் மற்றும் தொலைக் காட்சியினர், புகைப்படக்காரர்கள் குவிந்திருந்தனர். அவர் வந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பேட்டி அளிக்க மறுத்து விட்டார்.
இரண்டு நாட்கள் அவர் சென்னையில் தங்கியிருக்கிறார். அவரது வருகையட்டி சென்னை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர் கார் நின்ற பகுதியில் நிருபர்கள், பாதுகாப்பு அதிகாரிகளை தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க 2 இலங்கை பெண்கள் அங்கு நிருபர்களுடன் நின்றிருந்தனர். உடனே பாதுகாப்பு அதிகாரிகள், ‘நீங்கள் யார்?' என்று அவர்களிடம் கேட்டபோது, “நாங்கள் ஏற்கனவே வந்த விமானத்தில் கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்தோம். எங்களது உடமைகள் இன்னும் வந்து சேரவில்லை. அதற்காகத்தான் இங்கு நிற்கிறோம்" என்றனர்.
உடனே, ‘மேனேஜரிடம் புகார் செய்யுங்கள்' என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறி அவர்களை அப்புறப்படுத்தினர். அதோடு, அந்த இடத்தில் மேலும் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
Labels:
அரசியல்
Tuesday, September 11, 2007
0
20/20 உலககோப்பை கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு
தென் ஆப்ரிக்காவில் இன்று துவங்கும் 20/20 உலக கோப்பையினை நேரடியாக பார்வையிடலாம். இன்று முதல் உலககோப்பை முடியும் வரை இந்த ஓளிபரப்பினை மிளகாய் வலைதளத்தில் காணலாம்.
Labels:
விளையாட்டு
Monday, September 10, 2007
0
தேவதை மாதிரி வந்து என் வாழ்க்கையை மாற்றியது "மொழி' -பிரகாஷ்ராஜ்
"மொழி' படம் தேவதை மாதிரி வந்து என் வாழ்க்கையை மாற்றி விட்டது என்று பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் பெருமிதத்தோடு கூறினார்.
சினிமா தொழில் இல்லை. வாழ்க்கை. இதில் நமது அடையாளத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் அவர் மனம் திறந்து கூறினார்.
சினிமா காஸ்ட்லியான விஷயம் தான். "மொழி' பட வெற்றிக்குப் பிறகு என்னிடம் சொன்னவர்கள், நீங்கள் தான் வெற்றிப்படம் கொடுத்து விட்டீர்களே, இனிமேல் உங்கள் பேனரில் வரும் படங்களை பார்ப்பார்கள். நிறைய படம் எடுத்து சம்பாதிக்க வேண்டியது தானே? என்றார்கள். சினிமா எடுப்பது பணம் சம்பாதிக்க மட்டும் தான் என்று நினைக்கவில்லை. "மொழி' வெற்றி படத்தை கொடுத்து விட்டோம் என்ற அகங்காரமும் எனக்கு இல்லை. மறுபடியும் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். இதே எண்ணத்தைத் தான் என்னோடு இணைந்துள்ள மோசர் பியர் நிறுவனமும் கொண்டுள்ளது.
அது தான் எங்களை தயாரிப்பு துறையில் இணைத்திருக்கிறது. தமிழில் நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர் களுக்கு வாய்ப்பு தர வேண்டும். உலக சினிமாவில் ஒரிஜினல் கதைகளும், வாழ்க்கையை பற்றி சொன்ன கதைகளும் தான் வெற்றி பெற்றிருக்கிறது.
கமர்ஷியல் படங்கள் சில பேருடைய பாக்கெட்டை மட்டுமே நிரப்பும் பட்டாம்பூச்சியாக இருக்கிறது. யாரும் தமிழ் சினிமாவை இன்னொரு இடத்துக்கு கொண்டு போகிற எண்ணத்தில் இருப்பதாக தெரியவில்லை. திறமையாளர்களுக்கு நான் தொடர்ந்து வாய்ப்பு தருவேன்' என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டார்.
ஒரு படத்தை ஏற்பதும், தூக்கி போடுவதும் ரசிகர்கள் கையில் இருக்கிறது. ஆனால் ஒரு படத்தை தயாரிப்பதற்கு பின்னால் நிறைய கஷ்டம் இருக்கிறது. இதுவரை 7 படங்கள் தயாரித்திருக்கிறேன். அதை எப்படி வரவேற்றார்கள், சாதித்தது என்ன என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
பிரகாஷ் ராஜின் டூயட் மூவீஸ், மோசர்பியர் நிறுவனம் இணைந்து வெள்ளித் திரை, அபியும் நானும், மயிலு ஆகிய 3 படங்களைத் தயாரிக்கிறது. இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. மோசர்பியர் நிறுவன தலைமை செயல் இயக்குனர் ஜி. தனஞ்செயன், இயக்குனர்கள் ராதாமோகன், ஜீவன், நடிகர் ஸ்ரீ ஸ்ரீகோவிந்த், லட்சுமிராய் ஆகியோர் கலந்து கொண்டனர். வந்திருந்தவர்களை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் வரவேற்றார்.
தரவு - மக்கள் குரல்

திரையுலகம்
நவாஸ் ஷெரீஃப் மீண்டும் நாடுகடத்தப் பட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு மீண்டும் சவுதி அரேபியா அனுப்பி வைக்கப்பட்டார்.
நாடு கடத்தப்பட்டிருந்த பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வந்த விமானம் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் காலை 9.15 மணிக்கு தரையிறங்கியது. ஷெரீப்பின் ஆதரவாளர்கள் இரண்டாயிரம் பேரை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் கடந்த 99 ம் ஆண்டு நடந்த ராணுவ புரட்சியில் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டார். அதன் பின் ஆட்சியை கைப்பற்றிய அதிபர் முஷாரப், நவாஸ் ஷெரீப்பையும் அவரது குடும்பத்தினரையும் சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தினார். அப்போது கையெழுத்தான உடன்பாட்டில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு நாடு திரும்ப மாட்டேன் என்று நவாஸ் ஷெரீப் உறுதி அளித்துள்ளதாக முஷாரப் கூறுகிறார். ஆனால், அதை நவாஸ் ஷெரீப் மறுத்துள்ளார். ஏற்கனவே ஒரு முறை பாக்., திரும்பிய நவாஸ் ஷெரீப், லாகூர் விமான நிலையத்திலேயே கைது செய்யப் பட்டு, சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனால், தன்னை நாடு திரும்ப அனுமதிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் நவாசும், ஷாபாசும் மனு செய்திருந்தனர். சூபாக்., குடிமக்கள் அனைவரும் நாட்டின் எந்த பகுதிக்கும் சுதந்திரமாக சென்று வரலாம் என்ற அடிப்படையில், நவாசும், ஷாபாசும் நாடு திரும்ப எந்த தடையும் இல்லை' என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப் பளித்தது. ஆனால், சூநவாஸ் நாடு திரும்பினால், ஏற்கனவே ஏற்பட்ட உடன்பாட்டின் படி, அவர் கைது செய்யப் பட்டு சவுதி அரேபிய அரசிடம் ஒப்படைக்கப்படுவார்' என்று முஷாரப் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, பஞ்சாப் மாகாண முதல்வராக ஷாபாஸ் பதவி வகித்தபோது, அவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில், அவரை கைது செய்ய லாகூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், நவாசும், ஷாபாசும் நாடு திரும்புவதில் உறுதியாக இருந்தனர். லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் காலை 09.15 மணிக்கு இஸ்லாமாபாத் விமானநிலையத்திற்கு வந்தார். பத்திரிக்கையாளர்கள் விமானநிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தான வரவில்லை.
நவாஸ் மற்றும் ஷாபாஸ் கைது செய்யப் பட்டால், பாக்., முழுவதும் பயங்கர கலவரம் வெடிக்கும் என்பதால் விமானநிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஐந்து கி.மீ சுற்றளவில் வாகனங்கள் மற்றும் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. மொபைல் போன்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
முதலில் அதிகாரிகள் விமானத்தில் இருந்து நவாஸ் ஷெரீபை இறங்கவிடவில்லை. கமாண்டோக்கள் அவர் வந்த விமானத்தை சுற்றி வளைத்துள்ளனர். குடியேற்ற அதிகாரிகள் விமானத்திற்குள் சென்று அவரது பாஸ்போர்ட்டை வாங்க முயற்சித்தனர். நவாஸ் ஷெரீப் தனது பாஸ்போர்ட்டை தர மறுத்து விட்டார். விமானத்தில் இருந்து நவாஸ் ஷெரீபை தவிர அனைத்துபயணிகள் அனைவரும் இறங்கி விட்டனர். விமானத்தில் இருந்த படியே சாட்டிலைட் போன் மூலம் அவர் தனது கட்சியினருடன் பேச முயற்சி எடுத்து கொண்டிருந்தார். விமானத்தில் அவருடன் ஏராளமான பத்திரிக்கையாளர்களும் இருந்தனர். அவர் ராய்ட்டர் பத்திரிக்கைக்கு அளித்த செய்தியில் தான் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாய் கூறினார். 90 நிமிடங்களுக்கு பின்னர் அவர் விமானத்தில் இருந்து இறங்கினார். மற்றொரு விமானம் எரிபொருள் நிரப்பப்பட்டு சவுதி அரேபியாவில் உள்ள நகரமான் ஜெடா செல்ல தயாராக இருந்தது
இந்நிலையில் நவாஸ் ஷெரீப் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு சிறிது நேரத்திலேயே அவர் சவுதி அரேபியா அனுப்பி வைக்கப்பட்டார்.
தரவு - தினமலர்
Labels:
அரசியல்,
சூடான செய்திகள்
Sunday, September 9, 2007
0
நவாஸ் ஷெரீஃப் நாடு திரும்பினார்...!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று காலை பாகிஸ்தான் திரும்பினார்.
கடந்த 1999 ம் ஆண்டு முஷரஃப் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் ஷெரீஃப் சிறையில் அடைக்கப் பட்டு பின்னர் நாடு கடத்தப் பட்டது அனைவரும் அறிந்ததே....
கடைசியாக கிடைத்த தகவலின் படி ஷெரீஃப் விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்கப் படவில்லை என தெரிகிறது. அநேகமாய் அவர் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப் படலாம் அல்லது கைது செய்யப் படலாமென தெரிகிறது.
Labels:
அரசியல்
ஹைதரபாத் மேம்பாலம் இடிந்து விழுந்தது
ஹைதரபாத்தில் பஞ்சன் கட்டா பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியாகி இருக்கலாம் என தெரிகிறது. இன்று தொடர்ந்து பெய்த மழையின் காரணமாய் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமெனெ முதலில் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
6-7 வாகனங்கள் இடிபாடுகளுக்கிடையில் மாட்டிக் கொண்டிருக்கலாமென பார்த்தவர்கள் கூறியதாக தெரிகிறது.
ஆந்திர முதல்வர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து கொண்டிருப்பதாக தெரிகிறது....
மேலும் தகவல்கள் எதிர் பார்க்கப்படுகின்றது.......
செய்திகளை முந்தித் தருவது மிளகாய்...!

Saturday, September 8, 2007
0
சாய்பாபாவை சந்திக்க ஸ்டாலின் ஆந்திரா பயணம்
சென்னை கூவம் ஆற்றை சுத்தப்படுத்துதல், ஆற்றின் இரு புறமும் கான்கிரீட் சுற்றுச் சுவர் அமைக்கும் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர்கள் துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோர் இன்று ஆந்திரா செல்கின்றனர்.
முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா மற்றும் 84-வது பிறந்த நாள் விழாவையட்டி திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பாக பணியாற்றிய கழக முன்னோடிகள் 1612 பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா, மதுரவாயல் அடுத்த வானகரத்தில் இன்று நடந்தது. இதில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய தி.மு.க முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 25 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது. 26-வது மாவட்டமாக திருவள்ளூருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொண்டர்களின் உழைப்பால்தான் தலைவர் கருணாநிதி 1957ல் குளித்தலையில் தொடங்கி இன்று சேப்பாக்கம் வரை தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்திய அரசியலில் தோல்வியை சந்திக்காத ஒரே தலைவர் கருணாநிதி தான்.
இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பொதுப்பணித்துறை அமைச்சரும் நானும் முதல்வர் உத்தரவின் பேரில் ஆந்திர மாநிலம் சென்று புட்டபர்த்தி சாய்பாபாவை சந்திக்க உள்ளோம். சென்னை மாநகருக்கு கிருஷ்ணா நதி நீர் வழங்க அனைத்து முயற்சிகளையும், சாய்பாபா செய்து கொடுத்ததற்கு நன்றி சொல்ல செல்கிறோம். மேலும் சென்னை கூவம் ஆற்றை சுத்தப்படுத்தவும், ஆற்றின் இருபுறமும் கான்கிரீட் சுற்றுச் சுவர் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கித் தருகிறேன் என்று சாய்பாபா கூறியிருந்தார். அது குறித்து விவாதிப்பதற்காகவும் ஆந்திரா செல்கிறோம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
விழாவில், திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளர் இ.ஏ.பி. சிவாஜி தலைமை தாங்கினார். அமைச்சர் கே.பி.பி.சாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செ.குப்புசாமி, ஆர்.கிருஷ்ணசாமி, வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பா. ரங்கநாதன், ஒன்றியச் செயலாளர் ஆலப்பாக்கம் சண்முகம், கும்மிடிபூண்டி கி.வேலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Friday, September 7, 2007
0
'மருதமலை' - விமர்சனம்
தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்ட நாச்சியார்புரத்தில் 16 ஆண்டாக தேர்தல் நடத்தவிடாமல் தடுக்கிறார் ரவுடி லால். மீறி யாராவது மனு தாக்கல் செய்தால் அவர்களைக் கொல்கிறார். அந்த ஊர் போலீஸ் நிலையத்துக்கு கான்ஸ்டபிளாக வருகிறார் அர்ஜுன்.
இதற்கிடையில் தேர்தலை நடத்தியே தீருவேன் என்று உயர் அதிகாரி ரகுவரன் கூறுகிறார். திட்டமிட்டபடி தேர்தல் நடக்கிறது. அங்கு வரும் வாக்காளர்களை அடித்து நொறுக்குகிறார் லால். அதை அர்ஜுன் தந்தை நாசர் தட்டிக் கேட்கிறார். கோபம் அடைந்த லால், அவரையும் தாக்க, பொங்கி எழும் அர்ஜுன், லாலை நொறுக்கி சிறையில் தள்ளுகிறார்.
தன்னை அவமானப்படுத்தி சிறையில் தள்ளிய, அர்ஜுனை பழிவாங்க லால் போடும் திட்டம் என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ்.
வெறுமனே பழிவாங்கும் கதை என்ற அரைச்ச மாவை அரைக்காமல், தேர்தலையும் மையப்படுத்தி இருப்பது வலுவாக இருக்கிறது. ராணுவ அதிகாரி, போலீஸ் கமிஷனர் என உயர் அதிகாரி பொறுப்பிலேயே வந்த அர்ஜுன், முதன்முறையாக போலீஸ் கான்ஸ்டபிளாக! வடிவேலுடன் சேர்ந்து காமெடியிலும், லாலை எதிர்த்து ஆக்ஷனிலும் வெளுத்திருக்கிறார்.
பார்த்திபன்-வடிவேலுவின் வெற்றி ஜோடிபோல் அர்ஜுன்-வடிவேலு ஜோடியும் காமெடியில் பின்னி எடுக்கிறது. "உங்கள பாத்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு" என்று வடிவேலுவை அர்ஜுன் வார, "என்னது சிரிப்பு போலீசா? நான் என்கவுண்ட்டர் ஏகாம்பரம்" என்று நெஞ்சை நிமிர்த்தும் வடிவேலு விலா நோக வைக்கிறார்.
தன்னை அடித்து ரவுடிகள் பிரபலம் ஆனதை பெருமை பொங்க கூறும் வடிவேலு, "மகாநதி" சங்கரையும் பிரபல ரவுடியாக்குவதற்காக தன்னை மூக்கின் மீது தாக்க அனுமதிப்பதும், அங்கு வரும் அர்ஜுன் பேச்சுவாக்கில் வடிவேலுவின் மூக்கை உடைப்பதும் வெடித்து கிளப்புகிறது சிரிப்பை. மார்க்கெட்டில் வசூல் வேட்டைக்கு போகும் வடிவேலு பிச்சைக்காரனுடன் போட்டிபோடுவது, கைதியின் அம்மா சென்டிமென்ட்டை நம்பி அவரை கோட்டைவிட்டு அர்ஜுனிடம் வாங்கிக்கட்டிக்கொள்வது, ரெயில் தண்டவாளம் அருகே பிணத்தை காவல் காக்கும்போது வரும் பேயை கண்டு பீதியில் நடுங்குவது என காமெடி ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்.
முதல்பாதியில் வடிவேலுவுடன் விளையாட்டு பிள்ளையாக ஜோடி போடும் அர்ஜுன், தந்தை நாசரை லால் கொலை செய்தபிறகு அடிபட்ட வேங்கையாகி அழிப்பது வேகம்.
கறார் தேர்தல் அதிகாரி ரகுவரன் உறைக்கு ஏற்ற வாள். லாலின் மிரட்டலுக்கு பணியாமல் சவால்விட்டு தேர்தலை நடத்தும்போது பிரகாசிக்கிறார்.
மூன்று முறை அர்ஜுன் மீது விழுந்து கிஸ் கொடுப்பது, 2 முறை பாட்டுக்கு ஆட்டம்போடுவது தவிர நிலாவுக்கு அதிக வேலை இல்லை. ஒரு பாட்டுக்கு டப்பாங்குத்து குத்துகிறார் முமைத்கான்.
போஸ் வெங்கட், காதல் தண்டபாணி, சண்முகராஜன் உறுமல் வில்லன்கள். திடீரென்று வரும் அர்ஜுன் முறைப்பொண்ணு கிளைக் கதை தேவையற்ற ஆறாவது விரல். சண்டை காட்சிகளில் புதுவேகம் காட்டி இருக்கிறார் அர்ஜுன். டி.இமான் இசை இதம். ஆக்ஷனுக்கும், காமெடிக்கும் பாதி பாதி முக்கியத்துவம் தந்து ரசிகர்களை உட்கார வைக்கிறார் இயக்குனர் சுராஜ்.
தரவு - தினகரன்
Labels:
திரை விமர்சனம்
Wednesday, September 5, 2007
0
யார் இந்த வி.ஐ.பி மகன்?
மாடல் அழகியைத் துரத்தும் வி.ஐ.பி.யின் மகன்!
சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களின் "கனவுலகக் கன்னி'யாக உலாவருகிறாள் ஒரு மாடலிங் பெண். இளம் வயது; பார்ப்போரை அசத்தும் அழகை தன் உடம்பில் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கும் அப்பெண், சட்டப்படிப்பு வேறு படித்திருக்கிறாள்.
கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் கருப்பு கோட் போட்டு வாதாட விரும்பியவர், திடீரென்று தன் ரூட்டை மாற்றினார். மாடலிங் தொழில், அந்தப் பெண்ணை மயக்கி இழுத்தது. அதனால் அத்தொழிலைத் தேர்வு செய்து, சினிமா வட்டாரத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறாள்.
இந்த கவர்ச்சிப் புயல், ஹோட்டல்களுக்கு வரும் இளைஞர்களின் துருவ நட்சத்திரமாகக் காட்சி தருகிறாள். ஆகவே இந்தப் பெண்ணைக் குறி வைத்து ஒவ்வொரு ஸ்டார் ஹோட்டலுக்கும் இளைஞர்கள் படையெடுக்கிறார்கள். அதிகாரிகளின் பிள்ளைகள், அதிரடி அரசியல் வி.ஐ.பி.களின் அன்புப் பிள்ளைகள் எல்லாம் அதில் அடக்கம்.
இந்தப் பெண்ணின் கண் நம் மீது படாதா என்ற போட்டியில் ஸ்டார் ஹோட்டல்களில் பெரும் அடிதடியே அடிக்கடி நடக்கிறது. படித்த இளைஞர்களில் இருந்து, பணக்கார இளைஞர்கள் வரை ரூபாய் நோட்டுகளை வீசியெறியத் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால் அந்தப் பெண்ணோ தனக்கு என்று உள்ள இளைஞர் பட்டாளத்துடன் ஜாலியாக இருக்கிறாளே தவிர, மற்ற பிரமுகர்கள் வீட்டுப் பிள்ளைகளை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை.
இது அதிகாரம் உள்ள இளைஞர்களை அப்ùஸட் பண்ணியுள்ளது. ஸ்டார் ஹோட்டல் "டான்ஸ் பார்களில்' இந்தப் பெண்ணுக்காக குதிரை ரேஸில் நடக்கும் போட்டி போல் நடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னை, அண்ணாசாலை அருகில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு தன் "பாய் ஃப்ரெண்ட்ஸுடன்' டான்ஸ் பாருக்குச் செல்கிறாள் அந்த மாடலிங் கேர்ள். குடியும், குஷியுமாக மிதக்கும் இந்தப் பெண்ணை இன்னொரு மூலையில் நடனமாடிக் கொண்டிருந்த அரசியல் வி.ஐ.பி.யின் மகன் பார்த்துவிடுகிறார்.
அவர் இந்த இளம் பெண்ணை நெருங்க, அவளுடன் நின்ற "ஆண்கள் படை' அந்த இளைஞனைப் பார்த்து முறைக்கிறது. இதில் திடீரென இரு தரப்புக்கும் மோதல் வர, அரசியல் வி.ஐ.பி.யின் மகனுடன் வந்த படை பெண்ணை நோக்கியும், அவளுடன் வந்தவர்கள் நோக்கியும் வெறித்தனமாகப் பாய்ந்துள்ளது.
அதனால் ஸ்டார் ஹோட்டல் பார் பகுதியே கலக பூமியானது. இதில் அந்தப் பெண்ணின் பாய் ஃபிரண்ட் ஒருவனுக்குப் படுகாயம். ஆனால் நடந்தது என்ன? அந்த ஹோட்டல் இருக்கும் ஏரியாவுக்கு சம்பந்தம் இல்லாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் போடுகிறார் வி.ஐ.பி. மகன். அடுத்த சில நிமிடங்களில் "ஆறுமுகக் கடவுள்' போல் ஓடி வந்த அந்த இன்ஸ்பெக்டர், படுகாயமுற்ற இளைஞனை தரதரவென இழுத்துச் சென்று, ஹோட்டல் எல்லை போலீஸ் ஸ்டேஷனில் விட்டார்.
"இவன் மீது கேஸ் போட்டு உள்ளே தள்ளுங்கள்'' என்று ஸ்டிரிக்டாக உத்திரவு போட்டார் அந்த இன்ஸ்பெக்டர். அப்போது நள்ளிரவு மணி 1.30 இருக்குமாம். அடுத்த சில நிமிடங்களில் அடிபட்ட பையனுக்கு வக்காலத்து வாங்கி, வட சென்னையில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி ஃபோன் போட்டுள்ளார்.
"அதெல்லாம் அவனை அரெஸ்ட் பண்ணக்கூடாது. அவனை அடித்தும் விட்டு, ஏன் கேஸ் போடுகிறீர்கள்?'' என்று காட்டமாகப் பேசுகிறார். இந்தத் தகவல் அரசியல் வி.ஐ.பி.யின் மகனுக்குப் போகிறது. அதே நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனின் ஃபோனில் வந்த அந்த வி.ஐ.பி.யின் வாரிசு, "அந்தப் போலீஸ் அதிகாரி ஏன் மாடலிங் கேர்ளின் பாய் ஃப்ரெண்டுக்கு வக்காலத்து வாங்குகிறார்?
அதெல்லாம் அவனை விடக்கூடாது'' என்று கறாராகப் பேசுகிறார். ஸ்டேஷனில் இருந்தவர்களுக்கோ நள்ளிரவு முழுவதும் ஒரே டென்ஷன். இந்நிலையில் ஒரு வழியாகச் சமாதானம் செய்து, அடிபட்ட இளைஞனிடம் "நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன். இனி அரசியல் வி.ஐ.பி.யின் மகனுடன் எந்த ஹோட்டலிலும் மோதமாட்டேன்'' என்று மன்னிப்புக் கடிதம் வாங்க, விடியற்காலை 4 மணிக்கு வீட்டுக்கு அனுப்பப்பட்டான் அந்த இளைஞன்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சம்பவம் நடந்த ஹோட்டலுக்கு வருவதையே தவிர்த்துவிட்டாள் அந்த மாடலிங் கேர்ள்.ஆனாலும் இந்த வி.ஐ.பி. வாரிசின் "ஒற்றர் படை', அந்தப் பெண் எந்த ஹோட்டலுக்குப் போகிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள தேடிக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் சென்னை, ராமாபுரத்தில் உள்ள ஒரு பிரபல கிளப்பிற்கு தன் நண்பர்கள் 25 பேருடன் டின்னருக்குப் போகிறாள்.
இதற்காக 12 வெளிநாட்டு மது வகை பாட்டில்களை நந்தனத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றிலிருந்து வாங்கி எடுத்துச் செல்கிறாள். அனைவரும் போதையில் மிதக்கிறார்கள். தன்னுடன் வந்த 25 இளைஞர்களுடன் "கொண்டாட்டம்' நடத்திக் கொண்டிருந்த மாடலிங் கேர்ளை, அங்கேயே ஓரத்தில் இருந்து நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார் அரசியல் வி.ஐ.பி.யின் அந்தப் பிள்ளை.
"தண்ணி அடித்துக் கொண்டிருக்கும் இந்தப் பெண் எப்போது கூட்டத்தின் பிடியிலிருந்து ஒதுங்குவாள்; தூக்கிக் கொண்டு சென்றுவிடுவோம்' என்பதுதான் ப்ளான். ஆனால் க்ளைமாக்ஸ் எதிர்மறையாகிப் போனது.
"டின்னருக்கு கொண்டு வரப்பட்ட 12 வெளிநாட்டுப் பாட்டில்களில் ஆறு பாட்டிலைக் காணோம்' என்று திடீரென்று சத்தம் போட்டாள் அந்த மாடலிங் பெண். உடனே கிளப்பில் இருக்கும் பார் மானேஜர் ஓடி வந்து, ""இங்கு கொண்டு வந்த பாட்டில்களை உங்களுடன் வந்தவர்கள் குடித்துத் தீர்த்துவிட்டார்கள்.
எங்கள் ஊழியர்கள் யாரும் எடுக்கவில்லை'' என்று சொல்ல மேலும் எரிச்சலான அந்த மாடலிங் கேர்ள், ""எத்தனை "பெக்' எங்கள் பார்ட்டியில் வந்தவர்கள் குடித்தார்கள் என்று கணக்கு வைத்திருக்கிறேன். போதையில் இருக்கிறேன் என்று ஏமாற்றுகிறீர்களா? உங்கள் ஆட்கள்தான் ஆறு பாட்டில்களை எடுத்துவிட்டார்கள்.
திருப்பித் தரவில்லை என்றால் போலீஸுக்குப் போவேன்'' என ரவுஸ் பண்ணுகிறாள். ஓரமாகக் காத்திருந்த அரசியல் வி.ஐ.பி.யின் மகன் உதவிக்கு வந்தாராம். ""அந்தப் பெண் கேட்கிறது நியாயம்தாம்பா. ஆறு பாட்டிலைக் கொடுத்திடுங்க. இல்லைன்னா நானே போலீûஸ வரவழைத்து உங்களை எல்லாம் உள்ளே தள்ளிடுவேன்'' என்று எச்சரித்தாராம்.
ஆனால் அந்த பெண்ணோ, உதவுவது போல் நமக்குக் குறி வைக்கிறான் இந்தப் பையன் என்பதைப் புரிந்து கொண்டாள். நேராக பார் மானேஜரிடம் போனாள். ""இதோ பாருங்க மிஸ்டர். உங்களுக்கு இஷ்டம்னா பாட்டிலைக் கொடுங்க. யாரும் சிபாரிசு செய்யுறாங்கன்னு கொடுக்கத் தேவையில்லை'' என்று "நோஸ் கட்' கொடுத்துவிட்டு, அந்த இடத்தில் இருந்து தன் டின்னர் பார்ட்டிகளுடன் எஸ்கேப் ஆனாள்.
வைத்த குறி தப்பிவிட்டதே என்ற வேகம் அந்த அரசியல் வி.ஐ.பி.யின் மகனுக்கு ஆத்திரமாக மாறியது. எஸ்கேப் ஆகிப் போனவளை விரட்ட, அவளுடன் வந்தவர்கள் வி.ஐ.பி. மகனை முறைக்க, அதற்குள் அவசரப் போலீஸ் ஸ்பாட்டிற்கு வந்து இருதரப்பையும் சமாதானம் செய்து விலக்கிவிட்டதாம். அன்றிலிருந்து ஸ்டார் ஹோட்டல் பார்களுக்குப் போவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டாள் அந்த இளம் மங்கை!
நாட்கள் உருண்டோடின. நட்பு வட்டாரத்தின் தொல்லை அதிகமாகிக் கொண்டே போனது. வேறு வழியின்றி சென்ற செவ்வாய்க் கிழமை நந்தனம் ஏரியாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றாள் மாடலிங்! பாதுகாப்பாக இந்த முறை சில "பாக்ஸர்களை'யும் அழைத்து வந்திருந்தாளாம். தங்கள் ஒற்றர் படை மூலம் நோட்டம் விட்ட அரசியல் வி.ஐ.பி.யின் வாரிசு, நட்சத்திர ஹோட்டலுக்கு "மாடலிங் கேர்ள்' சென்றதை உறுதி செய்து கொண்டது.
சில நிமிடங்களில் வாரிசு தலைமையிலான படை பாரில் ஆஜரானது. கொஞ்ச நேரம் அமைதி காத்த அந்த டீம், பிறகு நேராகவே களமிறங்கியதாம். மாடலிங் கேர்ள் அருகில் சென்ற அந்த அரசியல் வி.ஐ.பி.யின் மகன், ""என் அந்தஸ்து உனக்குத் தெரியும். உன் நண்பர்கள் யாரும் என் போல் கிடையாது. ஆசைப்பட்டுதானே கேட்கிறேன். என்னோடு ஒரு நாள் உட்கார்ந்து தண்ணி அடிப்பதில் உனக்கு என்ன சங்கடம்?'' என்று பாச வலை விரித்தாராம். ஆனால் அவளோ, ""யாருடன் தண்ணி அடிப்பது என்பது என் சொந்த விஷயம்.
அதில் உன் அட்வைஸ் தேவையில்லை. நீ பெரிய இடத்துப் பிள்ளைன்னா நான் உன் மடியில் வந்து விழனுமா? அதுக்கு வேற ஆளப் பாரு'' என்று எகத்தாளமாக கடுப்படிக்க, கொதித்தார் அந்த வி.ஐ.பி.யின் பிள்ளை.
""ஏய்....'' என்று மாடலிங் பெண்ணின் கையைப் பிடித்து, கண்ட இடத்தில் முத்தம் கொடுக்க முயற்சிக்க, இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. உடனே அந்தப் பெண்ணுடன் வந்த "பாக்ஸர்களுடன்' பாரில் உள்ள "பவுன்சர்' ஒருவரும் சேர்ந்து கொண்டாராம். (பவுன்சர் என்றால் பாரில் குடித்துவிட்டு ரகளை செய்வோரை பாய்ந்து பிடித்து வெளியேற்றுபவர்).
இதை சற்றும் எதிர்பாராத அரசியல் விஐ.பி.யின் மகன், தென் சென்னையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளில் ஒருவருக்கு ஸ்டார் ஹோட்டலில் இருந்தவாறே நள்ளிரவில் ஃபோன் போட்டாராம். அவ்வளவுதான்! அடுத்த சில நிமிடங்களில் பெரும் போலீஸ் படையே அங்கு வந்திருக்கிறது
ஆனால் அதற்குள் அந்த மாடலிங் பெண்ணும், அவளுடன் வந்த நண்பர்களும் கிரேட் எஸ்கேப்! ஹோட்டலில் வேலை பார்த்த பவுன்சர் மட்டும் மாட்டிக் கொண்டார். இதற்கிடையில் "இந்த ஹோட்டலில் எந்தப் பாரும், டான்ஸýம் இனி நடக்கக்கூடாது' என்று அங்கிருந்தவாறே 144 தடையுத்திரவு போட்டாராம் வி.ஐ.பி. மகன்.
ஆடிப்போன ஹோட்டல் நிர்வாகம், சமரசத்திற்கு ரெடியானது. போலீஸ் பிடியில் சிக்கிய பவுன்சரையும், ஹோட்டல் மானேஜரையும் அரசியல் வி.ஐ.பி. மகனிடம் சமரசம் செய்து வைக்க அழைத்துச் சென்றது. விடிய விடியப் பேச்சுவார்த்தை நடத்தி, விடிவதற்கு முன்பு ஒரு சமரசத்திற்கு வந்தது இரு தரப்பும். அந்த இரு முனை சமரசத் திட்டம் இதுதான்:
முதல் நிபந்தனை, அந்த பவுன்சர் ஸ்டார் ஹோட்டல் டான்ஸ் பார் பக்கம் இனி மேல் டூட்டிக்கு வரக்கூடாது என்பது. தான் மோகத்தில் மூழ்கி நிற்கும் மாடலிங் கேர்ளுக்கு அந்த பவுன்சர் தார்மீக அடிப்படையில் ஹோட்டலில் சப்போர்ட் செய்கிறார் என்பதால்தான் அரசியல் வி.ஐ.பி.யின் வாரிசு அப்படியொரு கட்டளை பிறப்பித்தாராம்! இரண்டாவது நிபந்தனை என்ன தெரியுமா?
""என்னைத் தூக்கியெறிந்து பேசிவிட்டாள் அந்த மாடலிங் கேர்ள். அவள் என்னிடம் சமாதானமாகும் வரை, அவளை இந்த ஹோட்டல் டான்ஸ் பாரில் அனு மதிக்கக்கூடாது'' என்பதுதான் இரண்டாவது நிபந்தனை. ஸ்டார் ஹோட்டல் தாங்கள் டான்ஸ் பார் நடத்த வேண்டுமே என்ற கோணத்தில் அரசியல் வி.ஐ.பி.யின் பிள்ளை வைத்த அத்தனைக் கோரிக்கையையும் நிறைவேற்றிக் கொடுத்துவிட்டது
இப்படி இந்த ஹோட்டலுக்கு கண்டிஷன் போட்டாலும், குறிப்பிட்ட அந்த "ஷா'வான மாடலிங் கேர்ளை குறி வைத்து வேறு ஸ்டார் ஹோட்டல்களிலும் தேடிக் கொண்டிருக்கிறது அரசியல் வி.ஐ.பி. பிள்ளையின் படை.
"எங்கு அந்த மாடலிங் கேர்ள் சிக்கப் போகிறாளோ? எந்த ஸ்டார் ஹோட்டல் பாரில் ரகளை நடக்கப்போகிறதோ?' என்ற பதற்றத்தில் போலீஸ் மட்டுமல்ல, ஸ்டார் ஹோட்டல் அதிபர்களும் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
நம்மிடம் இது பற்றி கருத்துச் சொன்ன போலீஸ் அதிகாரி ஒருவர், ""அரசியல் வி.ஐ.பி.கள் சிலர், தங்களின் பிள்ளைகள் செய்யும் "ஸ்டார் ஹோட்டல்' கலாட்டாக்களுக்கு தடா போட வேண்டும்.
இல்லை என்றால் மற்ற மாநகரங்களில் நடந்ததுபோல் சென்னை மாநகர ஸ்டார் ஹோட்டல்கள் எதிலாவது "பெண் கற்பழித்துக் கொலை' என்ற செய்தி வரத்தான் போகிறது.
அதில் ஏதாவது ஓர் அரசியல்வாதியின் பிள்ளை மாட்டிக் கொள்ளத்தான் போகிறார்'' என்று கவலை தெரிவித்தார்.
-வர்மா
தரவு - தமிழன் எக்ஸ்ப்ரஸ்
Labels:
அரசியல்
.விடுதலை - தலையங்கம்
குடிசைகளும் - கோபுரங்களும்!
நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையின் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா மக்களவையில் (28.8.2007) வெளிப்படுத்தியுள்ள ஒரு தகவல் -இந்தியா எந்த இடத்தில் உழலுகிறது என்பதற்கான கண்கண்ட எடுத்துக்காட்டாகும்.
"2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி 6 கோடியே 80 லட்சம் மக்கள் இந்திய நகர்ப் புறங்களில் உள்ள குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். 1981 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 2 கோடியே 79 லட்சம் மக்கள் நகர்ப்புற குடிசைகளில் வாழ்ந்துள்ளனர். 20 ஆண்டுகளில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி `கிரேட் மும்பை நகரின் மொத்த மக்கள் தொகையில் 54.1 சதவிகிதம் பேர் குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். அடுத்ததாக, மீரட் நகரில் 44.1 சதவிகிதமும், நாக்பூரில் 35.9 சதவிகிதமும், கொல்கத்தாவில் 32.5 சதவிகித மக்களும் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். கணக்கெடுப்பின்படி, தேசிய தலைநகரில் 18.7 சதவிகித மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார் அமைச்சர்.
நாடு வளர்ச்சித் திசையில் அதிவேகத்தில் பாய்கிறது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இருந்தாலும், இந்தப் புள்ளி விவரங்கள், அந்தத் தகவல்களைக் கேலிக் குறியாக்கி விட்டன.
பொருளாதார வளர்ச்சி இருக்குமானால், சேரிகளின் எண்ணிக்கை எப்படி பெருக முடியும் என்பது அடிப்படையான ஒரு கேள்வியாகும்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதிகள் மும்பையைச் சேர்ந்த தாராவியில்தான் இருக்கிறது. இந்தத் தாராவியின் மொத்த குத்தகைக்காரர்கள் யார் என்றால், நம் தமிழர்கள்தாம்.
இது ஒரு பக்கத்தின் நிலை என்றால், இன்னொரு பக்கத்தில் 36 மகா கோடீசுவரர்கள் இந்தியாவில்; 10 லட்சம் ரூபாய்க்குமேல் ஆண்டு ஒன்றுக்கு வருமான வரி கட்டுபவர்கள் 5 லட்சத்து 62 பேர்களாம்.
36 கோடீசுவரர்களின் கையிருப்பு ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டுகிறது.
இந்தியாவின் ஆண்டு வரவு - செலவு என்ன தெரியுமா? ஆறு லட்சம் கோடி ரூபாய்தான். இந்திய அரசாங் கத்தைவிட பணக்காரர்கள் 36 பேர் இந்தியாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இந்தி யாவை ஆட்டிப் படைக்காமல் என்ன செய்வார்கள்? அரசுக்கு வரி கட்டாமல் சவால் விடுபவர்கள் இன்னொரு பக்கம்.
சமச்சீரான வளர்ச்சி இந்தியாவில் இல்லை என்பதற்கு இவை எல்லாம் அடையாளங்கள்தாம்.
சேரிகள் என்றால் அவற்றின் பொருள் என்ன? சுகாதார வசதிகள் கிடையாது. மழை, வெயில்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இங்கு வாழ்பவர்கள் அன்றாடக் கூலிகள். அன்றாடம் வேலை கிடைக்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.
இந்த நிலையில், இவர்கள் பெற்றுப் போடும் பிள்ளை களுக்குக் கல்வியாவது, வெங்காயமாவது! எத்தகைய சூழலில் அக்குழந்தைகள் வளர்வார்கள் என்பதை எண் ணிப் பார்த்தால் ரத்தக் கண்ணீர்தான் வடிக்க வேண்டி வரும்.அடிதடிகளும், குற்றச் சூழல்களும்தான் இயல்பாக அந்தப் பகுதிகளில் நிலவும் பிரத்தியட்ச நிலைமையாகும்.
தி.மு.க., ஆட்சியில்தான் குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு புதுத் திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அறி முகப்படுத்தப்பட்டது. பல்லாண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட இந்தக் கட்டடங்கள் இடிந்த நிலையில், புதிதாகக் கட்டித் தரும் உறுதியையும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அளித்துள்ளார்.
ஒரு பக்கத்தில் நகரம் - கிராம பேதங்கள் என்ற நவீன வருணாசிரம நிலை என்றால், இன்னொரு பக்கத்தில் நகருக்குள் மாட மாளிகைகள் ஒருபுறம், சாலையோரக் குடிசைகள் இன்னொருபுறம்!
இதற்கு முடிவுதான் என்ன? மிகவும் கவலையோடு அணுகவேண்டிய, தீர்வு காணவேண்டிய தீப்பொறி போன்ற பிரச்சினை இதுவாகும். இது வளருமேயானால், `சாலையோரங்களில் வேலையற்றதுகள் - அவர்களின் கண்களிலே விபரீதக் குறி! என்றாரே அறிஞர் அண்ணா. அந்த வரிகள்தான் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகின்றன - எச்சரிக்கை!
வருமுன் காப்பதுதான் மனிதன் அறிவாளி என்பதற்கான இலக்கணமாகும்.

Tuesday, September 4, 2007
0
மியூச்சுவல் பண்ட் சொத்து ரூ.18,000 கோடி சரிந்தது
பங்குச் சந்தை வீழ்ச்சி எதிரொலி...
பங்குச் சந்தையில் கடந்த மாதம் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பில் ஆகஸ்டு மாதத்தில் ரூ.18,506 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் வசமிருந்த சொத்துகளின் மதிப்பு ரூ 4,86,129 கோடி. ஆகஸ்டு மாத இறுதியில் அவற்றின் மதிப்பு ரூ.4,67,623 கோடியாகக் குறைந்துவிட்டது.
வங்கிகளுக்கு இடையே பெறப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி உயர்ந்திருப்பதும் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட தொடர் சரிவுமே இதற்குக் காரணம் என இத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டாய்ட்ச் வங்கி சொத்து நிர்வாகப் பிரிவில் தலைமை முதலீட்டு அதிகாரியாக இருப்பவர் சுரேஷ் சோனி. வங்கிகளின் கையில் இருந்த உதிரி பணத்தின் அளவு குறைந்துவிட்டது.
பரஸ்பர நிதிக்கு வரும் புதிய முதலீட்டின் அளவு 4 சதவீதம் வரை குறைந்துள்ளது. பங்குச் சந்தையில் குறியீட்டெண் ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் பக்கத்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள் என இவர் தெரிவித்தார்.
எல்லா பரஸ்பர நிதிகளின் சொத்தும் குறைந்து போய்விடவில்லை. பல்வேறு கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு செய்துள்ள பெரிய பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு குறையவில்லை. அவை பெற்ற முதலீடுகள் அதிகரித்துள்ளன. ஐசிஐசிஐ புரூடென்ஷியல், ரிலையன்ஸ் மியூச்சுவல், எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஆகியவற்றின் சொத்து மதிப்புகள் உயர்ந்துள்ளன.
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் சொத்து மதிப்பு ரூ 1923 கோடியும் ரிலையன்ஸ் மியூச்சுவல் சொத்து மதிப்பு ரூ.1,177 கோடியும் எச்டிஎஃப்சி மியூச்சுவல்சொத்து மதிப்பு ரூ.718 கோடியும் உயர்ந்துள்ளன.
இந்த மூன்று பரஸ்பர நிதிநிறுவனங்களும் இந்திய பரஸ்பர நிதிநிறுவனங்கள் வசமுள்ள மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை தங்கள் கைகளில் வைத்துள்ளன.
தரவு - தினகரன்
Labels:
வர்த்தகம்
Sunday, September 2, 2007
0
இனையம் மூலம் வீட்டிலிருந்து அரசு பேருந்துகளில் பயண முன்பதிவு!
http://milakaai.blogspot.comவீட்டில் இருந்தபடியே இன்டர்நெட் மூலம் அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு: விரைவில் அறிமுகம்
அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய வீட்டில் இருந்தபடியே விரும்பிய இடத்துக்கு இன்டர்நெட் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் ஒரு பகுதியில் இருந்து தொலைதூரமாக உள்ள மற்றொரு பகுதிக்கு செல்வதற்காக, விரைவு பஸ்களை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. இதன் தலைமையிடம் சென்னையில் அமைந்துள்ளது. இக்கழகத்தின் மேலாண் இயக்குனராக ராமசுப்பிரமணி உள்ளார்.
மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி போன்ற இடங்களில் இருந்தும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவு பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கும் அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளுக்கு, நாள் இந்த பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல்வேறு சிறப்பு வசதிகளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தி வருகிறது
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (இயக்கம்) பாண்டியன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 911 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு சிறு மற்றும் பெரிய நகரங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட் டுள்ளது. பயணிகளுக்கு மேலும் வசதி அளிக்கும் வகையில், "ஆன்லைன்' (இன்டர்நெட்) மூலம் டிக்கெட் பதிவு செய்யும் வசதியை சோதனை முறையில், சென்னையில் பிராட்வே, தி.நகர், தாம்பரம் ஆகிய 3 இடங்கள் மற்றும் கோவை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 32 இடங்களில் அமல்படுத்தி இருக்கிறோம்.
இதன் மூலம், பயணி ஒருவர் தான் புறப்படும் இடத்தில் இருந்து போகும் இடத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவதுடன், திரும்ப வருவதற்கும் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ள முடியும். இந்த முறை அமல்செய்யப்பட்டதை தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு செய் வோரின் எண்ணிக்கை ஒரு நாளில் 6 ஆயிரத் தில் இருந்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது. "ஆன்லைன் புக்கிங்' வசதி படிப்படியாக அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப் படும். இதுதவிர, ரெயில்வேயில் உள்ளதுபோல் வீட்டில் இருந்தபடியே இன்டர்நெட் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் "இடிக்கெட்டிங்' முறையினை விரைவில் அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள் ளோம். இதன்படி, கிரெடிட் கார்டு வைத்திருந்தால் வீட்டில் இருந்தபடியே இந்த வசதியை பயன்படுத்தி பயனடைய லாம். சர்வீஸ் சார்ஜ் மட்டும் கூடுதலாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தரவு- மக்கள் குரல்

INSAT GSLV-F04 பறப்பது தாமதமாகிறது...
ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து "இன்சாட்4சிஆர்' செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி., எப் 04 ராக்கெட் இன்று மாலை வின்னில் ஏவப்படுவதாக இருந்தது.
கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வின்னில் ஏவுவது வரும் செப்டம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது
செய்திகளை முந்தித் தருவது மிளகாய்
Labels:
அறிவியல்
Saturday, September 1, 2007
0
அம்முவாகிய நான்..........
கதாசிரியார்களின் கதையே பெரும் கதையாக இருக்கும் பல இடங்களில். அதே கதைதான் இங்கும். இரண்டு முறை விருதுகளை நழுவவிட்ட எழுத்தாளர் பார்த்திபன், இந்த முறையாவது அந்த விருதை பெற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்கிறார். முந்தானை நழுவுகிற இடத்திலிருந்து ஒரு கதையை தேர்ந்தெடுத்தால் என்ன என்கிறது மூளை. அதற்காக அவர் போகிற இடம் சிவப்பு விளக்கு பகுதி. அங்கே அம்முவை பார்த்து காதலாகி கசிந்துருக, அம்முவுக்கோ இவர் கஸ்டமரில் ஒருவர்.
டவலை கட்டிக் கொண்டு வரும் அம்முவிடம், போய் டிரஸ் பண்ணிட்டு வா என்கிற பார்த்திபனை வேடிக்கையாக பார்க்கிறார் அம்மு. உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லும் அவரை இன்னும் வேடிக்கையாக பார்க்கிறார். அம்மு மட்டுமா? படம் பார்க்கிற நாமும்தான். தன் வீட்டு பத்திரத்தையே கொடுத்து பத்திரமாக கூட்டி வருகிறார் அம்முவை. வீட்டுக்கு வருகிற அம்மு, கணவர்... குடும்பம் என்கிற உறவுகளின் அற்புதத்தை உணர்கிறார்.
இதற்குள் அம்முவாகிய நான் என்ற கதையும் வளர்கிறது. தேர்வுக்கமிட்டியில் கையெழுத்து போட்டு அங்கீகாரம் கொடுக்க வேண்டிய அந்தஸ்தில் இருக்கிற மகாதேவன், விருதுக்கு விலையாக அம்முவையே கேட்கிறார், அதுவும் பார்த்திபனுக்கு தெரியாமல் அம்முவிடமே.
தனக்கு வேறொரு உலகத்தை காட்டிய கணவரின் கனவை நிறைவேற்ற வேண்டிய அம்மு என்ன செய்தாள்? க்ளைமாக்ஸ்...
அம்முவாக நடித்திருக்கிறார் புதுமுகம் பாரதி. டைட்டிலுக்கு வேண்டுமானால் புதுமுகமாக இருக்கலாம். நடிப்பில் டிக்ஷனரியே போடுவார் போல... இன்னொரு தகுதி, இழைத்து வைத்த தேக்குமரம் போல் உடற்கட்டு. அதை வஞ்சகமில்லாமல் பந்தி வைக்கிறார் மெனக்கட்டு. எழுத்தாளனின் மனைவி என்றதும், போலீஸ் அதிகாரியே வணக்கம் வைப்பதை பார்த்து கலங்கும்போதும், உன்னை விட்டா நான் வேறெங்கே போவேன் என்ற பார்த்திபனை கட்டிக் கொண்டு குமுறும்போதும், முதல் படத்தோடு வீட்டுக்கு போகிற நடிகை இவர் இல்லை என்ற நம்பிக்கை வருகிறது.
புதுமைப்பித்தன் என்பதை மற்றொரு முறையும் நிரூபித்திருக்கிறார் பார்த்திபன். இமேஜ் பார்க்கிற ஹீரோக்கள் மத்தியில் விபச்சார விடுதியில் மனைவி தேடும் மகாபுருஷனாக நடிக்க தைரியம் வேண்டும்.
படத்தின் சில காட்சிகள் அள்ளி தெளித்த அழகான பனித்துளிகள். புதுக்கல்யாணம் செய்து கொண்ட தம்பதிகள் பார்த்திபனும், பாரதியும் அவர்களுக்கு அவர்களே மாற்றி மாற்றி ஆரத்தி எடுத்துக் கொள்வது அழகிலும் அழகு. சின்னஞ்சிறுமி என்ன நடக்கிறது என்பதே அறியாமல் என்னை ஏம்மா யாருமே ஆட்டத்தில் சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க என்று ஆதங்கப்படுவது பரிதாபம்.
tharavu - tamilcinema.com