தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியதை அடுத்து முதல்வர் கருணாநிதிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ரகசியத் தொடர்பு இருப்பது வெளிப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்பதால் திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு கருணாநிதி மறைமுகமாக ஆதரவு தருகிறார் என பலமுறை தெரிவித்தேன்.
இதை நிரூபிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் போர்த்தளவாடங்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை புலிகளுக்கு கள்ளத்தனமாக அனுப்பிவைத்ததை போலீஸôர் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். ஆனால், அன்று மாலையே அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து முதல்வர் கருணாநிதி மெüனம் சாதித்தார்.
அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு கவிதை வடிவில் அவர் இரங்கல் தெரிவித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி.
1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதல்வர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சார்ந்தவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்துரைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விடுதலைப்புலிகள் பிரமுகர் மரணத்துக்கு கவிதை எழுதும் கருணாநிதி, கடந்த 17 மாத ஆட்சியில் எந்த எந்த வகைகளில் ரகசியமாக விடுதலைப்புலிகளுக்கு உதவியுள்ளார் என்பதை கண்டறியும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.
இந் நிலையில் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மையக் கருத்து கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார் ஜெயலலிதா.
தரவு - தினமணி
Saturday, November 3, 2007
Subscribe to:
Post Comments
5 comments:
இப்படி இரு அறிக்கையை எதிர்பார்த்தது தான். சிலருக்கு அறிக்கைகளால் தந்து இருப்பை காட்டிக்கொள்ள இது ஒரு வாய்ப்பு. இன்னும் சில அறிக்கை வரலாம். கூட்டணி கட்சியின் தலைவர் வைகோ என்ன பதில் சொல்வாரோ? சிங்களத்தின் இந்திய பிரதிநிதியாக பேரினவாதி ஜெயலலிதா செயல்படுவதில் வியப்பு எதுவுமில்லை. நாளை தமிழீழம் மலர்ந்தால் ஜெயலலிதாவின் இந்த அறிக்கைகள் காணாமல் போகவும் செய்யும்.
ஜெ - சீ த்தூதூதூ..
வைகோ சிந்திப்பாரா????
தமிழ்செல்வனுக்கு இரங்கல் கவிதை - கலைஞர்
முன்னாள் நடிகை / முதல்வர்.. செல்வி செயலலிதா.. === ஆ ஐயோ அம்மா... ஆட்சி கவிழ்க்கனும்...
தமிழர் வாழும் இடமெல்லாம், தமிழ்செல்வன் புகழ் பாடுவோம்... வை கோ
இதுக்கு என்ன சொல்லப்போது உங்க அம்மா..
ஒரு நடிகரின் காதலியாக இருந்தவர் என்ற ஒரே தகுதி பெற்றவரிடம் மனிதாபிமானமெல்லாம் எதிர் பார்க்கக் கூடாது தான்.
இன்னும் அங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் உடன் பிற்ப்புக்களே உங்களுக்காக வருத்தமும்,வேதனையும் படுகின்றோம்.
அடுத்து சுப்பிரமணிய சாமி, சோ இராமசாமி போன்ற விஷ ஜந்துக்கள் பேனாக்களைப் பிடிக்கும். என். ராம் போன்ற போலி இடதுசாரிகள் இந்துவில் ஆசிரியர் கட்டுரை எழுதும். டெல்லியில் காத்திருக்கும் அதிகார வர்க்க ஜந்துக்களுக்கு நெறிக்கட்ட ஆரம்பித்து எம். கே.நாராயணனை அனுப்பி வைக்கும். அவர் முதல்வரைச் சந்தித்து தனியே வந்து ஆட்சியைக் கலைத்து விடப் போவதாக மிரட்டி விட்டுப் போவார்.
வாழ்க இந்த பார்ப்பனிய நரிகள் இந்தியாவில் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் !!
ஆட்சிக்கலைப்பு, போட்டா, மூன்றாண்டு சிறை போன்றவை இவர்களது கருத்துச் சுதந்திரத்தை மீறுபவர்களுக்குக் கொடுக்கப் படும் தண்டனைகள்.
முகமூடியின் பதிவில் ஏற்கனவே இந்தப் பார்ப்பனிய கருத்துச் சுதந்திரத்தைக் கீழ்க்கண்டவாறு அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார்:
//
அப்பாவி: அண்ணே, கருத்து சுதந்திரம்னா என்னண்ணே...
அண்ணாசாமி: அதுவா... எனக்கு பிடிச்ச கருத்த சொல்றதுக்கு உனக்கு சுதந்திரம் உண்டுன்னு அர்த்தம்
//
Post a Comment