மன்னாரில் கடும் சண்டை : 17 விடுதலைப்புலி பலி

இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 17 புலிகள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை :

யாழ்ப்பாணம் மாவட்டம் நாகர்கோவிலில் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் நேற்றிரவு விடுதலைப் புலிகள் அத்துமீறி நுழைய முயன்றனர். பீரங்கிகளால் ராணுவம் மீது கடும் தாக்குதல் நடத்தினர். ராணுவமும் திருப்பி தாக்கியது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சண்டை நீடித்தது. இதில், 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவரும் இந்த சண்டையில் உயிரிழந்தார். மேலும், ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் நடந்த மற்றொரு சண்டையில் ஏழு புலிகள் கொல்லப்பட்டனர். இதில், ராணுவ வீரர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் 120 விடுதலைப் புலிகள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவு - தினமலர்

1 comments:

October 1, 2007 at 9:09 AM Thamizhan said...

பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும் பொய்மல்ர் பொறுக்கிகளே,
உங்கள் கண்க்குப் படி பிரபாகரன் பல முறை இறந்து விட்டார்,
புலிகளின் எண்ணிக்கை -200,000.
அவர்களிடம் இருந்த ஆயு்தங்கள் எல்லாம் கலையப் பட்டு விட்டன.
ந்ரசிம்ம அய்யங்கார் மகுடத்தை எடுத்துக் கொடுக்க,சோமாரி தன் மூக்குச் சளிக் குரலில் மந்திரம் ஓத,
குருமூர்த்தி தர்ப்பை புல் கையில் இருக்க,
பொய்மலர் மணித்துளிச் செய்திகள் இட
மகிந்த கொலை வெறியனின் முடி சூடும் விழா யாழ்ப்பாணத்திலே
நடக்க நீங்கள் நன்றாக் இருங்கள்.தயவு செய்து திரும்பி தமிழ்நாட்டிற்கு வராதீர்கள்.