அறிவியல் வளர்ந்தும் மனிதன் பக்திப் போதையில் சிக்கினால் அவன் காட்டு விலங்காண்டிதான். `எனக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது; உலக்கையைக் கொண்டு வா, கோவணம் கட்டி வருகிறேன் என்கிற நிலையில்தான் பக்திப் பைத்தியம் பிடித்த - படித்த மனிதர்களும்கூட அலைகிறார்கள்.
எடுத்துக்காட்டுக்கு வெகுதூரம் போகவேண்டாம். நாளைய தினம் சனிப்பெயர்ச்சியாம் - பக்தர்கள் இலட்சக்கணக்கில் திருநள்ளாறு கோயிலுக்குச் சென்று தரிசிக்கப் போகிறார்களாம். அறிவியல் கண்டுபிடித்த ஏடுகளில் கிறுக்குகிறார்கள் -விஞ்ஞானம் அளித்த தொலைக் காட்சிகளைப் பயன்படுத்தி சனிப் பெயர்ச்சி நேரடி ஒளிபரப்பாம்!
புரோகிதக் கொள்ளைக்கு நல்ல அளவு வசதி செய்து கொடுப்பதுதான் இதுபோன்ற சரடுகள். அதில்கூட ஒருமைப்பாடு கிடையாது. பஞ்சாங்கங்களில் பலவகை உண்டே. முரண்பாடு இல்லாமல் என்ன செய்யும்? திருக்கணித பஞ்சாங்கம், சுத்த வாக்கிய பஞ்சாங்கம், கஞ்சனூர் பஞ்சாங்கம் என்று தொழில் போட்டிகள் அதிலும் உண்டு. இந்த ஆண்டுகூட ஜூலை 16 சனிப் பெயர்ச்சி என்ற ஒரு பஞ்சாங்கமும், இல்லை, இல்லை ஆகஸ்ட் 5 தான் சனிப் பெயர்ச்சி என்று இன்னொரு பஞ்சாங்கமும் பறைசாற்றுகின்றன. இரண்டு என்ன, ஆண்டு ஒன்றுக்கு இருநூறு சனிப் பெயர்ச்சிகள் என்று சொன்னாலும் - புரோகித வரும்படிதானே!
பக்தர்கள்தான் புத்தியைப் பறி கொடுத்தவர்கள் ஆயிற்றே -ஓர் ஆண்டுக்கு எத்தனை சனிப் பெயர்ச்சி என்று கேட்கவா போகிறார்கள்?மற்றவற்றில் எல்லாம் ராஜாஜியையும், கல்கி கிருஷ்ண மூர்த்தியையும் தூக்கிப் பிடிக்கும் `கல்கி இதழ்கூட சோதிடத்தில் அவர்கள் இருவரும் நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தாலும், வாரந்தோறும் ராசிபலன் வெளியிட மட்டும் தவறுவதில்லை.
மவுடீகமும், முட்டாள்தனமும் வளர்ந்தால்தானே பார்ப்பனியம் வளரும் என்பதை அவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். அதனால்தான் விடாப்பிடியாக அவற்றைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள்!அறிவியல்படி சூரியன் என்பது நட்சத்திரமாக இருந்தாலும், ஜோதிடம் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. அதனைக் கிரகம் என்றே சொல்லுகிறார்கள்.
ஒரு வேடிக்கை - காஞ்சி `சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஒருமுறை `தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக் கூறினார் (13.4.2004).
`முக்கிய கிரகம் சூரியன், மற்ற கிரகங்கள் அதைச் சுற்றி இயங்குகின்றன என்று கூறினாரே பார்க்கலாம் - இவர்தான் ஜெகத்குருவாம். தொடக்கப் பள்ளி மாணவனுக்குக் கூடத் தெரியும் சூரியன் ஒரு நட்சத்திரம் என்று. ஆனால், மத மவுடீகம் பிடித்து ஆட்டும் சங்கராச்சாரியார்களுக்கு இந்தப் பாலபாடம் கூடத் தெரியவில்லை என்பது எவ்வளவுப் பெரிய வெட்கக்கேடு.
இந்த வருடம் சனி பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறாராம் - எப்படியிருக்கிறது கதை?
சனி என்பது ஒரு கிரகம். பூமியிலிருந்து கிட்டத்தட்ட 80 கோடி மைலுக்கு அப்பாலிருக்கிறது. பூமியைவிட 700 மடங்கு பெரியது. சனி கிரகத்தில் உயிர்கள் கிடையாது. மைனஸ் 244 டிகிரி பாரன்ஹீட் கடும் குளிர் - ஆக்சிஜன் கிடையாது; எனவே, உயிர் வாழும் நிலை அங்கு இல்லை. இப்படி அறிவியல் கூறும்போது புராணீகர்கள் என்ன கூறுகிறார்கள்? சனி சூரியனுக்கும், சம்ஞைக்கும் பிறந்தவனவாம்.
இந்து மதத்தில் எல்லாமே இனக் கவர்ச்சிதான் - புணர்ச்சிதான்!
80 கோடி மைல் தொலைவில் உள்ள சனியின் சுழற்சிக்கும், பூமியில் உள்ள மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? மற்ற மற்ற உயிர்களுக்குச் சம்பந்தம் இல்லாமல் போன மர்மம் என்ன?
இதனையும் இந்த 2007 இல் 21 ஆம் நூற்றாண்டில் நம்பி சனி பகவான் பொல்லாதவன் - அவன் கோபத்தைத் தணிக்கவேண்டும் - திருநள்ளாறு செல்லவேண்டும்; நளன் தீர்த்தத்தில் எண்ணெய்த் தேய்த்து முழுகவேண்டும் என்று நம்புவதை நினைத்தால், சீ... இப்படியும் இந்த 2007--லும் இந்த மனிதர்களா என்று பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.
அய்.ஏ.எஸ்., அதிகாரிகள், காவல்துறை அய்.பி.எஸ்., அதிகாரிகள், ஆளுநர்கள், அமைச்சர்கள் என்று ஒரு கிரகத்தைப் பகவானாக்கி மூத்திரக் குட்டையில் மூழ்குகிறார்களே -வெட்கப்படுவதா - வேதனைப்படுவதா?
விஞ்ஞான மனப்பான்மையை ஊக்குவிக்கவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 15ஏ 51(ஏ) கூறுவதன் லட்சணம் இதுதானா? மக்கள் நல அரசாக இருந்தால் இந்தக் கோயில்களில் உள்ள சிலைகளை அப்புறப்படுத்தி அவற்றைப் பாடசாலைகளாக்க வேண்டாமா?
விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல்கலாம் அழகாகவே சொன்னார்:
"சூரியக் குடும்பத்தில் வெகு தொலைவில் உள்ள கிரகங்கள் மீது ஏன் மக்களுக்கு அவ்வளவு ஆர்வமும், அக்கறையும் வந்திருக்கிறது? தங்கள் வாழ்க்கையை அவை ஆட்டிப் படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள் என்பதுபற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இத்தகைய குட்டிக்குட்டி மூட நம்பிக்கைகளை ஒழித்துக் கட்டவேண்டுமானால், இதற்கெல்லாம் மூல மூத்த மூட நம்பிக்கையான கடவுள் என்ற நம்பிக்கையின் வேரை அடியோடு வெட்டி வீழ்த்தினாலொழிய மனிதனை மானமும், அறிவும் உள்ளவனாக, பண்பட்ட வாழ்க்கைக்குச் சொந்தக்காரனாக மாற்றுவது என்பது இயலாது. கடவுள்மீது தந்தை பெரியார் ஏன் கை வைத்தார் என்பதை இந்த இடத்தில் அக்கறையோடு சிந்திப்பார்களாக!
Saturday, August 4, 2007
3
வி.ஐ.பி. லிஸ்ட் வெளியிடுவேன்! - நடிகை பத்மாவதி ஆவேசம்

"ஜாமீனில் வெளியே வந்ததும் என்னுடன் உல்லாசமாக இருந்த தொழிலதிபர்கள் மற்றும் வி.ஐ.பி.களின் பட்டியலை வெளியிடுவேன்" என்று ஆபாச படம் எடுத்து மிரட்டும் நடிகை பத்மாவதி கூறியுள்ளார்.
போலீசாரிடம் பத்மாவதி அளித்துள்ள வாக்குமூலத்தில் பிரபல தொழிலதிபர்களின் பெயர்களை கூறியுள்ளார். இதனால், கலக்கத்தில் இருக்கும் அவர்கள், தங்களது பெயரை வெளியிட வேண்டாம் என்று போலீஸ் அதிகாரிகளிடம் கெஞ்சுகின்றனர்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரதீப் கொனாரோ, அவரது நண்பர் நிர்மல் ஆகியோர் நடிகை பத்மாவதியுடன் மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் உல்லாசமாக இருந்தனர். அப்போது, துப்பாக்கி முனையில் தொழிலதிபர்களை மிரட்டி, படுக்கை அறை காட்சிகள் முழுவதையும் வீடியோவில் பதிவு செய்த நடிகையும் அவரது உதவியாளர் சஞ்சயும் ரூ.10 கோடி கேட்டு பிரதீப்பை மிரட்டினர்.

இதையடுத்து, பிரதீப் கொடுத்த புகாரின் பேரில் பத்மாவதி, சஞ்சய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.பத்மாவதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பிரபல தொழிலதிபர்கள் பலர், இவரது வலையில் சிக்கியிருப்பது தெரிந்தது. உல்லாசத்துக்கு வரும் தொழிலதிபர்களுக்கு மது ஊற்றிக் கொடுத்தும், மிரட்டியும் ஆபாச படம் எடுத்துள்ளனர். பின்னர், அதை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி பத்மாவதியும் அவரது கூட்டாளிகளும் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.
போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், தன்னிடம் வந்த தொழிலதிபர்களின் பெயர்களை பத்மாவதி கூறியுள்ளார். இதனால், பல தொழிலதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர். அவர்கள், போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, என் பெயர் வெளியில் வராமல் காப்பாற்றுங்கள் என கெஞ்சி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சிறையில் உள்ள நடிகை பத்மாவதியை அவரது வக்கீலும் நண்பர்கள் சிலரும் சந்தித்து பேசினர். அவர்களிடம், "என்னை பலமுறை பயன்படுத்திவிட்டு, இப்போது பணம் கேட்டதற்காக புகார் கொடுத்து சிறையில் அடைத்துவிட்டனர். பணத்திமிரை அவர்கள் காட்டிவிட்டனர். என்னிடம் இருந்த முக்கிய சி.டி.க்களை 15 பேரிடம் கொடுத்து வைத்துள்ளேன். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்ததும் அந்த சி.டி.க்களை வெளியிடுவேன். என்னுடன் உல்லாசமாக இருந்த தொழிலதிபர்கள், வி.ஐ.பி.களின் முகத்திரையை கிழிப்பேன்" என்று பத்மா ஆவேசமாக கூறியுள்ளார். இந்தத் தகவலை போலீசாரிடம் பத்மாவதியின் நண்பர்கள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே பத்மாவதியின் வீட்டில் இருந்து 15 ஆபாச சி.டி.க்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். செல்போன்கள் மூலம் எடுக்கப்பட்ட ஆபாச படங்களின் சிம்கார்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். அதில் சிக்கியுள்ள வி.ஐ.பி.க்கள் யார் என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக பிரபல தொழிலதிபர்களிடமும் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
பத்மாவதி கைது செய்யப்பட்டதும், பல வி.ஐ.பி.க்களும் தொழிலதிபர்களும் தங்களுக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தன் பெயரை பத்மாவதி கூறியுள்ளாரா என விசாரிக்கின்றனர். அப்படி, தன் பெயரை சொல்லியிருந்தால் அதை வெளியிட வேண்டாம்
என்றும் கெஞ்சுகின்றனர்.
பத்மாவதி பெரும்பாலும் நட்சத்திர ஓட்டல்களில்தான் தங்குவார். அங்கு உள்ள பார்களில் மது அருந்தி விட்டு வி.ஐ.பி.க்களுடன் உல்லாசமாக இருப்பார். சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களின் பார்களிலும் அவர் ரெகுலர் கஸ்டமராக உள்ளார். வாரத்தில் பாதி நாட்கள் வெளி மாநிலங்களுக்கு விமானத்தில் பறந்தபடியே இருப்பார். இதற்கான செலவுகளை குறிப்பிட்ட சில தொழிலதிபர்களே செய்வார்கள்.
சில நாட்களுக்கு முன் இவருக்கு விபசார தடுப்புப் பிரிவு போலீசார் குறி வைத்திருந்தனர். இது தெரிந்ததும் அவர் தனது உல்லாச இடத்தை மாற்றிவிட்டார். தன்னிடம் வரும் வி.ஐ.பி.க்களுடன் பெங்களூர் சென்று அங்கு உல்லாசமாக இருப்பார். விபசார தடுப்புப் பிரிவு போலீசாரின் வேகம் தணிந்ததும் கடந்த 2 மாதமாகத்தான் சென்னையில் தொழிலை நடத்தி வந்தார்.
இதற்கிடையே, நடிகை பத்மாவதியை போலீசில் சிக்க வைத்த தொழிலதிபர் கொனாரோவின் வீட்டில் புயல் அடிக்க ஆரம்பித்துள்ளது. பத்மாவதியின் தொடர்பால் கொனாரோவை வெறுத்த அவரது மனைவி, தனது சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். அவரை சமாதானப்படுத்த கொனாரோவும் ஆந்திரா சென்றுள்ளார்.
தரவு- தமிழ்முரசு
Labels:
திரையுலகம்
Friday, August 3, 2007
0
தொழிலதிபர்களை ஆபாச படமெடுத்து மிரட்டிய நடிகை....

நடிகையிடம் சிக்கிய தொழிலதிபர்கள்! ஆபாச படம் எடுத்து பிளாக் மெயில் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
ஆபாச படம் எடுத்து தொழிலதிபரிடம் ரூ. 10 கோடி கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்ட நடிகை பத்மாவதி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது வலையில் பல பிரபல தொழிலதிபர்கள் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பத்மாவதியிடம் இருந்து 10 ஆபாச சி.டி.க்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் பல தொழிலதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பிரதீப் கொனாரோ. தொழிலதிபரான இவர், 2005-ம் ஆண்டு பெங்களூர் சென்றார். அங்கு அழகி பத்மாவதியை சந்தித்தார். மாடலிங் அழகியான பத்மாவதி, "வீராசாமி" படத்தில் 2-வது ஹீரோயினாக நடித்தவர். மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார். பத்மாவின் அழகில் மயங்கிய கொனாரோ அவருடன் உல்லாசமாக இருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொனாரோவுக்கு திடீரென பத்மாவதியின் ஞாபகம் வந்தது. அவருடன் உல்லாசமாக இருக்க நினைத்தார். இதற்காக தனது நண்பரும் தொழிலதிபருமான நிர்மலுடன் விமான நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கினார். அங்கிருந்து பத்மாவதிக்கு போன் செய்து வரவழைத்தார். பத்மாவுடன் அவரது கூட்டாளியும் நடிகருமான சஞ்சய் வந்தார். பின்னர் 4 பேரும் சேர்ந்து மது அருந்தினர்.
போதை ஏறியதும், பத்மாவதியுடன் கொனாரோ படுக்கைக்கு சென்றார். அவர்கள், இன்ப விளையாட்டை தொடங்கியதும் சஞ்சய், தான் வைத்திருந்த வீடியோவில் அதை படம் பிடித்தார்.
அரை போதையில் இருந்த கொனாரோ, இதைப் பார்த்ததும் எதிர்ப்பு தெரிவித்தார். "ஏதாவது பேசினால் என்னை கற்பழித்ததாக சத்தம் போடுவேன்" என அவரை பத்மாவதி மிரட்டினார். ஆனாலும், படம் எடுக்க கொனாரோ ஒப்புக் கொள்ளவில்லை.
அப்போது, சஞ்சய் திடீரென துப்பாக்கியை எடுத்துக் காட்டி மிரட்டினார். உயிருக்கு பயந்த கொனாரோ, பத்மாவதியுடன் நிர்வாண கோலத்தில் நடுநடுங்கியபடி நின்றார். அதை முழுவதையும் சஞ்சய் படம் பிடித்தார். பின்னர், நிர்மலையும் அதேபோல மிரட்டி உல்லாசமாக இருக்க வைத்து வீடியோ எடுத்தனர்.
ஆபாச படத்தை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டி, கொனாரோவிடம் பத்மாவதி ரூ.10 லட்சம் கேட்டார். ரூ.6 லட்சத்தை உடனடியாக பத்மாவதியிடம் கொனாரோ கொடுத்தார். மீதம் ரூ.4 லட்சத்துக்கு பதில் அவரது லேப் டாப் கம்ப்யூட்டர், 5 கிரெடிட் கார்டுகள், 3 செல்போன்களை பத்மாவதியும் சஞ்சயும் எடுத்துச் சென்றனர். கொனாரோவின் லேப் டாப்பை பார்த்தபோதுதான் அவருக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை வரவேண்டியிருந்தது தெரிந்தது.
இதனால் அவரிடம் மேலும் பணம் பறிக்க திட்டமிட்ட பத்மாவதி, ரூ.10 கோடி கேட்டு மிரட்டினார். விவகாரம் பெரிதாவதை உணர்ந்த கொனாரோ, உடனடியாக போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பத்மாவதி, சஞ்சய், அடியாட்கள் அமீர், சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
விசாரணை தொடங்கியதும், "என் அப்பா டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரி. நான் பெரிய கோடீஸ்வரி. என்னை விடுவித்தால் ரூ.2 கோடி தருகிறேன்" என்று போலீசாரிடமே பத்மாவதி கதை அளந்தார். ஆனால், போலீசார் தங்கள் பாணியில் விசாரணையை மேற்கொண்டதும் உண்மைகளை கொட்டத் தொடங்கினார்.
போலீசாரிடம் பத்மாவதி கூறியதாவது:
பி.எல். படித்துக் கொண்டிருந்தபோது மாடலிங் துறையில் நுழைந்தேன். இதனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். மாடலிங் துறையில் பணம், புகழ் கிடைத்தது. கோடீஸ்வரர்களுடன் நட்பும் கிடைத்தது. உல்லாச வாழ்க்கை, நினைத்த நேரத்தில் விமானத்தில் பறப்பது என்று ஜாலியாக இருந்தேன்.
அப்போதுதான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. பல டி.வி. சீரியல்களில் நடித்துள்ளேன். என் அழகில் மயங்கிய பல தொழிலதிபர்கள் பண ஆசை காட்டி என்னை அவர்களுக்கு விருந்தாக்கிக் கொண்டனர். வேறு வழி இல்லாததால் அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன்.
கொனாரோவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் 8 முறை உல்லாசமாக இருந்தேன்.
முதலில் அவர் மட்டுமே என்னிடம் வருவார். பிறகு தனது நண்பர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் ஆசைக்கும் இணங்கும்படி கூறினார். அவர் கூறியபடி எல்லாம் நடந்து கொண்டேன். இதற்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் அவர் எனக்கு தரலாம். நான் அதற்கு தகுதியான ஆள்தான்.என்னை அனுபவிக்க ஆசைப்படும் பலரும் பணத்தை வாரி இறைக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், இவர்தான் போலீசில் சிக்க வைத்து விட்டார்.
இவ்வாறு போலீசாரிடம் நடிகை பத்மாவதி கூறியுள்ளார்.
பின்னர், பத்மாவதி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ஏராளமான ஆபாச படங்கள் சிக்கின. அந்த படங்கள் தெளிவாக இல்லை. தொழிலதிபர்களுடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட சி.டி.க்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எல்லா சி.டி.க்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பிரபல தொழிலதிபர்கள் பலரை தனது வலையில் விழ வைத்து, அவர்களுடன் உல்லாசமாக இருக்கும் நேரத்தில் ஆபாச படம் எடுத்துள்ளார் என்றும், அதைக் காட்டி லட்சக்கணக்கில் பணத்தை கறந்து உல்லாச வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தன்னுடைய புகைப்படங்களை ஏராளமாக இன்டர்நெட்டிலும் பத்மாவதி வெளியிட்டுள்ளார். அதில் தொழிலதிபர்களுடன் "கிக்" போஸில் நிற்கும் படங்களும் இடம்பெற்றுள்ளன. "இது சாம்பிள்தான். பணம் தராவிட்டால் முழு ஆபாச படத்தையும் வெளியிடுவேன்" என்று சொல்லியே பல தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.
நடிகையின் ஆபாச வலையில் சிக்கிய தொழிலதிபர்கள் யார், யார் என்பது குறித்து இணை கமிஷனர் துரைராஜ், துணை கமிஷனர் அருண், உதவி கமிஷனர் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். பல சி.டி.க்களை தனது நண்பர்களிடம் பத்மாவதி கொடுத்து வைத்திருப்பதாக தெரிகிறது. அவற்றை கைப்பற்றவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நடிகையின் லீலைகள் அம்பலத்துக்கு வந்திருப்பதால் அவருடன் தொடர்பு வைத்திருந்த பல தொழிலதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தரவு - தமிழ்முரசு
Labels:
திரையுலகம்
Thursday, August 2, 2007
0
'வீராப்பு' - விமர்சனம்
Ôஅன்பு பாசம் எல்லாம் அப்புறம்... அல்ஜீப்ரா கணக்குகள்தான் முக்கியம்!Õ என்கிற வாத்தியார் அப்பா. பிரம்புக்கே வலிக்கிற மாதிரி அவர் கொடுக்கிற தண்டனைகள் பிள்ளையை முரடணாக்க, அப்பா-பிள்ளை உறவு "அதோகதி"யாகிறது. தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளையிடம் அப்பா காட்டுகிற வீராப்புதான் இந்த "வீராப்பு"
அப்பா பிரகாஷ்ராஜ். பிள்ளை சுந்தர் சி. அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டிய பாத்திரம் இல்லை. போலீஸ் நிலயத்தில் காக்கிசட்டைகளால் கந்தல் ஆக்கப்படுகிற போதும், காதல் காட்சிகளின் போதும் ஒரே மாதிரி முகபாவம். இந்த அலட்சியம்தான் சுந்தர்சியின் கேரக்டரை சூப்பர்மேன் ஆக்குகிறது. இவர் பள்ளிக்கு செல்வதை நிறுத்திய நாளை ஏதோ சுதந்திர தினம்போல் இவருடைய கோஷ்டிகள் கொண்டாடுவது ஓவர் என்றால், மொத்த ஸ்கூலுக்கும் லீவு விட சொல்வதெல்லாம் ஓவரோ ஓவர் சாமி.
எரியும் சிகரெட்டை அலட்சியமாக நாக்கால் அணைப்பது, வேட்டியை அவிழ்த்து எதிரிகளை மூடி, அவர்களின் மண்டையை பிளப்பது என்று சுந்தர் சி யை சூப்பர்சி ஆக்கும் ஸ்டைல்களை ரசித்தே ஆக வேண்டும்.
ரவுடிகளை காதலிக்கும் படித்த பெண்கள் வரிசையில் கோபிகா. டீச்சர் எதற்கு இந்த ரவுடியை காதலிக்க வேண்டும் என்று கேள்வி கேட்கவிடாமல் லாஜிக்கை காப்பாற்றியிருக்கிறார் டைரக்டர் பத்ரி. சிறு வயது மாணவன் சுந்தர்சி செய்கிற ஸ்கூல் மணி டெக்னாலிஜியை அவரே எதிர்பார்க்காத தருணத்தில் கண்காட்சியில் காண்பித்து அவரை அழைத்து பரிசு கொடுப்பது நெகிழ்ச்சி.
முன்வரிசை தாய்குலங்களின் மொத்த சாபத்தையும் வாங்கிக் கொள்கிறார் பிரகாஷ்ராஜ். போலீஸ் ஸ்டேஷனில் அடிவாங்கும் பிள்ளைய காப்பாற்றுவார் என்று பார்த்தால், என்ன வேணாலும் செஞ்சுக்கங்க. அவனை தேடி எங்க வீட்டுக்கு வராதீங்க என்கிறாரே, கல்நெஞ்ச பார்ட்டி! கடைசியில் ஒரு கொலை பழியில் சிக்கி சிறைக்கு போய் கலங்குவதெல்லாம் சினிமாட்டிக் சென்டிமென்ட்.
லாரியை வைத்து பிஸினஸ் துவங்கி கடைசியில் சைக்கிளில் தாயத்து விற்பது வரை விவேக்கின் நக்கல் உச்சஸ்தாயில் ஒலிக்கிறது. இந்த முறை இவருக்கு ஜோடி 100 கிலோ தாஜ்மகால் அஞ்சு. மழைய நிறுத்த இவரை அம்மணமாக ஊருக்குள் திரிய வைக்கும் பஞ்சாயத்து பெருசுகளிடம் விவேக் புலம்புவது வெடிச்சிரிப்பு.
இசை டி.இமான். இரைச்சல்களே பாடல்களாகியிருக்கிறது.
தளபதி தினேஷின் சண்டைக்காட்சிகளில் சூடு பறக்கிறது.
வீராப்பு... விறுவிறுப்பு!

திரை விமர்சனம்
'தீ'நகர் - விமர்சனம்
மாணவர்கள் நினைத்தால்...? பின்னால் தொக்கி நிற்கும் கேள்விக்குறிக்காக பதினாலு ரீல்களையும், ரிசர்வ் பேங்க் தாள்களையும் தாராளமாக செலவு செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் திருமலையின் இந்த கனவு பகல் கனவாக இருந்தாலும் பாராட்ட வேண்டிய கனவுதான். வேலை கிடைக்கவில்லை என்பதால் சும்மா இருக்காமல் டீக்கடை வைக்கிறார் கரண். தன்னுடைய மாணவர் பலத்தை திரட்டி நல்ல அரசியலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறார். தீக்காயத்தில் அழகை பறிகொடுத்த காதலியை வெறுக்காமல் கைப்பிடிக்கிறார். (அட.. இங்கேயும் தீயா?) இப்படி மனிதப்புனிதராக விளங்கும் கரணுக்கு ஏற்படுகிற இடைஞ்சல்கள் என்னென்ன? அவற்றிலிருந்து எப்படி அவர் விடுபடுகிறார் என்பதுதான் தீ நகர்.
தமிழ்சினிமாவின் வரையறைக்குள் அடங்கிவிடுகிற முரட்டு போலீஸ் அதிகாரி சண்முகராஜாவுக்கும், கரணுக்கும் நடக்கிற மோதலில் பொறி பறக்கிறது. விடாது கருப்பு மாதிரி விரட்டி விரட்டி தொல்லை தருகிற சண்முகராஜாவை மாணவர்கள் ஒன்று திரண்டு போலீஸ் நிலையத்திற்குள்ளேயே மடக்குவதெல்லாம் வரையறைக்குள் அடங்காத கற்பனை. முன்னாள் சேர்மனுக்காக தமிழ்நாட்டு மாணவர்கள் எல்லாம் ஒன்று திரள்வார்கள் என்ற கற்பனையும் அந்த ரகமே.
புதுமுகம் உதயதாராவுக்கு கண்களே கௌரவம். முகம் சொல்லாத பல விஷயங்களை அந்த கண்கள் சொல்லிவிடுகின்றன. பணக்கார பெண்ணான அவருக்கு முகத்தில் தீக்காயம் பட்டவுடன், அவருடைய பெற்றோர்கள் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முயல மாட்டார்களா? சிறைக்குள்ளிருந்து வெளியே வந்து கரண்தான் அந்த வேலையை செய்ய வேண்டுமா? இப்படி கேள்விகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆனால் எல்லா கேள்விகளையும் மறக்கடித்துவிடுகிறது கதையின் வேகம்.
கல்லூரி மாணவர்களின் மோதல் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது மாணவர் தலைவர் பஷீர்-கரண் மோதல். அடுத்த காட்சியிலேயே எனக்கு உன் மேல் தனிப்பட்ட கோபம் இல்லை என்று பஷீரின் தோள் மேலே கைபோட்டுக் கொள்ளும் கரணின் லாவகம் மாணவர்களுக்கு பாடம்.
படத்தின் தயாரிப்பு செலவுக்கு கேண்டீன் காரர்களும் பணம் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. முதல் பாதி முடிவதற்குள் நான்கு பாடல்கள். நல்லவேளை, ஜாஸிகிப்ட்டின் இசை, கிஃப்டாக இருப்பதால், ஒன்றிரண்டு தலைகள் மட்டுமே பாடல் காட்சிகளில் வெளிநடப்பு செய்கிறார்கள்.
தெர்மாமீட்டர் உடைகிற அளவுக்கு ஆக்ஷன் காட்சிகளின் சூடு.
தீயை பற்ற வைக்க நினைத்துதான் மண்ணெண்ணையை ஊற்றியிருக்கிறார் டைரக்டர். ஆனால் கொளுத்த வேண்டிய தீப்பெட்டி, நமத்து போனதுதான் ஏமாற்றம்.

Wednesday, August 1, 2007
0
கோவை குண்டுவெடிப்பு வழக்கு - 'மதானி' விடுதலை
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 153 பேர் குற்றவாளிகள் என தனிநீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.
கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் திங்கள்கிழமை (ஆக.6) அறிவிப்பதாக நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.
கோவையில் 1998 பிப்.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். ரூ.4.37 கோடி மதிப்புள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது தஸ்தகீர் இறந்து விட்டார்.
மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனிநீதிமன்ற நீதிபதி கூறியது:
முக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்-உம்மா நிறுவனர் எஸ்.ஏபாஷா, செயலர் முகமது அன்சாரி மற்றும் தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் (எ) குட்டி, சித்திக் அலி, ஊம் பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ் உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்கிறது.
அப்துல் நாசர் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார் நீதிபதி.
நெüசாத், சர்தார், முகமது அஸ்ரப், சுபேர், ஆர்மி ராஜூ, அகோஜி (எ) சிவக்குமார், அப்துல் ஹமீது ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 153 பேரில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக 69 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 84 பேருக்கு கூட்டுச் சதியில் தொடர்பில்லை. ஆனால், இவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என்றும் நீதிபதி அறிவித்தார்.
காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.
கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம். குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.
காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.
கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம்.
குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ருத்ராபதி.
தரவு- தினமணி

அரசியல்