எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தூக்குப் போட்டு தற்கொலை

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 67.

பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ். இவரது இயற்பெயர் ராம்மோகன். மனைவி ஹேமா (65). இவர்களுக்கு குழந்தையில்லை. கணவன், மனைவி மட்டும் கோடம்பாக்கம் டேங்க் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளத்தில் வசித்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக ஹேமா இறந்தார். மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் தனிமையில் தவித்தார் ஸ்டெல்லா புரூஸ்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது வீடு பூட்டியிருப்பதாக ஹேமாவின் தம்பி சேகருக்கு தகவல் கிடைத்தது.அவர், இன்று காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது உள்பக்கமாக பூட்டியிருந்தது. உடனே கோடம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் சேதுபாண்டியன் தலைமையிலான போலீசார் வந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, முன்பக்க அறையில் உள்ள மின் விசிறியில் ஸ்டெல்லா புரூஸ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். வேஷ்டியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உடலை இறக்கிய போலீசார், அதை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் ஸ்டெல்லா புரூஸ் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில் எழுதியிருப்பதாவது:

கடந்த 67 வருட எனது வாழ்க்கை பற்றி வருத்தங்கள் இல்லை. எளிய, உண்மையான, அடக்கமான மனிதனாக, ஆடம்பர சிந்தனை துளியும் இன்றி வாழ்ந்திருக்கிறேன். கண்ணை இமை காப்பதுபோல் என்னை பார்த்து, அலாதியான காதலுடன் நேசித்து பத்திரப்படுத்தி அபூர்வ, ஆனந்த மனைவியாக என் மனைவி ஹேமா வாழ்ந்தார்.

எத்தனை பிறவியானாலும் இதை மறக்க மாட்டேன். நானும் ஹேமாவும் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான, ஆன்மிகமான இலக்கிய தன்மையான காவியம். என் மரணம், முதுமையில் ஒடுங்கிப் போயிருக்கும். ஹேமாவின் துணை இல்லாத சூனியம், தாங்க முடியாததாக இருக்கிறது. தனிமை சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது.

எனவே, ஹேமாவிடம் செல்கிறேன். மரணத்தின் கதவுகளை திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும்போது, மரண விடுதலை பெறுகிறேன்
.


இவ்வாறு அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார். கடிதத்தை கைப்பற்றிய கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அவர் இறந்தது தெரியவந்தது. "அது ஒரு நிலாக்காலம்" உள்பட பல்வேறு புகழ்பெற்ற நாவல்கள், சிறுகதைகளை ஸ்டெல்லா புரூஸ் எழுதியுள்ளார்.

தரவு - தமிழ்முரசு

9 comments:

March 1, 2008 at 6:43 AM -/சுடலை மாடன்/- said...

மனதை உருக்கும் செய்தி. ஒரு எழுத்தாளன், அதுவும் வெகுஜனத்தளத்தில் பிரபலமாக எழுதிய ஒரு எழுத்தாளன், இப்படியொரு தனிமையான சூழலில் வாழ்ந்து தற்கொலை செய்திருக்கிறார் என்பதை அறியும் பொழுது வருத்தமாக இருக்கிறது. ஆனந்த விகடன, குமுதம் போன்ற பத்திரிகைகள் இது போன்ற எழுத்தாளர்களினால் இன்னும் அமோகமாக பணம் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது (அவை வேறு எதுவும் தமிழுலகில் சாதிக்க வில்லை) இவர்களுக்கு ஏன் இப்படி ஒரு சோகமான வாழ்க்கையும், முடிவும? நன்றிக் கடனாகவாவது இது போன்ற ஏழை எழுத்தாளர்களின் நலனுக்காக ஏதாவது ஒரு ஏற்பாட்டை வெகுஜனப் பத்திரிகைகள் செய்திருக்கலாம்.

March 1, 2008 at 6:57 AM -/பெயரிலி. said...

:-(
:-( :-( :-(
ஒரு காலகட்டத்திலே என்னை மிகவும் பாதித்த எழுத்தாளர். இத்துணை மென்மையாக உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா என்று வியப்பு(ம் பொறாமையுங்கூட) ஏற்படுத்தியவர். அவருடைய கதைகளிலே அவரை உணர்த்திய வகையிலே, தூக்குப் போட்டுக்கொண்டதற்கான காரணம் வியப்பளிக்கவில்லை.

ஆனால், வசதிப்பட வாழ்ந்து நொடிந்துபோனார் என்று அண்மையிலே பதிவொன்றிலே வாசிக்கவும் கிட்டியது.

March 1, 2008 at 8:18 AM enRenRum-anbudan.BALA said...

Really hurt seeing this sort of an end to a good writer

//
ஆனந்த விகடன, குமுதம் போன்ற பத்திரிகைகள் இது போன்ற எழுத்தாளர்களினால் இன்னும் அமோகமாக பணம் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது (அவை வேறு எதுவும் தமிழுலகில் சாதிக்க வில்லை) இவர்களுக்கு ஏன் இப்படி ஒரு சோகமான வாழ்க்கையும், முடிவும?
//
I agree !

March 1, 2008 at 8:59 AM வவ்வால் said...

ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் எழுதுபவர் என்றாலும்... ஒரு உயர் வர்க்க எழுத்தாக(நகர்ப்புறத்தவருக்கான கதைகளென சொல்கிறேன்) வரும் அவரது கதைகளை பத்திரிக்கைகளில் படித்தது மட்டுமே அவர் குறித்தான எனது அனுபவம்.அவரது மனைவிக்கு உடல் நிலைப்பாதிக்கப்பட்டது பற்றியும், மறைவு பற்றியும் படித்தேன், ஆனால் இப்படி அகாலமாக தற்கொலை செய்துக்கொள்வார் என நினைக்கவும் இல்லை, இது அதிர்ச்சியான செய்தி!

அவரது ஆன்மா சாந்தியடைவதாக!

March 1, 2008 at 10:00 AM Sridhar V said...

அருமையான ஆற்றொழுக்கான நடையில் நுணுக்கமான உணர்வுகளை பதிய வைக்ககும் அருமையான எழுத்தாளர். அவருடைய எழுத்துக்களை என்றும் தவறவிட்டதில்லை.

அவருடைய பேட்டியில் அவருடைய மனைவியை பற்றியும் குடும்ப வாழ்க்கையை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். தனிமைத் துயர் அவ்வளவு கொடியதா? :-((((

அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக!

March 1, 2008 at 11:20 AM அரை பிளேடு said...

அதிர்ச்சியாக இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் அவர் எழுதிய தொடர் ஒன்றின் மேன்ஷனில் தனிமையில் வாடும் முதியவர் ஒருவரைப் பற்றி எழுதியிருப்பார். மிகவும் பாதித்த தொடர் அது.

அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

March 1, 2008 at 11:52 AM தென்றல் said...

என்ன சொல்றது தெரியலை....

அவருக்கு நமது அஞ்சலிகள்!

March 1, 2008 at 12:42 PM துளசி கோபால் said...

அடடா.............

என்ன இது இப்படியெல்லாம்?

ரொம்ப வருத்தமா இருக்கு.

அன்னாருக்கு அஞ்சலிகள்.

March 1, 2008 at 6:41 PM நா. கணேசன் said...

மனைவியைப் பற்றி எழுதியுள்ளது உருக்கமானது. 'டைமிங்' செய்து வாழ்வை முடித்துக்கொண்டிருக்கிறார்.

நல்ல கதைகளைத் தந்த ஸ்டெல்லா புரூஸ் அவர்களுக்கு இதய அஞ்சலி.

நா. கணேசன்