புதிய 7 உலக அதிசயங்கள் !

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலக அதிசயங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. புதிய உலக அதிசயங்களை தேர்வு செய்யும் போட்டியை சுவிட்சர்லாந்தை சேர்ந்த நியூ ஓப்பன் வேர்ல்ட் அமைப்பு அறிவித்திருந்தது.

இந்த அமைப்பு கோடீஸ்வரர் பெர்னார்ட் வெப்பர் என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். கடந்த 2001ம் ஆண்டு முதல் புதிய உலக அதிசயங்களை தேர்ந்தெடுக்கும் ஓட்டெடுப்பு இன்டெர்நெட், தொலைபேசி. எஸ்எம்.எஸ் மூலம் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் நிபுணர் குழு புதிய 7 உலக அதிசயங்களை தேர்ந்தெடுத்து அறிவித்தது. உலகெங்கிலும் உள்ள 20 அதிசயங்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன.

கடந்த பல மாதங்களாக உலக அதிசயங்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இரவுடன் வாக்கெடுப்பு முடிவடைந்தது. இதுவரை மொத்தம் 9 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 7 உலக அதிசயங்களின் பட்டியல்போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் அறிவிக்கப்பட்டது. அனைத்து இந்திய மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த தாஜ்மஹால் 7 அதிசயங்களில் ஒன்றாக இடம் பெற்றது. *

1. சீனபெருஞ்சுவர்
2. பெட்ரா ( ஜோர்டான் )
3. கிறிஸ்துடிரீமர் ( பிரேசில்)
4. மாச்சுபிச்சு( பெரு) ,
5. கிசென்இட்சா ( மெக்சிகோ)
6. கொலாசியம் ( இத்தாலி)
7. தாஜ்மகால்

கூட்டுறவு சங்க தேர்தலில் தி.மு.க. வன்முறை

தமிழகம் முழுவதும் இன்று நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் பல இடங்களில் தி.மு.க.வினர் வன்முறை அராஜகத்தில் ஈடுபட்டார்கள்.

பல இடங்களில் ஓட்டுப் பெட்டிகளை தி.மு.க.வினர் தூக்கி கொண்டு ஓடினார்கள்.

பதிவான ஓட்டுச்சீட்டுகளை கிழித்து போட்டார்கள். தடுக்கப்போன போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள்.

தி.மு.க.வினரின் வன்முறை வெறியாட்டம் காரணமாக பல இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தி.மு.க.வினரின் அராஜகத்தை கண்டித்து கடை அடைப்பு நடந்தது.



தமிழகம் முழுவதும் 5 கட்டங்களாக கூட்டுறவு சங்க தேர்தல் நடக்கிறது. இன்று (7ந்தேதி) முதல் 11ந்தேதி வரை இந்த தேர்தல் நடக்கிறது.

முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 2ந்தேதி தொடங்கியது. தேர்தல் இன்று காலை துவங்கியது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

கூட்டுறவு பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 1945 கூட்டுறவு சங்கங்களுக்கும் செயற் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 3994 கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. பங்கேற்கவில்லை. ம.தி.மு.க.வும் பங்கேற்கவில்லை.

தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். கூட்டுறவு தேர்தல் நடத்தப்படும் விதத்தை பா.ம.க. தலைவர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜனும் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. ஆளும் கட்சியினர் விரும்புபவர்களை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்துள்ளதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. ஜனநாயக பூர்வமாகவும், அமைதி யாகவும் ஓட்டளிப்பதை உத்தரவாதப் படுத்தும் முறையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறினார்.

தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களே தி.மு.க.வினரின் அராஜகத்தை சுட்டிகாட்டியுள்ள நிலையில் இன்று கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் பல இடங்களில் வன்முறை வெறியாட்டடும் தலைவிரித் தாடியது.

காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரம் அருகே இன்று காலை நடந்த கூட்டுறவு வங்கி தேர்தலில் தி.மு.க.வினரின் அராஜகம் தலைவிரித்தாடியது. வாக்குப் பெட்டியை அக்கும்பல் சூறையாடி வாக்குச் சீட்டுகளை கிழித்து எரிந்தனர். பொதுமக்கள் கூடியதால் அக்கும்பல் தப்பியோடியது. இதையொட்டி தேர்தல் ரத்து செய்யப் பட்டது. பதட்டம் ஏற்பட்டதால் ஆயுதம் தாங்கிய போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இதில் மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

முத்தியால்பேட்டை, ஐயன்பேட்டை, ஏரிவாய், பூச்சிவாக்கம், தாங்கி, வில்லிவலம் உள்ளிட்ட கிராமங்கள் வங்கியின் எல்லை களாக உள்ளன. மொத்தம் இந்த வங்கியில் 11 நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு 32 பேர் போட்டியிட்டனர்.

தி.மு.க. தரப்பில் மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜி. சுகுமார் மற்றும் அவரது அணியினரும், காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவரும், ஒன்றிய கவுன்சிலரு மான முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித் குமாரும் தேர்தலில் போட்டியிட்டார்கள்.

வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடினர்

இந்நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு இவ்வங்கியில் கூட்டுறவு தேர்தல் தொடங் கியது. தேர்தல் அதிகாரி ஆர். சீனிவாசன் தேர்தலை நடத்தினார். காலை 9.30 மணிக்கு 105 பேர் ஓட்டுப் பெட்டியில் வாக்குகளை பதிவு செய்தனர். அச்சமயம் திடீரென ஐயன் பேட்டை தி.மு.க. கிளை செயலாளர் ராமலிங்கம், வள்ளுவப்பாக்கத்தை சேர்ந்த சம்பத், முத்தியால்பேட்டையை சேர்ந்த தண்டுகுமார் ஆகிய தி.மு.க.வினர் திடீரென வாக்குப் பதிவு நடந்த அறைக்கு சென்றனர். அங்கிருந்த வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது பதிவாகியிருந்த வாக்குச்சீட்டுகளையும் அக்கும்பல் கிழித்து எரிந்தது.

வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் 5 போலீசார் முன்னிலை யில் இவ்வாக்கு பெட்டியை அக்கும்பல் கால் பந்து போல் தட்டி சென்று 200 மீட்டர் தூரத்தில் போட்டுவிட்டு மக்கள் கூடியதும் அக்கும்பல் தப்பி ஓடிச் சென்றது.

தேர்தல் அதிகாரி முற்றுகை

இத்தகவல் அறிந்ததும் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி. ரஞ்சித்குமார் மற்றும் காங்கிரசார் வங்கிக்கு சென்று தேர்தல் அதிகாரி சீனிவா சனிடம் நியாயத்தை கேட்டு முற்றுகை யிட்டனர். மேலும் காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்ட் அ.முனியப்பன் ஆயுதம் தாங்கிய போலீசாருடன் முத்தியால் பேட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு விரைந்தார். தேர்தல் அதிகாரி சீனிவாசனிடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் முனியப்பன் விசாரணை நடத்தினார். அப்போது தேர்தல் அதிகாரி சீனிவாசன், "ஒரு மர்ம கும்பல் வாக்குப்பதிவு நடை பெறும் அறைக்கு திடீரென வந்தது. அங்கிருந்து வாக்குப் பெட்டியை வேகமாக தூக்கி சென்று, அதிலிருந்த வாக்குச் சீட்டு களை கிழித்து எரிந்தது என்றார்'. உடனடி யாக துணை போலீஸ் சூப்பிரண்ட் முனியப்பன் அந்த கும்பலில் உள்ளவர்களை அடையாளம் காட்டுவீர்களா? என்றார். அதற்கு தேர்தல் அதிகாரி, சரியாக சொல்ல முடியாது என்றார்.

பதட்டம்

முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த தேர்தல் வன்முறையால் அங்கு பதட்டம் நிலவுகிறது. அங்கு கூடியிருந்த காங்கிரசார் தி.மு.க.வினரின் அராஜகம் ஒழிக என்று கோஷமிட்டனர்.

தேர்தல் ரத்து

எந்த தேதியில் மீண்டும் தேர்தல் நடக்கும் என்று நிருபர்கள் தேர்தல் அதிகாரியிடம் கேட்டனர். தற்போது தேர்தல் ரத்து செய்யப் பட்டது. தேர்தல் நடைபெறும் மறுதேதி அறிவித்ததும் தெரிவிக்கப்படும் என்றார்.

மரக்காணத்தில்...

மரக்காணம் அருகே உள்ளது அனுமந்தை கிராமம். அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு 11 இயக்குனர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. இக்கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் இன்று காலை ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தல் அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் ஓட்டு பதிவு நடந்தது. கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர்.

தே.மு.தி.க.வை சேர்ந்த ராஜேந்திரன் தலைமையில் 17 பேர் இயக்குனர் தேர்தலில் ஒரு அணியாக போட்டியிட்டனர். தி.மு.க.வை சேர்ந்த கண்ணன் தலைமை யிலான அணி உட்பட 20பேர் இன்னொரு அணியாக போட்டியிட்டனர்.

ஓட்டுப் பெட்டியை தூக்கிக்கொண்டு தி.மு.க.வினர் ஓட்டம்

விறுவிறுப்பாக நடந்த ஓட்டுப்பதிவில் காலை 9 மணி அளவில் கண்ணன் ஆதரவாளர்கள் திடீர் என்று ஓட்டுப் பதிவு நடக்கும் அரசு ஆரம்பப் பள்ளிக்குள் திபுதிபுவென்று புகுந்தனர். அங்குள்ள தேர்தல் அதிகாரியை தாக்கி விட்டு ஓட்டுப் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.

தடுக்க வந்த போலீசார், விஜயகாந்த் கட்சியினர் மீது கல்வீச்சு

தடுக்க வந்த போலீசார் மீது கல் வீசினார்கள். கல்வீச்சில் மரக்காணம் சப்இன்ஸ்பெக்டர் ஹரிக்குமார் உட்பட 4 போலீசார் காயமடைந்தனர். தே.மு.தி.க. வைச் சேர்ந்த ஆனந்தன், கேசவன் ஆகியோரும் காயமடைந்தனர். இதில் ஆனந்தன் கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

கடைகள் அடைப்பு; பதட்ட நிலை

அந்த கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. கடைகள் மூடப்பட்டு விட்டன. தகவலறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி. குமார் தலைமையில் போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று பல இடங்களிலும் தி.மு.க.வினர் இன்று வன்முறையில் ஈடுபட்டார்கள்.

பிளாஸ்டிக் சர்ஜனை ஏமாற்றிய நடிகை பிபாசா


மார்பக சிகிச்சை செய்துகொண்டு ரூ.2 லட்சம் பீஸ் கொடுக்காமல் ஏமாற்றுகிறார் நடிகை பிபாஷா -பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர் புகார்




மார்பக சிகிச்சை செய்த டாக்டருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பீஸ் தராமல் இந்தி நடிகை பிபாஷா பாசு ஏமாற்றிவிட்டார் என்ற பகீர் தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியில் தூம்-2, அலக், கார்ப்பரேட், பிராடு, ஓம்காரா, பர்சாத் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் பிரபல நடிகை பிபாஷா பாசு. தமிழில் சச்சின் படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கு ஆடினார். பிலிம்பேர், ஜீ டிவி உள்பட பல நிறுவனங்களின் விருதுகளையும் பாலிவுட் விருதுகளையும் பெற்றவர். சர்வதேச அளவில் போர்ட் நிறுவனம் நடத்திய மாடல் அழகிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்று Ôசூப்பர் மாடல்Õ என்ற பட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றவர்.

ஆசிய கவர்ச்சிக் கன்னிகள் பட்டியலில் மல்லிகா ஷெராவத், ஐஸ்வர்யாராய் ஆகியோருடன் இவரும் தொடர்ந்து நீடிப்பவர்.இந்நிலையில், மல்லிகா ஷெராவத், ராக்கி சாவந்த் ஆகியோர் அதிக கவர்ச்சி காட்டி நடித்த படங்கள் சூப்பர்ட்டாக அமைந்ததால், மார்பகங்களை பெரிதாக்கிக் கொண்டு கூடுதல் கவர்ச்சி காட்ட பிபாஷா முடிவு செய்தார். தனக்கு ஏற்கனவே காதில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த மும்பை டாக்டர் அசோக் குப்தாவை தொடர்பு கொண்டார்.

வெளிநாட்டில் இருந்து சிலிகான் இறக்குமதி செய்து பிபாஷா பாசுவின் மார்பகத்தில் பொருத்தி 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி ஆபரேஷன் செய்தார் அசோக் குப்தா. 2 நாள் அங்கேயே தங்கியிருந்து ஓய்வு எடுத்தார் பிபாஷா. ஆபரேஷனுக்கு பிறகு, அவரது மார்பகத்தின் அளவு 3 இன்ச் அதிகரித்தது. மிகவும் குஷியான பிபாஷா, "வீட்டுக்கு போனதும் ரூ.2.5 லட்சம் பீஸ§க்கும் செக் அனுப்புகிறேன்" என்று கூறிச் சென்றார். போனவர் போனவர்தான். 5 ஆண்டுகள் ஆன பிறகும், பீஸ் வந்து சேரவில்லை என்று புலம்புகிறார் டாக்டர் அசோக் குப்தா.

"ஆபரேஷன் விவகாரம் கசிந்தால், பேர் கெட்டுப்போகும் என்பதால், சுசான் நூடா என்ற பெயரில் இங்கு பிபாஷா அட்மிட்டானார். ராக்கி சாவந்த் உள்பட பாலிவுட் நடிகைகள் பலருக்கும் ஆபரேஷன் செய்திருக்கிறேன். பிபாஷா போல வேறு யாரும் பீஸ் கொடுக்காமல் ஏமாற்றியதில்லை. கடைசியாக ஒரு முறை கேட்டுப் பார்க்கலாம் என 6 மாதம் முன்பு பிபாஷாவிடம் பேசினேன். அவரது காதலன் ஜான் ஆபிரகாமுடனும் பேசினேன். எந்த பயனும் இல்லை" என்கிறார் டாக்டர். இதுபற்றி போலீசில் புகார் செய்ய இருப்பதாவும் அவர் தெரிவித்தார்.

த்ராவிட், சச்சின்,கங்கூலி அணியில் இருந்து நீக்கம்

தென்னாப்பிரிக்காவில் எதிர்வரும் செப்டம்பர் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ள 20-20 உலகக்கோப்பைக்காக 30 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அணியின் தற்போதைய தலைவரான த்ராவிட், முன்னனி ஆட்டக்காரர்களான சச்சின் மற்றும் கங்கூலி இடம்பெறவில்லை.இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அணி விவரம் வருமாறு...

Virender Sehwag, Suresh Raina, Mohammad Kaif, Yuvraj Singh, MS Dhoni, Dinesh Karthik, Irfan Pathan, Yusuf Pathan, Sreesanth, Manoj Tiwary, Ajit Agarkar, Karan Goel, Zaheer Khan, RP Singh, Ishant Sharma, Abhishek Jhunjhunwala, Cheteshwar Pujara, Rajesh Pawar, Piyush Chawla, Harbhajan Singh, Joginder Sharma, Rohit Sharma, Gautam Gambhir, Munaf Patel, Niranjan Behera, Praveen Kumar, Aniruddh Srikkanth, Ramesh Powar, Robin Uthappa, Niraj Patel

இதிலிருந்து 15 வீரர்கள் தென்னாப்பிரிக்கா செல்ல தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.அதன் விவரம் ஆகஸ்ட் 5ம் தேதி அறிவிக்கப்படுமென தெரிகிறது.

காலத்தை வென்ற அழகி!

இந்த படங்கள் அனைத்தும் பிரத்யேகமானவை.மேக்கப் இல்லாத பொழுதுகளில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள்.







ஆகஸ்ட் 10ல் துணை ஜனாதிபதி தேர்தல்

ஜூலை 9ல் மனுதாக்கல் தொடக்கம் ஆகஸ்ட் 10ல் துணை ஜனாதிபதி தேர்தல்.



துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் இந்த மாதம் 9ம் தேதி துவங்குகிறது என்று தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.

துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத்தின் பதவிக் காலம் ஆகஸ்ட் 18ம் தேதி முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக புதிய துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன் நேற்று டெல்லியில் அறிவித்தது. இதன்படி, ஜூலை 9ம் தேதி தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, வேட்புமனு தாக்கல் துவங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 23. மறுநாள் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனு வாபஸ் பெற கடைசி நாள் ஜூலை 26.ஆகஸ்ட் 10ம் தேதி தேர்தல் நடைபெறும். அன்று மாலையே ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் வாக்களிப்பர்.இப்போது மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 233 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களுடன் மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்கள் 12 பேரும், மக்களவையின் நியமன உறுப்பினர்கள் 2 பேரும் வாக்களிப்பர். ஆக மொத்தம் 790 எம்.பி.க்கள் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள்.தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போதைய நிலவரப்படி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இணைந்த அணிக்கு போதுமான பெரும்பான்மை பலம் உள்ளது.

இந்த அணியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.ஜனாதிபதி தேர்தல் இந்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டதால் டெல்லி அரசியல் களம் மேலும் சுறுசுறுப்படைந்து விட்டது. துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்று முதல் தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள அணியின் சார்பில் பிரதிபா பாட்டீல் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ. கூட்டணியின் ஆதரவுடன் துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

உயரே போகிறது பங்குச் சந்தை

யல்உயரே போகிறது பங்குச் சந்தை: 15 ஆயிரம் புள்ளிகளை தொட்டது.



பங்குச்சந்தை முதலீட்டாளர்களும், பங்கு வர்த்தகர்களும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வரலாற்று சாதனையை நேற்று மும்பை பங்கு சந்தை படைத்தது. ஆம்.15 ஆயிரம் புள்ளிகளை நேற்று தொட்டது.

கடந்த சில ஆண்டுகளாக பங்குச்சந்தை பரபரப்பாக பேசப்படுகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியின் போக்கை அறிந்து கொள்வதற்கு ஒரு கண்ணாடி போல் பங்குச்சந்தை உள்ளது. பணக்காரர்களுக்கு மட்டுமே என்று இருந்த நிலைமை மாறி சாதாரண மக்களின் கவனத்தையும் இது இழுத்துள்ளது. "காளை'யாக சீறி பாய்ந்த பங்குச்சந்தையில் கடந்தாண்டு மே மாதம் ஒரு பலத்த சரிவு ஏற்பட்டது.

இதிலிருந்து மீண்டு, பங்குச்சந்தை மேல்நோக்கி வரத் துவங்கியது. இருப்பினும், சில மாதங்களுக்கு முன் கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால், ஏற்றுமதியை நம்பியிருக்கும் தகவல் தாழில்நுட்பத்துறை பங்குகள் ஆட்டம் கண்டன. போதாக்குறைக்கு சிமென்ட், சர்க்கரை பங்குகளில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக பங்குச்சந்தையில் தள்ளாட்டம் கண்டது. வேகமாக சென்ற ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி 10 ஆயிரம் புள்ளிகளை பங்குச்சந்தை கடந்தது. இதன்பின் 13 ஆயிரம் புள்ளிகளை அக்டோபர் 17ம் தேதி எட்டியது. (இடையில் மே மாதம் 15ம் தேதி ஏற்பட்ட சரிவுக்கு பிறகும்) இதன் பின் 26 வர்த்தக நாட்களில் 14 ஆயிரம் புள்ளிகளை எட்டியது. இந்த 14 ஆயிரத்தில் 15 ஆயிரம் புள்ளிகளை எட்டுவதற்கு மட்டும் எடுத்து கொண்ட து ஏழு மாதங்கள். இந்த வரலாற்று சாதனையை நேற்று படைத்தது. நேற்றைய பங்குச்சந்தை துவக்கம் மந்தகதியில் தான் இருந்தது. சற்றே ஏறுவதும், சற்றே இறங்குவதுமாக இருந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் அறிவிக்கப்படும் பணவீக்க விகிதம் முந்தைய வாரத்தை விட சற்றே உயர்ந்து இருந்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் தான் அதாவது வர்த்தகம் முடிய இரண்டு மணி இருக்கும் போது 15 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. முந்தைய நாள் வர்த்தகத்தை விட 145.33 புள்ளிகள் அதிகம். மும்பை பங்குச்சந்தையின் "லைப் டைம் ஹை' என்று குறிப்பிடும் வகையில் நேற்று15 ஆயிரத்து 7.22 புள்ளிகளை தொட்டுவிட்டு வர்த்தகம் முடியும் போது 14 ஆயிரத்து 964.12 புள்ளிகள் என நிலை பெற்றது.

நேற்று வரலாற்று சாதனை படைப்பதற்கு முக்கிய காரணம், தகவல் தொழில்நுட்ப பங்குகள் மற்றும் சிமென்ட் பங்குகளின் கணிசமான விலை உயர்வே ஆகும். அடுத்த வாரத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் காலாண்டு அறிக்கையை வெளியிட இருக்கின்றன. இதன் காரணமாக இந்த துறை பங்குகளை அதிகம் வாங்கப்பட்டதே முக்கிய காரணம். அடுத்து வெகுநாட்களாக ஒதுக்கப்பட்டு இருந்த சிமென்ட் பங்குகளை பலரும் வாங்கியது காரணம். "சென்செக்ஸ்' பட்டியலில் வரும் முப்பது பங்குகளில் நேற்று 25 பங்குகள் விலை உயர்ந்து இருந்தன. அதே போல் தேசிய பங்குச்சந்தையில் "நிப்டி' நேற்று உச்சத்தை தொட்டது. இது நான்காயிரத்து 411 புள்ளிகள் வரை சென்று விட்டு வர்த்தகம் முடியும் போது நான்காயிரத்து 384.85 என நிலை பெற்றது.

இந்த வாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "டிஎல்எப்' பங்குகள் நேற்று முன் தினம் பட்டியலிடப்பட்ட போது வரவேற்பு கிடைக்கவில்லை. ரூ.525க்கு பட்டியலிடப்பட்ட இப்பங்கு, அதிகபட்சமாக ரூ.583 வரை போனது. அதே சமயம் புதன்கிழமை வெளியிடப்பட்ட "விசால் ரீடெய்ல்' பங்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. ரூ.270 க்கு பட்டியலிடப்பட்ட இப்பங்கு இரண்டு மடங்குக்கும் அதிகமாக விலை போனது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ், விப்ரோ, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிகம் விலை போனது. ஐரோப்பிய பங்குச்சந்தை, ஷாங்காய் சந்தை ஆகியவை முன்னணியில் இருந்ததும் இந்த ஏற்றத்திற்குக் காரணம்.