Wednesday, February 13, 2008
ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்டார்....
பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிய குற்றத்திற்காக மஹாராஷ்ட்ர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே சிறிது நேரத்திற்கு முன்னர் மஹாராஷ்ட்ர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மஹாராஷ்ட்டிர மாநில துனை முதல்வர் கூறும்போது யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என கூறினார்...
மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன...
பிற்சேர்க்கை...
இன்று மாலை 4.20 மணியளவில் ராஜ்தாக்கரே அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 153,153A,153D,117 கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இவை பினையில் வர இயலாத குற்றச்சாட்டுகளாகும்.
இதே சமயத்தில் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் அபு ஆஸ்மியும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
செய்திகளை முந்தித் தருவது.....மிளகாய்....மட்டுமே
Labels:
சூடான செய்திகள்
Subscribe to:
Post Comments
1 comments:
//செய்திகளை முந்தித் தருவது.....மிளகாய்....மட்டுமே//
இங்கேயும் போட்டியா..? இது வலையுலகத்திற்கு ஆரோக்கியமில்லையே மிளகாய்..
முந்துவது நல்லதுதான்.. ஆனால் அதுவே போட்டியாகிவிடக் கூடாது.. மீறினால் அது வியாபாரத் தலமாகிவிடும்..
வாழ்த்துக்கள்..
Post a Comment