தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகளுக்கு ஜன.10ல் தூக்கு!

தர்மபுரி அருகே வேளாண் பல்கலை மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் து£க்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட 3 பேரையும் வருகிற ஜனவரி 10-ம் தேதி தூக்கிலிடுமாறு நீதிபதி வாரன்ட் பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து மூன்று பேரையும் தூக்கிலிடுவது தொடர்பான ஆரம்பகட்ட வேலைகள் கோவை சிறையில் துவங்கியது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதை எதிர்த்து தர்மபுரியில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில், மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் உடல் கருகி பலியாகினர்.

இதுதொடர்பாக நடந்த வழக்கில் அதிமுகவை சேர்ந்த நெடு (எ) நெடுஞ்செழியன், மாது (எ) ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு து£க்கு தண்டனையும், மற்ற 25 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும், சேலம் நீதிமன்றம் கொடுத்த தண்டனையை உறுதிபடுத்தி தீர்ப்பு கூறப்பட்டது. அதே நேரத்தில் 25 பேருக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டு தண்டனையை குறைக்க வேண்டும் என்று எதிர்தரப்பு வக்கீல்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, Ôஅறிவிக்கப்பட்ட தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி 25 பேரும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

அதையடுத்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய டி.கே.ராஜேந்திரன் உள்பட 25 பேரும் சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். அவர்கள் அனைவரையும் கோவை சிறையில் அடைக்க நீதிபதி மாணிக்கம் உத்தரவிட்டார்.
இந்நிலையில் து£க்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் து£க்கிலிடும் தேதியை நீதிபதி மாணிக்கம் அறிவித்துள்ளார். வருகிற 10ம் தேதி காலை 6 மணிக்கு மூன்று பேரையும் கோவை மத்திய சிறையில் சாகும்வரை து£க்கிலிடுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான வாரன்ட் கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று பேரையும் தூக்கிலிடுவது தொடர்பான ஆரம்பகட்ட வேலைகள் கோவை சிறையில் துவங்கிவிட்டது.

0 comments: