டேங்கர் ரயில் காலியாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ரயில்வே பொதுமேலாளர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், பயணிகள் ரயிலை ஓட்டிச் சென்றவர் ரயில்வே ஊழியர் அல்ல என்றார். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற நிலையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும் பயணிகள் ரயில் காலை 05.15 மணிக்கு புறப்படவேண்டிய ரயில் வழக்கத்திற்கு மாறாக அதிகாலை 04.50 புறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுவரை 6 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
விபத்து குறித்து உடனடி தகவல்களைப் பெற உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். அதற்கான தொலைபேசி இலக்கங்களை அவர் வெளியிட்டுள்ளார். அவையாவன : 044-25357386, 044--25357398.
via- Dinamalar