நடிகை மீரா வாசுதேவன் கண்ணீர் பேட்டி

நடிகை மீரா வாசுதேவன் தனது கணவர் விஷாலிடமிருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

கணவன் செய்த கொடுமைகள் குறித்து மீராவாசுதேவன் கண்ணீர்மல்க கூறியதாவது:
சிறந்த ஒளிப்பதிவாளரான அசோக்குமாரின் குடும்பம் என்பதால்தான் என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் 23 வயதிலேயே விஷாலை திருமணம் செய்து கொண்டேன். என்னை படங்களில் நடிக்க வைத்து அந்த பணத்தையெல்லாம் தாங்களே இஷ்டத்துக்கு செலவு செய்தார்கள். என்னிடம் இப்போது ஆயிரம் ரூபாய்கூட இல்லை. எல்லாவற்றையும் அவர்களே எடுத்துக் கொண்டார்கள். எனது பாலிசி, நகை எல்லாவற்றையும் பறித்துக் கொண்டார்கள். எனது பெயரை பயன்படுத்தி நிறைய கடன் வாங்கியிருக்கிறார்கள்.

என் கணவர் விஷால் தினமும் குடித்து விட்டுவந்து அடித்து உதைப்பார். சம்பாதித்த பணத்துக்கு கணக்கு கேட்டால் எல்லோரும் சேர்ந்து அடித்து துன்புறுத்தினார்கள். ஏதேதோ மருந்துகளை வலுக்கட்டாயமாக கொடுத்து என்னை மனநோயாளியாக சித்தரித்தார்கள். நான் ஒரு பெண் என்பதால் எனக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களை வெளிப்படையாக காட்ட முடியாது. எனது தாயாருடன் கடந்த 2 வருடமாக பேச விடாமல் செய்தார்கள்.

படப்பிடிப்பிலிருந்து தாமதமாக வந்தால் யாருடன் படுத்துவிட்டு வருகிறாய் என்று கேட்டு அவமானப்படுத்தினார்கள். இரவில் அறையில் படுத்திருந்தால்கூட அருகில் யாராவது படுத்திருக்கிறார்களா என்று என் கணவர் காலால் உதைத்து சோதனை செய்வார். கணவரின் தம்பியும் அம்மாவும் சேர்ந்து என்னை விபசாரத்தில் தள்ள முயற்சித்தார்கள். அதனால் வேறு வழியில்லாமல் விவாகரத்துக்கு வழக்கு போட்டுள்ளேன்.

பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தின் பெயரை கெடுக்க வேண்டாம் என்று இத்தனை நாள் மவுனமாக எல்லாவற்றையும் தாங்கி கொண்டேன். இப்போது வேறு வழியில்லாமல்தான் எல்லாவற்றையும் பேச வேண்டியுள்ளது. இனி அவருடன் சேர்ந்த வாழும் வாய்ப்பே இல்லை. மாதம் 5 ஆயிரம் ரூபாய்கூட சம்பாதித்து ஒரு மனைவியை காப்பாற்ற அவருக்கு தெரியவில்லை. என் சம்பாத்தியத்தில் வாழ நினைப்பவரோடு எப்படி வாழ முடியும்.
இவ்வாறு மீராவாசுதேவன் கூறினார்.



இது குறித்து மீரா வாசுதேவனின் கணவர் விஷால் கூறியதாவது:

என் அப்பா இயக்க இருந்த ஒரு தெலுங்கு படத்தில் வாய்ப்பு கேட்டு வந்தவர் மீரா. அப்போது அந்த படம் தள்ளிப்போனதால் Ôஎங்கள் குடும்பம் நிறைய கஷ்டத்தில் உள்ளது. எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது, நீங்கள் எனக்கு வாய்ப்பு வாங்கி கொடுங்கள்Õ என்றார். எங்கள் வீட்டிலேயே மூன்று மாதம் தங்கியிருந்து வாய்ப்பு தேடினார். அவருக்காக நாங்களும் வாய்ப்பு தேடினோம். இந்நிலையில் மீராவின் அம்மா, என் மகளை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்டார். நானும் மனிதாபிமான அடிப்படையில் அவரைத் திருமணம் செய்து கொண்டேன்.

எனது வாழ்க்கையையும் வளர்ச்சியையும் ஒதுக்கி வைத்து விட்டு அவருக்காக உழைத்தேன். அவருக்கு மனேஜராக, உதவியாளராக, அவருடைய செல்ல பிராணியை கவனித்துக் கொள்பவராக என்னை மாற்றிக் கொண்டு உழைத்தேன். அப்பாவின் செல்வாக்கு, எனது தொடர்பை பயன்படுத்தி அவருக்கு சினிமா வாய்ப்புகள் வாங்கி கொடுத்தேன். வரவுக்கு மீறி அவர் செலவு செய்தார். நான் எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. நான் சம்பாதிக்கிறேன் செலவு செய்கிறேன் என்பார். மீறி தடுத்தால் கத்தியை எடுத்துக் கொண்டு ”என்னை காயப்படுத்திக் கொண்டு உங்கள் மீது பழிபோடுவேன்” என்று மிரட்டுவார். பின்னர் விசாரித்ததில்தான் அவர் ஒரு மனநோயாளி என்றும் மும்பையில் அதற்காக சிகிச்சை பெற்றதும் தெரிய வந்தது.

பணம் இல்லாமல் சென்னையில் அவர் வந்து கஷ்டப்பட்டபோது அவரது அம்மா உள்பட யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. இப்போது அவர் ஒரு நிலைக்கு வந்ததும் அவரோடு ஒட்டிக்கொண்டுள்ள அவரது அம்மாதான் அவரை தூண்டிவிட்டு இப்படியெல்லாம் பேசவும், நடக்கவும் வைக்கிறார். அவர் சொல்லும் எதுவும் உண்மையில்லை என்று மீராவின் மனசாட்சிக்கு தெரியும். இப்போதும் நான் அவரை காதலிக்கிறேன். அவராக எதையும் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன். அதையும் மீறி நடப்பதை நானும் சட்டப்படி சந்திப்பேன்.
இவ்வாறு விஷால் கூறினார்.

தரவு -தமிழ்முரசு

1 comments:

January 4, 2008 at 7:25 PM காட்டாறு said...

நடிகையர் என்பதால் பிரபல செய்தியாகிவிட்டதோ?