பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார் - இலங்கை ராணுவம் அறிவிப்பு

பா.நடேசன், புலித்தேவன் உடல் கண்டெடுப்பு...

Sri Lankan Special Forces soldiers have found bodies of three key LTTE leaders identified as Nadeshan, Pulidevan and Ramesh during the mop operations in the last LTTE foothold this morning( May 18). According to the latest information, the remaining LTTE cadres are now boxed into a 100m x 100m area, North of Vellamullivaikkal.

Nadeshan who was a former police constable of Sri Lanka police and known to be the political head of the outfit. Pulidevan was known to the head of "LTTE peace secretariat" while Ramesh was one of the most senior special military leader of the outfit.

பிரபாகரன் மகன் கொல்லப்பட்டார்...

தமிழீழ விடுதலைபுலிகளின் தலைவர் திரு।வேலுபிள்ளை பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோனியின் உடல் இலங்கை ராணுவத்தால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசினை மேற்கோள் காட்டி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன।

http://www.defence.lk/new.asp?fname=20090518_03

விடுதலைப் புலிகள் சரண்? ராணுவ முகாமில் பிரபாகரன் உடல்?

கொழும்பு: இலங்கை ராணுவத்தின் இறுதிக் கட்டத் தாக்குதல் கடுமையாக இருப்பதால், புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. மேலும் உயரி் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இலங்கை அரசிடம் சரண் அடையவும் புலிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கிடையில் புலிகள் தலைவர் பிரபாகரனின் உடல் ராணுவ முகாமில் இருப்பதாக உறதி செய்யப்படாத தகவல் கூறுகிறது.

விடுதலைப்புலிகள் தோல்வியடைந்து விட்டதாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே அறிவித்துள்ளார். ஜோர்டான் நாட்டில் ஜி-11 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது உரையாற்றிய ராஜபக்ஷே, விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் தோற்கடித்து விட்டதாக கூறினார். . இலங்கையில் பல ஆண்டு காலத்துக்கு பிறகு பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புலி தலைவர் பிரபாகரன் குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை . ராஜபக்ஷே ஜோர்டான் பயணத்தை பாதியில் முடித்துக்கு கொண்டு இலங்கை திரும்பினார். ராணுவ வெற்றியை தொடர்ந்து இலங்கை தமிழர்களின் பிரச்னையை தீர்க்க அரசியல் தீர்வு காணப்படும் எனவும் ‌தெரிவித்தார். இலங்கைக்கு திரும்பிய அதிபர் ராஜபக்ஷே , தாய் மண்ணுக்கு தலை வணங்கி, இலங்கையை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவித்து விட்டேன் என கூறினார். விமான நிலையத்தில் ராஜபக்ஷேவை வரவேற்க சர்வ சமய தலைவர்களும் வந்திருந்தனர்.ராணுவ அதிகாரிகள் ஒருவருக்கு ஒருவர் பால் சாதம் ஊட்டி மகிழ்ந்தனர். இலங்கை மக்கள் பட்டாசு வெடித்து விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை கொண்டாடினர்.

முல்லை தீவில் 150 உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா? அவரது நிலை என்ன என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கைப்பற்றப்பட்ட உடல்களை அடையாளம் காணுப்பட்ட பிறகு தான் பிரபாகரன் இறந்துவிட்டது குறித்து உறுதி செய்யப்படும் என ராணுவ தரப்பு கூறுகிறது.

இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிளித்த தகவல் துறை அமைச்சர் அணுரா பிரியதர்சன் கூறியதாவது : இலங்கையில் விடுதலைப்புலிகள் மிக குறுகிய பரப்பளவில் உள்ள இடத்துக்குள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் பிரபாகரன் நிலை என்பது குறித்து ராணுவ கேம்பில் இருந்து அதிகாரபூர்வ செய்தி வந்தவுடன் தான் உறுதி செய்ய முடியும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- தினமலர்

பிரபாகரன் வீரமரமடைந்தாரா ?




தமிழீழ விடுதலை புலிகளின் நிறுவனரும், தலைவருமான திருவேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசினை மேற்கோள் காட்டி சிஎன்என்பிஎன் தொலைகாட்சி செய்தி வெளியிடுட்டு வருகிறது

அவரின் உடல் ராணுவ முகாமொன்றில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த தொலைகாட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டு வருகிறது

இந்த செய்தி பிற ஊடகங்களினால் உறுதி செய்யப்படவில்லை.....செய்திகள் மேம்படுத்தப்படும்....

------

என்டிடிவி இந்த செய்தி உறுதிசெய்யப் படவில்லை என செய்தி வெளியிடுகிறது சண்டை தொடர்வதாகவும் தமிழீழ விடுதலைபுலிகள் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரசாயன ஆயுதங்களை கொண்டு போரிடுவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன।

http://ibnlive.in.com/news/lankan-army-claims-prabhakaran-dead/92805-2.html

வாக்கு எண்ணிக்கை துவங்கியது....வைகோ பின் தங்குகிறார்.

நாடு முழுவதும் இன்று காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இதுவரையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.

தேர்தல் திருவிழா - வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது.....

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, காலை எட்டு மணிக்கு துவங்குகிறது. அடுத்த சில மணி நேரங்களில் பெரும்பாலான முடிவுகள் வெளியாகத்துவங்குமென தெரிகிறது.

T20உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

M S Dhoni (c), Virender Sehwag (v-c), Gautam Gambhir, Suresh Raina , Yuvraj Singh , Yusuf Pathan , Rohit Sharma, Harbhajan Singh, Zaheer Khan, Ishant Sharma , Praveen Kumar, RP Singh, Ravindra Jadeja, Pragyan Ojha and Irfan Pathan .

கலைஞர் மருத்துவமனையில் அனுமதி !

தமிழக முதல்வர் டாக்டர்.கருணாநிதி உடல்நலக்குறைவினால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.

கடுமையான முதுகுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பழம்பெரும் நடிகர் பாலாஜி காலமானார்






சென்னை, மே 2- பழம்பெரும் நடிகர் பாலாஜி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் டயாலிஸிஸ் சிசிச்சை மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.

இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இவர் எம்ஜிஆர், சிவாஜி, நாகேஷ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக இவர் திரைப்படங்களையும் தயாரித்து வந்தார். வசந்த மாளிகை, படித்தால் மட்டும் போதுமா, எங்க மாமா உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தினமணி