கொழும்பு: இலங்கை ராணுவத்தின் இறுதிக் கட்டத் தாக்குதல் கடுமையாக இருப்பதால், புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. மேலும் உயரி் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இலங்கை அரசிடம் சரண் அடையவும் புலிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கிடையில் புலிகள் தலைவர் பிரபாகரனின் உடல் ராணுவ முகாமில் இருப்பதாக உறதி செய்யப்படாத தகவல் கூறுகிறது.
விடுதலைப்புலிகள் தோல்வியடைந்து விட்டதாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே அறிவித்துள்ளார். ஜோர்டான் நாட்டில் ஜி-11 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது உரையாற்றிய ராஜபக்ஷே, விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் தோற்கடித்து விட்டதாக கூறினார். . இலங்கையில் பல ஆண்டு காலத்துக்கு பிறகு பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புலி தலைவர் பிரபாகரன் குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை . ராஜபக்ஷே ஜோர்டான் பயணத்தை பாதியில் முடித்துக்கு கொண்டு இலங்கை திரும்பினார். ராணுவ வெற்றியை தொடர்ந்து இலங்கை தமிழர்களின் பிரச்னையை தீர்க்க அரசியல் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கைக்கு திரும்பிய அதிபர் ராஜபக்ஷே , தாய் மண்ணுக்கு தலை வணங்கி, இலங்கையை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவித்து விட்டேன் என கூறினார். விமான நிலையத்தில் ராஜபக்ஷேவை வரவேற்க சர்வ சமய தலைவர்களும் வந்திருந்தனர்.ராணுவ அதிகாரிகள் ஒருவருக்கு ஒருவர் பால் சாதம் ஊட்டி மகிழ்ந்தனர். இலங்கை மக்கள் பட்டாசு வெடித்து விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை கொண்டாடினர்.
முல்லை தீவில் 150 உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா? அவரது நிலை என்ன என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கைப்பற்றப்பட்ட உடல்களை அடையாளம் காணுப்பட்ட பிறகு தான் பிரபாகரன் இறந்துவிட்டது குறித்து உறுதி செய்யப்படும் என ராணுவ தரப்பு கூறுகிறது.
இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிளித்த தகவல் துறை அமைச்சர் அணுரா பிரியதர்சன் கூறியதாவது : இலங்கையில் விடுதலைப்புலிகள் மிக குறுகிய பரப்பளவில் உள்ள இடத்துக்குள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் பிரபாகரன் நிலை என்பது குறித்து ராணுவ கேம்பில் இருந்து அதிகாரபூர்வ செய்தி வந்தவுடன் தான் உறுதி செய்ய முடியும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தினமலர்

0 comments:
Post a Comment