இந்திய ஜனநாயகம் சிறப்பாக உள்ளது- பாக். சுப்ரீம் கோர்ட் பாராட்டு

இந்திய ஜனநாயகம் சிறப்பாக செயல்படுவதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அதிபர் பெர்வஸ் முஷாரப் ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்யாமல் மீண்டும் அதிபராக பதவியேற்றுக் கொள்வதை எதிர்த்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ஜாவேத் இக்பால் உட்பட 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த பெஞ்ச்சில் இடம் பெற்றுள்ள நீதிபதி அஜாஸ் அகமது வழக்கு விசாரணையின் போது இந்தியா குறித்து தெரிவித்த கருத்துகள்:

இந்திய அரசியலுக்கும் பாகிஸ்தான் அரசியலுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இந்திய அரசியல் தலைவர்களுக்கு சகிப்புதன்மை உள்ளது. பாகிஸ்தான் தலைவர்களிடம் இது இல்லை. ஜனநாயக நாட்டுக்கு இந்தியா மிகச்சிறந்த உதாரணமாகும். அதிகாரப் பரவல் மற்றும் பகிர்வுக்கு உதாரணமாக இந்திய ஜனநாயகம் விளங்குகிறது. அங்கு நடைபெறும் தேர்தல்களில் உளவுத்துறையின் தலையீடுகள் கிடையாது.

ராணுவ தளபதிகளுக்கு இந்திய அரசியல்வாதிகள் விருந்துகள் வைப்பதில்லை.

தரவு - தமிழ்முரசு

2 comments:

October 23, 2007 at 9:04 AM மாசிலா said...

இப்போதாவது நல்லனவற்றை புரிந்துகொண்டு இத்துணை கண்டத்தில் அமைதி நிலவ பாடுபடுவோர் என நம்புவோம்.

October 23, 2007 at 12:33 PM சீனு said...

ஒரு முறை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸை பேட்டியெடுக்கும் பொழுது, "இந்தியா என்றதுன் உங்கள் நினைவுக்கு வருவது எது?" என்ற இந்தியா டுடேயின் கேள்விக்கு, "இதே கேள்வியை இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் (நரசிம்ம ராவ், குஜ்ரால்) மற்றும் ஜனாதிபதிகள் (வெங்கட்ராமன், நாராயணன்) ஆகியோரிடன் கேட்கும் பொழுது அத்தனை பேரும் சொல்லிவைத்தார் போல 'ஜனநாயகம்' என்று கூறினர். அது தான் என் பதிலும்" என்றார். இந்த பேட்டி அவர் நாடு கடத்தும் பொழுது எடுக்கப்பட்டது. (ஒரு வேளை பாகிஸ்தான் பிரதமர்கள் ஒழுங்காக இருந்திருந்தால் பாக் உச்ச நீதிமன்றம் இதனை சொல்ல வாய்ப்பிருந்திருக்கதோ என்னவோ)